கண்ணாமுச்சி
காட்டும் இந்த மழை நாளில்..
இரவு பத்து மணிக்கு நான்
அந்த கடை வாசலில் நின்று இருந்தேன்… சட்டென டெல்லி தேர்தல் முடிவுகளில் கெஜ்ரிவால் சட சட என எலக்ஷன் ரிசல்ட்டில் முன்னனிக்கு வந்தது போல மழையும் திடிர் என்று அடித்து பெய்ய ஆரம்பித்தது… நாளைக்கு சமைக்க வேண்டிய பொருளை காலையில் வந்து வாங்கி இருக்கலாமோ? என்று மழை சாரலை பார்த்து என்னை நானே நொந்துக்கொண்டேன்....
சாலையில் நடந்து போன எல்லோருக்கும் போர் நடக்கும் போது பாதுக்காப்பான இடம் தேடி அலைவது போல,மழைக்கு நனையாமல் இருக்க பாதுகாப்பான இடம் தேடி அலறி அடித்து ஓடினார்கள்…
மழையில் நனையாமல் நான் பாதுகாப்பாக ஒரு கடைவாசலில் நின்றுக்கொண்டு இருந்த போது, பல மாதங்களுக்கு
பிறகு என் நினைவு வந்த என் தோழி ஒருத்தி எனக்கு போன் செய்தாள்…
நான் கால் அட்டன் செய்தேன்..
ஜாக்கி
எப்படி இருக்கறே…?
நல்லா
இருக்கேன்…த்தா என்ன இப்பதான் கண்ணு தெரிஞ்சிதா? ஆறு மாசத்துக்கு மேல ஆச்சி…??
ச்சே
பயங்கர வேலை.. பையனையும் எங்க ஆளையும் சமாளிச்சிட்டு… ஆபிசுக்க போனா ,புதுசா வந்து இருக்கற
எங்க டீம் லீடர்....... அவன் விடற ஜொள்ளுல....வேணாம் வாயில ஏதாச்சும் வந்துடும்... ச்சே.... கடுப்பா இருக்குப்பா….. அதான்..போன் பண்ணலை..
வீட்டு எப்படி இருக்காங்க?.. உன் வீட்டு வாலு எப்படி இருக்கு??
நல்லா இருக்காங்க....
பையன் எப்படி இருக்கான்.. கிராவிட்டி ஆரோ திரிடில அவனை அச்சிக்கிட்டு போய் படம் பார்க்க சொல்லி மெசேஜ் அனுப்பிச்சேனே? அவனை அழைச்சிக்கிட்டு போய் இந்த படம் பார்த்தியா??
இல்லைப்பா... டைம் இல்லை.... கால்ல சக்கரம் கட்டிக்கிட்டுஓடுறேன்...டிவிடி வந்தா எனக்கு கொடு....
ஓகே…உங்க
ஆளு எப்படி இருக்கார்….?
நல்லா இருக்கான்…
ச்சே
என்ன திடிர்ன்னு போன்..??
ஒரு
டவுட்டு அதான் போன் பண்ணினேன்….
என்ன டவுட்?
இல்லை
என் பிரன்ட்ஸ் கிட்டயே கேட்டு இருப்பேன்…. அவளுங்களும் குழப்பி என்னையும் குழப்பி விட்டு
விடுவாளுங்க…தெரியலைன்னா கூட தெரியலைன்னு சொல்ல மாட்டாளுங்க.. அதான் உன்கிட்ட கேட்கறேன்..
சொல்லு…
இப்ப பிரியா இருக்கியா-? நான் வேணா அப்புறம் பேசட்டா???
சொல்லுடி பிரியாதான் இருக்கேன்...
அப்போதுதான்
அவனை கவனித்தேன்…. மழை பேய் மழையாக மாறிக்கொண்டு
இருந்த தருணத்தில் அவன் டிவிஎஸ் பிப்டி ஓட்டி வந்தான்.
நான் நின்றுக்கொண்டு இருந்த கடைக்கு பக்கத்து கடை காலியாக இருக்க … அங்கே வண்டியை நிறுத்தி அந்த கடை வாசலில் அவன் ஒதுங்கி
நிற்க வேண்டும்… அவன் வண்டி ஓட்டி வரும் லாவகத்தையும் அந்த தடுமாற்றத்தையும் பார்த்து அவன் குடிகாரன் என்று முடிவு செய்தேன்....
அவன்
தடுமாற்றத்தோடு வண்டியை ஓட்டி வந்தான்…. பதட்டத்தோடு வண்டியை நிறுத்தினான்…
ஸ்டேன்டு
போட்டு…. பதட்டத்தில் அவன் வண்டிக்கு சரியாக ஸ்டாண்டு போடாத காரணத்தால் வண்டி விழுந்து.... அவனும் விழ….
அந்த அடை மழையிலும் என் தோழியின் குரல் தெளிவாக கேட்டது....
நான்
சேப்ட்டிக்கு டேப்லட் போட்டுக்கறது நல்லதா? அல்லது எங்க ஆளு சேப்டி பலூன் யூஸ் பண்ணறது
நல்லதா-?
ஒரு
நிமிஷம் என்று அவளிடம் சொல்லி விட்டு அவனை
கவனித்தேன்…குடிகார நாயி வந்து எப்படி விழுது பாரு என்று நினைத்தேன்…
அவன்
விழுந்தான்… மழை அவனை தொப்பலாக நனைத்துக்கொண்டு
இருந்தது… அவன் முதலில் எழுந்திருக்க தவித்தான்…
அந்த தவிப்பு குடிகாரனின் தவிப்பு போல இல்லை..
இந்த தவிப்பை எங்கேயோ பார்த்து இருக்கின்றேன்…
அவன்
தவித்து எழுந்து வண்டியை தூக்கி நிறுத்தி வண்டிக்கு ஸ்டேன்ட் போட்டு விட்டு கடையில் வந்து ஒதுங்கினான்… அவன் இடது கால்
பூட்ஸ் அரை அடிக்கு வழக்கத்துக்கு மாறாக
பெரிதாக இருந்தது… அவன் ஒரு மாற்று திறனாளி…
ஹேய்
ஜாக்கி லைன்ல இருக்கியா?
நான்
சேப்ட்டிக்கு டேப்லட் போட்டுக்கறது நல்லதா? அல்லது எங்க ஆளு சேப்டி பலூன் யூஸ் பண்ணறது
நல்லதா-?
நான்
நாளைக்கு கால் பண்ணறேன்னு சொல்லிட்டு கால் கட் செய்தேன்..
அவன்
சற்று முன் எழுந்திருக்க முடியாமல்.. தவித்த தவிப்பு கண் முன் வந்து போனது…நான் வேடிக்கை
பார்த்ததை நினைத்து ரொம்பவே வெட்கப்பட்டு வேதனை பட்டேன்.. குடிகாரனா இருந்தா? என்ன?
அவன் விழுந்தாலும் தூக்க வேண்டும் தானே?
இல்லை என்று மனது ஆயிரம் சப்பை கட்டு கட்டி மத்திய அமைச்சர் நாராயணசாமி போல மழுப்பி பதில் சொன்னாலும்… மழையில் அந்த மாற்றுதிறனாளி தவித்த தவிப்பை என்னால்
மறக்க முடியவில்லை…
அவன்
தலை துவட்டிக்கொண்டு இருந்தான்…
தலை
துவட்டியவனை நான் அழைத்தேன்..
பாஸ்…
சொல்லுங்க..
சாரி
பாஸ்…முக்கியமான கால் அதான் என்னால வந்து உங்களை
தூக்க முடியலை என்று எனது மிடில் கிளாஸ் மனசாட்சியின் உறுத்தல் காரணமாக அவனிடம் மன்னிப்பு
கேட்டேன்..
சச்சே
ஒன்னும் பிரச்னை இல்லை … உதவ நினைச்துக்கு மிக்க நன்றி என்றான்..
வீட்டுக்கு
வந்தேன்…….அவன் நினைவாகவே இருந்தேன்…அவனை தப்பாக
குடிகாரன் என்று நினைத்து ,அவன் தவிப்பை
வேடிக்கை பார்த்த அந்த கணத்தை என்னால் தாங்கி கொள்ளவே முடியவில்லை..
சாப்பாடு
போட்டு வைத்தார்கள்…
ஒரு
வாய் எடுத்து வைத்தேன்… அவன் மழையில் எழுந்திருக்க தவித்த தவிப்பு நினைவுக்கு வர…
சாப்பாடு
வேண்டாம் என்றேன்.
தோழி…மாத்திரையா
பலூனா என்ற குழப்பத்தில் கால் போட்ட கணவனை
கலவரத்துடன் விலக்கினாள்..
நான்
அவனை பற்ற நினைத்துக்கொண்டு இருந்தேன்….மழையில் அவன் தவித்த தவிப்பை நினைத்துக்கொண்டு தூக்கம் வராமல் புரண்டு படுத்தேன்..
சூம்பிய காலுடன் அவன் நன்றாக தூங்க ஆரம்பித்தான்...
வெளியே
மழை திரும்பவும் வெளுத்து வாங்க துவங்கியது………
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
கடைசி வரைக்கும் டவுட்ட கிலியர் பன்னலயே தல.........
ReplyDeleteவித்தியாசமான புனைவு! நன்றி!
ReplyDeleteso good
ReplyDeleteha ha!!! intha pathivu- IPL match maathiri, serious-ana match naduvula cheering girls dance -appa thane match interest-a irukkum
ReplyDelete