The Memory of a Killer("De zaak Alzheimer")உலகசினிமா/பெல்ஜியம்/கொலையாளியின் நினைவுகள்.

இரவு  நேரம்.....ஒரு ரயில் இரவில் வேகமாக செல்கின்றது....

கேமரா பக்கத்தில் இருக்கும் கட்டிடத்துக்கு மதிமுக நாஞ்சில் சம்பத்  அதிமுகவுக்கு தாவியது போல தாவுகின்றது.

கட்டிடத்தின் உள்ளே ஒரு அறையில் ஒரு 12 வயது பெண்…. வெள்ளை பேப்பரில்  படம் வரைந்து கொண்டு இருக்கின்றாள்... பின் பக்கத்தில் அவள் அப்பா ஒருவனோடு பேசிக்கொண்டு இருக்கின்றான்...  அந்த பெண்ணின் அப்பா சொல்கின்றான்.. நீ முதன் முறையாக வருகின்றாய் என்று நினைக்கின்றேன்... ரொம்ப நெர்வர்சாக இருக்கின்றாய்...  அதற்கு எதிரில் இருப்பவன்  எதுவும் சொல்லாமல் நெளிந்த படி உட்கார்ந்து இருக்கின்றான் ....

நான் யாரையும் பார்த்தவுடன் மிக எளிதாக அடையாளம் கொண்டு விடுவேன் என்று பெருமையடித்துக்கொள்கின்றான்... முதல் முறையாக பாருக்கு போனால் இப்படித்தான் உன்னை போல நெர்வர்சாக இருப்பார்கள்.... நான் சொல்வது சரிதானே..?சரி... பணம் எங்கே என்று அவனை பார்த்து  கேட்க..  கத்தையாக  பணத்தை எடுத்து டேபிளில் வைக்கின்றான்.

சரி... அவ பேரு பீகேய்... போய் அவ பக்கத்துல உட்காரு... போ பயப்படாதே என்று தைரியம் சொல்லி அந்த பெண்ணின் அப்பாவே  அந்த சின்ன பெண்ணிடம் அவனை பணத்தை வாங்கிக்கொண்டு அனுப்பி வைக்கின்றான்.

பணம் கொடுத்து விட்டு படம் வரைந்த பெண்ணுக்கு பக்கத்தில் போய் உட்காருகின்றான்.. அந்த  பெண்... அதுவரை வரைந்து கொண்டு இருந்த  படத்தை அவனிடம் இருந்து  மறைக்கின்றாள்... அவன்   அந்த பெண்ணிடம் கேட்கின்றான்... நான் நீ வரைந்த படத்தை பார்க்கலாமா? என்று அவள் மறுக்கின்றாள்..

அந்த பெண்ணின் அப்பா உள்ளே வருகின்றான்...  தன் மகளிடம் ஒரு டுயூரேக்ஸ் காண்டம் பாக்கெட் மற்றும் ஒரு பெஸ்ட்டை பக்கத்தில் இருக்கும் டைனிங் டேபிளில் வைத்து விட்டு... என்ன  இன்னும் தயக்கம் என்று பணம் கொடுத்தவனிடம் கேட்கின்றான்.. முதல் முறை என்பது பார்த்தாலே தெரிகின்றது... என்று சொல்லி விட்டு தன் மகிளிடம் டைனிங் டேபிளில் காண்டம்  மற்றும் பேஸ்ட் வைத்து இருப்பதை சைகையால் காட்டி விட்டு அந்த இடத்தை விட்டு அகலுகின்றான்.

 அந்த  சின்ன பெண் முதலில் அவனின் பேண்ட் ஜிப்பில் கை வைக்க போக... அவன்  பதறி தடுக்கின்றான்... அடுத்து அவனை அனைத்து முத்தமிட முயற்சிக்க அப்போதும் தடுக்கின்றான்... ஆனாலும் அவள் மீறி அவன் உதட்டில் முத்தமிடுகின்றாள்... வேகமா  அதைதடுத்து விட்டு  உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்று சொல்கின்றான். உன்னை ஒன்னும் நான் நாசப்படுத்திட மாட்டேன்.. வா என்கின்றாள்..

அவன் கடுமையாக அவளை தடுத்து, உன்கிட்ட கொஞ்சம் பேசனும்... உன்கிட்ட யாரு எல்லாம் இது போல மேட்டருக்கு வர்ரா? எந்த மாதிரி டைப் ஆட்கள் இங்க வர்ராங்க..? என்று கேட்க.. என் அப்பா இதை பற்றி பேச அனுமதிக்க மாட்டார் என்று சொல்லிக்கொண்டே அவன் மேல் அவள் காமத்தோடு பாய்கின்றாள். திரும்ப அவனின் ஜிப்பை அவிழ்க்க முயற்சிக்க அவன் உடையின் உள்ளே மைக் வைத்து இருக்கின்றான் அதை பார்த்து விட்டு அவன் அப்பாவை கூப்பிட்டு கத்துகின்றாள்... வந்தவன் பெல்ஜியம்  நாட்டில் உள்ள Antwerp நகரத்தின் குற்ற தடுப்பு போலிஸ் கமிஷ்னர்... மகளை விபச்சாரத்தில் ஈடுபட்ட போது மாட்டிக்கொண்ட தந்தை போலிசை கத்தியால் குத்த வரும் போது அவனை சுட்டு விடுகின்றார்கள்....

அந்த  சின்ன பெண்ணை போலிஸ் காவலில் எடுத்து காப்பகத்துக்கு அனுப்பி வைக்கின்றது. அதே நேரத்தில்   பெல்ஜியத்தில் ஓய்வு பெற்ற கொலையாளி  Angelo Ledda ( Jan Decleir ) என்ற 60 வயதை கடந்தை கொலைக்காரனிடம் அந்த பெண்ணை  சாகடிக்கும் பொறுப்பு வருகின்றது.... கொலையாளி முதியவருக்கு  Alzheimer's disease என்ற நோய் இருக்கின்றது... அதாவது பழசை எல்லாம் மறந்து விடும் நோய்.. அதையும் மீறி தனக்கு  கொடுக்கப்பட்ட அசைன்மென்ட் முடிக்கப்பட்டதா? அதுவரை பெல்ஜியம் போலிஸ் பூப்பரித்துக்கொண்டு கார்டனில் நின்றுக்கொண்டு இருந்ததா இல்லையான்னு படத்தை பார்த்து தெரிஞ்சிக்கோங்க..

================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...
Alzheimer's கேஸ் என்ற பெயரில் பெல்ஜியத்தில் 2003 ஆம் வருடம் ரிலிஸ்* ஆன  இந்த திரைப்படத்தை  இயக்கியவர் Erik Van Looy... பெல்ஜியத்தின் திரைபிதாமகர்  என்று அழைக்ப்படும் இவர் .1993 ஆம் ஆண்டு ஆக்ஷன் கட் சொல்லிக்கொண்டு  குறும்படங்கள் மூலம் திரைத்த்துரைக்கு வந்தவர். இவரை புகழ் ஏணிக்கு கைப்பிடித்து  அழைத்து சென்று படி ஏற்றி விட்டது... த மெமரிஸ் ஆப் கில்லர் என்ற இந்த திரைப்படம்தான்...


 இந்த திரைப்படத்தின் இயக்குனர்  எரிக் ...கொஞ்சகாலம் டிவி ஆங்கராகவும் குப்பை கொட்டி இருக்கின்றார்.. நிறைய தொலைகாட்சி  நிகழ்ச்சிகளை தயாரித்து இருக்கின்றார்...த ஸ்மார்டஸ்ட் பர்சன் இன் த வேல்ட் என்ற தொலைகாட்சி நிகழ்ச்சி இவர் புகழுக்கு  இன்னும் பெருமை சேர்த்தது என்றும் சொல்லலாம்...

இந்த திரைப்படத்தின் திரைக்கதை 1995 ஆம்  ஆண்டு நடப்பது போல திரைக்கதை அமைத்து  இருப்பார்கள்...  1985 ஆம் ஆண்டு  எழுத்தாளர் Jef Geeraerts எழுதிய  புதினம்தான் நம்ம ஊர் இயக்குனர்கள் போல கொத்து பரோட்டா போடாமல் மிக நீட்டாக திரைக்கதை அமைத்து எடுத்த படம்தான் இந்த திரைப்படம்....

பெல்ஜியம் நாட்டில் நான்காவதாக அதிகம் மக்கள் பார்க்கப்பட்ட திரைப்படம் என்று  இந்த திரைப்படத்தை கொண்டாடுகின்றார்கள்...ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் மக்கள் இந்த திரைப்படத்தை கண்டுகளித்து இருக்கின்றார்கள்..கொலையாளி முதியவராக நடித்து இருக்கும் Jan Decleir நடிப்பின் பின்னுகின்றார்... ஒரு பெரிய சேசிங், கொலைகள் எல்லாம் ரொம்ப ஸ்டைலாக செய்கின்றார்...  நம்ம  ஊர் இந்தியன் தாத்தா போல...

பேக்கிய கொல்ல போகும் போது... அவள் சின்ன பெண் என்பதால் அவளை கொல்லாமல்.... ஏவியவனிடம்  அவளுக்கு 12 வயசுதான்  இருக்கும் சின்ன குழந்தை நான் அவளை கொல்ல மாட்டேன்... என்று சொல்ல... அவ பார்க்க சின்ன பொண்ணு போல இருப்பா ஆனா பெரியவ என்று சொல்ல... அவளுக்கு 12 தான்... அவளை நானும் கொல்ல மாட்டேன் கொல்ல வர்ரவங்களையும் விடமாட்டேன் என்று சொல்லும் காட்சிகள் அழகு. விபச்சாரியோடு  அந்த கிழவர் இருக்கும் காட்சிகள்  செமை.. முக்கியமாக மார்பில்  படுத்துக்கொண்டு உன் ரத்த ஓட்டத்தை உணருகின்றேன் என்று சொல்ல... ஆமாம் என் தலையில் அதே ரத்தம் லீக் ஆகி கொண்டு இருக்கின்றது என்று சொல்லும் காட்சி அருமை.

 அதிகார வர்கத்தை எதிர்த்து போராட வேண்டும்.. அதே நேரத்தில் இரண்டு துறு  தறு போலிஸ் டிடெக்ட்டிவ்விடம் இருந்து தப்பித்து காரியத்தை சாதிக்க வேண்டும்... என்று  கிழவர் பாத்திரத்தில்  பின்னி இருக்கின்றார்...

=============
படத்தின் டிரைலர்.===========
படக்குழுவினர் விபரம்


Regie Erik Van Looy
Producer Erwin Provoost 
Hilde De Laere
Scenario Erik Van Looy 
Carl Joos
Featuring Jan Decleir 
Koen De Bouw 
Werner De Smedt
Music Stephen Warbeck
Mounting Philippe Ravoet
Cinematography Danny Elsen
Distribution Kinepolis Film Distribution
Premiere 15 October 2003
Genre crime, thriller
Running 120 minutes
Language Dutch
Country Flag of Belgium Belgium
========
பைனல்கிக்.இந்த படம் பார்த்தே தீரவேண்டியதிரைப்படம்... நல்ல மேக்கிங்.. செமையான திரில்லர்... அருமையான கேமரா ஒர்க். அவசியம் பார்க்கவேண்டிய திரைப்படம்... ஒரு  இடத்தில் அரை  நிர்வாணகாட்சி இடம் பெறும்... முதல் முறை வரும் போது அது எப்போது வரும் என்று தெரியாமல் பக் பக் என்று உட்கார்ந்து  இருக்க வேண்டிய காரணத்தால் வயது குறைவானவர்களோடு  இந்த திரைப்படத்தை பார்க்க தவிற்க்கவும்.

============
படத்தோட ரேட்டிங்.


பத்துக்கு எட்டு.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

4 comments:

 1. எட்டுக்கு பதது சரி பார்ககவும்

  ReplyDelete
 2. எட்டுக்கு பத்தா

  ReplyDelete
 3. //பெல்ஜியம் நாட்டில் நான்காவதாக அதிகம் மக்கம் பார்க்கப்பட்ட திரைப்படம் என்று இந்தி திரைப்படத்தை கொண்டாடுகின்றார்கள்.// சார் நெசமாதான் சொல்றீங்களா...?

  ReplyDelete
 4. படத்தோட ரேட்டிங்.

  எட்டுக்கு பத்து????

  maathunnga boss...

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner