கண்ணீர்ச்சில், எச்சில், சிறுநீர் ,விந்து, பீ, போன்றவை
மட்டும்தான்
நம் உடம்பில் இருந்து சொந்தமாக உருவாகுபவை... அது கூட இந்த மானிட
உடல் இயங்க எதையாவது தின்னு
தொலைத்தால்தான், இந்த உடல் இயக்கம் பெற்று, மேலே சொன்ன ஐந்து விஷயங்கள் உடம்பில் இருந்து வெளியேற வாய்ப்பு இருக்கின்றது..
மற்றபடி
இந்த உலகில் வாழ அனுபவங்கள் மற்றும் யாரோ சொல்லிக்கொடுத்து விட்டு போன பாடங்களை
படித்து உள்வாகி நாம் அதை
மேம்படுத்தி மேம்படுத்தி
வாழ்கின்றோம்....சிக்னலில் எப்படி கிராஸ்
பண்ணுவதில் இருந்து ஆய் போனால் எப்படி சுத்தமாக கழுவி விட்டு வருவது வரை
அம்மாவில் இருந்து அப்பாவரை நமக்கு சொல்லிக்கொடுத்ததுதான்...எப்படி
உடுத்த வேண்டும் ?எப்படி பழக வேண்டும்? என்று சொல்லிக்கொடுக்க அதை அப்படியே பாலோ பண்ணி வருகின்றோம்...
சரி... இப்படி கத்துக்கிட்டு படிச்சி வரோம்....கிராமத்துல இருந்து சென்னை
வந்துட்டிங்க... ஒரு மாலுக்கு போறிங்க.. அங்க எக்ஸ்சலேட்டர் இருக்கும் அதுல எப்படி
ஏறுவதுன்னு தெரியாது இல்லையா? அப்ப முன்னாடி போறவன் எப்படி அதுல ஏறுறான்னு பார்த்துட்டு அப்படியே காப்பி
அடிச்சிட்டு அடுத்து நீங்க ரொம்ப ஸ்டைலா
முன்னாடி ஏறினவன் போல நீங்க எக்ஸ்லேட்டர் ஏற போறதில்லை... உங்களுக்குன் தனி ஸ்டைல் இருக்கும் இல்லையா? அதை காப்பின்னு சொல்ல முடியுமா? ஆமான்னா இந்த
உலகத்துல எல்லாமே காப்பிதான் இன்ஸ்பிரேஷன்தான்...
சத்தியமா
சொல்லறேன்.. சத்தியம் தியேட்டர்ல முத தடவை வயித்தை கலக்கி ஒரு கிரமத்தானான எனக்கு சொளுக்கு சொளுக்குன்னு தண்ணி ஊத்தி கழுவறதக்கு
மக் இல்லைன்னதும் பக்குன்னு இருந்திச்சி..., கன் ஷவர் மற்றும் பேப்பர் மட்டும்தான் இருக்கின்றது எனும் போது
எனக்கு எப்படி கழுவ வேண்டும்? எப்படி துடைக்க வேண்டும் என்று எனக்கு ஆங்கில
சினிமாதான் கற்றுக்கொடுத்தன... அதை பார்த்து அப்படியே காப்பி அடித்தேன் என்று
சொல்ல முடியுமா?
படத்துல பார்த்து கத்துக்கிட்டது ஒரு லைன் அதுக்கு பிறகு
எதை முதல்ல செய்யனும்? எதை ரெண்டாவது
செய்யனும் என்று யோசிச்சி செயல்பட வச்சது
பொது அறிவு....
விஞ்ஞானத்தின்
முதல் கண்டு பிடிப்பு சக்கரம்....
அதுக்காக ஆட்டோ கண்டு பிடிச்சி அது சக்கரத்தை பார்த்துட்டு இது சைக்கிள் டயரை பார்த்து காப்பி அடிச்சிட்டான்னு சொன்னா சூத்தால
சிரிக்கமாட்டோம்...????
இந்த உலகத்துல இன்ஸ்பிரேஷன் இல்லாம எதுவும் செய்ய முடியாது... எங்கயாவது பார்த்த விஷயம்
,எங்கயாவது யாராவது செஞ்ச விஷயத்தை கொஞ்சம் இம்ளிமன்ட் பண்ணி புதுசா கொடுக்கறதுதான்
ஒரு கலையோட வளர்ச்சி....
தமிழ் மொழி எழுத்து ஆரம்பகாலத்துல எப்படி இருந்திச்சி..?
இப்படி எப்படி இருக்கின்றது அது போலத்தான் கலை
என்பதும் இலக்கியம் என்பதும்.....
படித்து பார்த்து அனுபவத்து அதை மேலும் மேலும் புதிது புதிதாக மேருகேற்றி கொடுப்பதுதான் கலைக்கும் கலைஞனுக்கு அழகு...
மிஷ்கின் படங்களில்
இருந்து மணி ரத்னம் படம் வரை அவ்வளவு ஏன்
இப்ப வரும் புது இயக்குனர்கள் படம் வரை அப்படியே காப்பி அடிக்காமல் இன்ஸ்புரேஷனில்
உருவானவைதான்... அம்ரோஸ்புரோஸ் திரைப்படம் ஒரு
ஒன்லைனுக்கான அடிப்படை...
ஆனால் அதை ஆயுத எழுத்து என்று
சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்ள
முடியும்?
முன்னாடியாவது நானே சிந்திச்சது
என்று சொல்லலாம் ஆனால் இப்ப அப்படி சொல்ல முடியாது.. இணையத்தில் எல்லாம் கொட்டி கிடைக்கின்றது.... அழகிய தீயே திரைப்படத்தில்
உனக்கு எல்லாம் தெரியுது சித்தப்பா? என்று ஒரு டயலாக் வரும்.. அது போல எல்லோருமே
எல்லாம் தெரிந்த சித்தப்பாக்களாகி விட்டார்கள்... அதனால் யாரையும் ஏமாற்ற
முடியாது...
சூது கவ்வும் திரைப்படத்தில் இருக்கு பல காட்சிகள் இன்ஸ்பிரேஷனில்
உருவானவைதான்.... நான் கூட சூது கவ்வும் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரான ஷாலு கற்பனை கேரக்டர் என்னை ரொம்பவும் வசீகரித்தது....
எப்படி இந்த ஆளு யோசிச்சி இருப்பான் ???,அசத்திட்டான் என்று ரொம்ப நாள் அதை பற்றி சிலாகித்துக்கொண்டு இருந்தேன்....
“THE EXTERMINATING ANGELS” என்று ஒரு பிரேஞ்ச் படம் பார்த்தேன்.... அந்த
படத்தின் கரு என்னவென்றால் ஒரு டைரக்டர் ஒரு படம் எடுக்க இருப்பான்... அதாவது பெண்களுக்கான செக்சின் போது உச்ச கட்டம் இயல்பாய் வருகின்றதா? அது எப்படி வரும்? எத்தனை முறை
வரும்? என்று படம் எடுக்க பெண்களை தேடிக்கொண்டு இருப்பான்.. நிறைய பெண்கள் அது போல படத்தில் நடிக்க மறுப்பார்கள்... படம்
நெடுக செக்ஸ் காட்சிகள்...
ஆனால் அந்த டைரக்டர் படத்தில் நடிக்க பெண்களை
ஸ்கீரின் டெஸ்ட்டுக்கு செலக்ட் செய்து
கொண்டு இருக்கும் போது அந்த டைரக்டருக்கு
விஜய் சேதுபதிக்கு எப்படி ஒரு ஷாலு இருக்கின்றாளோ.. அதே போல கருப்பு
பனியன் டைட்டாக போட்டுக்கொண்டு ஒரு பெண்.... இவ
சூப்பரா இருக்கா.... நீ எடுக்க போற படத்துக்கு
இவ ஆப்ட்டா இருப்பா.... நான் உன் கூட இருக்கேன் கவலை படாதே ஜமாய் என்று அந்த கற்பனை கேரக்டர் சொல்லுவாள்.... படம் வெளி வந்த ஆண்டு 2006.... அந்த படத்தை தனியாக
கைலி கட்டிக்கொண்டு பாருங்கள்.... சரி விஷயத்துக்கு வருவோம்.... கிட்நாப்பிங் கிரானே
திரைப்படம்தான்... சூது கவ்வும் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.. அந்த
படத்தோட ஒன்லைன்தான்.. ஆனா சூது கவ்வும் படம் வேறு வடிவம்... வேறு ஸ்டைல்..
அது போலத்தான்
அட்டாக் த கேஸ் ஸ்டேஷன் படத்தின் லைன் மட்டும்தான் மூடர் கூடம்.. ஆனால்
இந்த திரைப்படம் வேறு கலர் வேறு
டிரீட்மென்ட்... நம் சமுக
பிரச்சனையை பேசகின்றது...பிலாசபி பேசுகின்றது...
ஆண் அடித்தலை ரசிக்கும் அடி மூட்டாள்தனத்தை பகடி செய்கின்றது.. நாலு பேர் கேஸ் ஸ்டேஷன் அட்டாக் செய்கின்றார்கள்..
ஆனால் இவர்கள் ஒரு வீட்டை கொள்ளை
அடிக்கின்றார்கள்.. கடத்தியவர்களை ஒரு அறையில் போட்டு அடைத்து
வைக்கின்றார்கள்... ஒரு கட்டையை
வைத்துக்கொண்டு மிரட்டுவது சில மேனாரிசங்கள் தலைகிழாக நிற்க சொல்லி தண்டனை கொடுப்பது
மட்டுமே இந்த படத்தில் இருந்து கையாள பட்டு இருக்கின்றது.... ஆனால் இந்த படம் வேறு
வடிவம்... எல்லோருக்கும் முன்கதை... அந்த முன்கதைகள் எல்லாம் வேவ்வேறு ஜானாரில்
இருக்கின்றன... கிளைமாக்ஸ் முன்னே ஒரு பொம்மைக்கு முன் கதை இருப்பத தமிழ்
சினிமாவுக்கு புதுசு.. அதனால் நவீனை கொண்டாடுகின்றார்கள்...
அட்டாக் த கேஸ் ஸ்டேஷன்
படத்தை கொடுத்து ரைட்ஸ் வாங்கி அதே
படத்தை எடு என்றால் கூட இப்படி ஒரு திரை மொழியுடன் எடுக்க வாய்ப்பில்லை
என்று அடித்து சொல்கின்றேன்.. கேமரா கோணத்தில் இருந்து எல்லாம் வேறு ஸ்டைல்.,.
அதே போல அந்த படத்தில் இன்ஸ்பயர் ஆகி இருக்கின்றார்
இயக்குனர் என்பதை மறுக்கவில்லை.. ஆனால்
வேறு வடிவம் வேறு ஸ்டைல்... பிளாக் ஹியூமர்... என்று மனிதர் பின்னுகின்றார்...
எல்லோருக்கும் ஒரு சின்ன சின்ன குட்டி பளிஷ் பேக் அவர்கள் சின்ன வயதில்
புறக்கணிக்கப்படுகின்றார்கள்.. சமுகம் புறக்கணிக்கின்றது.. திரும்ப வளர்ந்த பின்
சமுகத்துக்கு அவர்கள் என்ன கொடுக்கின்றார்கள் ? எப்படி நடந்து கொள்கின்றாகள் என்பதும் ஒரு நாய்க்கு
கூட பிளாஷ் பேக் தமிழ்சினிமாவுக்கு புதுசு...
இவ்வளவு ஏன்
வெளிநாடுகாரனான நாம் எல்லாம் தூக்கி வைத்துக்கொண்டாடும்
குவன்டின் என்ன சொல்லறான் தெரியுமா? நான் எல்லா படத்தில் இருந்தும் இன்ஸ்பயர் ஆனா
காட்சிகளை திருடித்தான் படம் எடுக்கறேன் என்று ஓப்பனாக சொல்கின்றான்... ராமாயணம்
ஒரிஜினல்.. கம்பராமாயணம் இன்ஸபயர் ஆகி எழுதப்பட்டது.. காப்பி அடித்து அல்ல....?
விகடன் மார்க் என்னை பொறுத்தவரை பெரிய விஷயம் அல்ல... ஆனால் முதல் படத்தில் 50 மார்க் வாங்கி இருக்கின்றார் இயக்குனர் நவீன்...இப்படி ஒரு படம் கமல் எடுக்க கடந்த 50 ஆண்டு காலமாக போராடி வருகின்றார்... முதல் படத்தில் அதை நவீன் சாத்தியபடுத்தி இருக்கின்றார்.....அதனால் அவர் மீது இயல்பான தமிழ்சினிமாவின் பொறாமை கண்கள் அவர் மீது பதிந்து இருக்கின்றன... அவரை தூற்றுவார்கள்.. அபாண்டமாய் காப்பி அடித்து படம் எடுத்து விட்டார் என்று சொல்லி நவீனை அசைத்து பார்ப்பார்கள்.. சிகரேட் பிடித்தபடி மெல்லிய புன்மூறுவலுடன். நவீன் அடுத்த படத்தின் திரைக்கதை எழுத ஆரம்பிப்பது நல்லது.
கண்ணீர்ச்சில், எ, சிறுநீர் ,விந்து, பீ, போன்றவை
மட்டும்தான் நம் உடம்பில் இருந்து சொந்தமாக உருவாகுபவை... மற்றது
எல்லாம்.................................................................
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

நல்லா சொன்னீங்க
ReplyDeleteநீங்க நவீனுக்கு வக்காலத்து வாங்குவதெல்லாம் சரிதான். நான் கூட காப்பி அடித்தல் உலகமகா குற்றம் என்றெல்லாம் சொல்லவே இல்லை. ஆனால் அதற்காக நீங்கள் சொல்லிய உதாரணங்களை கொஞ்சம் பாருங்கள். பழக்கவழக்கங்களையும், படைப்புகளையும் போட்டு குழப்பி இருக்கிறீர்கள். படம் எப்படி எடுப்பது என்பது மற்றவர்களிடம் இருந்து கற்று கொள்ளலாம். ஆனால் அதன் வடிவம் என்பது தணிதன்மையோடு அல்லவா இருக்க வேண்டும்? நாம் மற்றவர்களிடம் இருந்து காப்பி அடித்தது எல்லாம் பழக்கவழக்கங்கள். சிந்தனைகளையோ, படைப்புகளையோ அல்ல. நன்றி
ReplyDeleteஇப்போதெல்லாம் இது ஒரு fasion , படத்தில் வரும் ஒவ்வொரு சீனையும் இதுபோல் அந்த படத்தில் உள்ளது இந்த படத்தில் உள்ளது என்று சொல்லவேண்டியது, இன்னு அம்மவைகூட ஆட்டுக்குட்டி னுதான் கூப்டனும் இல்லன்ன இதேமாதுரி ஒரு ஈரான் படத்துல இருக்குன்னு கெளம்பிடுவாங்க
ReplyDeleteஅருமையா சொல்லிருக்கீங்க சார் , நீங்கள் குறிப்பிட பல காட்ச்சிகளை தான் நான் இதை பற்றிய விவாதங்கள் வரும் பொழுது எடுத்து காட்டி கூறி வருகின்றேன். மிக தெளிவாக விளக்கியமைக்கு மிக்க நன்றிகள் ....
ReplyDeleteஅருமையா சொல்லிருக்கீங்க சார் , நீங்கள் குறிப்பிட பல காட்ச்சிகளை தான் நான் இதை பற்றிய விவாதங்கள் வரும் பொழுது எடுத்து காட்டி கூறி வருகின்றேன். மிக தெளிவாக விளக்கியமைக்கு மிக்க நன்றிகள் ....
ReplyDeletewell said bro
ReplyDeleteஏதேனும் குடிக்காமல், சாப்பிடாமல் இருந்தால் சிறுநீரும் மலமும் கூட சொந்தமாக வருமா என்பது சந்தேகமே!
ReplyDeleteநீங்க ஒரு RAW ஆன ஆள். உங்கள் பதிவுகளும் தான். அருமை
ReplyDeletePriya... Voodu..... Thalaivare...
ReplyDeletePuthusha edukanumna kamal sir mathiri(Neela Vaanam Song) Reversla illaina padam fulla thali keela odanum...
ReplyDeleteஅப்படி பார்த்தால் ரீமேக் படங்கள்தான் உண்மையான காப்பிகள்...அவைகளெல்லாம் ஓடவில்லையா...
ReplyDeleteNicely Said Jackie. Another perspective.
ReplyDeleteIt's a good comments.
ReplyDeleteIt's a good comments.
ReplyDeleteஅருமையான பதிவு :-)
ReplyDelete\\கண்ணீர், எச்சில், சிறுநீர் ,விந்து, பீ, போன்றவை மட்டும்தான்
ReplyDeleteநம் உடம்பில் இருந்து சொந்தமாக உருவாகுபவை...
அது கூட இந்த மானிட உடல் இயங்க எதையாவது தின்னு தொலைத்தால்தான்.......//
VERY TRUE JACKIE ALL ARE NOT COPY BUT INSPIRATION.
////..அதுக்காக ஆட்டோ கண்டு பிடிச்சி அது சக்கரத்தை பார்த்துட்டு இது சைக்கிள் டயரை பார்த்து காப்பி அடிச்சிட்டான்னு சொன்னா சூத்தால சிரிக்கமாட்டோம்...????....////
ReplyDeleteSuperb....
i like ur way of writing..... u have created Dadaism in blogging....././
expecting more....
super ......nethiyadi
ReplyDeletehow about Orphan - 2009 ...???
ReplyDeletehow about .....Orphan -2009..???
ReplyDelete