சமீபத்தில் 
மும்பையில் 
கைவிடப்பட்ட ஒரு தொழிற்சாலையில்  புகைப்படம் எடுக்க சென்ற பெண்
பத்திரிக்கையாளர்  கற்பழக்கப்பட்ட சம்பவம்
நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியதை நாம் அறிவோம்..
குற்றவாளிகளைகைது பண்ணி விசாரித்த போது  அதில் ஒருவன் மட்டும் அங்கே நடந்த  20க்கு மேற்ப்பட்ட    கற்பழப்பு சம்பவங்களில்  ஈடுபட்டு இருக்கின்றான்...முதலில் ஒரு  பேப்பர் பொறுக்கி வயிற்று பிழைப்பு பிழைக்கும்
பெண்ணை  கற்பழித்து இருக்கின்றார்கள்...
அதன்  பின் பக்கத்து விட்டு பெண்ணை
கற்பழித்து இருக்கின்றார்.. யாரும் புகார் கொடுக்கவில்லை என்றதும்...   தைரியம் பெற்று கையில்  பிடித்துக்கொண்டு அலைகையில்  பத்திரிக்கையாளர் மேல் கை வைத்து  போலிசில் மாட்டி இருக்கின்றார்கள்..  நல்லவேலை யாரையும் கொல்லவில்லை... அல்லது கொலை
செய்த்தை இன்னும் போலிஸ் கண்டுபிடிக்கவில்லையோ 
இல்லையோ?
கொலை செய்து 
பக்ககாவாக புதைத்து விட்டால் குற்றவாளியை ஸ்மெல் பண்ண முடியாது.. அப்படி
கொலை  செய்து புதைத்து விட்டு இன்றும்
வெளியே சுற்றிக்கொண்டு இருக்கும் கொள்ளை கூட்டங்கள் உலகம் எங்கிலும் நிறைய உண்டு..
இந்தியாவில் 13 ஆம் நுற்றாண்டில் இருந்து
கொலை செய்து கொள்ளை அடித்து  உடல்களை
வெளியே தெரியாமல் புதைக்கும் தக்கிகள் என்ற கொள்ளைக்காரர்கள் கூட்டம்... 18 ஆம்
நுற்றாண்டில்தான் அவர்கள் பிரிட்டிஷ்கார்ர்களால்  வெளி உலகுக்கு 
தெரிய வந்தார்கள்.... அது போல பல கொலைகள் , பல காணமால் போனவர்கள்  கடைசி வரை துப்பு கிடைக்காமல் கண்டுபிடிக்கக்கப்படாமலே  போய் இருக்கின்றன....
ஜூலை எட்டாம் தேதி 1986 ஆம் ஆண்டு  இரண்டு 
இளைஞர்கள் 11 வயது பியா என்ற சிறுமியை கற்பழிக்க... அதற்கு ஒருவன்  துனை 
புரிகின்றான்... அந்த சின்ன பெண் ரொம்பவே முரண்டு பிடிக்க, பக்கத்தில்
இருக்கும் கல்லால்  அந்த பெண்ணை அடித்து
கொலை செய்து விடுகின்றான்...  இரண்டு பேரும்
அந்த பெண்ணன்  உடலை ஏரியில்  வீசி விடுகின்றார்கள்...
போலிஸ் தலையால் தண்ணி குடித்து பார்த்தும்
குற்றாவாளி யார் என்று மண்டையை போட்டு குழப்பி கொள்கின்றது.. அப்படியே 23வருடங்கள்
ஆகி விடுகின்றது... குற்றவாளிகளை கண்டு பிடிக்கமுடியவில்லை.. அந்த பெண்ணின்  தாய் தன் பெண் இறந்த இடத்தில் தினமும் ஜாக்கிங்
வரும் போது மலர் கொத்துகளை வைத்து அஞ்சலி செலுத்துகின்றாள்...
அந்த இறந்த பெண்ணின் அம்மாவை பொறுத்தவரை கொலை
செய்து 23 வருடம் ஆகியும் தன் மகளை கற்பழித்து 
கொலை செய்த குற்றாவளியை   பிடிக்க
முடியவில்லை.. ஆனால் அவன் எப்படி இருப்பான் என்று தெரிந்துகொள்ள ஆவமாக
இருக்கின்றாள்..
திரும்ப 23 வருடங்கள் கழித்து அதே இடத்தில்
அதே வயதில் அதாவது 13 வயது இளம்  சிறுமியை
ஒரு  வெள்ளிக்கிழமை தினத்தில் அதே ஸ்டைலில்....  கற்பழித்து கொலை செய்யப்படுகின்றாள்... அந்த
கொலையை யார் செய்தது?  பழைய குற்றவாளிகளா?
அல்லது புதியவர்களா? இதுவரை பிடிபடாதவர்கள் இப்போதாவது பிடிபடுவார்களா? என்பதை
வெண்திரையில்  பார்த்து
தெரிந்துகொள்ளுங்கள்....
==============
படத்தின் சுவாரஸ்யங்களில் சில..
இந்த படத்தோட கிளைமாக்ஸ் மெமரிஸ் ஆப் மார்டர்
திரைப்படத்தின் கிளைமாக்சை ஒத்து இருக்கின்றது.. அதாவது  பார்வையாளன் முடிவுக்கே விட்டு விடுவது...  ரொம்ப அற்புதமான கிளைமாக்ஸ்...
ஸ்டோக்கர் 
திரைப்படத்துக்கு பிறகு இந்த திரைப்படத்தின் கேமரா கோணங்களையும் கப்போசிங்
ஷார்ட்டுகளையும்  வருங்கால  திரைப்பட இயக்குனர் நினைவில் கொள்ள வேண்டும் என்று
அன்பாய் கேட்டுக்கொள்ளபடுகின்றார்கள்.
 நல்ல 
ஒளிப்பதவு  குட் ஒர்க்... கண்ணில்
ஓற்றிக்கொள்ளலாம் போல அவ்வளவு கச்சதம்.. ஷாட் ஆங்கிள்கள். அசத்தல்...
23 வருடத்துக்கு முன் கற்பழிப்பில் துணை
நின்றவனுக்கு  மகள் இருக்கின்றாள்.. அவன்
மனது  படும் பாட்டை ரொம்ப அழகாக
வெளிப்படுத்தி இருக்கின்றார்கள்..
 ஜெர்மனியின் நாவலிஸ்ட்...Jan Costin Wagner  எழுதி சக்கை போடு போட்ட கிரைம் பிக்ஷன் நாவலான Das
Schweigen  திரைவடிவம்தான்
இந்த திரைப்படம்...
மிக மெதுவாக பக்கத்தில் ஆற அமர உட்கார்ந்து
கொண்டு தலைகோதி குழந்தைகளுக்கு கதை சொல்வோம் அல்லவா? அப்படி மிக பொறுமையாக தலை
கோதி இந்தி திரைப்படத்தின் திரில்லர் கதையை அழகாக சொல்லி இருக்கின்றார்கள்.
த கில்லிங் என்ற டென்மார்க் நாட்டின் டிவி
சீரியல்... மிகப்பெரும் வரவேற்ப்பை பெற்றது... அந்த சீரியலில் வித விதமான
கொலை  நடந்தாலும்  கண்டுபிடிக்கும் டிடெக்டிவ் ஒரு பெண்
கதாபாத்திரம்....   அந்த சீரியலில் வரும்
ஒரு எபிசோட் போல இந்த திரைப்படம் இருக்கின்றது என்று  சினிமா ஆர்வலர்கள் கருத்தை தெரிவித்து
இருக்கின்றார்கள்.
23 வருடம் கழித்து குற்றவாளி யாராக
இருக்கும்  என்ற சந்தேக போர்வையை
அறிமுகபடுத்தும் அனைத்து   கேரக்டர்கள்
மீதும் வீசிவிடுகின்றார்கள்..
இயக்குனர் 
==============
 இந்த
திரைப்படம் பெற்ற விருதுகள்..
Special Jury Award, Beaune film Festival 2011
Best Adaptation Award, Frankfurt Book Fair 2010
Audience Award German Thriller Award
Nominated for the German Film Critics Award
Nominated for the Prix Europe 2011
===============================
 படத்தின் டிரைலர்.
=====================
படக்குழுவினர் விபரம்.
Directed by	Baran bo Odar
Produced by	Frank Evers, Maren Lüthje, Florian Schneider, Jörg Schulze
Screenplay by	Baran bo Odar
Based on	the novel Das Schweigen by Jan Costin Wagner
Music by	Michael Kamm (as Pas de Deux), Kris Steininger (as Pas de Deux), Tim Allhoff
Cinematography	Nikolaus Summerer
Editing by	Robert Rzesacz
Studio	Cine Plus, Lüthje & Schneider Filmproduktion, Das Kleine Fernsehspiel (ZDF), ARTE
Release date(s)	
19 August 2010
Running time	118 minutes
Country	Germany
Language	German
Budget	€2,300,000
===============
பைனல்கிக்... 
இந்த திரைப்படம் பார்த்தே தீரவேண்டிய
திரைப்படம்... முக்கிய சினிமாவை  நேசிக்கும்
உதவி இயக்குனர்கள் மற்றும் உதவி ஒளிப்பதிவாளர்கள்... இந்த திரைப்படத்தை
கண்டிப்பாக  பார்க்கவேண்டும் என்று
கேட்டுக்குகொள்கின்றேன். முக்கியமாக பிட் 
படம் 16 எம் எம் புரொஜக்டரில் படம் பார்க்க அந்த அறையின்  சூழலை மிக அழகாக ஒளிப்பதிவில்  காட்சிபடுத்தி  இருப்பார்கள்...
=================
படத்தின் ரேட்டிங்
 பத்துக்கு ஏழரை.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...







 
 
boss can u write review for pachai maram thee kulikkum
ReplyDeleteJackie அண்ணாவிடம் ஒரு கேள்வி , ஏன் எப்பொழுதும் ஸெக்ஸ்,கற்பழிப்பு ,கொலை படங்களை மட்டும் தேர்ந்து எடுத்து பார்க்கீன்றீர்கள் ?
ReplyDeleteநேரம் கிடைச்சி பார்த்தா... அந்த தீக்குளிக்கும் படத்தை பற்றி எழுதுகின்றேன்.. படம் பார்க்கறதுக்குள்ள அந்த படம் போயிடுச்சி... ஒய்.
ReplyDeleteபிரியா ,
ReplyDeleteஇலக்கியம் எல்லாம் படிச்சதில்லை... ஆரம்பத்தில் இருந்து,.. ராஜேஷ்குமார்,சுபா, தமிழ்வாணன் புக் படிச்சிதான் படிக்கற சூழலுக்கே வந்தேன்.. அதனால எனக்கு சின்னவயசுல இருந்தே திரில்லர் படங்கள் ரொம்ப பிடிக்கும்...பைட் படம் ரொம்ப பிடிக்கும், பைட்ன்னா கிரைம் இல்லாமையா? செக்சும் எனக்கு பிடிக்கும்... அதே போல கிரைம் டிடெக்ட்டிவ் போன்ற படங்கள் ரொம்பவே பிடிக்கும்.... அதனால இது போன்ற படங்கள் அதிகம் பார்ப்பேன்.... தேர்ந்து எடுத்து என்பதை விட திரில்லர் படங்கள் என்றால் அதிகம் பார்ப்பேன்...
நன்றி.
//போலிஸ் தலையால் தண்ணி குடித்து பார்த்தும் குற்றாவாளி//
ReplyDeleteshould be
//போலிஸ் தலகீழா தண்ணி குடித்து பார்த்தும் குற்றாவாளி
right??
//போலிஸ் தலையால் தண்ணி குடித்து பார்த்தும் குற்றாவாளி//
ReplyDeleteshould be
//போலிஸ் தலைகீழா தண்ணி குடித்து பார்த்தும் குற்றாவாளி//
right??
This movie can we get from ali bai shop or online? if online means send link
ReplyDelete