BLUE IS THE WARMEST COLOUR-2013/உலக சினிமா/ பிரெஞ்/இளம்பெண்களின் காதல்.



வாழ்க்கையில் செக்ஸ் எந்தளவுக்கு உசத்தி...?
வாழ்க்கைக்கு ரொம்ப  ரொம்ப முக்கியமான  விஷயம்...பல குடும்ப பிரச்சனைகள்.. உளவியல் ரீதியான பல பிரச்சனைகளுக்கு செக்ஸ் அரும்மருந்து என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்...மனித இனத்தின் ஆதார உணர்வு...



 ஆனால்  இந்தியாவில் சமீபத்தில்  உச்ச நீதி மன்றம் ஒரினசேர்க்கையாளர்களை  பாவம் செய்பவர்கள் என்று திருவாய் மலர.. ஆதரவாகவும் எதிராகவும், தேசத்தில் இந்த பிரச்சனை பூதாகரமாக  பற்றி எரிந்து கொண்டு இருக்க.. ஒரினச்சேர்க்கையாளர்களின் வலியை  சொல்லும் புளு ஈஸ் த வார்மஸ்ட் கலர்  என்ற பிரான்ஸ் திரைப்படம்....சென்னை 11வது பிலிம் பெஸ்ட்டிவலில் சத்தம் இல்லாமல் இந்த திரைப்படம் சில ஆயிரம் பார்வையாளர்கள் தரிசிக்க சத்தம் இன்றி சென்னை திரையை முத்த மிட்டு சென்று இருக்கிறது....


சொல்லும்  விதத்தில் சொன்னால் எல்லாம் ஏற்புடையதே... என்றும் சொல்லலாம்... அல்லது புரியும் விதத்தில் சொன்னால் எந்த விஷயத்தையும் மிக எளிதாய் புரியவைக்கலாம்... என்றும் சொல்லலாம்... இந்த திரைப்படம் ரெண்டாவது ஜாதி...


ஒருவேளை உணர்ச்சி வசப்படுபவர்கள் இந்த திரைப்படத்தை பார்த்தால் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக போராட்டம் நடத்த சென்றாலும் ஆச்சர்யம் இல்லை. ரெண்டு குட்டிங்க அரிப்பெடுத்து  தேஞ்சிக்கறாளுங்க... அதுக்கு ஆதரவா?- என்று கடைசி வரை மீசையில் மண் ஒட்டாமல் போராட்டகளத்தில் குதித்து நமது கலாச்சாரத்தை காக்க இன்னுயிரை தருபவர்களும் உண்டு... ஹி ஹி ஹி...


ஒரின சேர்க்கை ஆதரவு எதிர்ப்பு என்ற  விஷயத்தை விட்டு விடுங்கள்... ஒரு சின்ன எக்சாம்பிள் சொல்லறேன்.. முடிஞ்சா மண்டையில் ஏத்திக்கோங்க.
 சிலருக்கு  வெஜிட்டேரியன்தான் பிடிக்கும், சிலருக்கு கடல் உணவு பிடிக்கும், சிலருக்கும் மட்டன் மட்டும்தான் பிடிக்கும்...  சிலருக்கு சிக்கன்பிடிக்கும், சிலருக்கும் கோழி கறிதோலோட இருந்தா பிடிக்காது...  சிலருக்கு தோலோட சாப்பிட்டதான் பிடிக்கும்... சிலருக்கு தோல் இருந்தா குமட்டும்... 


சாப்பிடறதுலயே இவ்வளவு டேஸ்ட் இருக்கும் போது இரண்டு உடல்கள் இணைந்து இன்பம் பெருக்கும் செயலில் அதுவும் அந்தரங்கத்தில் எத்தனை டேஸ்ட் இருக்கும்...  தோல் இல்லாம சாப்பிடறது குத்தம்ன்னு சொல்ல  முடியுமா? அல்லது கோழிக்கறியே சாப்பிடதவனை  உஸ்ஸூன்னு சொல்ல முடியுமா? அது அவரவர் தேர்வு... அதை உளிதில் ஏற்றுக்கொள்ள முடியாதுதான்... அடுத்தவன்  என்ன பண்ணறான் காலம் காலமா கண்ணுல வௌக்கெண்ணை விட்டுக்கிட்டு பார்த்த சமுகத்தால புறம்  பேசமா  இருக்க முடியாது....100க்கு  5 பர்சென்ட் பேர் இப்படித்தான் இருப்பாங்க... முன்னாடியும் இருந்தாங்க..யாரும் வெளியில சொல்ல அஞ்சினாங்க... இப்ப வீ  ஆர் லெஸ்பியன், வீ ஆர் கே என்று சொல்லிக்கொள்ளுகின்றார்கள்.
இந்த வகையில் பாம்பே  டாக்கிஸ்  திரைப்பபடத்தின் முதல் கதை.... கே பற்றிய கதை...


