A HOUSE KEEPER-2002("Une femme de ménage")உலக சினிமா/பிரெஞ்சு/விடுகதை.
பொதுவாய் விஜய், அஜித், சிம்பு, ஜீவா, சூர்யா, ஆர்யா
போன்றவர்களின்  காதலையும் அவர்கள்  உணர்வுகளை மட்டுமே  தமிழ்சினிமாவில் பார்த்து சலித்து வெறுத்து  இருக்கின்றோம்..

 எப்போதாவது அமிதாப்பின் சினிகம்,சிவாஜியின் முதல் மரியாதை என்று அத்தி பூத்த போல சில காதல்களையும்  மத்திம வயது அல்லது அதை கடந்தோரின் காதல்களை அவர்களின் உணர்வுகளை  ரொம்ப  நெருக்கமாய் பார்த்தது  தமிழ் சினிமாவில்  மிக மிக குறைவு என்பேன்…

விடுகதை கொஞ்சம் டீப்பாக போய் ஒரு வயது குறைவான பெண்ணுக்கு வயது அதிகமான ஆணுக்கும்  இடையில் இருக்கும் காதலை பொத்தி வைத்து தமிழ் சமுகத்தில் ஜல்லியடித்து  நடிக்காமல், மிக தைரியமாக பேசிய திரைப்படம் என்று சொல்லுவேன்….

45 நெருங்கும்  தாய் மாமனுக்கு 18 வயது பெண்ணை மனம் முடித்து மகிழ்வுடன் வாழும் பெண்களையும், கட்டாய திருமணம் என்று எதிர்த்து நின்ற பெண்களையும் நான் அறிவேன். ரைட் எதுக்கு பீடிகை ஸ்டெரியிட்டா விஷயத்துக்கு வருவோம்…

இந்த படமும் அப்படி ஒரு காதல்தான் ஆனா அது காதலா? இல்லையான்னு படம் பார்க்கும் போது புரிஞ்சிடும்..

ஆண்  பெண் இரண்டு பேருமே சுயநலவாதிங்கதான்… ஆனா இதுல பெண்… கொஞ்சம் அதிக சுயநலம்… அதுக்கு காரணம்.. அவ வாரிசை உருவாக்குபவள்.. ஒரு குழந்தை பெத்தா… அதை வளர்க்கும் அளவுக்கு அவனுடைய துணை உறுதியானவனாக இருக்க வேண்டும்…ஆண் எத்தனை வயதில் வேண்டுமானாலும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்.. பட் அந்த குழந்தையை வளர்க்கும் அளவுக்கு அவன் ஆளுமை வேண்டும் அல்லவா?

 அதனால் பெண் இந்த விஷயத்தில்  நல்ல  திடகாத்திரமான ஆளுமை உள்ள ஆணைத்தான் தேர்ந்து எடுப்பாள்… இது இயற்கை.

சரி படத்தோட மேட்டருக்கு வருவோம்..


அவன் ஒரு சவுன்ட் என்ஜினியர்…. பொண்டாட்டி அவனை விட்டுட்டு எவன் கூடயோ ஓடிப்போயிட்டா… வீடு  புல்லா குப்பை… சரி அதை சுத்தம் பண்ண ஒரு சின்ன பொண்ணு ஹவு கிப்பீங் வேலைக்கு வருது.. வாரத்துல ஒரு நாள் வந்து கிளின் பண்ணா போதும்ன்னு சொல்லறான்.. ஆனா அந்த பொண்ணு செய்யற சுத்தமான வேலையில் வாரத்துக்கு மூனு  நாள் வர சொல்லறான்..


ஒரு நாள் அவன்கிட்ட தயங்கி தயங்கி  நான் தங்கற இடத்துல பிரச்சனை இங்க தங்கிக்கறேன்னு சொல்லுது… சரின்னு சொல்லறான்… நீ ரொம் சின்ன பொண்ணு இங்க ரொம்ப நாள் இருக்க முடியாது… ஒரு வாரத்துல வேற இடம் பார்ததுக்கோன்னு சொல்லறான்..  அந்த பொண்ணும் தலையாட்டுது…இருக்கற ஒரு பெட் ரூம்ல அவளை படுக்க சொல்லிட்டு ஹால்ல பயபுள்ளை படுத்துக்குது…ஒரு நாள் இந்த பொண்ணே அவன் கிட்ட வந்து செக்ஸ் வச்சிக்குது.. அதுக்கு அப்புறம் அவன் ஆபிஸ் கிளம்பிக்கிட்டு இருக்கறவனை கூப்பிட்டு எல்லா வேலையும் முடிச்சிட்டேன்... என்னவேன என்னை பண்ணிக்கோங்கன்னு சொல்லுது...

 சரி… விஷயத்துக்கு வருவோம்…

அவ சொல்லறா… நீ என்னை காதலிக்கிறியான்னு… இந்த ஆளு சொல்லறான்.. நான்  உன்னை காதலிக்கலை.. ஆனாலும் உன் மேல காமம் இருக்குன்னு சொல்லறான்.. ஆனா அவனை  லவ் பண்ண வைக்க  ரொம்பவே டிரை பண்ணுது… பட் கிளைமாக்ஸ் வேற… 

திருடனுக்கு தேள் கொட்டியகதைதான்..

   பஸ் புல்லா பிட் நோட்டிஸ் ஒட்டறது போல இல்லாம  சின்ன சின்ன ஷாப்பிங் கடைகளில் வேலை வேண்டும் என்று எழுதி கான்டாக்ட் நம்பர் எழுதி வச்சிட்டு போறது நல்ல மெத்தேட். பிரான்ஸ் போகாட்டியும் அங்க வாழாட்டியும் இது போல பல விஷயங்கள் இது போன்ற படங்கள் மூலம்தான் அறிய முடிகின்றது.,

.
அதே போல நாள் எல்லாம் சவுண்ட்  என்ஜினியரா உழண்டு வீட்டுக்கு வந்தா.‘, இந்த பொண்ணு சத்தமா பாட்டு கேட்டுக்கிட்டு பத்து பாத்திரம் கழுவும் இடத்தில்  அவன் அடையும் எரிச்சல்.,.
.

அதே போல  அந்த பெண்ணை லைட்டா பார்த்துட்டு அவன் வேலையை பார்த்துக்கிட்டு போறதும்..  அடுத்த ரூம்ல சத்தமா அவ பாட்டு கேட்க… இவன் பெட்ரூம்ல சிம்பனி போட்டு சவுண்ட் வைக்க… சட்டென அந்த பாடலின் மேல் அவனுக்கு கவனம் போவுதுன்னு  சவுண்ட் மிக்சிங்ல அவன் பீலிங்க காட்டி இருக்கும்  இடம் கவிதை…

அந்த பெண்ணின் முடிவு ஏற்றுக்கொள்ளக்கூடியது என்றாலும் அவனை காதலிக்க  வைக்க போராடும் காட்சிகள் ஏன்??? ஏன் என்றால்… பெண்   தான் நேசிக்கும் எல்லா இடத்திலும் தானே ரசிக்க படும் பாத்திரமாக இருக்கவேண்டும் என்பதுதான்…

படத்தோட கிளைமாக்ஸ் திருடனுக்கு தேள் கொட்டியது போலத்தான்… பட் எவ்வளவுதான் ஒரு ஆண் ஸ்டெடியா இருந்தாலும் பெண்களின் கடைகண் பார்வைகளில் விழுந்து  மீசையில் மண்  ஒட்டிக்கொள்வது காலம் காலமாக நடந்து வரும் விஷயம்ததான்… அந்த சவுண்ட் என்ஜினியரும் விதிவிலக்கல்ல..
===============
படத்தின் டிரைலர்==============
படக்குழுவினர் விபரம்

Director:
Claude Berri
Writers:
Claude Berri, Christian Oster
Stars:
Jean-Pierre Bacri, Émilie Dequenne, Brigitte Catillon

Country:
France
Language:
French
Release Date:
13 November 2002 (France) See more »
Also Known As:
The Housekeeper See more »
Box Office
Opening Weekend:
$42,083 (USA) (11 July 2003)
Gross:
$455,026 (USA) (7 November 2003)
See more »
Company Credits
Production Co:
Canal+, Centre National de la Cinématographie (CNC), Renn Productions
Show detailed company contact information on IMDbPro »
Technical Specs
Runtime:
91 min
 

===================
பைனல்கிக்.
இந்த பிரெஞ்சு படத்தை பார்க்க வேண்டிய திரைப்படம் என்று பரிந்துரைக்கின்றேன். முதல் பாதி முழுக்க அவர்கள் பிரச்சனைகள் அவர்கள் எண்ணவோட்டங்கள்,  அவர்கள் கேரக்டர்கள்.. வாழ்க்கை  முறை  போன்றவற்றை நீட்டி முழங்காமல் விஷுவலாக கதை சொல்லி இருப்பார்கள்..   கண்டிப்பாக இந்த திரைப்படம் வயதுக்கு வந்தவர்களுக்கு மட்டும்.
========
படத்தோட ரேட்டிங்.
பத்துக்கு  ஆறு.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..
 
நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

3 comments:

 1. விமர்சனம் அருமை...
  வாழ்த்துக்கள் அண்ணா.

  ReplyDelete
 2. படம் பார்க்க தூண்டும் அருமையான விமர்சனம். சூப்பர்.

  ReplyDelete
 3. பகிர்தலுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பர்களே.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner