THE GENERAL-1926/ உலகசினிமா/அமெரிக்கா/சலனபடகாலத்தில் ஒரு அட்வென்ச்சர் திரைப்படம்.




  லூமியர் சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சினிமா...
  இரண்டு வருடத்தில் சென்னையில் கால் பதித்த  போது, சினிமாவுக்கு ஒன்று மட்டும் தெரிந்த போனது....வெகு விரைவில் இந்த மாநிலத்தை ஆளப்போகின்றவர்கள்  தன்னால் புகழ்பெறப்போகும் சினிமா கலைஞர்கள்தான் என்பதை  புரிந்துக்கொண்ட சினிமா...  சென்னை சென்ரல் ஸ்டேஷனுக்கு பக்கத்தில் இருக்கும் விக்டோரியா பப்ளிக் ஹாலில் எட்வர்டு என்ற ஆங்கிலேயரின் ஆர்வத்தால் 1897 ஆம் ஆண்டு சென்னையில் ஒரு சுபவேளையில் கால் பதித்தது..  

அதே போல தென்னிந்தியாவின் முதல்  சலனப்படம்  கீசகவதம்... இந்த திரைப்படம் வெளியான ஆண்டு  1916 ஆம் ஆண்டு.. ஏறக்குறைய 27 வருடங்கள்   சென்னை மற்றும் தமிழகம் எங்கும் சினிமா அறிமுகமாகிவிட்டாலும், எல்லாம் ஊமை படங்கள் மட்டுமே திரையிட்டுக்கொண்டு இருந்தார்கள்... அதிலும் நம் தாயரிப்பு இல்லாமல் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட திரைப்பட சுருள்கள் தமிழகத்தை வியாபித்திருந்தன. நம் சுதேசி தயாரிப்பு என்று சொல்லப்போனால் அது கீசகவதம்தான்...

அதன் பின் தமிழ்சினிமா முதலில் நான்கு மொழிகளோடு கலந்து கட்டி பேசி முதல் பேசும் படம் 1931 ஆம் ஆண்டு ஹரிதாஸ்... ஆரம்பகால  தமிழ் மற்றும் இந்திய திரைப்படங்கள் புரான திரைப்படங்களாகவே இருந்து தொலைத்தன...  ஊமை படங்கள் மற்றும் பேசும் படங்களில் இதிகாசங்கள் மற்றும் புராணகதைகள்  அதிகம் இடம் பெற்றன...

ஆனால் அதே நேரத்தில் அமெரிக்காவில் 1926 ஆம் ஆண்டு ஒரு திரைப்படம் வெளியானது.... அந்த திரைப்படத்தின் பெயர் தி ஜென்ட்ரல்.   சினிமா கண்டுபிடிக்கப்பட்டு தமிழகத்துக்கு இரண்ட வருடத்தில் வந்த சினிமாவை    புராண கதைகளோடு கும்மி அடித்துக்கொண்டு இருந்த இந்திய சினிமாவையும் அமெரிக்கா சினிமாவை ஒப்பிட்டு பார்த்தால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தை உணராலாம்... எனக்கு  இந்த ஒப்பீடில் உடன்பாடு இல்லை என்றாலும்... சினிமாவில் அவர்கள் வளர்ச்சி அபாராமானது... அதுவும் சலனபடத்தில் 1926 ஆம் ஆண்டு ஒரு அட்வென்சர் படம் கொடுக்க முடியும் என்று என்னால் கனவில் கூட நினைக்கவில்லை...இன்றைக்கு இருக்கும் தொழில் நுட்பத்தில் கருப்பு காக்கையை கூட வெள்ளை காக்கையாக மாற்ற முடியும்... ஆனால்  அன்றைய காலத்தில் எந்த தொழில் நுட்பமும் கை கொடுக்காத காலத்தில்  இப்படி ஒரு ஆக்ஷன் திரைப்படத்தை எடுத்து இருக்கின்றார்கள் என்றால் என்ன மாதிரியான மூளை வேண்டும்...??? அதாவது அவர்கள் சினிமா ரசனை சலனபடகாலத்திலேயே  மாற்றப்பட்டு விட்டது என்பதுதான் உண்மை...

 நம்மாளுங்களும் சினிமா எடுக்கறானுங்க, அவனுங்களும்  சினிமா எடுக்கறானுங்க... பட் அவன்க மட்டும் எப்படி சினிமாவில் அசுரவளர்ச்சி பெற முடிந்தது என்ற நெடுநாள் கேள்விக்கு  பதில் கொடுத்தது இந்த திரைப்படம்தான்.... சார்லி சாப்ளின் திரைப்படங்கள் காமெடியை மட்டும் பிரதானப்படுத்தி இருந்தாலும் காமெடியோடு முழுநீள அட்வெஞ்சர்ஸ் நான் அவரது படங்களிலேயே நான் பார்த்து இல்லை.. முக்கியமாக  ஒன்றரை மணி நேரதிரைப்படம் கொஞ்சம் கூட போர் அடிக்காமல் சலனபட காலத்திலேயே அசத்தி இருக்கின்றார்கள் என்றால் எவ்வளவு பெரிய விஷயம்..????  வாவ் என்ன மாதிரியான திரைப்படம்.... ? என்ன மாதிரியான திரைக்கதை அமைப்பு... ?அதுவும் புராணம் படம் போல இல்லாமல் சேசிங் ஸ்டோரி... அதுவும் சைலன்ட் படத்தில் அட்வன்சர் ஸ்டோரி...  செம டுவிஸ்ட், பிரிலியின்ட் ஷாட்ஸ்.... வாவ் என்று என்னை நேற்று முழுவதும் ரசிக்க வைத்தது..

===========

THE GENERAL-1926/ உலகசினிமா/அமெரிக்கா/ படத்தோட ஒன்லைன்.

உதாசினப்படுத்தப்பட்ட ஒருவன் எப்படி உயர்கின்றான்   என்பத்தான் படத்தின்  ஒன்லைன்...

================
THE GENERAL-1926/ உலகசினிமா/அமெரிக்கா/  படத்தின் கதை என்ன,-?

Johnnie Gray (Keaton) ஒரு ரயில் என்ஜின் டிரைவர்... அந்த ரயில் என்ஜினுக்கு பேர்தான் ஜென்ட்ரல்.... Johnnie Gray உலகத்துல இரண்டு விஷயம்   அவனுக்கு ரொம்ப பிடிச்ச விஷயம்.... முதல்ல அவன்  காதலி..... இரண்டாவது  அவன் ஓட்டற  ஜென்ட்ரல் என்ற பெயர் கொண்ட ரயில் என்ஜின்.... அமெரிக்கன் சிவில் வார் ஆரம்பிக்குது....  அவன் காதலி Annabelle Lee (Marion Mack)க்கு ஒரு ஆசை... தன்னுடைய என்ஜின் டிரைவர் காதலன் ஆர்மியில்  சேர்ந்து  நாட்டுக்கு சேவை செய்யனும்ன்னு அசைப்படறா... கன்னியிக் கடைக்கண் பார்வை பட்டு விட்டால்.....? சோ தலைவரும்  ராணுவத்தில் போய் சேர போகின்றார்.....பொதுமக்கள் எல்லாரும் போய் வரிசையில நின்று பேர் கொடுக்கறாங்க... Johnnie Gray  போய் பெயர் கொடுக்கறான்.. ஆனால்  அவனிடம் உன் தொழில் என்ன ? என்று கேட்கும் போது.. ரயில் என்ஜின்  டிரைவர் என்று சொல்ல அவனை ஆர்மியில்  சேர்த்துக்கொள்ள மறுத்து விடுகின்றார்கள் ..


காரணம்... எத்தனை சோல்ஜர் வேண்டுமானாலும் கிடைப்பான்.. ஆனா ரயில் இன்ஜின் டிரைவர் கிடைப்பானா? யுத்தத்தில்  மருந்து, உணவு, ஆயுதங்கள் எல்லாம் ரயில் மூலம்தான் சப்ளை செய்யனும்.. அதனால் அவன் பங்கு முக்கியம் என்பதால்  ஆர்மியில் சேர்த்துக்கொள்ளவில்லை...

Annabelle Lee   உண்மை தெரியாமல்  காதலனை வெறுக்கின்றார்...அதே வேளையில் எதிரி நாட்டு காரர்கள் ஜானியோட ரயில் என்ஜினை திருடிக்கிட்டு போறாங்க.. அதுல அவ காதலியும் இருக்கா... ஜானிக்கு இந்த உலகத்துல பிடிச்ச விஷயம் இரண்டு ஒன்று அவன் காதலி பன்னு ச்ச்சை பொண்ணு... மற்றது ரயில் என்ஜின்   அவன் சும்மா இருப்பானா? எப்படி அவன் காதலியையும், ரயில் என்ஜினையும் அட்வென்சரோடு எப்படி மீட்கின்றான் என்பதை செம ஜாலியாக  ஒரு சலனபடத்தில் சொல்லி இருக்கின்றார்கள் என்பதுதான் ஆச்சர்யம்..
===========
படத்தின் சுவாரஸ்யங்களில் சில..


1926… சினிமா சென்னையில்   கால் பதிக்கவேயில்லை... பட் அந்த காலத்துலேயே அமெரிக்கா சினிமாவின் ரசனை கட்டமைக்கப்பட்டுவிட்டதாகவே இந்த படத்தை பார்க்கும் போது உணருகின்றேன்...

நிறைய சாயல்களில் Buster Keaton சார்லி சாப்ளினை நினைவு படுத்தினாலும் இவர் மேனாரிசங்கள் தனித்து தெரிந்தாலும் சார்லி சாப்ளின் அளவுக்கு இவர் அதிகபுகழ் அடையவில்லை என்பது வருத்தமே.....

 பொதுவான நான் பிளாக் அண்டு ஒயிட் படங்கள் அதிகம் பார்க்க நான் விரும்பியதில்லை.. தம்பி ரமேஷ் தொடர்ந்து இந்த படத்தை பார்க்க  வற்புறுத்திக்கொண்டு இருந்தான்... ஒரு சலனபடத்தில் என்ன அட்வென்சர் இருக்க முடியும்? அதுவும் 1926 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் நம்மை எப்படி கவரும் என்றே இந்த திரைப்படத்தை மிக சலிப்போடு பார்க்க துவங்கினேன்.. ரயில் என்ஜின் கடத்தலில் இருந்து இந்த படம் வேகம்  பிடிக்கின்றது... சான்சே இல்லை...நைட்டு பதினோரு மணிக்கு போன் பண்ணி அவனுக்கு நன்றி தெரிவித்தேன்.

சத்தியமா சொல்லறேன்... இப்படி ஒரு அட்வென்சர் பிலிம்.. அந்த காலத்துல சான்சே  இல்லை....

இந்த திரைப்படம்  1986 ஆம் ஆண்டு த கிரேட் லோகோமோட்டிவ் சேஸ் என்ற  உண்மைசம்பவத்தை அடிப்படையாக கொண்டு  இந்ம திரைப்படம் எடுக்கப்பட்டது என்றாலும் 1950 ஆம் டிஸ்னி இந்த  உண்மை சம்பவத்தை அப்படியே திரைப்படமாக எடுத்து கல்லா பெட்டியை நிரப்பியது வேறு கதை.


அந்த காலத்தில் சில விமர்சன புடுங்கிகளினால் இந்ததிரைப்படம்  தோல்விபடம் என்று எழுதி இருக்கின்றார்கள்.... பாரதி உயிரோடு இருக்கும் போது எத்தனை பேர் அவரை கொண்டாடினார்கள்... அதேதான் இந்த படைப்புக்கும் அந்த காலத்தில்  ஏற்ப்பட்டு இருக்கின்றது. ஆனால் இப்போது பாரதி போன்ற  சிறந்த கவி யாரும் இல்லை என்று  கொண்டாடுகின்றார்கள்... இந்த படம் ஒரு தோல்வி படம் என்று கழுவி கழுவி ஊற்றிய அதே வாய் பின்னாளில்  இது போன்ற திரைப்படம் எப்போதும் இனி நினைத்து பார்த்தாலும் எடுக்க முடியாது என்று கொண்டாடிக்கொண்டு இருக்கின்றது.

படம் ரிலிஸ் ஆனா போது விமர்கர்கள் என்ன சொன்னார்கள்  என்றால் இந்த படம் காமெடியை விட்டு வெகு   தொலைவு விலகி நிற்கின்றது...
கமெடியும் முழுதாக இல்லாமல் திரில்லரும் நன்றாக  இல்லாமல் ரெண்டும் கெட்டானாக காட்சி  அளிக்கின்றது என்று சொன்ன  விமர்சனத்தால் அந்த திரைப்படம் பெருமளவு வசூலை பாதித்து தொலைத்தது...

ஏழு லட்சத்தி ஐம்பதாயிரம்  டாலர் அந்த காலத்துல செலவு செய்து எடுத்த இந்தப்படம் விமர்சனங்களினால் இந்த திரைப்படம் பெரிய வசூல் இழப்பை சந்திக்க.. இந்த திரைப்படத்தின் இயக்குனர் Buster Keaton எம்ஜிஎம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து க்கொண்டு தனது இயக்குனர் கனவை விட்டு விட்டு  அவர்களுக்கு  உழைத்து கொடுத்தார்.. மாபெரும் கலைஞனை  ஸ்டண்டில் டூப்புக்கெல்லாம் இவரை உபயோகப்படுத்தி  ஒரு கலைஞனை சாகடித்து இருக்கின்றார்கள்...


(இன்று வரை அதனால்தான் எனது திரைப்பட விமர்சனங்களில் நல்ல படத்தை மட்டுமே   விமர்சித்து வருகின்றேன்... எனக்கு புடிக்காத உடன்பாடு இல்லாத திரைப்படங்களை நான் விமர்சித்து எழுதியதே இல்லை.. அதே போல் நல்லா இல்லாத படத்தை விமர்சித்து அது நொட்டை இது நொள்ளை  என்று பக்கம் பக்கமாய் எழுதி தள்ளியதில்லை.)

Buster Keaton இந்த படத்துல ரியல் ஸ்டண்ட் காட்சிகளில் எந்த டூப்பும் இல்லாமல்  நடித்த இருக்கின்றார்... படத்தை பார்க்கும் போது கரணம் தப்பினால்  மரணம் என்று சொல்லும் காட்சிகள் நிறைய.... உதாரணத்துக்கு முன்னால் போன என்ஜினில் இருந்து ரோட்டில் மரக்கட்டைகளை போட்டுக்கொண்டு செல்வார்கள்... Buster Keaton ரயில் என்ஜின் முன்னால்  உட்கார்ந்து கொண்டு கட்டைகளை பொறுக்கி தூர  எரிந்துக்கொண்டு வருவார்.. அதில் ஒரு கட்டை எகனமொகனையாக கடக்க அதையும் ஒரு ஓரத்தில்  அடிக்க அந்த கட்டை தூர  போய் விழும்..


பிரங்கியில் குண்டு வெடிக்க திரி பற்ற வைத்து விடுவார்...  குண்டு வெடித்தால்  முன்னால் பக்கம் இருக்கும் இவரோட ரயில் என்ஜின் வெடித்த சிதறி விடும்.. ஆடியன்ஸ் நாம் பதபதைக்கும் போது, ரயில் வளைவில் திரும்ப முன்னால் கடத்திக்கொண்டு போகும் ரயியில்  பெட்டி அருகே இந்த  குண்டு போய் விழும் ... சான்சே இல்லை.. இது போல சின்ன  சின்ன பியூட்டிபுல் ஐடியாஸ் படம் நெடுகிலும் உண்டு...

படத்து  கிளைமாக்ஸ்ல  இரண்டு நாட்டு   போர் வீரர்கள்  மோதிக்கொள்ளும் காட்சி... 500 பேருக்கு அமெரிக்க யூனியன் டிரஸ்சை போட்டு லெப்ட் ரைட் போட வச்சி எடுத்துட்டு அதே ஆளுங்களுக்கு யூனிபார்மை மாத்தி எதிரி ஆளுங்க போல காட்டி ரைட்டு வெப்ட மார்ச் பாஸ்ட் போட வச்சி எடுத்து இருக்காங்க...

படம் புல்லா சேசிங்தான்.. 1926ல எடுத்த இந்த படத்துல கேமராவுல ஒரு சின்ன ஜெர்க் கூட இல்லை... ஆனா  நம்ம ஊர்ல  1990 வரை கேமரா ஷேக்  இருக்கும் முக்கியமா ஜூம் போக பாடாத பாடு படுவாங்க... டிராலி ஷாட்டுல அவ்வளவு  ஜெர்க் இருக்கும்.


படத்துல ஒரு ரயில் என்ஜின் பிரிட்ஜ் கொலாப்ஸ் ஆகி அப்படியே ஆத்துல போய் விழுவது  போல  காட்சி ரியலா எடுத்து இருக்காங்க.... இந்த இடம் 20 வருஷத்துக்கு சின்ன டூரிஸ்ட் ஸ்பார்ட்டாவும் விளங்கிச்சி.


அந்த காலத்துல நிலக்கரிக்கு பதில் பெரிய பெரிய  மரவிறகுகளை எரித்துதான் ரயிலை இயக்கி இருக்கின்றார்கள்...இன்றைய தலைமுறை நீராவி ரயில் என்ஜின்களை பார்த்து இருக்க வாய்ப்பிள்ளை.. சக்கரம் ஒரே இடத்தில் சுழலும் போது ரயில் தண்டவாளத்தில் மண்ணை தூக்கி போட்டு கிரிப்பில் வண்டியை நகர்த்துவார்கள்... அது போல காட்சிகள் இந்த திரைப்படத்தில் இருக்கின்றது......



கடைசில காதலியை கிஸ் அடிக்க Buster Keaton அடிக்கும்  கூத்துகளில்  இனட்வெலிஜன்ட் தனம்  நிறையவே இருக்கின்றது.

இந்த திரைப்படம் சிறந்த 100 மவுனபடங்களில் முதல் இடத்தை  இந்த திரைப்படம் தக்கவைத்து இருக்கின்றது..


இனிமேல் இது போல   எந்த மைரானும் படம் எடுக்க முடியாது என்று டாப் 10 படங்களை பட்டியல் இட்டு இருக்கின்றார்கள்.. அதில் இந்த திரைப்படமும் ஒன்று.

முதல் மவுனமொழி படத்தை புளுரேவில் அதாவது ஹைடெபனஷனில் வெளிவந்த முதல் திரைப்படம் இதுவே..

அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டியூட்... 100 சிறந்த காமெடி படம் மற்றும் 100 வருடத்தில் மிக சிறந்த படம் லிஸ்ட் இந்த திரைப்படம் ரெண்டு கேட்டகிரியிலும் இந்த படம் 18 இடத்தை பிடித்து இருக்கின்றது.

1953க்கு  பிறகு பின்னனி  இசை சேர்த்து இந்த படத்தை ரீ எடிட் செய்து வெளியிட்டார்கள்.. இப்போதுபுளுரே பிரின்ட்  கிடைக்கின்றது... அதே போல யூடியூபில் முழு படமும் இருக்கின்றது...

ஓத்தா அவன் கட்டையில போய் சேர்ந்ததுக்கு பிறகு இப்ப கொண்டாடி  என்ன புண்ணியம்? இருந்தாலும் இப்பயாவது கொண்டாடினிங்களே... ரொம்ப நன்றிங்க.

=================
படத்தில் ஒரு சிறு காட்சி.



===============
படக்குழுவினர் விபரம்.

Directed by Clyde Bruckman
Buster Keaton
Produced by Joseph Schenck
Buster Keaton
Screenplay by Al Boasberg
Clyde Bruckman
Buster Keaton
Uncredited:
Charles Henry Smith
Paul Girard Smith
Based on The Great Locomotive Chase 
by William Pittenger
Starring Buster Keaton
Marion Mack
Music by Carl Davis (1987)
Robert Israel (1995)
Joe Hisaishi (2004)
Cinematography Bert Haines
Devereaux Jennings
Editing by Buster Keaton
Sherman Kell
(both uncredited)
Distributed by United Artists
Release date(s)
December 31, 1926[1]
Running time 75 minutes (times vary with different versions)
Country United States
Language Silent film
English intertitles
Budget $750,000
Box office $1,000,000 

==============
பைனல்கிக்..

இந்த படத்தை அவசியம் பாருங்கள்... பார்த்தே தீரவேண்டிய திரைப்படம்... ஒரு தொலைகாட்சி  விமர்சனத்தில் ஹாய் மதன் அறிமுகபடுத்திய திரைப்படம் இந்த திரைப்படம்.. . அதனால் நண்பர்களே இது போன்ற திரைப்படங்களை தயவு செய்து எனக்கு மெயில் செய்யுங்கள்...dtsphotography@gmail.com       அல்லது  98402 29629 என்ற எனது எண்ணுக்கு டைப்பி மெசேஜ் செய்யுங்கள்.... சலனபட காலத்தில் இப்படி ஒரு திரைக்கதை, அட்வென்சர் எல்லாம் எப்படி சாத்தியம் என்று வாயடைந்து  போய் விடுவீர்கள். கண்டிப்பாக பாருங்கள்.

==============
படத்தோட ரேட்டிங்...

பத்துக்கு பத்து,... ஆயிரத்த்துக்கு ஆயிரம்.... லட்சத்துக்கு லட்சம் எதை வேண்டுமானாலும் வச்சிக்கோங்க... எத்தனை மார்க் கொடுத்தாலம் அந்த உழைப்புக்கு ஈடாகாது... அவர்கள்  சினிமாவின் பிதாமகர்கள்..

பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்




நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

10 comments:

  1. சினிமாவின் பிதா அவர்களே தான் நண்பா நன்றி தேடி பார்த்து விடுகிறேன்

    ReplyDelete
  2. ithe Cartoonist madan solli naan kudutha AGUIRRE WRATH OF GOD paarkka time aayiduchu...

    ReplyDelete
  3. thanks for ur review best film forever, Buster Keaton amazing performer

    ReplyDelete
  4. சினிமாவை காதலிக்கும் நண்பனை,அதுவும் காதலிக்க வாழ்த்துக்கள். விமர்சனம் அருமை.நீ எழுதுவதை பாராட்டி பின்னூட்டம் போடவே சோம்பல். நீ எப்படித்தான்...........................................................................

    ReplyDelete
  5. அவ்வளவு சூப்பர்ராவா இருக்கு?

    ReplyDelete
  6. Jackie

    We celebrate Prabhu Deva as Indan Michael Jackson. I believed it for several years till I watched MJ dance.

    Check out the following video from a extremely talented Japanese man http://youtu.be/TsyA7Gi-Em8. In fact, I highly recommend to watch all his videos on YouTube. Amazing person with so much creativity and control.

    ReplyDelete
  7. Neenga ketta maathiriye germany la M appadinnu oru silent padam vanthirukku...

    Ithuvum oru thriller + chasing padam thaan. See more

    http://en.wikipedia.org/wiki/M_%281931_film%29


    ReplyDelete
  8. Intha padam maathiriye germany la M appadinnu oru silent film vanthirukku...
    Antha padam oru thriller + chasing film...

    To see more refer below wiki link:

    http://en.wikipedia.org/wiki/M_%281931_film%29

    Intha padathoda thiraikkathai ippa ulla padam maathiri romba nalla irunthathu...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner