எனக்கு அதிகாரம் தேவையாய் இருக்கின்றது.மனித நாகரீகம் தொடங்கியதில் இருந்து
,குகை வாழ்க்கையில் இருந்து இன்று அப்பார்ட்மென்ட் வாழ்க்கை வரை மாறாத ஒன்று இருக்கின்றது என்றால்  அது மனிதனுக்கு அதிகாரத்தின் மீதும் ஆளுமை மீதும் உள்ள போதைதான்...டிஎன்ஏவில் மிக்ஸ் ஆனது போல்  அந்த பழக்கம்  இன்றுவரை தொன்று தொட்டு தொடர்ந்து வருகின்றது.... முதலில் இந்த ஆளுமை பண்பு கூட்டத்தில் உள்ள பெண்களை  உடலுறவு கொள்ள  ஒரு உபாயமாக கருதப்பட, நாளைடைவில் இது அனைத்து மனிதர்களையும்  கட்டி வழி நடத்த வேண்டிய தலைமை பண்புக்கு அடிகோலியது.ஒரு ஆட்டு மந்தைக்கு என்று  தனியாக ஏதுவும் செய்ய தெரியாது.... ஒரு ஆடு தடம் மாறினாலும் எதை பற்றியும்  யோசிக்காமல்  மற்ற ஆடுகளும் அது போகும் வழியில் செல்லும்... ஆனால் மனிதன் அப்படி பட்டவன் அல்ல... ஒவ்வோரு மனிதனும் தனி தனி தீவுகள் போல தனி தனி மனநிலைகள்... இவர்களை ஒருங்கினைத்து மனித ஆற்றலை ஒருமுகப்படுத்தி கட்டுக்கோப்பாக மனிதம் இனம்  வளர தலைமை பண்பும் ,ஆளுமை கொண்ட் மனிதர்களும் தேவையாய் இருந்தார்கள்.. இன்று மட்டும் அல்ல   என்றுமே மனிதர்களுக்கு ஆளுமைகொண்ட தலைமை பண்பு கொண்ட மனிதர்கள் தேவை.... காரணம் ஒரு சிலருக்கு அதிகாரம் எப்படி தேவையாய் இருக்கின்றதோ... அதே போல எஸ் ஆலம்பானா நான் உங்கள் அடிமை என்று  வாழ்வது ஒரு சிலருக்கு பிடித்து இருக்கின்றது... இதுவும் மனித டிஎன்ஏவில்  ஊறுகாயில் உப்பு ஏறியது போல ஊறிய  விஷயம்தான்.

 

ஆளுமை பண்பு  கொண்ட  தலைவனை முதலில் மனித குழுக்களாக  தேர்ந்து எடுத்தார்கள்......... தலைவன் மிகச்சரியாக செயல்பட்டு மனிதஇனத்தையும் தன் குழுவையும் சிங்க நடை போட்டு சிகரத்தை நோக்கி தன் சமுகத்தை அழைத்து சென்றான்.....அவனுக்கு பின்  வேறு யாரும் இல்லை என்ற போது அவன் வாரிசு தலைவனாகின்றான்.. அவன் திறமையானவனாக இருக்கும் போது பிரச்சனை எழுவதில்லை.. ஆனால் வெட்டிக்கேசு வெண்ணைலிங்கமாக இருக்கும் போது அந்த தலைமைக்கு ஆளுமைகொண்ட ஒருவன் போட்டியிடுகின்றான்.. இப்படித்தான் முற்காலத்தில் அரசர்கள் அரசான்டார்கள்.,

 இப்படி வழி வழியாக வந்த தலைமை பண்பு ஜனநாயகம் என்ற பொது புத்தியில் ஆளுமை கொண்ட மனிதனை பொதுமக்கள் தேர்ந்து எடுத்தார்கள்..மக்கள் சேவை மகேசன் சேவை என்று முழங்கிய படி வரும் தலைவன் அல்லது தலைவி பதவி வந்த உடன் தன் சுய விருப்புவெறுப்புகளை உமிழ ஆரம்பிக்கின்றார்கள்... அப்படி நடந்த அல்லது நடக்கின்ற சம்பவங்களுக்கு நிறைய உதாரணம் சொல்லிக்கொண்டு போகலாம்.


ஒருகாலத்தில் தலைமை பண்பு ஏற்க பயந்தார்கள்... ஆளுமை உள்ளவர்களே அந்த பதவியை ஏற்றுக்கொள்ள அச்சப்பட்டார்கள்...யாருக்கு ஆளுமையும்  தலைமைபண்புகளுடன் பேச்சு சாதூர்யமும் நேர்மையும் இருக்கின்றதோ அவர்களுக்கு தலைமை ஏற்க பரிந்துரைத்தார்கள்...  ஏன் பேச்சு சாதூர்யமா? அட போங்கப்பா காமராஜர் நல்ல பேச்சாளியா இருந்து இருந்தா தோத்து போய் இருக்க மாட்டார்.... தேனாலதான் சொல்லறேன்...  எல்லா  பண்புகளோடு பேச்சு சாமார்த்தியமும் கண்டிப்பாக வேண்டும்...   பேச்சு எப்படி பட்ட பேச்சாக இருக்கவேண்டும் தெரியுமா-? தேலைமை பேசிய பேச்சுக்கு மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பு போல போதையில்  கிறங்கி கிடக்க வேண்டும்....ஆனால் இன்று மக்களுக்கு தலைமை ஏற்க குப்பனும் சுப்பனும்  எந்த தகுதியும் இல்லாதவர்கள் தற்போது போட்டி போடுகின்றார்கள் என்பது தான் நகைமுரன்...


 பார்ன் இன் சில்வர் ஸபூனில் பிறந்த ஒருவனால் எப்படி விளிம்புநிலை மனிதனின் பிரச்சனைகளை கண்டு உண்ரமுடியும்....??? உதாரணத்துக்கு ஒரே நாள் இரவில் தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்தி சாதித்தார்களே...அப்படி என்ன தமிழக போக்குவரத்து கழகம் நட்டத்தில் இயங்கி மூடு விழா நடத்தி விட்டார்கள்..?? ஒரு வாரத்தில் மக்களுக்கு டைம் கொடுத்து உயர்த்தி  இருக்க வேண்டும்.... இது மக்ககள் நலனை சிந்தித்து  எடுத்த முடிவா???? ஒரே நாள் அதுவும் ஒரே இரவில்...?50 ரூபாய்  கொடுத்து போன இடத்துக்கு 100 ரூபாய் கொடுக்க வேண்டிய சூழல்.. இல்லையென்றால் பேருந்தை விட்டு கீழே இறங்க சொல்லி விட்டார்கள்.. உனக்கு ஏன் அக்கரை மற்றவர்களுக்கு இல்லாத அக்கரை என்று நீங்கள் கேட்கலாம்... நானே நேரடியாக  பாதிக்கப்பட்டேன்... அதனால் அதை உதாரணமாக சொல்கின்றேன்.. ஒரு பயணி கையில் பணம் இல்லாத காரணத்தால் பேருந்தில் இருந்து இறக்கிவிட்டப்பட்டு திருவண்ணாமலை வரை தன் மனைவி  பிள்ளை மற்றும் சுமைகளுடன் நடந்து சென்றார் என்ற பத்திரிக்கை செய்தி படித்த போது மனது வலித்தது.

நன்றாக யோசித்து பாருங்கள்... உங்களிடம் வீடு இருக்கின்றது...தோட்டம் துறவு இருக்கின்றது... ஆனாலும் உங்கள் வீட்டில் மட்டுமே  நீங்கள் ராஜாவாக இருக்கின்றீர்ள்.... உங்கள் தோட்டத்தில்   வேலை செய்பவர்களிடம் மட்டுமே நீங்க ராஜா? உங்கள் வீட்டு வேலைக்கார்ர்களிடம் மட்டுமே நீங்கள் ராஜா...

ரைட்... உங்க நகருக்கு அசோசியேஷன் வைத்து அதுக்கு தலைவர் பதவியை  உங்களிடம் தூக்கி கொடுக்கின்றார்கள்... அப்போது  உங்க நகருக்கு நீங்க ராஜா... அல்லவா?... தலைவர் வீடு என்ற அந்தஸ்த்து கிடைத்து விடுகின்றது... இரட்டை வட சங்கிலியை ஜாக்கெட்டுக்கு வெளியே போட்டுக்கொண்டு உங்கள் மனைவி பெருமையாக நகரில் நடக்கும் வீட்டு விசேஷங்களுக்கு தலைவர் பொண்டாட்டி என்ற  பெருமையோடு வருகின்றார்... உங்கள் பிள்ளைகள்.. தலைவர் பிள்ளை என்ற பெருமையோடும் இறுமாப்புடனும் நடக்கின்றார்கள்.. காரணம்... அந்த நகரில் நீங்கள் தனித்து தெரிகின்றீர்கள்..

நீங்கள் அபத்தமாகவே முடிவு எடுத்தாலும் தலைவர் சொல்லிவிட்டார் அதை எப்படி மீற முடியும்?? என்று  உங்கள் நகரில் இருக்கும் லகுட பாண்டிகள் உங்களுக்கு ஒத்து ஊதுவார்கள்  அல்லவா-?மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று தலைமை பதவிக்கு வராமல் அதிகாரத்துக்கு புகழ் போதைக்கும் அடிமையாகி அரசியலில் வந்து தலைமை பண்புக்கு  பேயாய் அலைகின்றார்கள்... காதல் படத்தில்  இதை மிக அழகாக இயக்குனர் பாலாஜி சக்திவேல் நக்கல் விட்டு இருப்பார்...

 
 நடிக்க வாய்ப்பு தேடி வந்த விருச்சிககாந் என்றவரிடம்.....   என்னவாக போகின்றீர்கள் என்று கேட்க..??
ஸ்டெரெயிட்டா ஹீரோதான்.... நான் வெயிட் பண்ணறேன் சார்...
அப்புறம் ??
கொஞ்சம் அரசியல், அப்புறம் சிஎம், அப்புறம் டெல்லி எனக்கு அது போதும்சார் என்று நடிக்க வரும் போதே ஒரு அவுட் லைனேனாடு அதிகார போதைக்கு அசைப்பட்டு  விருச்சிககாந்த வருவார்.

 ஒரு நடிகனுக்கோ அல்லது நடிகைக்கோ பணம் அள்ள அள்ள  இருக்கின்றது, புகழ் இருக்கின்றது.... செல்வாக்கு இருக்கின்றது.ஆனால் அதிகாரம் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே  செலுத்த  முடிகின்றது....

  பணமும்  செல்வாக்கும் அதிகம் இருந்தாலும் ஒரு நடிகனால் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் டோல் கேட்டில் பணம்  கட்டி விட்டு லைனில் நின்றுதான் செல்ல முடிகின்றது... ஆனால் அரசியலில் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக   வளர்ந்து சிஎம்மாக மாறிவிட்டால், மரியாதைக்கு மரியாதை, அதிகாரத்துக்கு அதிகாரம்... பாதுகாப்புக்கு போலிஸ்காரர்கள்.. டோல்கேட்டில் தனிவழியில் யாருக்கும் வெயிட் செய்யாமல் நீங்கள் சகலமரியாதையுடன் சாலைவழிபயணத்தை அனுபவிக்கலாம்... அட அவ்வளவு ஏன்?? அதிகாரமும் ஆட்சியும். கைக்கு வந்துவிட்டால் தனி விமானித்தில் நினைத்த இடத்துக்கு பயணிக்கலாம்... அதாவது டோல்கேட் என்பது  ஒரு சின்ன உதாரணம்....

 ஒரு நடிகனாக கருப்பு கண்ணாடி   போட்ட காரில் போனால்...  போக்குவரத்து போலிஸ் தடுத்து நிறுத்தி பைன்  போட்டு சன்கண்ட்ரோல் பிலிமை  பிய்த்து அதையும் போட்டோ எடுத்து தினத்தந்திக்கு நியூஸ் கொடுத்து விடுவார்கள்...

ஆனால் இதுவே ஒரு  ஆளும் கட்சி அமைச்சரின் காரில் அப்படி போலிஸ் எளிதில் கை வைத்து விட முடியுமா?

ஒரு நடிகனின் மற்றும் நடிகையின்  பாயிண்டாப்வியூவில் இருந்து  பாருங்கள்... பணம் கொட்டிக்கிடக்கின்றது.,.. செல்வாக்கு இருக்கின்றது...புகழும் அதிகம்..மக்கள் கொண்டாடுகின்றார்கள்... இருந்தாலும் ஒரு  சன்கண்ட்ரோல் ஒட்டிய காரில் பயணிக்க முடியவில்லை என்றால்? பணம் இருந்து செல்வாக்கு இருந்து என்ன பயன்?

 அதனால் அவனுக்கு அதிகாரம் தேவையாய் இருக்கின்றது.... அதனால் அவன் நாளைய  தமிழகத்தின் விடிவெள்ளியாக  மாற துடிக்கின்றான்.

  சார் அப்ப மக்களுக்கு சேவை?

சார் அது எல்லாம் அந்தக்காலம்... இப்ப எல்லாம் யார் மக்கள் நலனை பற்றி யோசிக்கிறா?

மக்களின் தேவையான  அடிப்படை... இரண்டே ரெண்டுதான்.... ஒன்று தரமான சாலை, மற்றது நீர்...  இதுக்கே  சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் ஆளும் ஆட்சியாளர்களிடம் கெஞ்சிக்கொண்டு இருப்பதுதான் நிதர்சன உண்மை...

அரசியலுக்கு மட்டும் அல்ல... அதிகாரம் எல்லாம் இடத்திலும் இருக்கின்றது... அதிகாரம்  கிடைக்கும் வரை  பம்மி விட்டு அதிகாரம் கிடைத்த உடன்  பேயாட்டும் ஆடும் ஆட்களை நீங்கள் அரசியலில் மட்டும் அல்ல.. உங்களோடு டீம் சுற்றிக்கொண்டு இருப்பார்.. திடிர் என்று அவர் டீம் லீடராக   பிரமோஷன் பெற்ற உடன்... பேயாட்டம் ஆடுவர்.. நியாயமாக எடுக்க வேண்டிய  லீவை கேட்டாலே  மோவாக்கட்டையில்  கை வைத்த படி மோட்டு வளையை பார்த்து சிந்தித்து லீவ்  கொடுப்பார்... இத்தனைக்கும் இத்தானம் தேதி லீவ் எடுக்க போகின்றேன் என்று முன்னமே சொல்லி இருப்போம்... அதுதான் அதிகாரம் செய்யும் மாயாஜாலம்...

இன்னமும்  புரியவில்லையா?

ஆறு முதல்வர்கள் கொடுத்த  தமிழ் சினிமாவை உதாரணத்துக்கு எடுத்து சொல்கின்றேன்.. குறித்துக்கொள்ளுங்கள்...
மூடர் கூடம் திரைப்படத்தில்  கிரிக்கெட் பேட் அதிகாரத்தின் குறியீடு... அந்த பேட் கைமாறுபவர்கள்  எல்லாம் எப்படி நடந்து கொள்கின்றார்கள்  என்று பாருங்கள் ...  இப்ப புரிஞ்சி இருக்கும்ன்னு நம்பறேன்.. 

அரசு அலுவலகங்கள்  மற்றும் தனியார் நிறுவணங்களில் அதிகார போதையில் இருப்பவர்கள்....தாங்கள் பதவியை அதாவது அதிகாரம் கொடுக்கும் பதவியை தக்க வைத்துக்கொள்ள  போட்டுக்கொடுத்து போட்டுக்கொடுத்து இந்த நாட்டையே உருப்பாடாமல் செய்து விட்டார்கள்...

அதிகார போதை வந்தால்... சின்ன சின்ன மீறல்கள் செய்வது மனித இயல்புதான்... ஆனால் அப்படி மீறல் செய்வதே பொழப்பாக வாடிக்கையாக இருப்பதுதான் கொடுமை.. அதிகார போதையில் மிதக்க படித்தவன் படிக்காதவன் என்று வித்தியாசம்  எல்லாம்  இல்லை... எல்லோரிடும் இருக்கும் நாட்டை ஆளுபவரிடம் இருந்து ஆபிசில் பேக் செக் செய்யும் செக்யூரிட்டி வரை அதிகாரம் கிடைத்தால் ஆடுபவர்களை நீங்கள் இயவ்பு வாழ்க்கையில் நிறைய பேரை  பார்க்கலாம்... திடிர் என்று இரண்டு பீரியட் வாத்தியார் வர வில்லை என்றால் அவன் கிளாஸ் லீடாக  கூட இதுவரை இருந்து இருக்க மாட்டான்..  திடிர் என்று அவனை எழுப்பி கிளாசை பார்த்துக்கொள்ள சொல்லுங்கள்... அவன் ஆடும் ஆட்டத்தை... இதுக்கே இப்படி என்றால்  ஐந்து வருடத்துக்கு ஏன் எதுக்கு என்று கேள்வி எழுப்ப முடியாத ஆட்சியாளர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை உணருங்கள்...

 அதிகாரம் வந்து விட்டால் நான் எப்படி மாறுவேன் என்று என்னை நானே உற்று பார்க்க ஆசையாக இருக்கின்றது...

 நானும் மனிதன்தானே?

எனக்கும் அதிகாரம் தேவையாய் இருக்கின்றது...பிரியங்களுடன்/
 ஜாக்கிசேகர்நினைப்பது அல்ல நீ

நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

16 comments:

 1. நீங்க சொல்லுறது சரிதான் ஜக்கி சார்.ஆனா நமக்கு அதிகாரம் அப்படிங்கிற போதை வந்துருச்சுன நமளோட சுய ஒழுக்கம் ரெம்பா கெட்டு போயிராத அதுக்காக நான் யாருக்கும் அடிபணிஞ்சு இருக்கனுன்னு அவசியம் இல்லேயே

  ReplyDelete
 2. நீங்க சொல்லுறது சரிதான் ஜக்கி சார்.ஆனா நமக்கு அதிகாரம் அப்படிங்கிற போதை வந்துருச்சுன நமளோட சுய ஒழுக்கம் ரெம்பா கெட்டு போயிராத. அதுக்காக நான் யாருக்கும் அடிபணிஞ்சு இருக்கனுன்னு அவசியம் இல்லேயே

  ReplyDelete
 3. அந்த அதிகார போதைதான் மண்ணு மோகன் மண்ணு போல பம்மிகிட்டு இருக்கான் போல, இவருக்கு பொருளுதார மேதைன்னு பேரு வேற......

  அருமையா சாட்டையை சுழற்றி இருக்கீங்க அண்ணே...!

  ReplyDelete
 4. அதிகார போதை! அனைவருக்கும் இருக்கத்தான் செய்கிறது! விரிவான அலசல் கட்டுரை! நன்றி!

  ReplyDelete
 5. என்ன சொல்ல வரிங்கன்னு ஒண்ணுமே புரியல தல ..

  ReplyDelete
 6. தல என்ன சொல்ல வரிங்கன்னு ஒண்ணுமே புரியல.

  ReplyDelete
 7. அன்னே உண்மைய சொல்லுங்க இது உங்க மனதில் தோன்றியதா இல்லை எங்கையாவது படிச்சுட்டு வந்து எழுதுரிங்களா ஒவ்வொன்னும் முத்திரை

  ReplyDelete
 8. அன்னே உண்மைய சொல்லுங்க இது உங்க மனதில் தோன்றியதா இல்லை எங்கையாவது படிச்சுட்டு வந்து எழுதுரிங்களா ஒவ்வொன்னும் முத்திரை

  ReplyDelete
 9. மிக மிக மிக......அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றிகள் ஜாக்கி. உங்கள் பதிவைப் படித்து விடும் நகர்ந்து விடும் எனக்கு இன்று பின்னூட்டம் போடத் தோன்றியது. வெளிப்பூச்சுகளுடன் மிளிரும் நிதர்சனத்தை அம்மணமாக்கி காட்டியிருக்கிறீர்கள்.

  ReplyDelete
 10. நிதர்சனமான உண்மை..ஒரு நிர்வாகம் திறம்பட நடைபெற அதிகாரம் செய்வதில் தவறில்லை.ஒரு ஆசிரியராய் என்னுடைய பார்வையில் தட்டிக் கொடுக்க வேண்டிய இடத்தில் தட்டிக்கொடுத்தும் அதிகாரம் செலுத்தவேண்டிய நேரத்தில் அதிகாரம் செலுத்தினால்தான் ஒரு தலைமையாசிரியரால் ஒரு பள்ளியை நிர்வகிக்க முடியும் ..அதிகாரம் ஆணவமாகாத வரை நல்லதே.

  ReplyDelete
 11. வீட்டிலே அண்ணி கிட்ட எதுவும் பிரச்சினையா.. அதிகாரத் தேவையை அங்கே எதிர்பார்க்காதீர்கள்..

  ReplyDelete
 12. வீட்டிலே அண்ணி கிட்ட எதுவும் பிரச்சினையா.. அதிகாரத் தேவையை அங்கே எதிர்பார்க்காதீர்கள்.. பகிர்வுக்கு நன்றி..

  ReplyDelete
 13. ITS VERY TRUE JACKIE, I CAN FEEL EVEN IN MY FAMILY, SUFFERING LOT WITH SPEECHLESS, UNFORTUNATING PERSON.

  ReplyDelete
 14. முதலில் தலைவனின் உருப்படாத மகன் அப்புறம் நடிகன் (அல்லது பணம் அதிகம் வைத்திருப்பவன்) அப்புறம் அதிகார போதை. இது அதிகார போதைகுள்ளே ஒரு அரசியல் உள்குத்து மாதிரி தெரியுதே. :D

  ஒரு நாள் என் வாத்தியார் "பேசுறவன பேர் எழுதுடா" ன்னு சொல்ல ஹிடலரைப் போல பேசியவர்களை எல்லாம் பேர் எழுதி வைக்க, திரும்பி வந்த வாத்தியாரிடம் காமிக்கும் நேரம் பெல் அடிக்க, எல்லோரும் ஓடிவிட பெரிய பல்பு வாங்கினேன்.

  பேரு எழுதிட்டம்னா "அதான் பேர எழுதிட்ட இல்ல, எப்புடியும் அடி வாங்க போறேன்னு பேச ஆர்ம்பிசுருவானுங்க. அதனால் பேரு எழுதிருவேன் எழுதிருவேன்னே சமாளிக்கணும்.

  ஆனா அப்புடி பேர் எழுதினதுக்கு அப்புறம் நெறய பேரு என்கூட பேசல.

  என்னமோ போங்க ஜாக்கி, எனக்கு பதவியும் வேணாம், அதிகாரமும் வேணாம். என்ன cm ஆக்கினா மாத்திரம் ஆசை அடங்கப் போகுதா என்ன?, அப்புறம் pm ஆசை வரும். அப்புறம் நாமே நிரந்தர pm ஆ இருக்கனும்ன்னு ஆசை வரும். இது நிக்கும்ன்னு நினைக்கிறீங்க. கட்டையில போற வரைக்கும் இந்த போதை விடாது. அந்த போதைய போடாம இருக்கிறதே நல்லது. படுத்தா ஒடனே தூக்கம் வரணும். அதிகாரத்துக்கு வரணும்ன்னு அல்லாடல், வந்ததுக்கு அப்புறம் அதைக் காப்பாத்திக்க அல்லாடல், நமக்கு முடியலேன்னு தெரிந்தாலும் உயிரை மட்டுமாவது வைத்துக் கொண்டு cm அல்லது PM ஆ இருப்போம்ன்னு அல்லாடல். பார்க்கும்போது சீன்னு இருக்கு

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner