2005ல் மத்தியில் உள்ள மாதத்தில்...
 முதன் முதலாக நான் சிஸ்டம்
வாங்கினேன்...சிஸ்டத்தை பத்தி எனக்கு எதுவும் தெரியாது... இன்டல் கோர்டூ டியோ என்ற
பிரசசர் வெகு பிரபலமாக இருந்த நேரம்...
திடிர் காமம் , காதல் கொடுக்கும் ஆச்சர்யத்தை போல அது நிறைய
எனக்கு கற்றுக்கொடுத்தது...எனக்கான வலைபக்கத்தை தொடங்கியதில் இருந்து இது என்னோடு உற்ற
தோழனாய் உறவாட ஆரம்பித்து விட்டது... எனது எண்ணங்கள் எழுத்துருக்கலாக வெளிப்பட்டன....
மிக சாதாரணமாக வலை பக்கத்தை ஆரம்பித்து என்னை விடாமல் எழுத
தூண்டிய போது எல்லாம் எனக்கு தோள் கொடுத்த சிஸ்டம் அது... எட்டு வருடங்கள் அது எனக்காய்
வாழ்ந்தது என்றே சொல்லாம்... திடிர் என்று ஒரு மாதத்திற்கு முன் கண்ணீர் புகை வருவது
போலசிஸ்டத்தின் பின் புறத்தில் இருந்து புகை வந்து விட்டது... அதனால் இன்னமும் அதனை
படுத்தி எடுக்க மனம் கொடுக்கவில்லை....
ஒரு மாதம் கை உடைந்தது போல ஆகிவிட்டது.... ஒரு ஆறு மாதகாலமாக
பாசப்போராட்டம் போல சின்ன சின்ன பிரச்சனைகளை அது கொடுத்து வந்தாலும் ஒரு இடத்தில் பிரேக்
டவுன் அளவுக்கு ஆகி விட்ட காரணத்தால் நேற்று புது சிஸ்டம் வாங்கி விட்டேன்... ஐ 3 பிராசசர்...
பழைய சிஸ்டம் எனக்கு வலையுலகம்மூலமும் பேஸ்புக் முலமும் எனக்கு
பெற்று தந்த நண்பர்கள் வட்டம் ஏராளம்... உலகத்தை சுருக்கி கையளவில் எனக்கு கற்றுக்கொடுத்தது..
அந்த சிஸ்டம்தான்.... 19/12/2013இல் இருந்து உங்களோடு உறவாடு லேட்டஸ்டாய் தோள் கொடுக்க களத்தில்
இறங்கி இருக்கின்றான்....உங்கள் ஆசிகள் எதிர்பார்த்து...
let me come to the point...
 புது  சிஸ்டம் வாங்கியாக விட்டது...  வருடத்தின் கடைசி தினங்கள் வரிசையாக வந்து கொண்டு
இருக்கின்றன... அப்ப என்ன மாதிரியான படத்தை உங்களுக்கு நான் பரிந்துரைக்க வேண்டும்..?
கண்டிப்பா ஒரு நல்ல படத்தை தானே..?? அதான் இந்த  
கொரிய படமான   கோல்ட் ஐஸ் படத்தை உங்களை
கண்டிப்பா பார்க்க சொல்லறேன்..... 
கலா மாஸ்டர் சொல்லறது போல சும்மா கிழி கிழின்னு கிழிச்சி
தொங்க விட்டுட்டானுங்க....
 சான்சே இல்லை
??  என்ன மாதிரியான மேக்கிங்... அற்புதம் மார்வலஸ்....
 படத்துல மொத
20   நிமிஷம் இருக்கு பாருங்க.... அசத்திட்டானுங்க... 
 ஒவ்வோரு படத்துக்கும் டைட்டில் போடும் முன்  எதையாவது நமக்கு சேதி சொல்லிட்டு,  அப்படியான்னு ஆன்னு வாயில  ஈ  போறது கூட தெரியாம வாய பொளக்கும் போது, படத்தோட
டைட்டில் போடுவானுங்க... அது போல டைட்டில் போட்ட 
படங்கள் நிறைய இருந்தாலும்... ஒக்காலி 
காலையில் ஆபிஸ் போகும் போது அவசரமா எழுதும் போது நினைவுக்கு வந்து தொலைக்கமாட்டுது...
சரி இப்படி வச்சிக்குவோம்... அது போல வித்தியாசமா டைடில் போட்ட படங்கள் உங்கள் அனுபவத்தில்
ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்...
இந்த படத்தோட டைட்டில் போட 20 நிமிஷம் ஆவுது.. அதுக்குள்ள
மெயின் கேரக்டர்ஸ்  எல்லாம் இன்ட்ரோ ஆயி...
ஒரு ஆக்ஷன் குறும்படம் போல முடிச்சி...... வாயை திறக்கும் போது  கோல்ட் ஐஸ் அப்படின்னு டைட்டில் போட்டு தொலைக்கறானுங்க..
அப்படி இந்த படத்துல  டைட்டில் போடும் இடம்
இருக்கே... சான்சே இல்லை.... ஒரு  சின்ன நெகிழ்ச்சி...
யோவ் என்னய்யா பெரிய மயிறு டைட்டிலை வச்சி தொலைச்சிட்டானுங்க...
புதுப்படம் ரிலிஸ் ஆனாலோ இல்லை   அரசியல் வாதிங்க... விழாவுல கலந்துக்கிட்டாலோ.. நாங்க
வைக்காத டைட்டிலான்னு எனக்கு டப் பைட் கொடுப்பது எனக்கு புரியுது.,.. இருந்தாலும் இந்த
படத்தோட டைட்டில் போடும்  காட்சி உண்மையிலேயே
அசத்தல்...
அதே போல  சினிமா போட்டோகிராபி.....  அதுவும் 
இரண்டு பேரும் சும்மா பிரிச்சி மேஞ்சி இருக்கானுங்க. என்ன மாதிரி ஷாட்.. ஆனா
எடிட்டிங் ஒரே ஆளுதான் பண்ணிஇருக்கான்...  மண்டை
கொழம்பி  போய் இருந்தாலும்  நம்மளை கொழப்பாம சமத்தா எடிட்டிங் பண்ணிஇருக்கான்...
அதுக்கு உதாரணம்  இந்த படத்தோட மொத இருபது நிமிஷம்..
சரி கதையை பார்த்துடலாம்...
ரொம்ப புத்திசாலியான கொள்ளை கூட்டம் ...
 புத்திசாலின்னா...?? 
ரொம்ப ரொம்ப புத்திசாலின்னு அர்த்தம்.. 
கதையை சொல்ல விடுங்கடா....
 பேங்கை கொள்ளை அடிக்கறது
சீக்ரேட் பைல்களை திருடி வருவதுதான் அவர்களுடைய தினப்படி வேலை...கொரியாவில் இருக்கு
புலனாய்வு  சிறப்பு அமைப்பு எப்பாடு பட்டு இவர்களை
கண்டு பிடிக்கின்றது என்பதுதான் படத்தின் ரிலே ரேஸ் திரைக்கதை...
புதிதாய் வேலைக்கு சேரும் டிரெய்னி... அவளுக்கு முதன் முதலில்
வழங்ப்படும் அசைன்மென்ட் ... அப்போதே முக்கிய கேரக்டர்களை அறிமுகப்படுத்தும் அந்த முதல்
20 நிமிடம்... ஓத்தா அடுத்து அந்த முத 20 நிமிடத்தை திரும்ப திரும்ப சொன்னா.. பிச்சி
புடுவேன்  பிச்சின்னு இப்பதான் ஒரு ராங்கால்
வந்தது மக்கா.. அதனால் இனிமே  அதை  சொல்லவே இல்லை...
படத்துல ஒரு சீன்... போலஸ் டிப்பார்ட்மென்ட்ல இருக்கற  பையன் ஒருத்தன் இறந்துடுவான் பாடி மாச்சுவரியில
இருக்கும் அவனை பார்க்க போயிட்டு... இந்த இடம் 
ரொம்ப  கூலா இருக்குல்ல... அவனுக்கு
குளிரும் ரொம்ப நேரம் அவனை வச்சி இருக்காதிங்கன்னு சொல்லற இடம் இருக்கே  நெகிழ்ச்சியின் உச்சம்...
இந்த படத்தோட இன்னோரு பிளஸ் போலிஸ் போர்சுக்கு  உயர் அதிகாரியா 
ஒரு பெண்ணை போட்டதுதான்... 
என்னது...?????
யோவ் பேட் பாய்ஸ்.... நடிக்க வச்சதை சொன்னேன்....
அளட்டிக்கவே இல்லாம அன்டர்பிளே நடிப்பு.. முக்கியமா ஒரு  அக்யூஸ்ட் சிக்கிட்டான்னு தகவல கிடைச்சசதும்...   தன் கோட்டை கழட்டி விட்டுட்டு படிபடிப்பாய மாணிட்டர்
டிஸ்பிளே  உயிர் பெறும் காட்சிகள் ரத்தத்தை
அப்படி சூடாக்கும் காட்சிகள்..
 இன்னோன்னு சொல்ல
ட்டா...   இந்த படம் அப்பட்டமான ரிமேக் படம்...  எஸ் 2007 ஆம் ஆண்டு ஹங்காங்ல  ரிலிஸ் ஆனா ஐ இன் த ஸ்கை படத்தோட ரிமேக்தான் இந்த
படம்.. ஆனா ஒரிஜினலையே தூக்கி சாப்பிட்டுட்டானுங்க... இந்த படத்தோட இயக்குனர்கள் இரண்டு
பேரும்...
ஒரு ரிமேக் படம் எப்படி எடுக்க வேண்டும் என்று  இந்த படத்தை பார்த்து  கண்டிப்பா கத்துக்கலாம்... 
சரி இந்த  புல்லோடேட்
 ஆக்ஷன்படத்தை தமிழ்ல எடுக்கம்ன்னா... இரண்டு
பேருதான் எனக்கு தெரிஞ்சி இருக்காங்க... ஒன்று கவுதம் மேனன்... அப்புறம் கேவி ஆனந்...
 சார் டைரக்டர் ஷங்கர்.....???
 கண்டிப்பா... எடுப்பார்..
அவர்கிட்ட பாட்டு மட்டும் படத்துல எடுக்ககூடாதுன்னு கண்டிஷன் போட்டு விட்டு எடுக்க
சொல்லலாம்....
==============
படத்தோட டிரைலர்.
==============
படக்குழுவினர் விபரம்
Directed by	Jo Ui-seok
Kim Byung-seo
Produced by	Lee Yu-jin
Written by	Jo Ui-seok
Based on	Eye in the Sky 
by Yau Nai-Hoi and Au Kin-Yee
Starring	Sol Kyung-gu
Jung Woo-sung
Han Hyo-joo
Lee Junho
Music by	Dalparan
Jang Young-gyu
Cinematography	Kim Byung-seo
Yeo Kyung-bo
Editing by	Shin Min-kyung
Studio	Zip Cinema
Distributed by	Next Entertainment World
Release dates	
July 3, 2013
Running time	118 min.
Country	South Korea
Language	Korean
Budget	₩4.5 billion
Box office	US$34,849,357
=============
பைனல்கிக்.
இந்த  கோல்ட் ஐஸ்
கொரிய ஆக்ஷன் படத்தை ஆக்ஷ்ன் பட  ரசிகர்கள்
மற்றும் சினிமா ரசிகர்கள் கண்டிப்பா மிஸ் பண்ணாம பார்க்கவேண்டிய படம்....  ரீமேக் படம் இயக்குறதுல  அதை சக்சஸ் பண்ணறதுல இருக்கற ஒரு பெரிய  பிரச்சனை என்னன்னா? 20 வருஷமா பார்த்து ரசிச்ச பொண்டாட்டியை,
 பஸ்ட் நைட்டுல  பார்த்து ரசிச்சது போல திரும்ப  மொத தடவை பார்க்கும் ஆர்வத்தோட ரசிக்கறது எவ்வளவு
 பெரிய சாவாலோ... அப்படி பட்ட சவால்தான்  ரீமேக் படத்தை சக்சஸ் படமா எடுக்கறதும்....so  don't miss this movie...
இந்த திரைப்படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று படுத்தி எடுத்த தம்பி ரமேஷ்சீனுவாசனுக்கு என் அன்பும் கனிவும்... இது போன்ற திரைப்டங்கள்  நண்பர்கள் யாராவது பார்த்தால் பரிந்துரைக்க வேண்டுகின்றேன்..
===========
படத்தோட ரேட்டிங்.
பத்துக்கு எட்டு.
=============
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...






 
 
நல்ல விமர்சனம்...
ReplyDeletefilm parthen innaiku. really superb.
ReplyDeletefilm innaiku parthen. really superb. Thanks jackie sir.
ReplyDeleteintha year chennai film festival la Blue is the warmest color nu oru film pottanga. really it's superb film. neenga kandippa parthu review eluthanum.
ReplyDeleteplease find the below torrent link.
http://kickass.to/nc-17-blue-is-the-warmest-color-2013-cam-718x300-eng-sub-mp4-t8360714.html
அன்னே அப்படியே now you se me paarungka.
ReplyDeleteஅன்னே அப்படியே Now you see me பாருங்க
ReplyDeleteஅன்னே அப்படியே now you se me paarungka.
ReplyDeletesupper machee
ReplyDeletesupper machee
ReplyDeletesupper machi
ReplyDeletesupper machi
ReplyDeleteபடம் நல்லாருக்கு... பார்த்துட்டுதான் கமென்ட் போடலாமின்னு இருந்தேன். (நீர்யானை) குற்றவாளி என கருதப்படும் நபரின் முகத்தை பார்க்க அவர்கள் செய்யும் சிறு சிறு ஐடியாக்கள் / பெண் அதிகாரி (டேல் ஆப் டூ சிஸ்டர்ஸ் நடிச்சவங்களா ) கோபத்தில் அடுத்து இதைதான் செய்வார் என்று தெரிந்து செயல்படும் பணியாளர்கள் என்று பல முறை வாயை பிளக்க வைத்தன.. இது போல படம் முழுக்க பல 'வாவ் 'கள்
ReplyDelete