Moodar Koodam-2013/உலகசினிமா/மூடர் கூடம். சினிமா விமர்சனம்.

 எது தர்மம் ???
எதுதேவையோ அதுவே தர்மம்... என்ற ஒன்லைனுடன் 2011 ஆம் ஆண்டு ஆராண்ய காண்டம்  திரைப்படம்  அட்டகாசமான திரைப்படம் என்று சினிமா காதலர்கள்  சொல்லலாமே தவிர, அந்த திரைப்படம் தயாரிப்பாளரை தலையில் துண்டு போட்டுக்கொள்ளவைத்தது என்று   சொல்லலாம்...ஆனால் தமிழ் திரைப்பட வரலாற்றில் அற்புதமான முயற்சி.... ஒரே மாதிரியான ரசனை கொண்ட சமுகத்தை சட்டென்று  ஒரே படத்தில் மாற்றி விட முடியாது அல்லவா?... 

எப்போதாவது  டார்க் மூவி வகையறாக்கள் தென்றல் போல தமிழ் திரைப்பட  எல்லையை தொட்டு செல்லும்...ஆனால் முழுமையாக தமிழில் ஆராண்யகாண்டம் திரைப்படத்தை சொல்லலாம்....  அதே போல புதுப்பேட்டை திரைப்படமும் அதே டார்க் மூவி லிஸ்ட் திரைப்படம்தான் என்றாலும்.... ஆராண்யகாண்டம் மேக்கிங்  தமிழ் திரைப்படஉலகத்துக்கு தனி ஸ்டைல் மற்றும் அந்தஸ்த்தை கொடுத்தது என்று சொல்லலாம்.

அந்த பாதையில் அதே ஸ்டைலில் ஒரு டார்க் மூவி வகை திரைப்படம் வந்து இருக்கின்றது... அந்த திரைப்படம்தான் மூடர் கூடம்...

 மூடர் திரைப்பட விமர்சனத்தை பார்க்கும் முன்... கெட்ட வார்த்தை பேசினால் பிடிக்காது, அது என் காதில்  விழுந்தாலே அபச்சாரம் என்று பீல் பண்ணுபவர்கள் இந்த பாராவுடன் இடத்தை காலி செய்து  கொள்ளுங்கள்... நாம் வேறு ஒரு பதிவில்  சந்திக்கலாம்... பை.


எல்லா படத்தக்கும் ஒரு அடிப்படை தேவையில்லையா... இந்த படத்தின் ஒன்லைன்..
இலக்கை  அடைவதை விட பயணம் சிறப்பாய்  அமைவதே மேல்.... என்ற கவுதம புத்தரின் வரிகள்தான்இதான் படத்தோட  ஒன் லைன்...

  இதனை இப்படியே படிச்சா... பெரிய புடுங்கி அட்வைஸ் பண்ண வந்தட்டான்னு அலட்டுவானுங்க....ஆனா ரொம்ப காமெடியா.... அழகா இந்த படத்துல  மேலுள்ள வரிகளுக்கு ஏற்றது போல படத்தை எடுத்து இருக்காங்க...


என் நண்பன் சங்கரும் நானும் 1996 ஆம் ஆண்டு சென்னையில் சத்தியம் தியேட்டர்   வாசலில் நின்றுக்கொண்டு  யார் எழுதும் கட்டுரை அல்லது கதை? அட...சின்ன துனுக்குதான் சொல்லேன்... யாருது முதல்ல வருதுன்னு பார்த்துடலாம்ன்னு சொல்லி இரண்டு பேரும்  முஷ்ட்டி உயர்த்தி பிரிந்து போனோம்.


அதன் பிறகு நானும் அவனும் மறந்து போய் விட்டோம்......  சமீபத்தில் தந்தி தொலைக்காட்சி மற்றும் மக்கள் தொலைகாட்சி , டைம்பாஸ் இதழ்கள் போன்றவற்றில் என் பெயரை பார்த்து விட்டு போன் செய்தான்... நீ இலக்கை நிர்ணியத்து விட்டு பயணிக்கின்றாயா?- அல்லது இலக்கில்லாமல் பயணிக்கின்றாயா? என்று கேட்டான்... எந்த இடத்தை நோக்கி செல்கின்றோம் என்று முடிவு செய்யாமல் மனம் போன போக்கில்  நான்பயணித்தது இல்லை.. ஆனால்  போகும் இடத்தை குறித்து வைத்துக்கொண்டு  அதை நோக்கி பயணப்படுவேன்  ஆனால் அதை அடைந்து  விட்டுதான் மறுவேலை என்று வெறித்தனம் எல்லாம் இல்லை என்றேன்...

 திரும்ப புரியவில்லை என்றான்...

உதாரணத்துக்கு எவரெஸ்ட் சிகரம் போக வேண்டும் என்பது இலக்கு... ஆனால் என்னை பொறுத்தவரை அந்த  இலக்கை வைத்துக்கொண்டு டெல்லி போனாலோ அல்லது அந்த மலை  அடிவாரம் வரை போனாலே சந்தோஷம் என்றேன்.. அப்போது எவரெஸ்ட்டை அடைவது  உன் எண்ணம் இல்லையா? என்றான்...

 கண்டிப்பாக அதே வேளையில் போகும்  வழியில் எவரஸ்ட் ஏறிய சந்தோஷத்தை விட பெரிய சந்தோஷமாக வித விதமான மனிதர்கள், பழக்க வழக்கங்கள், வித்தியாசமான உணவு பழக்கங்கள், இயற்கை  காட்சிகள், ஆறுகள் ஏரிகள், கண்மாய்கள், பெண்கள் என்று நான் ரசிக்க நிறைய இருக்கின்றது என்று சொன்னேன்...

அவனுக்கு  புரியவில்லை...உண்மையாகத்தான் சொல்கின்றாயா? என்று எதிர் கேள்வி கேட்டான்...

 உன்னிடம் பொய் சொல்லி எனக்கு என்ன ஆக போகின்றது என்றேன்...? 

அவன்  நம்பவில்லை... 

ஆனால் நான் வாழும்  வாழ்க்கையை போல அதே வரிகளை இந்த திரைப்படம்மும் சொன்ன போது இந்த திரைப்படம் இன்னும் எனக்கு நெருக்கமாக மாறியது... இலக்கை  அடைவதை விட பயணம் சிறப்பாய்  அமைவதே மேல்....கவுதம புத்தர்.  என்ன அழகான வரிகள்...???


மூடர் கூடம் மூட்டாள்களின் சங்கமம்... இயக்குனர் நவீன் பிரஸ் மீட்டில் பேசி இருந்தார்... எல்லா மனிதர்களிடமும் முட்டாள் தனம் இருக்கின்றது.. அது   மனிதருக்கு மனிதர் சதவீகிதத்தில் வேண்டுமானால் மறுபடலாம் என்று சொன்னார்...

உண்மைதான்... என்னிடம் ஒரு பைவ்பாயிண்ட்  ஒன் சிஸ்டம் இருக்கின்றது...  மிட்சன் தாயரிப்பு அது..

அதுக்கான ரிமோட் தொலைந்து  ரிப்பேர் ஆகி  போய் விட்டது... அந்த ரிமோட் எங்கே தேடியும் கிடைக்கவில்லை.... ஆறு மணிநேரம் ....ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம்  மொத்தம் ஆறு மணி  நேரம் கழுத்து வியர்வை  கச கசக்க சென்னை   ரிச்சி ஸ்டீரிட் தெருவில் நடத்து, தமிழ் இழுத்து பேசும் எல்லா சேட்டுகளிடமும்   ரிமோட்  மாடலை காட்டி  இருக்கின்றதா என்று கேட்டேன்....? எல்லோரும்  பான் பராக் காவி கறை பற்களோடு இல்லை என்று  இளித்தார்கள்...


வீட்டுக்கு வந்தேன்.. போஸ்மார்டம் செய்தது போல அந்த ரிமோட்டை அக்குவேறு ஆணி  வேராக பிரித்தேன்... ஏற்கனவே  அந்த ரிமோட்டை அது போல பிரித்து இருக்கின்றேன்.. உள்ளே இருக்கும் சர்கியூட் போர்டில் சென்ட்  அடித்து பஞ்சு வைத்து துடைத்தால் அதில் மேல் உள்ள அழுக்கு போய் கொஞ்சம் காலத்துக்கு நன்றாக இயங்கும்.. சென்ட் எதுக்கு என்றால் அதில்தான் ஸ்பிரிட் இருக்கின்றது அல்லவா...

பொதுவாக பகலில்தான் பிரிந்து மேயும்  அந்த  வேலையை செய்வேன்... அன்று பார்த்து இரவில் செய்தேன்...பகலில் அதனை வெயிலில் வைத்து ,இரண்டு நிமிடம் காய வைத்து திரும்ப எடுத்து வந்து பொருத்தினால்... நன்றாக வேலை  செய்யும்.. 

ஆனால் வெயில் இல்லை நிலவு காய்ந்து கொண்டு இருந்தது... சட்டென ஐடியா...ஓவனில் வைத்து சூடுபடுத்தினால் என்ன? என்று எண்ணம் தோன்றி ...ஓவனில் லோ டெம்பரேச்சரில் வைத்தேன்.. ஒரு சுற்று  கூட முழுதாக  சுற்ற வில்லை... டொப் என்ற சத்தத்தோடு சர்க்கியூட் போர்டு வெடித்து பற்றிக்கொண்டு எரிந்தது... சூரிய ஒளியும் ஓவன் ஹீட்டும் ஒன்றா-?  இதைதான் முட்டாள்தனம் என்று சொல்வது... அப்படி அதிக சதவிகதத்தில்  முட்டாள்தனம் செய்யும் நான்கு பேரின் கதைதான் இந்த  திரைப்படம்..
=================
Moodar Koodam-2013 திரைப்படத்தின் கதை என்ன?

 அடுத்த வேளை சோத்துக்கே  சிங்கி அடிக்கும் நான்கு பேர்... அவர்கள் யாருமற்ற அனாதைகள்....நால்வரும் பெட்டி  கேசில் மாட்டிக்கொண்டு  போலிஸ் ஸ்டேஷனுக்கு வரும் போது நட்பாகின்றார்கள்... நால்வரும் ஒரு வீட்டில் திருட போக  அங்கே இருக்கும் ஆட்களை பினைகைதியாக வைத்துக்கொண்டு மூட்டாள்தனமாக விளையாடும் ஒரு டார்க் ஹீயூமர் திரைப்படம்தான் இந்த மூடர் கூடம்.

=================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில.

பேசவே ஆள் இல்லாம இருக்கறது பெரும் கொடுமையில்லையா? அப்படி நால்வரும் சேர்ந்து அதை உணரும் இடம் அருமை.

 ஏன் சென்ட்ராயன் முகமுடி கேட்டா மங்கி கேப் வாங்கி வந்து இருக்கிங்க?

 கண்ணை மறக்கறதுக்கு இதுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை... ரேட் ரொம்ப கம்மி.. அதான்... 
சரி உங்க கேப் மட்டும்  வேற கலர் இருக்கு.. ?

நான் ரொம்ப வித்தியாசமான ஆளு என்றதும் நவீன் கேரக்டர் முகத்தை சீரியசாக வைத்துக்கொண்டு... நாம என்ன திருவிழாவுக்க போறோம் சென்ட்ராயன்... திருடப்போறாம் சென்ட்ராயன்.... என்பதில் ஆரம்பிக்கின்றது அவர்கள் நையாண்டி... படம் முடியும் வரை   நான்   சிரித்துக்கொண்டே இருந்தேன்....


முதலில் படத்துக்கு தேர்வு  செய்த ஆட்களுக்காகவே படத்தின் இயக்குனருக்கு   ஒரு பெரிய பொக்கே..  

படத்தில் நாயில் இருந்து பொம்மை வரை எல்லாரும் மிகச்சரியாக பொருந்தி இருக்கின்றார்கள்... சமயம் கிடைக்கும் போது  படத்தில் இடம் பெற்று இருக்கும் அத்தனை கேரக்டர்களும்  காமெடி செய்து அசத்தி இருக்கின்றார்கள்... மிக சிறப்பான  நடிப்பு உட்பட..


படத்தை  தயாரித்து இயக்கி நவீன் கேரக்டரில் நடித்து இருக்கும்  நவீன்  மிக சிறப்பாகவே நடித்து இருக்கின்றார்... உதாரணத்துக்கு சிகரேட்டை உள்ளே இழுந்து... சென்ட்ராயன்... நீங்க தனியா இருக்கற ரூம்ல ஒரு  பொண்ணு டிரஸ் இல்லாம இருந்தா? எனக்கு பழக்கம்  இல்லைன்னு விட்டு விடுவிங்களா சென்ட்ராயன்... ??

 டிரை பண்ணுவோம் பாசு....

அப்ப டிரை பண்ணுங்க சென்ட்ராயன் எடுத்த உடனே தெரியலைன்னு சொல்லாதிங்க.... படத்தின் இந்த டீசர்தான் என்னை படம் பார்க்க தூண்டியது என்பேன்...


சென்ட்ராய்ன் கஞ்சா  விற்கும் கேரக்டர்.... அசத்தி இருக்கின்றார்... பொல்லதவனில் பிரச்சனை  பெரிசாக இவர் தனுஷிடம் விடும் உதார்தான் படத்தின் ஆணி வேர்... மனிதர் பின்னி இருக்கின்றார். எனக்கு பசிக்குது எதாவது இருக்கா...?

 டாக் பீட் இருக்கு... 

அப்ப ஒரு பிளேட் கொடுங்க என்று வெகுளியாக  கேட்பதும்... அது நாய்க்கு போடுற சாப்பாடு என்று சொன்னதும் முஞ்சி சுருங்கி  போவதும் கவிதை...


வெள்ளைசாமிக்கு  அந்த  மூஸ்லிம் பெண்ணுடன் வரும் காதல்  பாடல் அதில் சொல்லும் சேதி சின்ன  அழகான ஹைக்கு....

குபேரன்... கூத்துபட்டறை கலைஞர்.... இடித்து விட்டு போகும் போது மூட்டாக்கூதி, லூசுபுண்டை என்று  வண்டை வண்டையாக திட்டும் போதும் எல்லாம் சும்மா இருந்து விட்டு  முட்டாபுண்டை என்று  சொன்னதும் கோபம் அதிகமாகி  முட்டா புண்டை என்று சொன்னவனை மட்டும்  பின்னி எடுக்க.. அவன் அழுதுகொண்டே  எல்லோரும் திட்டினாங்க... எல்லரையும் அடிக்காம என்னை மட்டும் எதுக்குடா அடிக்கற?என்று  கேட்கும் போது முட்டாள் என்று நீ மட்டும்மதான் சொன்னே என்று விளக்கம் அதுக்கு ஒரு முன்கதை... அருமை.


ஒரு பேச்சிலர் ரூமில் எப்படி பேசிக்கொள்ளுவார்கள்...  அப்படித்தான் ரொம்ப கேஷுவலாக இருக்கின்றது இந்தி திரைப்படம்...

கமல் தனது படங்களில் வைத்த பல காட்சிகள்.. இங்கே அநேக கதாபத்திரங்களில் புகுத்தி கமர்ஷியல் சினிமாதனம் இல்லாமல்  செதுக்கி இருக்கின்றார் நவீன்....

படத்தில் எனக்கு ரொம்ப பிடிச்ச இரண்டு கேரக்டர்ஸ்... பத்ரூம்ல்  மறைஞ்சிக்கிட்டு எத்திக்ஸ் பேச ற திருடன் கேரக்டர்... அதுக்கு இங்கிலிஸ் கூட தெரியாம அதையும் படம்ன்னு நினைச்சி வரைய சொல்லற சீன் சான்சே இல்லை  சிரிச்சி மாளலை....


 அதுக்கு அப்புறம்.. நார்த் மெட்ராஸ் ரவுடி   ஆட்டோ  குமார் கேரக்டர்..  சான்சே இல்லை..  சிங்கம் சிங்கிளா இருந்தா எலி எலிபென்ட் கணக்கா உதாரு விடுமாம்.. என்று அந்த ஆள் செய்யும் பாடி லாங்வேஜ் சான்சே ,இல்லை... அதன் பிறகு வீட்டு வேலையாளிடம் உதை வாங்கி அழும் போது பரிதாபத்துக்கு பதில்   சிரிப்பே அதிகம் வருகின்றது.. இந்த மாதிரி கேரக்டர் இருந்தா எப்படியாவது  நானும் நடிக்க வேண்டும் என்று ஆசை வந்து தொலைக்கின்றது....  சான்ஸ் வந்தா பார்த்துடலாம்டா....


 படத்தில் கிரிக்கெட் பேட் அதிகாரத்தின் குறியீடாக காட்டப்படுகின்றது... அது யார்   கைக்கு போனாலும் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் என்று மிக அழகாக காட்டி இருக்கின்றார் இயக்குனர்.. (இவர் கோனார் நோட்ஸ் போட்டு விட்டால்? அதுக்குதான் நாமளே  முந்திக்கறோம்..)

படத்தில் இருக்கும் நாய்க்கு பிளாஷ் பேக்... அது  கொட்டி கொட்டி கோழையாக மாறி மாடிப்படிக்குகிழே உட்கார்ந்து கொள்வதும், அதனோடு அந்த பையனின் முட்டாளத்னத்தை முடிச்சி போட்டு கட்  ஷாட்டில் இரண்டு பேரும் ஒரே  படகில் பயணிக்கின்றார்கள் என்று சொல்லாமல் சொல்லி இருக்கின்றார் இயக்குனர் நவீன்.


 எல்லோருக்கும் முன் கதை... நல்ல உத்தி  அதுவே கொஞ்சம் சலிப்பை ஏற்ப்படுத்துகின்றது...கொஞ்சம் நறுக்கி இருக்கலாம்.. அது படம் எடுத்த இயக்குனருக்குதான் தெரியும்...

அடேய் நான்தான் மறந்துட்டு ஏதையாவது எழுதிக்கிட்டு போறேன்னா... நீங்களாவது நியாபகபடுத்தக்கூடாது...ஓவியா பத்தி எதுவும் சொல்லலையே... ???அந்த பொண்ணு தலைக்கீழா நிற்கும் போது படம் பார்க்கற எல்லா ஆம்பளைங்களுக்கும் ஹார்ட் பீட் எகிறிது..
பாத்ரூம்ல ஒருத்தன் உட்கார்ந்து இருக்கான் என்றதும் ஓவியா காட்டும் எக்ஸ் பிரசன்ஸ் அருமை.

திருடன் ஜட்டிக்குள்ள செல்போன் இருக்க இன்கமிங் கால் வர.. அந்த வைபரேஷ்னில் அவன் அனுபவிக்கும் அந்த சுகத்தை ஸ்கீரில் நன்றாக பிரசன்ட்  செய்து இருக்கின்றார்.. எதிக்ஸ் திருடன் நடிகர்.


 அதிகாரம் சிறுது நேரம் எவரிடம்  வந்தாலும் எப்படி எல்லாம் ஆடுவார்கள் என்பதைதான்....பேட் ,தலைகிழாக  நிற்பது,  பேட்டில் பால் அடித்துக்கொண்டே இருப்பது,  கிழவரிடம் குண்டினை சென்டரில் போட சொல்வது என்று காட்சிகளில் அசத்தி இருக்கின்றார்..


சிவப்பா இருப்பவன் பொய் சொல்லமாட்டான் என்று நம்பி பீட்சா சாப்பிட  வரும் குபேரனிடம்    அவன்  முன்ன பின்ன பழக்கம் இல்லை எப்படி நம்பினிங்க குபேரன்,,? அவன் படிச்சவன்  ஏமாத்தமடாட்டான் என்று சொல்ல அவன் மொபைல் வைத்துக்கொண்டு இருப்பது நவீன உலகின் கிராமத்துவெள்ளந்தி மனிதர்களின்  நம்பதன்மையை சிறைபிடித்து இருக்கின்றார்..


ஒரு மாமாமரம் கதை மூலம் இடஒதுக்கீடு மற்றும் வாழ்வின் ஏற்ற தாழ்வுகளை மிக அழகாக பாமரரும் புரியும் வகையில் சொல்லி இருப்பது கிளாஸ் மற்றும் வெல்டன் நவீன்..

இரண்டாயிரம் ரூபாய்  சட்டைக்கு அலறுவது,... 

அடுத்த வேலை சொத்துக்கு வழி இருக்கறவனுக்குதான் காதல் கத்திரிக்காய் எல்லாம்.. நமக்கு எதுக்கு? 

இங்கிலிஷ்காரன் கிட்ட தமிழ் பேசுவியா?

 மத்தவன் வாழற வாழ்க்கைய நாமளும் வாழ்ந்துட்டு போக  நம்ம வாழ்க்கை என்ன? எழுதி வச்சிட்டு போன கம்யூட்டர் புரோக்கிராமாரா? 

மத்த ஸ்டேட்டுல எல்லாம்   அவன்க மொழியை மறந்துட்டு இந்தி பேச ஆரம்பிச்சிட்டானுங்க.. பட் இங்க இன்னும் அவுங்க மொழியை விட்டு விடாம இருக்காங்க அதனால தமிழ்ல  பேசறதுக்கு நாமதான் பெருமை படனும் என்று இண்டலெக்சுவல் வசனங்களில் ஈர்க்கின்றார்...


 படத்துக்கு பெரிய பலம்..  பின்னனி இசை அசத்தி இருக்கின்றார்.. இந்த படத்தோட  பியூட்டி என்னவென்றால்.. இயக்குனர் மற்றும்  இசையமைப்பாளர் இரண்டு பேரும் இன்ஜினியர்கள்.... உங்கள் இருவர் உழைப்புக்கும் விடா முயற்சிக்கும் எனது சல்யூட்...


கேமராமேன் இயக்க வாய்ப்பு கேட்டு போய்  படத்தை  ஒளிப்பதிவு செய்து இருக்கின்றார்...  ரொம்ப நல்லா பண்ணி இருக்கார்.

மூடர் கூடம் படம் பார்த்து விட்டு பேஸ்புக்கில்  கடந்த சனிக்கிழமை எழுதினேன் அது உங்கள் பார்வைக்கு.

மிக மிக அற்புதமான திரைப்படம் மூடர் கூடம்... ஆராண்யகாண்டம் திரைப்படத்துக்கு பிறகு அந்த இடத்தை நிரப்ப வந்து இருக்கும் திரைப்படம் இந்த திரைப்படம் என்று தைரியமாக சொல்லலாம்... அவசியம் திரையரங்கம் சென்று பாருங்கள்...

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்துக்கு எப்போதாவதுதான் சிரித்தேன்... ஆனால் இந்த திரைப்படம் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை சிரித்துக்கொண்டே இருந்தேன்... என்னை தவிர எல்லோரும் படத்தை மன்மோகன் சிங் மனநிலையில் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்...
சென்னை சாந்தி தியேட்டரில் 60 ரூபாய் டிக்கெட் எடுத்து சுவர் ஓரத்தில் உட்கார்ந்து இருந்த ஜோடி ஒன்று... சட்டென இண்டர்வெல் விட்டதை எதிர்பார்க்காத காரணத்தால், லாங் சைஸ் நோட்டு புத்தகத்தை எடுத்து மார்பு பக்கம் வைத்து மறைத்துக்கொண்டு சுடிதார் டாப்பை வெட்கத்தோடு சரி பண்ணிக்கொண்டு இருந்தார் அந்த பெண்...
படத்துல ஓவியா தலைக்கீழ நின்னதை பார்த்துட்டு அந்த பெண்ணோட பாய் பிரண்ட்....
வேண்டாம் படத்தை பத்தி மட்டும இப்ப பேசுவோம்.... படம் நல்லா இருக்குய்யா.. படம் நெடுக பிளாக் ஹீயூமர் காமெடி விரவிக்கிடக்கின்றது... டோன்ட் மிஸ் இட்... முக்கியமா ஆட்டோ குமார் வரும் இடங்களில் சிரிச்சி மாளலை...
ஹேட்ஸ் ஆப் இயக்குனர் மற்றும் நடிகர் நவீன்.


 என்று எழுதி இருந்தேன்....


எழுதாமல் விட்டு போன ஒன்று... என்னவென்றால் எனக்கு முன்னால் இரண்டு பெருசுகள் உட்கார்ந்து கொண்டு இருந்தன.. நான்  சிரிக்க சிரிக்க என்  முன்னால்  இருந்த இரண்டும் என்னை திரும்பி பார்த்து  ஏளன  பார்வை பார்த்து என்னை டென்ஷனாக்கி கொண்டு இருந்தன...

===============
படத்தின் டிரைலர்.


=============
படக்குழுவினர் விபரம்


Directed by Naveen
Produced by Pandiraj
Written by Naveen
Starring Naveen
Sentrayan
Rajaj
Oviya
Music by Natarajan Sankaran
Cinematography Tony Chan
Editing by Athiyappan Siva
Studio Pasanga Productions
Release date(s) September 13, 2013
Country India
Language Tamil

==================பைனல்கிக்...

சமுக கருத்தை சொல்கின்றேன் என்று நீட்டி முழங்காமல் குறீயிடாக இந்த படத்தில்  நிறைய காட்சிகளில் இன்றைய நாட்டு நடப்பை பகடி செய்கின்றார் இயக்குனர்... முதல் படத்திலேயே சிக்சர் அடித்து இருக்கும் அவர் நம்பிக்கைக்கும் இந்த படத்தில்  பணிபுரிந்த அந்தனை நண்டு சின்டுகளுக்கும் ஒரு பொக்கே பார்சல்.

ஒருவேளை படம் தப்பிக்கலைன்னா.. அதனால ரொம்ப சேப்ட்டியா ஒரு பெரிய ரூம்ல உட்கார்ந்துகிட்டு பெரும்பாலான காட்சிகளை அபீட் விட்டு விட்டார்... இதுதான் விவரம் அப்படின்றது..

படத்துக்கு  இயக்குனர் பாண்டிராஜ்  பசங்க  பேனர் பெரிய ரிலீப்.. பலரை சென்று அடைய அது உறுதுணையாக இருந்தது என்பது நிஜம்...

சினிமா பாசங்கில்லாமல்  ஒரு மாற்று சினிமா என்று அடித்து சொல்லலாம்....யோவ் இது எல்லாம் ஒரு படமா? என்று சொல்பவர்களும் உண்டு.. அது பார்வையாளனின் தவறே  அன்றி படைத்தவனின் தவறு அல்ல..

ஆராண்யகாண்டத்துக்கு பிறகு அது போல ஒரு நல்ல மாற்று சினிமா இந்த திரைப்படம்..... ஆனால்  அந்த படத்தையும் இந்த படத்தையும் ஒப்புமை படுத்தக்கூடாது.. காண்டம் ஒரு சீரியசான படம் ...

தேவைப்பட்டால்  மட்டுமே அதில் காமெடி இருந்தது... ஆனால் மூடர் கூடம் படம் நெடுக காமெடி.... அந்த புளோ  கொஞ்சம் கஷ்டம்.. கொஞ்சம் என்ன அதிகமாகவே கஷ்டம்தான்.. அதனால் என்னளவில் இந்த  திரைப்படம் நிறைவான திரைப்படம் என்பேன். இந்த படம்  பார்த்தே தீரவேண்டிய திரைப்படம்... அவசியம்  பாருங்கள் நண்பர்களிடம் சொல்லி பார்க்க  சொல்லுங்கள்....
இன்றுதான் இயக்குனரிடம் பேசினேன்...

நேரமின்மையால் இந்த படத்தை பற்றி இன்னும் எழுதவில்லை என்று சொன்னேன்.. படம் போயிடறதுக்குள்ள எழுதிடுங்க என்றார்..

 விளையாட்டாக சொன்னாலும்  அது எவ்வளவு  வலி நிறைந்த வாக்கியம்..???

வாழ்த்துகள் நவின்...நல்லாவருவிங்க...


இயக்குனரின் பேச்சு...

பிரியங்களுடன்


ஜாக்கிசேகர்.நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....


EVER YOURS...
 

11 comments:

 1. ஹேட்ஸ் ஆப் நவீன், இயக்கம் மட்டுமல்ல, உங்கள் நடிப்பு, வசன உச்சரிப்பு உடல்மொழி எல்லாமே அருமை. கலக்கீட்டீங்க..

  ReplyDelete
 2. சூப்பர் விமர்சனம்....
  இலங்கைல ரிலீஸ் பண்ணாதது ரொம்ப வருத்தமா இருக்கு... டவுன் லோடு தான் பண்ணனும் போல.... இந்த பதிவுக்கு டபுள் லைக் பாஸ்....././

  ReplyDelete
 3. நிச்சயம் தியேட்டரில் போய் பார்ப்பேன்.

  ReplyDelete
 4. உண்மையில் அருமையான படம். புரியாதவர்கள் பற்றி நீங்கள் ஏன் கவலை பட வேண்டும். விடுங்க பாஸ். பெருசுங்க அப்படிதான் சிரிக்கும்.

  ReplyDelete
 5. விடுங்க பாஸ். பெருசுங்க சிரிச்சா சிரிச்சிட்டு போகட்டும்.

  நல்ல படம்தான் அப்படின்னு சொல்லி எல்லோரையும் பாக்க வைக்க வேண்டி இருக்கு.

  வாழ்த்துக்கள் நவீன்.

  ReplyDelete
 6. Jackie - Watch the movie - 'Attack the Gas Station' and then compare with 'Moodar koodam'

  ReplyDelete
 7. Jackie - watch this movie - Attack the Gas Station

  ReplyDelete
 8. ippo thaan night show padam parthutu vanthen. title card la irunthu padam mudiyura varaikkum chance ah illa. padam sema class. kandippa intha padatha ellorum poi theatre la poi parkanum. All the best naveen.

  ReplyDelete
 9. ippo thaan night show padam parthutu vanthen. title card la irunthu padam mudiyura varaikkum chance ah illa. padam sema class. kandippa intha padatha ellorum poi theatre la poi parkanum. All the best naveen.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner