அபத்தமான சமுகம்.

பீ பற்றிய படத்தை கூட சிறப்பாக எடுக்கின்றார்கள்...


 ஆனால் இப்போது எடுக்கும் காமெடி அபத்தங்கள் தாங்க முடியவில்லை என்று தனது முதல் படத்தில் தட்டுத்தடுமாறி அதன் பிறகு அசத்திய இயக்குனர் கடுமையாக  குற்றம் சாட்டுகின்றார்... 

தற்போது வெளியாகும் காமெடி படத்தின் அபத்தங்களை ஒரு நண்பர் முகநூலில் பார்ட் ஒன், பார்ட் டூ என்று பட்டியல் இடுகின்றார்.....

நான் எடுத்த படம் உங்களுக்கு புரியலையா? என்று ஒரு இயக்குனர் கோனார் நோட்சே எழுதுகின்றார்.... 

இவர்கள் அனைவரும் சம்பந்தபட்ட துறையின் சினிமா  நுற்றாண்டு விழா சென்னையில் நடக்கின்றது...ஒருவாரம் படபிடிப்புக்கு ஓய்வு.... மக்கள் பணத்தில் சினிமா தியேட்டர்களை வாடகைக்கு எடுத்து  சிறந்த படங்களின் திரையிடல் நடக்கின்றது... அது குறித்து தற்போதைய சினிமாவில்  வெளியாகும்  காமெடி அபத்தத்தையும், சினிமா அபத்தத்தையும் பற்றி கவலைப்பட்ட யாரும்  இந்த நூற்றாண்டு விழா பற்றி மூச்சு கூட விடவில்லை...

ரிக்ஷ்காரன், அடிமைபெண், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள்  இந்திய  சினிமாவின்  நுற்றாண்டு விழாவில் திரையிடபடுகின்றன.. ஆனால் காமெடி அபத்தங்கள்  பற்றியும் உலகசினிமாவை கரைத்து குடித்து வளர்ப்பவர்கள் என்று சொல்லி ,தினம் தூங்காமல் கண் விழித்து தமிழ் சினிமாவுக்காக காவல் காப்பவர்கள் அடிமைபெண் படத்துக்கும் பராசக்திக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கின்றார்கள் என்பதுதான் பெருங்கொடுமை.


 தமிழ்சினிமா தவறான திசையில் செல்வதை பார்த்து கலக்கம் அடைந்தவர்கள்... துயரம் அடைந்தவர்கள்... தூக்கத்தை இழந்தவர்கள் யாரும், ரிக்ஷகாரன் பற்றியும்  சிரித்துவாழவேண்டும் திரையிடல் பற்றியும் வாய் திறக்கவில்லை...அதை பற்றி சின்னதாக கூட வெம்பவில்லை...

அவர்கள் எதிர்ப்பு எல்லாம்... நம்மை போல இருந்து சட்டென வளர்ந்து விட்ட சந்தானம் ,சிவகார்த்திகேயன், பரோட்ட சூரி, போன்றவர்கள்தான் இலக்கு... சகட்டு மேனிக்கு அவர்களை வாருகின்றார்கள்... அப்போதுதான் சினிமாவை நேசிப்பதாக காட்டிக்கொள்ள முடியும்... நான் அப்பவே சொன்னேன் என்று  மார்தட்டிக்கொள்ள முடியும்... 

உங்களுக்கு ஒன்று சொல்கின்றேன்... இந்த அபத்த காமெடி படங்கள் எடுத்து…. அந்த படத்தினை பார்க்க  ரசிகர்களை தியேட்டருக்கு வரவைக்க வில்லை என்றால் நீங்கள் எடுக்கும் சிறப்பான உலகதிரைப்படங்கள் திரையிட ஒரு தியேட்டர் கூட சென்னையில் இருக்காமல் எல்லாம் கல்யாணமண்டபங்களாகி மணமேடையில் ஸ்கீரின் கட்டிதான் நீங்கள் எடுத்த அற்புததிரைப்படங்களை காட்ட வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்...



இவர்கள் சொன்ன பீ காமெடி, அபத்த காமெடிகள் என்று சொன்ன திரைப்படங்களை தியேட்டரில் பார்க்கும் ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிக்கின்றார்கள்... எல்லோரும் இளைஞர்கள்.. அவர்கள்தான் தற்போதைய டாக்கெட் ஆடியன்ஸ்.. அவர்களுக்காகதான் படம் எடுக்கின்றார்கள்... கல்லா கட்டுகின்றார்கள்...ஹரிதாஸ்  போன்ற படம் எடுத்தால் யார் பார்க்கின்றார்கள்....


 சினிமாவுக்காக பொங்கிய உங்கள் கூற்றில்  நீங்கள் சொன்ன எல்லாவற்றிலும்  எனக்கு ஏற்புடையது இல்லை என்றாலும்,  நீங்கள் கூறிய சில கருத்துகளில் ஒத்து  போகின்றேன்...

 இன்றைய இளைஞர்கள் சொல்கின்றார்கள்.... எவ்ன எக்கேடுகெட்டு போனா எனக்கு என்ன? எங்களுக்கு தேவை என்டர்டெயின்மென்ட்.... அது மட்டுமே போதும் என்று இன்றைய  இளைஞர்கள்  இருக்கின்றார்கள்... அவர்கள் எந்த பிரச்சனையிலும் பெரிய சீரியஸ்நஸ் காண்பிப்பதில்லை... 


நிறைய  பதினங்கள் கட்டுரைகள் படித்தால் தானே சரி எது தவறு எது என்று யோசிக்க முடியும்...  சென்னையில் கடந்த ஆட்சியில் தெற்காசியாவின் மிகப்பெரிய நூலகமான அண்ணாத நூற்றாண்டு நூலகத்தை மருத்துமனையாக மாற்ற  போகின்றேன் என்று அரசு சொல்கின்றது...   இளைய தலைமுறை படித்து விட்டு  யோசிக்க வேண்டும் என்பதை ஆளும் அரசு விரும்பவில்லை... அப்புறம் அவன் எப்படி சிரியஸ் படங்களை ரசிப்பான்... ?அபத்தமாகத்தான் நடந்து கொள்வான்....ஒரு  தலைமுறை ஒழுங்காக  சிந்திக்கவேண்டும் என்றால் நிறைய படிக்க வேண்டும்...

ஆளும் அரசும் இந்நாட்டு மன்னர்களான அவர்களுக்கு, சிரித்து வாழ வேண்டும், அடிமைபெண், ஆயிரத்தில் ஒருவன் போன்ற சமுக கருத்துள்ள படங்களை பார்த்து சினிமா அறிவை வளர்த்துக்கொள்ள விரும்புகின்றது.... அதனால்தான் அது போன்ற கருத்துள்ள  படங்கள்தான் இந்த நூற்றாண்டு விழாவில் திரையிடப்படுகின்றன.

சரி அபத்தகாமெடிக்கு ஆட்பட்டு  தியேட்டரில் கரகோஷம் செய்யும் இளைய ரசிகர் கூட்ட இளைஞர்களின் தற்போதைய மனநிலை என்ன தெரியுமா-?


ஒருத்தன் சென்னை எக்ஸ்பிரஸ்மால் மூன்றாம் மாடியில் இருந்து குதித்தான்... காதல் தோல்வியில்... அவன் துடித்துக்கொண்டு இருக்க சமூகம் அப்படியே  அவனை வேடிக்கை பார்த்தது...


 அடுத்த ஒரு மாதத்தில்....

டேய் பொறம் போக்கு உன்னை விட சமூகத்தில் நான் நீங்கா…. இடம் பிடிக்கின்றேன் என்று இன்னோருத்தன்  ஸ்பென்சர் பிளாசா…. மூன்றாம் மாடியில் இருந்து குதித்தான்... அவனிடம் குதித்தலுக்கு ஏதாவது உயர்ந்த நோக்கம் இருக்கும் என்று எண்ணி காவலர் அவனிடத்தில் கேட்டார்..? ஏன் தம்பி குதிச்சிங்க..???

குதித்தவன் … குத்து உசிறும் கொலை உசிறுமா கிடக்கறான்.... மிக அபத்தமாக அவனிடம் வார்த்தை வெளிவருகின்றது… Just for fun என்று சொன்னான்... 


உயிரை கூட சும்மா எப்படி இருக்கும்ன்னு விளையாடி பார்க்க குதித்தேன் என்பவன்தான் இப்போது எடுக்கும் படங்களை பார்க்க வருகின்றான் என்பதை மறவாதீர்கள் நண்பர்களே...

இன்னைக்கு கூட ஒரு பொண்ணு தன் காதலன் கூட கருத்து வேறுபாடு .. சென்னை அண்ணா பிளை ஓவர்ல சண்டை...நூற்றாண்டு விழாவுல சிரித்து வாழவேண்டும் படம் போடுறாங்களே... அபத்தகாமெடி படம் எடுக்கறாங்களேன்னு கொஞ்சம் கூட யோசிக்கலை.... இதுவரை பாராட்டி சீராட்டி வளர்த்த அம்மா அப்பாவை பத்தி யோசிக்கலை... இதுவரை கஷ்டப்பட்டு படிச்ச படிப்பை  பத்தி யோசிக்கலை...எதிர்கால கனவை பற்றி யோசிக்கலை…


டாமல்ன்னு பிளை ஓவர்ல இருந்து குதிச்சிட்டா....

ஆஸ்பிட்டலுக்கு அழைச்சி போற வழியில் அந்த பொண்ணு செத்து போயிட்டா...........

ச்சே இந்த சமுகமே அபத்தமா இருக்கு இல்லை யுவர் ஆனர்?????????

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.




நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS..
 

9 comments:

  1. Let us go to forest and live peacefully with plants, animals.

    ReplyDelete
  2. இன்றைய இளைய தலைமுறையினரின் மனநிலையை சரியாக அப்படியே எழுதியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  3. இதைத்தான் சுஜாதா அப்போதே ‘எதையும் ஒருமுறை’ நாவலில் விளையாடி இருப்பார். ‘சும்மா கொலை செஞ்சு பார்க்க ஆசைப்படும் ஒரு பெரிசு’.

    இவரது அரவான் ஓடலைன்னா அதுக்காக ஓடுற குதிரையைப் பீ என்னும் மனோபாவம் மாபெரும் தவறு.

    // உயிரை கூட சும்மா எப்படி இருக்கும்ன்னு விளையாடி பார்க்க குதித்தேன் என்பவன்தான் இப்போது எடுக்கும் படங்களை பார்க்க வருகின்றான் என்பதை மறவாதீர்கள் நண்பர்களே...//

    ReplyDelete
  4. ungaluku appedi ena MGR movie methu kola veri?..yen neenga sonna movie la nalla illaya? illa vasul sathanai nadathiyathu illaya?....

    indraya YOUTH pathi solringa..? ippathan ellarum tharkolai panikurangala? ithuku munnadi yarum paninathu illaya?....

    ithu unga site athukaga eathu vendumanalum eluthalam... but konjam think pani eluthunga....
    ithuvarai neega eluthina PATHIVUGALUKU nan rasigan..but intha pathivu pidikavillai

    ReplyDelete
  5. இன்றைய இளைஞர்களை புரிந்து கொள்வது கொஞ்சம் கஷ்டமாகத்தான் உள்ளது!

    ReplyDelete
  6. இன்றைய இளைய தலைமுறையினரின் மனநிலையை
    அப்படியே எழுதியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  7. இன்றைய நிலையை சொல்லியிருக்கீங்க...
    அபத்தமாத்தான் இருக்கு... மாறாது அண்ணா...

    ReplyDelete
  8. ///இவர்கள் அனைவரும் சம்பந்தபட்ட துறையின் சினிமா நுற்றாண்டு விழா சென்னையில் நடக்கின்றது...ஒருவாரம் படபிடிப்புக்கு ஓய்வு.... மக்கள் பணத்தில் சினிமா தியேட்டர்களை வாடகைக்கு எடுத்து சிறந்த படங்களின் திரையிடல் நடக்கின்றது... அது குறித்து தற்போதைய சினிமாவில் வெளியாகும் காமெடி அபத்தத்தையும், சினிமா அபத்தத்தையும் பற்றி கவலைப்பட்ட யாரும் இந்த நூற்றாண்டு விழா பற்றி மூச்சு கூட விடவில்லை...

    ரிக்ஷ்காரன், அடிமைபெண், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் இந்திய சினிமாவின் நுற்றாண்டு விழாவில் திரையிடபடுகின்றன.. ஆனால் காமெடி அபத்தங்கள் பற்றியும் உலகசினிமாவை கரைத்து குடித்து வளர்ப்பவர்கள் என்று சொல்லி ,தினம் தூங்காமல் கண் விழித்து தமிழ் சினிமாவுக்காக காவல் காப்பவர்கள் அடிமைபெண் படத்துக்கும் பராசக்திக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கின்றார்கள் என்பதுதான் பெருங்கொடுமை.

    தமிழ்சினிமா தவறான திசையில் செல்வதை பார்த்து கலக்கம் அடைந்தவர்கள்... துயரம் அடைந்தவர்கள்... தூக்கத்தை இழந்தவர்கள் யாரும், ரிக்ஷகாரன் பற்றியும் சிரித்துவாழவேண்டும் திரையிடல் பற்றியும் வாய் திறக்கவில்லை...அதை பற்றி சின்னதாக கூட வெம்பவில்லை...

    அவர்கள் எதிர்ப்பு எல்லாம்... நம்மை போல இருந்து சட்டென வளர்ந்து விட்ட சந்தானம் ,சிவகார்த்திகேயன், பரோட்ட சூரி, போன்றவர்கள்தான் இலக்கு... சகட்டு மேனிக்கு அவர்களை வாருகின்றார்கள்... அப்போதுதான் சினிமாவை நேசிப்பதாக காட்டிக்கொள்ள முடியும்... நான் அப்பவே சொன்னேன் என்று மார்தட்டிக்கொள்ள முடியும்... ///

    செருப்படி ஜாக்கி... நல்ல பதில். பெயர்களை வெளிப்படையாகச் சொல்லியே எழுதுங்கள். அதுதானே கெத்து... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. உங்களோட முந்தைய பதிவுகள் போல விளக்கமா இல்ல..ரசிகர்களுக்காகத்தான் படம் எடுக்க வேண்டியிருக்கு...இப்ப வரும் படங்கள் இளைஞர்களை குடிக்கவும்,சூதாடவும்,காதல் கசமுசா செய்யவும் ஊக்குவிப்பதாகத்தான் இருக்கிறது..

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner