2013 போல ஒரு ஆண்டை சந்தித்ததே இல்லை என்று சொல்லலாம்...
காரணம் அந்த அளவுக்கு பிரச்சனை மிகுந்த
ஆண்டு இது....மன உளைச்சலிலும் சரி... பொருளாதார
சூழலிலும் சரி... நித்தம் பிரச்சனைகள்தான்...
கடன் சுமை கழுத்தை நெரித்தது.... நடுவில் வேலை போனது... மேலும் கடன் மேலும் பிரச்சனைகள் என்று அனுதினமும்
ஒரு போராட்ட வாழ்வையே எனக்கு இந்த 2013 ஆம்
வருடம் வழங்கியது எனலாம்...
எழுதுவதில் படிப்பதில்
எதிலுமே நாட்டமற்று இருந்தேன்... தினமும் ஏதாவது பிரச்சனைகள் வந்து கொண்டே இருந்தது.... ஒன்னை சால்வ் பண்ணிட்டு வேர்வையை துடைச்சி முடிக்கறதுக்குள்ள, அடுத்த பிரச்சனை எதிர்க்க வந்து நின்னு எகத்தாலமா பார்க்கும்.....கஞ்சா அடித்து
விட்டு ஆறு மாத தாடியோடு அலையும் ஒரு நிலை....
ஆனால் வெளியே தெரியாமல் மன உறுதியோடு போராடினேன்...
சோந்து போய் நான் உட்கார்ந்து இருக்கும் போது.... என் பொண்டாட்டி
என்னை உலுக்கி டேய் இப்ப என்னாச்சி??
நம்பனவன் கழுத்துல
கத்தி வச்சிட்டான் அப்படித்தானே...?
நடக்க கூடாது...
ஆனா நடந்துடுச்சி..
அதுல இருந்து வெளியே
வா.... என்னோட பலமே நீதான்... நீ உடைஞ்சிட்டா என்னால எதுவும் செய்ய முடியாதுடான்னு கண் கலங்கினா....
பதினைஞ்சி வருஷத்துக்க
முன்ன கைலி கட்டிக்கிட்டு சைக்கிள்ல ஸ்டைலா கரும்பு கடிச்சிக்கிட்டு, ஒரு அதப்பு
மேல சைக்கிள் ஓட்டிக்கிட்டு என்னை பார்க்க வருவியே... அந்த ஜாக்கி போல எந்த கவலையும்
இல்லாம ஒரு அதப்போட வா.... எல்லாத்தையும் சமாளிக்கலாம்
என்று உறுமி அடித்து தலை சிலுப்பி எழுந்து... என்னை நடக்க வச்சவ என் பொண்டாட்டிதான்...
என் மனைவியும் என்
மகளுமே நான் துவண்ட சரிந்த போது தாங்கிபிடித்தார்கள்.... இரண்டரை வயது குழந்தை யாழினிக்கு என்ன தெரியும்??...
என் கல கலப்பு மிஸ் ஆனாலே... அப்பா ஏதாவது பிரச்சனையா? என்று மடிமேல் உட்கார்ந்து
கொண்டு ... கேட்ட அந்த கணங்கள் ...ஆயிரம் யானைகள் பலத்தை எனக்கு கொடுத்தது....
ஒரு நண்பருக்கு சொன்ன நேரத்துக்குள்ள நான் வாங்கிய பெரிய தொகை கொடுக்கனும்... ஓகே ன்னு சொல்லி கமிட் பண்ணிட்டேன்...பிளாக் படிச்சி பேஸ்புக் வழியா பழக்கமான எங்க மாவட்டத்துக்காரன்... அவன்கிட்ட போய் நின்னேன்... ஒன்றரை லட்சம் மூன்று பைசா வட்டிக்கு வாங்கி கொடுத்தான்... யாராவது என்கிட்டு வந்து வாங்கி கொடுக்க
சொன்னா....நான் யோசிப்பேன்...இத்தனைக்கு அவனுக்கும் எனக்கும் பெரிய பழக்கம் கூட இல்லை...ஆனாலும் அந்த இக்கட்டான
நேரத்துல அவன்தான் என் வேட்டியை
கீழ விழாம தாங்கி பிடிச்சான்....
அநியாய வட்டிக்கு
நகையை வச்சி பணத்தை பொறாட்டி சொன்ன
நேரத்துக்கு கொடுத்துட்டேன்.. அதை சொன்ன நேரத்துக்கு
ஜாக்கி பணத்தை கொடுக்கலைன்னனா பார்த்துக்கலாம்.. என்று ஒரு கூட்டம் கறுவிக்கொண்டு இருந்ததாக நண்பர் ஒருவர்
சொன்னார்....குன்றேரி யானை போர் பார்ப்போருக்கு யானைகளின் வலி உணருவதில்லை...
குன்றும் நிலையானதல்ல என்பதும் புரிவதில்லை...
இந்த வருட முடிவில் அந்த பணத்தை எங்க மாவட்டத்துக்காரருக்கு
திருப்பி கொடுத்தேன்... இத்தனைக்கு மூன்று
மாத வட்டி கட்டவில்லை...ஒரு போன் இல்லை... நினைவு படுத்தவில்லை... அப்படியான நட்புகள் கிடைத்தது இந்த வருடத்தில்தான்
நன்றி.. ராஜா.. வாழ்வில் எப்போதுமே இந்த உதவியை நான் மறக்கமாட்டேன்.
பெரிய தொகை பணத்தை பொரட்டி கொடுத்த அடுத்த செகன்ட் ... வேலையும்
போச்சி...வட்டிக்கு சொன்ன நேரத்துக்கு வாங்கி கொடுத்த பணம்... அடுத்த மாதமே வேலை போச்சி,
முன்று மாதங்கள் வேலையில்லை குடும்பத்தை சமாளிக்க மேலும் கடன் வாங்கி பெரிய
அலைகழிப்பை சந்திக்க வைத்தது......
டொட்டலா
ஒன்றரை லட்சம் எனக்கு பெரிய லாஸ்... பணத்தை
கடைசி வரை தின்ன முடியாது... ஆனால் நல்ல நண்பர்கள்
யார் போலி யார் என்று உணர வைத்த வருடம் இந்த 2013தான்... கஷ்டத்தை எனக்கு எப்படி சமாளிக்கறதுன்னு
கத்து கொடுத்துச்சி.... அதுக்கு இந்த வருஷத்துக்கு மிக்க நன்றி. அதே போல நண்பர்களிடம்
வாங்கிய அனைத்து பணத்தினையும் ஹவுசிங் லோன் சேங்ஷன் ஆன காரணத்தால் திரும்பிக்கொடுத்து விட்டேன்...
இந்த வருடத்துல இவ்வளவு கஷ்டத்துக்கு மத்தியில் சத்தமில்லாமல் மைதிலி தவிர்த்து அரசு பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கு
கல்வி உதவிதொகை நண்பர்கள் அளித்த உதவி தொகையில்
உதவிகள் செய்தேன்.. அது இன்னும் விரிவாய் நேரம் கிடைக்கும் போது எழுதுகின்றேன்... அது நண்பர்களாலே சாத்தியம்...நான் வெட்டிடுறேன்...
நான் கிழிச்சிடுறேன் என்று பந்தா பண்ணவேயில்லை...
ஒரு கேள்வி இதுவரை கேட்கவில்லை... நிபந்தனை விதிக்கவில்லை...இன்னும் கூட ஏன் என்று
ஒரு கேள்வி கேட்கவில்லை....நம்பிக்கை.... ஜாக்கி
மீது வைத்த நம்பிக்கை.... ஒரு சிலரிடம்
உதவி கேட்டேன்... கிடைத்தது... இன்று பல பிள்ளைகள் வாழ்வில் ஒளி... நான் எழதி கிழித்ததுக்கு அது போதும்...
ஒரு டாக்குமென்ட்ரி ஒர்க் ரொம்ப நாளாக இழுத்துக்கொண்டு இருக்கின்றது...
அதுக்கே நிறைய தடைகள்.. நான் நினைத்தது போல வர காலதாமதம் ஏற்ப்படுகின்றது....
தடைகள் நிறைய.... இன்னும் இரண்டு வருடத்திற்குள் எடுத்து முடிக்க இறையருள் உதவிட வேண்டும்.... பார்ப்போம்....
இந்த வருடத்தில்
உயிருக்கு உயிராக நேசித்த பால்ய நண்பனையும்
உயிருக் உயிராக நேசித்த பெண் ஒருத்தியையும்.... வெறுத்து ஒதுக்கியது இந்த ஆண்டில்தான்....அவர்களை
அப்படி பிரிவேன் என்ற நினைத்து பார்த்ததே இல்லை....அதே போல நான் பெரிதும் மதித்த இயக்குனர் ஒருவர்...அவர் படித்த
விஷயத்துக்கு என்னிடம் பேசியதுக்கும் சம்பந்தம்
இல்லாதது எனக்கு பெரிய அதிர்ச்சி.... பெரிய
டிசப்பாயிண்ட்மென்ட்.
அதே போல நான் மிகவும் மதித்த பெரிய மனிதர் ...அவரை அப்படி மதித்தேன்...
சிலர் சொல் பேச்சு கேட்டு மிக எளிதாக என்னை பலர் முன்னிலையில் பலிகடாவாக்கினார்... எண்ணி மூன்றே மாதம் பாரா சூட் இல்லாமல் கீழே விழுந்தார்...
அவர் இன்னும் எழுத்திருக்கவில்லை என்று கேள்வி....
கோவத்தை ஓரளவுக்கு
கண்ட்ரோல் பண்ணி இருக்கேன்.... கெட்ட
பழக்கம் இரண்டை மூன்றை விட்டு இருக்கேன்... தம்பி மருத்துவர் பாலா குடும்பத்தோட ஏலகிரி போய் இரண்டு நான் இருந்துட்டு வந்த போது ரொம்ப பிரஷ்ஷா இருந்திச்சி....
வழக்கம் போல சரியாக பண்ணிரண்டு மணிக்கு புதுப்பேட்டையில் கடை வைத்து இருக்கும் மீட்டர்
பஷிர்பாய்... புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்தார்....
சாரி ஜாக்கி சார் 30 செகன்ட் லேட்டாயிடுச்சி...
பாரின்ல இருந்து ஒரு நண்பர் கால் பண்ணி இருந்தார்... அதான் சில செகன்ட் லேட்டாயிடுச்சி....
மீட்டர் பஷீர் பாய்...
எனக்கு யாரு..?? என் கூட பொறந்தவனா? என் சொந்தக்காரனா?
சின்ன வயசுல இருந்து என் கூட பழகி வரும் பால்ய
சிநேகிதனா? இல்லை அடிக்கடி அவரோட சந்திக்கும்
நெருங்கிய நட்பா... குவாட்டரை வாங்கி கட்டிங் அடிக்கற நட்பா இல்லை இல்லைவே இல்லை... ஆனாலும் அவரு கடந்த
நாலு வருஷமா எனக்கு நியூயர் அன்னைக்கு நைட் பண்ணிரண்டு மணிக்கு .... மொத கால் அவருக்கிட்ட இருந்துதான் வரும்.....நாலு வருஷத்துக்கு
முன்ன மீட்டர் ரிப்பேர் பண்ண போறப்ப ஒரு வாட்டி பார்த்த பழக்கம்தான்.... கல்யாண பத்திரிக்கை வச்சி அவசியம் வரணும்ன்னு சொன்னேன்... 175 கீலோ
மீட்டர் பயணிச்சி...கொட்டும் மழையில் என் கல்யாணத்துக்கு
வந்து வாழ்த்திட்டு 100 ரூபாய் வரிசை வச்சிட்டு போன மனுஷன்...
அதுக்கு அப்புறம் பிளாக்ல அவரை பத்தி எழுதினேன்... என் தளம்
படிக்கற பல நண்பர்கள் அவரோட கடைக்கு போய் மீட்டர் சரிபண்ணிக்கிட்டு போயிருக்காங்க....
இரும்பு கொட்டிக்கெடக்கும் புதுப்பேட்டையில்
ஒரு இளகிய இதயம்ன்னு சொல்லலாம்.... அதனால அவரு சரியா புத்தாண்டு அன்னைக்கு பண்ணிரண்டு மணிக்கு தொடர்ந்து போன் செய்யனும்ன்னு
அவசியம் இல்லை.
ஆனாலும் அவரு எனக்கு போன் செஞ்சிக்கிட்டுதான் இருக்கார்...
இத்தனைக்கு கல்யாணத்துக்கு வந்து போனதுக்கு அப்புறம் இந்த நாலு வருஷத்துல ஒரு ஆறு வாட்டி
சந்திச்சி இருப்பேன்... அதிக பட்சம் ஒரு டீ ...நல விசாரிப்பு.... அவ்வளவுதான்.... ஆனாலும் போன்
செய்கின்றார்...
அவர் போன் வைத்த அடுத்த நொடி ஒரு பாரின் கால்....
ஜாக்கி அண்ணே ...
புத்தாண்டு வாழ்த்துகள்....
நான் துபாய்ல் இருந்து வேல்முருகன் பேசறேன்...
யாராவது நல்ல மனுசன்கிட்ட பேசனும்னு நினைச்சேன்...உங்க பிளாக்ல
நீங்க எழுதின மீட்டர் பஷிர்பாய் நினைவுக்கு வந்தார்.... பஷிர் பாய்க்கு போன் செஞ்சி புத்தாண்டு வாழ்த்து சொன்னேன்... அடுத்த கால் உங்களுக்குதான்...
அவருக்கு நான் யாருன்னு தெரியலை.... அப்புறம் அவருக்கு நான் உங்க பிளாக் படிச்சிட்டு அதுல இருக்கற நம்பர்
எடுத்து பேசறேன்னு சொன்னதும் அவருக்கு சந்தோஷம்
தாங்கலை..... சந்தோஷத்துல பெரிய சந்தோஷம் மத்தவங்களை சந்தோஷபடுத்தறதுதான்னேன்னு வேல்முருகன்
சொன்னாப்புல... இன்னமும் நம்ப முடியலைன்னே... உங்க கிட்டு பேசிக்கிட்டு இருக்கறதை...
நீங்க திட்டுவிங்களோன்னு பயந்துக்கிட்டு போன் பண்ணினேன்.... நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்... ரொம்ப நாள் பழகிய நண்பன்
போல பேசறிங்கண்ணே ரொம்ப நன்றிண்ணே... இது போன்ற நண்பர்கள் எனக்கு போதும்... இது போதும்....
2014 வருட ஆரம்பத்தில் பெரிய சவால்....
வாடகைக்கு வீடு பார்க்கின்றேன்...
2005 ஆம் வருஷம் வடபழனி குமரன் காலனியில் மொட்டை மாடியில்
ஆஸ்பெட்டாஸ் ஷீட் போட்ட வீட்டுக்கு....... வாடகை 1500 ரூபாய்..78 யூனிட் கரண்ட் பில்லு
வந்துச்சி யூனிட்டுக்கு நாலு ரூபாய் போட்டு 312 ரூவா.. தண்ணிக்கு 50 ரூபாய்...மொத்தம்
1862 ரூபாய்... அதுவே அப்ப கஷ்ட ஜீவனம்...
ஊர்ல சொந்த வீட்டுல இருந்து வாடகை வீட்டுக்கு போய் பணத்தை
எண்ணி கொடுக்கும் போது அது எனக்கு புது வித அனுபவத்தை பெற்று தந்தது.... இப்ப யாழினிக்காக
பத்து வருஷம் கழிச்சி திரும்ப சென்னையில் வாங்கிய சொந்த வீட்டுல இருந்து வாடகை வீட்டுக்கு போக போறேன்...
இந்த வீட்டு வாடகை பணத்தை வச்சிதான் அட்ஜஸ்ட் பண்ண வேண்டும்... ஆயிரம் சதுர அடியில்
இருந்து 600 அல்லது 800 சதுர அடியில் குடும்பம்
நடத்த வேண்டும்.... வேறு வழியில்லை..
கொளப்பாக்கத்துல இங்க பிரிகேஜிக்கு ஒன்னே கால் லட்சம் கேட்கறாங்க..
எங்க ரெண்டு பேருக்கும் மவுண்ட் ரோடு அருகே ஆபிஸ்...டெய்லி அப்பன்டவுன் 50 கிலோ மீட்டர்
டிராவல் பண்ண வேண்டி இருக்கு.....டிராவல் பண்றதை விட சென்னை டிராபிக்ல வண்டி ஓட்டறது
கொடுமை... வண்டிக்கு பெட்ரோல் போட்டு கட்டுபடியாகலை.
ஒய்ப்போட ரிலேஷன் மயிலாப்பூர் அப்பு தெருக்கிட்ட இருக்காங்க..
அதனால மயிலாப்பூர் பக்கம் தை மாசத்துல இருந்து வாடகை வீட்டுக்கு போலாம்ன்னு பிளான்....
அங்க இருக்கும் ஏதாவது பள்ளியில் யாழினியை சேர்த்து விடலாம்ன்னு பிளான்...மயிலை,ராயப்பேட்டை,மந்தவெளி,போன்ற
இடங்களில் வாடகைக்கு வீடு பார்த்து வருகின்றோம்....வீடு
வாடகைக்கு இருந்தால் நண்பர்கள் என் இன்பாக்சில் தெரிவிக்கவும்...மெயில்
dtsphotography@gmail.com... கைபேசி.98402 29629. ஹெல்ப் மீ பிளிஸ்... திரும்ப வாடகை வீடு கிலியை ஏற்படுத்தினாலும் வேறு
வழியில்லை...
அதே வேளையில் இந்த
வருடத்தில் உப்புக்காத்து மற்றும் சினிமா விமர்சனங்களை புத்தகங்களாக போட இருக்கின்றேன்... பேச்சு வார்த்தை நடந்து கொண்டு இருக்கின்றது...இந்த வருடத்தில் கடைசி தங்கைக்கு திருமணம் நடத்த வேண்டும்.
வேறு என்ன இந்த நேரத்தில்
பிரியாணி படத்தில் வரும் பாடல் வரிதான் இந்த நேரத்தில் நினைவுக்கு
வருகின்றது..
திரும்பி வா உன்
திசையென தெரிந்து மாறிப்போகாதே............
வருவதை எதிர்கொண்டு பார்த்திடு கோழை ஆகாதே..............
உன்னில் உள்ரத்தம் அது நித்தம் கொதிக்கட்டும்...
எண்ணிய எண்ணம் அது என்றும் ஜெயிக்கட்டும்
தப்பேதும் இல்லை நீ அப்பனுக்கு பிள்ளை....
எதிர்த்து நில் எதிரியே இல்லை... நம்பிக்கைகொள் தடைகளே இல்லை..
நிமிடம் ஏன் நொடிகளே போதும் நினைப்பதே வெற்றிதானே.....
வாருங்கள்.....
2014 புத்தாண்டினை வரவேற்போம்....
என்னோடு பயணிக்கு சக பயணிகளான நண்பர்கள் அனைவரும் இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துகள். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2014....இனி வரும் காலங்களில்... சகல
சௌபாக்கியங்களும் பெற்று, நலமுடனும் வளமுடனும் வாழ எல்லாம் வல்ல பரம் பொருளை வேண்டிக்கொள்கின்றேன்....
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்....
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜாக்கி
ReplyDeleteSuper Jackie. May god give you and your family lots of happiness from this year
ReplyDeleteSuper Jackie. May god give you and your family lots of happiness from this year
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள் ஜாக்கி பிரதர்........
ReplyDeleteஇந்த ஆண்டும் உங்கள் எழுத்துக்களுடனான இனிய பயணம் தொடர வேண்டும்...
புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜாக்கி பிரதர்........
ReplyDeleteஇந்த ஆண்டும் உங்கள் எழுத்துக்களுடனான இனிய பயணம் தொடர வேண்டும்...
Happy new year jackie anna
ReplyDeleteJackie
ReplyDeleteHappy new year.
May 2014 brings you peace of mind and prosperity.
Bala
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் உரித்தாகட்டும்...
ReplyDeleteHappy New Year Jackie
ReplyDeleteHappy new year jackie!!! :) :) Inimal vetrithan :) :)
ReplyDeleteJackie....Wish u happy new YEAR 2014!!! Inimal Vetrithan!!! :) :)
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள் ஜாக்கி.
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள் ஜாக்கி
ReplyDeleteபுத்தாண்டு சகல நலன்களையும் அள்ளித் தரட்டும். உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டுவாழ்த்துகள்!
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துகள்
ReplyDeleteதங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅன்புடன் DD
அன்பு எனதுடையீர்.
ReplyDeleteதங்களுக்கு எனது இனிய புத்தாண்டு,பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
I wish you a very very happy and prosperous new year 2014 Jackie
ReplyDeleteஅருமையான பதிவு....2014ஆன இந்த வருடம் அதிகமான பதிவுகளை பதிவிட எல்லோருக்கும் பொதுவான இறைவன் துணை நிர்பானாக.....
ReplyDeleteவாழ்த்து சொன்ன அத்தனை பேருக்கும் என் அன்பும் நன்றியும்......
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜாக்கி சார் தங்களின் இந்த கட்டுரை படித்து தங்கள் வலி புரிந்தது ஏனெனில் நான் கடந்து வந்து கொண்டிருக்கும் பாதையும் இது தானே கண்டிப்பாக வாழ்க்கையில் ஜெயிப்பீர்கள் வாழ்த்துக்கள்
ReplyDeleteWish u a very happy new year sir.
ReplyDeleteWish u a very happy new year sir.
ReplyDeleteHappy New Year Jackie and Your Family
ReplyDeleteWish u a very happy new year
ReplyDeleteWish u a very Happy New Year...............U will achieve your target........Dont Worry....
ReplyDeleteBEST WISHES TO YOU AND ALSO HAPPY NEW YEAR.
ReplyDeleteDO NOT WORRY. AS LONG AS YOUR WIFE SUPPORT IS THERE, YOU CAN WIN THIS WORLD. YOU WILL COME OUT OF ALL THESE PROBLEMS SOON. THIS IS WHAT MY INTUITION SAYS NOW. GOOD LUCK. SHOULD YOU NEED ANY OTHER HELP FROM MY SIDE, INCLUDING FINANCIAL, PLEASE DO NOT HESITATE TO APPROACH ME. I AM THERE TO HELP YOU TO THAT EXTENT WHICH I CAN.
BEST WISHES TO YOU AND ALSO HAPPY NEW YEAR.
ReplyDeleteDO NOT WORRY. AS LONG AS YOUR WIFE SUPPORT IS THERE, YOU CAN WIN THIS WORLD. YOU WILL COME OUT OF ALL THESE PROBLEMS SOON. THIS IS WHAT MY INTUITION SAYS NOW. GOOD LUCK. SHOULD YOU NEED ANY OTHER HELP FROM MY SIDE, INCLUDING FINANCIAL, PLEASE DO NOT HESITATE TO APPROACH ME. I AM THERE TO HELP YOU TO THAT EXTENT WHICH I CAN.
puthandu kanakka sollivittaay...iniyavathu iniyathavattum, so we can enjoy your sweet words
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா...
ReplyDeleteதங்களின் எழுத்துப் பயணம் தொடரட்டும்....
Happy new year to all your family and u r dreams.
ReplyDelete