நான் தமிழில் நான்
மிக மதிக்கும் இயக்குனர்களின் கவுதமும் ஒருவர்….
சமீபத்தில் விகடனில் வெளியான இயக்குனர் கவுதம்மேனன் பேட்டியை படிக்க முடிந்தது… சமீபத்தில் சூர்யா அவர் மேல்
கூறிய குற்ற சாட்டை சினிமா பற்றி எழுதும் ஆர் எஸ் அந்தணனில் இருந்து அமிஞ்சக்கரை ஆறுமுகம்
வரை எழுதி தீர்த்தனர்…
அதனாலே விகடன் பேட்டி மீது சினிமா ஆர்வலர்கள் மிக ஆர்வமாக அந்த பேட்டியை படித்தார்கள்..
நான் உட்பட அதில் இப்பவும் என் நண்பன் சூர்யா என்று சொன்னாலும் அதன் பின்னால் சூர்யா எற்ப்படுத்திய வலியை உணரமுடிந்தது…
சூர்யா பத்தி கவுதம் பேசி இருந்த பகுதி ரொம்ப டீசன்டா இருந்துச்சி…
அது உங்களுக்காக
''முதல்ல நான் ஒரு கதை சொன்னேன். 'வேற ஸ்கிரிப்ட் போலாமே’னு
சொன்னார் சூர்யா. 'என்னை நோக்கிப் பாயும் தோட்டா’னு இன்னொரு ஸ்கிரிப்ட் சொன்னேன். அதுவும்
வேண்டாம்னு சொல்லிட்டார். 'அப்ப 'துருவ நட்சத்திரம்’தான் அடுத்து நான் பண்ற படமா எனக்குத்
தெரியுது சூர்யா’னு சொன்னேன். 'ஓ.கே.’னு அவர் சம்மதிச்ச பிறகே வேலைகளை ஆரம்பிச்சோம்.
ரஹ்மான் சார் மியூசிக், த்ரிஷா ஹீரோயின், பார்த்திபன், அருண் விஜய்னு எல்லாம் ஃபிக்ஸ்
பண்ணி படப்பிடிப்புத் தேதியும் முடிவு பண்ணோம்.
ஆனா, படப்பிடிப்பு அன்னைக்கு காலையில், 'எனக்கு இது வேண்டாம்’னு
சொல்லிட்டார். அதுவும் போக கடந்த ஒரு வருஷமா, 'ஏன் இது, ஏன் அது’னு நிறையக் கேள்விகள்.
முதல்ல அவரோட அறிக்கை என்னை ரொம்ப அப்செட் ஆக்கினது. ஆனா, ஒருவிதத்தில் கொஞ்சம் ரிலீஃபாகவும்
இருந்தது. 'அப்பாடா’னு நிம்மதி கொடுத்துச்சு அந்த அறிக்கை.
'என்ன பிரச்னை... ரெண்டு பேரும் நல்ல நண்பர்களாச்சே?’னு ஏகப்பட்ட
விசாரிப்புகள். ஆனா, 'என்ன நடந்துச்சு’னு எங்க ரெண்டு பேருக்குமே தெரியும்னு அமைதியாகிட்டேன்.
என்ன ஒண்ணு, 'துருவ நட்சத்திரம்’க்காக வாங்கிவெச்சிருந்த ரஹ்மான் சார் டேட்ஸ் அத்தனையும்
வீணாப்போச்சு. ஆனா, இப்போ அவ்வளவு பரபரப்புக்கு நடுவிலும், சிம்பு நடிக்கும் படத்துக்கு
நான் கதை சொன்னதும் ட்யூன் அனுப்பிட்டார். இங்கே ரொம்ப நல்லவங்களும் இருக்காங்கனு நினைச்சுக்கிட்டேன்!''
இது போல இயக்குனர் பாராதிராஜாக்கிட்ட இப்படி ஒரு பிரச்சனையை சந்திச்சி
இருந்தா இவ்வளவு டீசன்டா பதில் வந்து இருக்காது…. ரகளை பண்ணி இருப்பார்.. பேட்டியில்
எதிராளிக்கு காது கிழிஞ்சி தொங்கற ரத்த வாடை
நமக்கே தெரிக்கும்… அவர் சுபாவம் அது…ரொம்ப நேசிச்சவங்க துரோகம் பண்ணும் போது எதுவும் பேசும்
மன நிலையில் மனம் இருக்காது… எவ்வளவோ பண்ணோமே.. நம்மளை போயா? அப்படின்னு நினைக்கும்
போது தலையை பிடிச்சிக்கிட்டு உட்காரதான் தோனுமே
தவிர.. முஷ்ட்டி மடக்கி வீரம் காட்ட முடியாது…. அப்படி வீரம் காட்டினா உண்மையா அந்த பர்சனை நேசிக்கலைன்னு அர்த்தம்…
ரகுமான் டேட்ஸ் என்பது பொன் முட்டையிடும் வாத்து…. ஹாரிஸ்
அளவுக்கு நட்போ.. நீதானே என் பொன் வசந்தம் படத்துக்கு இளையாராஜாவுக்கு கொடுத்த பூர்ண கும்ப முதல் மரியாதையை கூட ரகுமானுக்கு கவுதம் கொடுத்தது இல்லை… ஆனாலும் கவுதமின் இக்கட்டு புரிந்து
அடுத்து சிம்பு நடிக்கும் சற்றென மாறும் வானிலை படத்துக்கு ரகுமான் இசையமைக்கின்றார்…
என்னதான் சூர்யா
காதலுக்கும் அவருடைய கேரியருக்கும்
காக்க காக்க படத்தின் மூலம் முக்கிய தூணாக
கவுதம் விளங்கியது அத்தனை பேருக்கும் தெரிந்த சங்கதிதான் என்றாலும் ரகுமானுக்கு அப்படி ஒன்றும் கவுதம் செய்து விடவில்லை…
இருந்தாலும் ஒரு நல்ல கலைஞன் இக்கட்டில் இருக்கும்
போது… சம்பந்தமே இல்லாமல் யாரோ ஒருவர் கை கொடுப்பார்கள் … அது போலத்தான் ரகுமான் கவுதமுக்கு
கை கொடுத்து இருக்கின்றார்…
அதனால்தான் இந்த உலகில்
நட்பாய் பேசி இரக்கமில்லாமல் முதுகில்
குத்துபவர்கள் இருக்கும் போது கூட, நம்மை மருத்துவமனையில் சேர்த்து உயிர் காப்பாற்றுபவர்களும்
இருக்கின்றார்கள் என்பதைதான் கவுதம் இந்த உலகத்தில்
நல்லவங்களும் இருக்காங்க என்று சொல்லி இருக்கின்றார்….
எந்த ஊருக்கு போனாலும் அந்த ஊரை நாம ஆளனும்… ஒரு கலக்கு கலக்கனும்ன்னு காக்க காக்க
படத்தில் வில்லன் முடியை ஒதுக்கி விட்டுக்கிட்டு
சொல்லுவான்…
அது போல திரும்ப
ஒரு கலக்கு கலக்க வாழ்த்துகள் கவுதம்.
அதே போல ரொம்ப நீட்டான
பேட்டி கொடுத்தமைக்கு…
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
நீதானே என் பொன்வசந்தம் படத்துக்கு கவுதமும் இளையராஜாவும் கொடுத்த அலப்பரையை இப்போது நினைத்தால் நகைச்சுவையாக இருக்கிறது. அப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றதாக அப்போது ராஜா ரசிகர்கள் பெருமை கொண்டார்கள். அது உண்மையானால் இப்போது இவர் ஏன் "தனக்கு மிகவும் பிடித்த இசை அமைப்பாளரை" விட்டு விட்டு ரஹ்மானிடம் வரவேண்டும்? தன் படத்துக்கு இளையராஜா சரியான தேர்வே அல்ல என்பதை அவர் அப்போதே உணர்ந்திருப்பார் என்று தோன்றுகிறது. இனிமேலாவது ராஜா ரசிகர்கள் உண்மையை ஏற்றுக்கொள்வது நல்லது - அதாவது இளையராஜாவால் இன்றைய தலைமுறையினரை கவரும் வகையில் இசை அமைக்க என்பதை.
ReplyDeletehttp://tamilscreen.com/suriya-vs-goutham/
ReplyDeleteகவுதம் மேனன் பேட்டி ரொம்ப ஜென்டிலா இருந்தது...
ReplyDeleteMr.Karigan story u than music director ah fix pannuvanga, action story ku Raja sir podarathu kastam. neethane en pon vasantham Raja sir music ilana One week kuda thandi irukadhu. he is legend, after 10 to 20 year new composers irupanga. Rahman? Doubt
ReplyDeleteTrisha Suriyavai parti aditha comment Vikatan.com la vantha pinnum Suriya eppadi trishavai heroina accept pannuvar? Ana Gautham solra statementla Trisha than heroine, shooting andru kalayila surya padam vendamnuttar enru solkirar. Nanban Suriyanu solra Gautham Trishava yen heroina thinikarar? probleme Trish thane. Ippa Ajith combinationla heroina mathitarla. Gautham solrathula engaeo idikuthe. Gautham than Trishvirkaka Suriya vendamnu ninakirar pola.
ReplyDeleteTrisha Suriyavai parti aditha comment Vikatan.com la vantha pinnum Suriya eppadi trishavai heroina accept pannuvar? Ana Gautham solra statementla Trisha than heroine, shooting andru kalayila surya padam vendamnuttar enru solkirar. Nanban Suriyanu solra Gautham Trishava yen heroina thinikarar? probleme Trish thane. Ippa Ajith combinationla heroina mathitarla. Gautham solrathula engaeo idikuthe. Gautham than Trishvirkaka Suriya vendamnu ninakirar pola.
ReplyDeleteTrisha Suriya parti"Thambi Nee Valaranum" comment (Published in vikatan.com)aditha pirahum Suriya eppadi Trishavdun Hero va nadippar? Ana Gautham Trisha than Heroin, shooting andru Suriya intha padam vendamnutta enru solgirar. Problem undanathe Trishvalathane. piragu ethanal Gautham Trishathan Heroinu pdivatham panninar. Ippa Ajith combinationla heroina mathitare! Gautham than Trishavirkaka Suriyavai ....
ReplyDeleteநானும் அவர் பேட்டியை படித்தேன்
ReplyDeleteஉங்களின் பதிவு
ரீடிங் பிட்வீன் லைன்ஸ்...
ரொம்ப அருமை...
கலக்கட்டும் கெளதம்
apart from gautham & surya politics Rahaman proved once again that he is a distinct personality
ReplyDeleteNice review
ReplyDeleteThanks :)
ReplyDelete