கற்றது தமிழ் திரைப்படம் வந்த நேரம்...
சென்னை வடபழனி லக்ஷ்மன் ஸ்ருதி அருகே எதிரில் இருக்கும் கட்டிடத்தில் ஒரு
பெரிய பேனரை ஒட்டி வைத்து இருந்தார்கள்... ஒரு ஆணும் பெண்ணும் மலை முகட்டில்
அமர்ந்து, ஒரு பள்ளதாக்கினை பார்க்கும் காட்சி அந்த போஸ்டர் என்னை ரொம்பவே
கவர... உடனே ரிலிஸ் அன்றே அந்த திரைப்படத்தை போய் பார்த்தேன்.... ஒரு சில குறைகள்
இருந்தாலும் அந்த திரைப்படம் எனக்கு
மிகவும் பிடித்த திரைப்படம் என்பதில்
மாற்றுகருத்து இல்லை...
பிள்ளை பேறும். பிரசவலியும் கூட பத்து மாதம்தான்... ஆனால் மூன்று வருடம்
இந்த திரைப்படம் எடுத்து முடித்து ....வெளிவராமல் பரிதவித்து போய் விட்டது... எனக்கு
மிகவும் வருத்தம்... எடுத்து முடிக்கப்பட்டு ரிலிசுக்கு காத்து இருக்கும் ஒரு
திரைப்படம் வெளிவராமல் இருப்பது போன்ற கொடுமை வேறு எதுவும் இந்த உலகத்தில் இல்லை...
திரும்ப படம் திரையிடும் தேதிகள் ஆட்டம் ஓட்டம் காட்டின... பேஸ்புக்கில்
வெளிப்படையாக தங்கள் வருத்தங்களை ரசிகர்கள் பகிர்ந்து கொண்டார்கள்... இன்னும் சிலர் நல்ல திரைப்படம் வரவேண்டும் என்று ...ஐ ஸப்போர்ட்
தங்க மீன்கள் என்றார்கள்... தியேட்டர்
கிடைக்கவில்லை என்பதுதான் காரணம்....நல்லவேளை கலைஞர் ஆட்சியில் இல்லை.,.. இருந்து
இருந்தால் கலைஞர் பிரைட் ரைஸ் வாணலியில் போட்டு வறுத்து எடுத்து
இருப்பார்கள்.... கலைஞர் தப்பித்தார்....
ஆனந்த யாழினை மீட்டுகின்றாய் பாடல்
பட்டிதொட்டி எல்லாம் பிரபலமாகியது.... மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே
தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்ற வாசகம் பேஸ்புக் மூலம் உலகம் எங்கும் பரவியது... படத்தை
பார்க்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எகிறியது....
கற்றதமிழ் இயக்குனர்... இந்த படத்தில் நடித்து
இருக்கின்றார்... டீசர்கள் ரசிக்க வைத்தன...
போன வெள்ளிக்கிழமை படம் ரிலிஸ் ....
யாழினிக்கு ஒரு வாரமாக விட்டு விட்டு ஜூரம் வந்த காரணத்தால் நான்
எங்கேயும் போகவில்லை... வீட்டிலேயே இருந்தேன்.... படத்தை பார்த்து நல்லா இருக்கு இல்லை என்று சொல்லும்
திருவெற்றியூர் தம்பி ரமேஷ் படம் சோக்கா இருக்கு என்று எஸ்எம்எஸ் அனுப்பி
இருந்தார்... சரி படத்துக்கு
போவாம்ன்னு எல்லா தியேட்டர்லயும் டிக்கெட் செக் பண்ணா நஹீ
பத்தா ஹை... சரி தேவி கருமாரியில கண்டிப்பா டிக்கெட் கெடைக்கும் என்ற நம்பிக்கையோடு
சென்றேன்...
யோன வெள்ளிக்கிழமை மாலைகாட்சிக்கு டிக்கெட் கிடைச்சது.... அதுவும்
அன்னைக்கருமாரியில்...
முக்கால்வாசி எதிர்க்க உட்கார்ந்து
இருக்கறவன் தலை... கொஞ்சம் படம் தெரியற ஸ்கீரின், இப்படி ஒரு தியேட்டரை உலகத்துல எங்கேயும்
பார்க்க முடியாது,.. அப்படி
பார்க்கனும்ன்னு ஆசை இருந்தா விருகம்பாக்கத்துல இருக்கற தேவி கருமாரியம்மன்
தியேட்டர் வளாகத்துல இருக்கற அன்னை கருமாரி தியேட்டருக்கு போங்க... எனக்கு
தெரிஞ்சி சீட்டுக்கு பதில் ஜமக்காளம் விரிச்சி வச்சிடலாம் புண்ணியமா போவும்...எவன்
மண்டையும் மறைக்காம படம் பார்க்கலாம்.. இல்லை மொத்தமா தியேட்டரை இழுத்து மூடி,
பூட்டுக்கு அரக்கு சூடு வச்சி சீல்
வச்சிடலாம்... சென்னைதிரைப்பட ரசிகர்கள் நிம்மதியாவது இருக்கலாம்.... அந்த
தியேட்டருக்கு போகவே கூடாதுன்னு நினைச்சேன்... அங்கதான் இவினிங்க்கு டிக்கெட்
கிடைச்சது... என்ன செய்ய....? விதி வலியது...
படம்
பார்க்க ஆரம்பித்தேன்....
என் அப்பா என்னை வில்லன் போல பார்க்க ஆரம்பித்த நேரம்.. பத்தாம் வகுப்பு
படித்து முடித்து விட்டு என்ன செய்வது என்று தெரியவில்லை... சரி கைத்தொழில்
கற்றுக்கொள்ளலாம் என்று அலுமினிய பாத்திரகடையில் பாலிஸ் போடும் வேலைக்கு
சென்றேன்... அதாவது அலுமினிய பாத்திரத்தை
பாத்திரமாக டையில் கொடுத்து
வளைக்கும் போது அந்த பாத்திரம் அழுக்கா
இருக்கும்.... எம்மரி ஷீட்டை கையில் வைத்துக்கொண்டு அலுமினிய
பாத்திரத்தை வேகமாக சுழுலும்
கருவியில் பொருத்தி எம்மரி ஷீட்டை உள்ளே வெளியே என்று அழுத்தி எடுத்திக்கொண்டு
போகையில் அலுமினிய பவுடர் உடம்பெங்கும் வியாபிக்கும்.. சில மணித்துளிகளில் சில்வர் மேனாக மாறுவோம்..
மூக்கில் அந்த துகள் உள்ளே
செல்லக்கூடாது என்று முகமூடி கொள்ளையான் போல கர்சிப்பால் கட்டிக்கொண்டு வேலை
செய்வோம்...
ஒரு நாளைக்கு 150 லிருந்து 500 பத்திரங்கள்
வரை பாலிஸ் செய்வோம்.. அண்ண குண்டான் செய்யும் போது ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க
வேண்டும்.... ஓத்தா கையில காயம் பார்க்காம விடாது.. கொஞ்சமாவது ரத்தம் பார்த்துட்டுதான் ஓயும்... நிறைய
காயங்கள்...பண்ரூட்டியில் பயணியர் மாளிகைக்கு எதிரில் இருக்கும் பாத்திரக்கடையில்
வேலை செய்தேன்.... ஒரு வருடத்தில் அலுமினிய பவுடர் தன் வேலையை என்னிடம் காட்ட ஆரம்பித்தது... உடல் நிலை சரியில்லாமல் போய், பின் பக்கம் பைப்பை திறந்தது
போல் கழிசல் பிடுங்க... அம்மா பீத்துணி
கசக்கி போட்டு என்னை காப்பாற்றினால்...
அந்த வேலை அப்படிபட்டது.. அதனை
காட்சியாக்கிய இயக்குனருக்கு நன்றி. இந்த படம் பார்த்த உடன் திரும்ப பண்ரூட்டியில் அந்த
பாத்திரக்கடையை பார்க்கவேண்டும் என்று எண்ணம் எனக்கு தோன்றுகின்றது.
கல்யாணி ரோஷம்
உள்ள பணக்கார அப்பாவுக்கு மகன்...12 ஆம் வகுப்பு படிக்கும் போதே காதலியை அழைத்து வந்து திருமணம் செய்து கொண்டவன்.. ஒரே ஒரு பெண்
குழந்தை செல்லம்மா.... கற்றலில் குறைபாடுகொண்ட குழந்தை... பிள்ளை மீது இருக்கும்
பாசத்தின் காரணமாக வீட்டை விட்டு போக மனம்
இடம் கொடுக்காமல் இருக்கின்றான் கல்யாணி... பள்ளிக்கு பணம் கட்டவில்லை.. அதனால்
வீட்டில் அப்பாவுக்கும் கல்யாணிக்கும் பிரச்சனை.... இன்டர்வெல்..
தாரே ஜமின் பர் படத்தில் காட்டிய காட்சிகள் படத்தில் நிறைய மான்டேஜ் காட்சிகளில் நினைவுபடுத்துகின்றன,...
பர்சூட் ஆப் ஹாப்பினஸ் கதையை தமிழ் சூழலுக்கு மாற்றினால் தங்க மீன்களாக
உருமாரும் என்று பொத்தாம் பொதுவாக விமர்சனம் வைக்க முடியும்... ஆனால் படத்தின் முற்பகுதியில் மனதை நெகிழும் காட்சிகளுக்கு பஞ்சம் இல்லை...
நாயை அடிக்காதிங்க... வேற யாரைடி
அடிக்கறது..? போன்ற வசனங்களும்... அம்மா பூரி பண்ணறா.... அதனால நான் சாகலை
என்று சொல்லும் குழந்தையும் மனதில்
நிற்க்கின்றார்கள்..
ஒரு நண்பர் சொன்னார்... அந்த படத்தில் அந்த
பெண்தான் குழந்தையாக நடித்து
இருக்கின்றாள்... செல்லம்மா ஓவர் ஆக்டிங்
என்று பொருள் பட சொன்னார்.. நான்
செல்லம்மா போலான குழந்தைகளை பார்த்து இருக்கின்றேன்.. சில காட்சிகளில் மிகை என்றாலும் அப்படியான குழந்தைகள் இருக்கின்றார்கள்....
எவிட்டா மிஸ் போர்ஷன் அருமை....ஒரு சில இயக்குனர்கள் இதுக்கு முன் பார்த்த திரைப்பட காட்சிகளை
இன்ஸ்பிரேஷனில் சீன் வைப்பார்...சில இயக்குனர்கள்... தான் அதிகம் படித்த சிறுகதை மற்றும் நாவல்களில் வரும் காட்சிகளை சீனாக வைப்பார்கள்...
இதில் தங்க மீன்கள் இரண்டாம் ரகம். யாரோ ஒருவர் எவிட்டா மிஸ் போர்ஷன் வண்ணநிலவனோ அல்லது வண்ணதாசன் சிறு கதை என்று
சொன்னார் எனக்கு நினைவில் இல்லை.
வீட்டில் சண்டை போட்டுவிட்டு மனைவியை கல்யாணி அழைக்க... நடுத் தெருவில் போய் மகளுடன் நிற்க்க முடியாது
என்பதால் அவள் கணவன் அழைத்தும் செல்லவில்லை... என்பதை காட்சிகளின் சூழல் மூலம்
விளக்குகின்றார்... அந்த மனைவி பாத்திரத்தில் நடித்தவர் நடிப்பு அருமை... தயவு செய்து சீரியல்ல நடிக்க வைக்கின்றேன்ன்னு கூட்டிக்கிட்டு வந்து
அந்த அம்மாவை நாஸ்த்தி பண்ணிடாதிங்கடா....
இன்டர்வெல்...
கல்யாணி கேரளாவுக்கு செக்யூரிட்டி வேலைக்கு
செல்கின்றான்...தோழர் ஒருவர் உடை வாங்கி கொடுக்கின்றார்....
எனது செல் போன் அடித்தது... தியேட்டர் விட்டு வெளியே வந்து போன்
எடுத்தேன்...
என்னங்க...
என்னம்மா..?
எங்க
இருக்கிங்க?
தியேட்டர்ல...
எந்த
தியேட்டர்ல..?
பாடாவதி அன்னை கருமாரி தியேட்டர்...
இன்னும் படம் எவ்வளவு நேரம் இருக்கு?
இப்பதான் இன்டர்வெல் விட்டு பர்ஸ்ட் ரீலு
ஓடுது....
யாழினிக்கு டெங்கு பீவர் ரிசல்ட் வந்துடுச்சி,
என்னாச்சி...?? என்ன
ரிசல்ட்?
பாசிட்டிவ்....உடனே டாக்டரை பார்க்கனும்...
தோ பத்து நிமிஷத்துல வரேன்...
டொக்......
=======================
யாழினிக்கு டெங்கு மறுநாள் நெகட்டிவாக
மாறி... அது டைபாய்டாக மாறி குழந்தைக்கு இந்த ஒரு
வாரத்தில் இப்போது பராவாயில்லை.
இண்டர்வெல்லுக்கு பிறகு படம் சொதப்பல்...
படம் சூப்பர்... சான்சே இல்லை...
நல்ல படம்...ஆனால் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு
கொண்டாடும் அளவுக்கு நல்ல படம் அல்ல என்பது போன்ற விமர்சனங்களை இந்த ஒரு வாரத்தில் பார்க்கநேர்ந்தது...ஆனந்த விகடன்
தலைவாவுக்கும் தங்கமீனுக்கு 44 மதிப்பெண் கொடுத்து அதனை இயக்குனர் தட்டி கேட்டு...
அது ஒரு கதை ஓடிக்கொண்டு இருக்கின்றது...
நேரம் கிடைக்கும் போது தங்க மீன்கள் மறு பாதியை பார்ப்போம்...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
Great. மக்களைப் பெற்ற அப்பாக்களுக்கே தெரியும், பிள்ளைகளைப் பாதுகாப்பது கடமை இல்லை, அதுதான் வாழ்க்கையில் தமக்கான கடமை என்று.
ReplyDeleteஅண்ணே அலுமினிய பாத்திரம் செய்யும் முறை அதிர்ச்சியளிக்கிறது ,யாழினியை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்.சென்னை வந்திருக்கேன்,நிச்சயம் சந்திப்போம்,நான் வருகிறேன்
ReplyDeleteTake care of Yazhini....
ReplyDeleteஎந்தப்படமானாலும் வி சி டி வந்த பிறகே பார்ப்பேன்.
ReplyDelete.
.
.
.
.
அவனை நிறுத்த சொல்...
.
.
.
.
.
.
அம்பது ரூபா டிக்கட்டை நூத்தம்பது ரூபாய்க்கு விற்க தலைபடுகிறானே அந்த பிளாக் மார்கெட் பாண்டி......
அப்பாவி கிழவன்.... அவன் பிச்சை எடுத்து சேர்த்த நூறு ரூபாய பிடுங்கிட்டு தரை டிக்கட் கொடுத்து படம் பார்க்க வச்சானே.....
தரைடிக்கட்னாலும் பரவா இல்லேன்னு படம் பார்த்தவன்கிட்டே 25 ரூபா வாங்கிட்டு வாயிலே வைக்க முடியாத டீயை கொடுத்தானே உ**ம் தியேட்டர் கம்மினாட்டி அவனை நிறுத்த சொல் நான் திருட்டு வி சி டிலே படம் பார்க்குத நிறுத்துறேன்...
நீ என்னம்மா சுகமா வளந்துட்டே.. ஆன்லைன் லே புக் பண்ணிட்டு... ஒரு பிசாத்து பாப்கார்னை நூறு ரூபா கொடுத்து தின்னுபுட்டு.. படம் பார்த்துட்டு வந்திடுறே...
ஆனா உங்கப்பன் நான் அப்படி இல்லேமா....
ஒவ்வொரு படம் பார்த்துட்டு ஒவ்வொரு ரூபாயையும் காப்பாத்திட்டு வாரத்துக்குள்ளே சாகனும்...
நீ இப்படி சுகமா இருக்குறதுக்கு.. நான் நாலு படத்தை திருட்டு விசிடிலே பாக்குறது தப்பே இல்லம்மா....
இப்படி எப்படி இருக்கு யாழினி பாப்பாக்கு
ReplyDeleteதங்க மீன்கள் மீதி விமர்சனம் எப்போது பிரதர்
TAKE CARE OF YAZHINI BRO, LET SEE THE REST PICTURE SOME LATER
ReplyDeleteI am glad your daughter is ok.
ReplyDelete