சார்  அவ எல்லாம் ஒரே பாலினத்தோட கொட்டம் அடிச்சா... அப்புறம் எப்படி இனப்பெருக்கம்  நடக்கும்??? மனித இனம் அழிஞ்சிடாதுன்னு கண்டிப்பா கேள்வி வரும்... 133 கோடியில 30 கோடி அப்படி இருந்தா எப்படி மனித இனம் அழியும்.. ஆதே போல பெண்ணுக்கும் பையனுக்கும் கே  பொண்ணையோ? லெஸ்பியன் பையனையோ.. அவுங்க விருப்பம் தெரியாம  கோடி கோடியா கொட்டி கல்யாணம் செஞ்சி வச்சா மட்டும் இனவிருத்தி நடந்துடுமா-? பொண்ணோ.. பையனோ  கோர்ட்டுக்கு போய் டைவேர்ஸ் அப்ளை பண்ணி தொலைக்கனும்.



அடேல் பள்ளியில் படிக்கும் பருவப்பெண்..கூட படிக்கும் சக மாணவில்கள் எல்லோரும் உன்னை   அந்த பையன் பார்க்கிறான் என்று  கிளாசில் படிக்கும்  சக மாணவனை டார்கெட் செய்து  உசுப்பி விட, அவனோடு படுக்கையை  பகிருகின்றாள் அடேல்... ஆனால் அவளுக்கு  பெரியதாய் ஈர்ப்பு இல்லை என்பது கலவி முடிந்த அந்த கணம் தெரிந்து போகின்றது...ஒரு நாள் தலையில் நீல சாயம் அடித்த பெண்ணை தற்செயலாக பார்க்க பார்த்த  அந்த ஒரு கணத்தில் அவள் மேல்  காதல்  ஈர்ப்பு வர இரண்டு பேரும் நண்பர்களாகி அதன் பின் இரண்டு பேரும் படுக்கையை பகிர்ந்து கொள்ள அந்த ரிலேஷன் ஷிப் என்ன ஆனாது என்பதை  வெண்திரையில் கண்டு  மகிழுங்கள்.



 எந்த பேரழிகியான பொண்ணையும்  பத்துநிமிஷத்துக்கு மேல நிர்வாணத்தை தொடர்ந்து பார்க்கிட்டே இருக்க முடியாது.. அப்புறம் உனக்கு என்ன கலர்  பிடிக்கும்ன்னு பேச  ஆரம்பிப்போம் இல்லை... அந்த சைக்காலஜியை டைரக்டர் Abdellatif Kechiche நல்லா பிரிஞ்சி வச்சி இருக்கார். அதனால் இரண்டு மூனு சீனுல பீரிபா அந்த  பொண்ணை காட்டி கதைக்கு அழைச்சிக்கிட்டு போய் பீல் பண்ண வச்சி இருக்கார்....


அடேலா நடிச்ச சமீர் பொண்ணுடைய  நடிப்பு இருக்கே... சான்சே இல்லை.... அதே போல எம்மாவா நடிச்ச ஜிரோம்  ரெண்டுபேருமே நடிப்புல  பட்டையை கிளப்புறாங்க..அந்த அளவுக்கு சிறப்பா நடிச்சி இருக்காங்க..... நான் இதுவரைக்கும் பார்த்த படத்லேயே  லெஸ்பியன் உறவுகாட்சியை இந்த அளவுக்கு டீப்பா எந்த படத்துலேயும் காட்டியது இல்லை... 

செக்சிலஅவுங்க ரெண்டு பேரோட பிளஷர் திரையில் கொண்டு வந்து அந்த காதல் மீது அவர்களின்  ஈடுபாட்டை பார்வையாளர்களுக்கு  புரிய  வச்சி அதுல என்ன தப்பு என்று யோசிக்க வைப்பதுதான் இந்த திரைப்படத்தின் வெற்றி..... அதே போல அவர்கள்  காதலுக்கு அவர்கள் சமுகம் வெட்டருவா வேல் கம்பு காட்டி பயமுறுத்தவில்லை... தொந்தரவு செய்யவில்லை.. அவர்கள் காதலுக்கும் அவர்களிடம் மட்டுமே தீர்வு இருக்கின்றது...


ரொம்பநள் கழிச்சி பிரிஞ்ச அடேல் மற்றும் எம்மா சத்திக்கும் அந்த ஓட்டல் காட்சி அருமை.... அவர்கள் இரண்டு பேருடைய கதாலும் முக்கு சளியும் அழுகையுமாக இயல்பாக நம்மிடம் உணர்த்துகின்றார்கள்..


படத்தோட கேமராமேன்.. ஒரு லாங் ஷாட் அதுக்கு அப்புறம் அடேல் மற்றும் எம்மாவோட எக்ஸ்டிரிம் குளோசப் ஷாட்தான்... அது பல உணர்வுகளை சொல்லுகின்றது.... அதுவும் அடேல் வாயை திற்நதுகிட்டு தூங்கற ஷாட்ஸ் எல்லாம் கவிதை..


எம்மா பிரிஞ்சி  பொய் அவ பீலிங்கோட அவுங்க எப்பயும் சந்திக்கற மரத்தடியில அடேல் தனிய உட்கார்ந்து இருக்கும் அந்த காட்சி  அற்புதமான பிரேம்.... அப்ப மெலிதா அடிக்கற    காத்துல...  இலைகள் உதிர்வது  கவிதை...........


இந்த திரைப்படம் பல  திரைப்பட திருவிழாக்களில் கலந்துகொண்டு விருது  வாங்கி இருக்கின்றது... முக்கியமா கேன்ஸ்ல  விழாவில டைரக்டர் மற்றும் லீட் ரோல்ல   நடிச்ச ரெண்டு பேரும் விருது பெற்று இருப்பது கேன்ஸ் திரைப்படவிழா வரலாற்றும் இதுவே முதல் முறை.


=====================
படத்தின்  டிரைலர்...



==============
படக்குழுவினர் விபரம்...

Directed by Abdellatif Kechiche
Produced by Abdellatif Kechiche
Brahim Chioua
Vincent Maraval
Screenplay by Abdellatif Kechiche
Ghalia Lacroix
Based on Blue Is the Warmest Color 
by Julie Maroh
Starring Adèle Exarchopoulos
Léa Seydoux
Cinematography Sofian El Fani
Editing by Albertine Lastera
Camille Toubkis
Studio Quat'sous Films
France 2 Cinéma
Scope Pictures
Radio Télévision Belge Francofone
Vertigo Films
Distributed by Wild Bunch (France)
Sundance Selects (US)
Release dates
23 May 2013 (Cannes)
9 October 2013 (France)
[1]
Running time 179 minutes
Country France
Belgium
Spain[3]
Language French
Budget €4 million
Box office $10,043,205
==============
பைனல் கிக்.

கண்டிப்பாக வயதுக்கு வந்தவர்களுக்கு மட்டும்... அவசியம் பார்த்தே தீரவேண்டிய திரைப்படம்...இதே படத்தை இங்க இந்த இயக்குனர் எடுத்தா உயிர் படத்தை எடுத்த இயக்குனருக்கு நேர்ந்த கதிதான் ஏற்ப்பட்டு இருக்கும். மிக அற்புமான திரைப்படம்... அதே போல நீளத்தை குறைத்து இருக்கலாம்.. இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்று பரிந்துரைத்த தம்பி விமலுக்கும் என் நன்றியும் அன்பும்.

===============
படத்தோட ரேட்டிங்.

பத்துக்கு எட்டு.

============
பிரியங்களுடன்


ஜாக்கிசேகர்.



நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
 

6 comments:

  1. yenga sir pudikaringa indha madhiri padatha.

    www.writerkarthikeyan.blogspot.in

    ReplyDelete
  2. Thanks for the review sir. Kalakitteenga.

    ReplyDelete
  3. தல விமர்சனம் நல்லா இருக்கு நீங்க சொல்ற தேர்ந்தெடத்த படங்கள் எங்கள மாதிரி மதுரை மாதிரி ஊரில் இருக்கிரவங்க திரை யில் பார்க்க முடியாட்டியும் YouTube ல யாவது பார்ப்போம் இன்னும் விரிவா எழுதி னால். நன்கு

    ReplyDelete
  4. Search button not working properly. என்னனு கொஞ்சம் பாருங்க

    ReplyDelete
  5. ரூம் இன் ரோம்(ROOM IN ROME) படமும் இதே கதை தானே?

    ReplyDelete
  6. STORY LINE LIKE THE MOVIE "ROOM IN ROME".AM I RIGHT?

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner