THE FROZEN GROUND / 2013 ஆதாரம் இல்லாமல் அல்லாடும் போலிஸ்.





அவன்தான் கொலைகாரன்...


அவன் முகம் சாந்தமானது...

அவன் நல்ல வேட்டையாளன்.

அவனுக்கு இரண்டு பிள்ளைகள் அழகான  மனைவி இருக்கின்றார்கள்...
ஆனாலும் அவன் கொடுரமானவன்...

பொதுவான அவன் கொலை செய்ய தேர்ந்தெடுக்கும் பெண்கள்..... விபச்சாரிகள்... காரணம் அவர்கள் தொலைந்து போனால் அவர்களை தேட அல்லது காப்பாற்ற பெரிய முயற்சிகள் செய்யமாட்டார்கள்...


முதலில் பாவமாக  முகத்தை வைத்துக்கொண்டு ரேட் பேசுவான்...

பிளோ ஜாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்துதான்  பெண்களை தேர்ந்து எடுப்பான்.. பிளோ ஜாப்  என்பதாலேயே  பெண்களும் அதிகமான ரேட் கேட்பார்கள்.. அவர்களை நைச்சியமாக பேசி தன் இருப்பிடத்துக்கு அழைத்து வந்து சங்கிலியால் கட்டி வைத்து துப்பாக்கி காட்டி ரேப் செய்து, அவளை  தான் வைத்து இருக்கும் சின்ன பிளைட்டில் அழைத்துக்கொண்டு பனி படர்ந்த அலாஸ்கா மலையில்   ஆள் ஆரவாரமற்ற பகுதியில் பிளைட்டை நிறுத்தி கை விலங்கை அவிழ்த்து விட்டு , கதறும் பெண்ணை  காட்டில்  விலங்கை போல ஓடவிட்டு துப்பாக்கியால் சுட்டு சாவடித்து கொள்ளுபவன்...


அவன்தான் கொலைக்காரன்...

ஆனால் புத்திசாலியானவன்...

இத்தனைக்கு அவனிடம் இருந்து தப்பித்த பெண் தற்போது உயிரோடு இருக்கின்றாள்.. ஆனால் ஏழை சொல் அம்பலம் ஏறாதது போல.. விபச்சாரி சொல்  போலிஸ் காதில் ஏறவில்லை...

ஆனால் அவன் தான் கொலைகாரன்...

 அதில் எந்த சந்தேகமும் இல்லை....

ஒரு பெண் இல்லை இரண்டு பெண்  இல்லை... மொத்தம் ஏழு பெண்கள் சமீபத்தில் மட்டும் காணாமல் போய் இருக்கின்றார்கள்.

மொத்தம் 17 பெண்கள்.. ஏழு பெண்ணின் உடல்தான் கிடைத்து இருக்கின்றன...

 கொலையான பெண்களிடம் உள்ள பொதுவான விஷயம்... எல்லரும் விபச்சாரிகள்...எல்லோரும்  இள வயது பெண்கள்.. ஆனால் பாவப்பட்ட விபச்ச்சாரிகள்... இதில் சின்ன பெண் பெரிய பெண் என்ற வித்தியாசம்  எல்லாம் இல்லை...17 வயதில் இருந்து 21 வயசுக்கு மிகாமல் இருப்பது போல அந்த சைக்கோ பார்த்துக்கொள்ளுவான்... 

தலையில்  துப்பாக்கியால் பாயிண்ட் பிளாக்கில் நின்று சுட்டு கொல்லுவான்... 

ஒரு பெண்ணின் மண்டை ஓட்டை பிளக்க முயற்சி  செய்து தோற்று போய்  சடலத்தை விட்டு விட்டு போய் இருக்கின்றான்..  


 அப்புறம் பொதுவாய் பிளம்  அடையாளம் தெரியாமல் இருக்க வேண்டும் என்ற காரணத்துக்கு உடலை தீக்கு  அந்த உடல்களை தின்னக்கொடுத்து விடுவான்......காவல் துறை வரலாற்றில் இப்படி ஒரு கொடுமையான சைக்கோவை பார்த்தது இல்லை என்று போவிசே மூக்கல்  விரலை  வைக்கின்றார்கள்...

....
ஏன்டா  பொண்டாட்டி இருக்கா... ??அப்படி இருந்தும் ஏன் விபச்சாரியை நோக்கி போனே?? என்று சைக்கோவிடம் கேள்வி கேட்கின்றார்கள்....

 பிளோ ஜாப்புக்குதான்.. நான் பொண்டாட்டிக்கிட்ட இதை பற்றி  பிரியா கேட்க முடியாதே என்று  கிளவராக தப்பிக்கின்றான்.. அந்த சைகோ.....

 இவ்வளவு தூரம் நான்  கஷ்டப்பட்டு அந்த சைக்கோ பற்றி விளக்கிய பிறகு...  ஏன் காலதாமதம் ?அவனை  தூக்கி உள்ளே போடவேண்டியதுதானே என்று பிரிலியன்ட் கேள்வியை கேட்டு வைப்பீர்கள்...   

ஆதாரம்... வேண்டும் மேன்...

 வலுவான ஆதாரம் வேண்டும்... 

 அந்த ஆதாரத்தை மிக  சாமாத்தியமாக மறைக்கின்றான் சைக்கே கில்லர்.. ஆனாலும் டிடெக்டிவ் நிக்கோலஸ் கேஜ்   எப்படி  ஆதாரங்களை சேகரித்து அவனை சிக்க வைக்கின்றார் என்பதுதான்  மீதி படம்...

உண்மை சம்பவங்களின் தொகுப்பு இந்த திரைப்படம்....

1980 ஆம் ஆண்டு  அலாஸ்காவில்  Robert Hansen என்ற சீரியல்கில்லரின் உண்மை கதை இது... 1983 ஆம் ஆண்டு அந்த பொறம்போக்கை கோர்டு முன்னாடி நிறுத்தி 461 வருட சிறை தண்டனையை விதித்தார்கள்.... பரோலும் கிடையாது...


(அந்த சைக்கோ இதுதான்..)


1980 வருடத்தை மிக அழகாக கண் முன் நிறுத்துகின்றார்கள் கலை இயக்குனர்...
 
அமெரிக்காவின் மனித உரிமை  எப்படி பல பெண்களின் உயிரை பறித்து இருக்கின்றன என்பதற்கு பெரிய உதாரணம் இந்த உண்மைக்கதை... நம்ம ஊர்ல  அவன்தான் கொலைக்காரன்  தெரிஞ்சா... கூட்டிக்கிட்டு வந்து ரெண்டு சாத்து சாத்தினா எல்லா உண்மையும் ஒத்துக்குவான். 

நம்ம ஊர்ல செய்யாத கொலைக்கு கூட அடிக்கற அடியில செஞ்சிட்டேன்னு ஒத்துக்குவாங்க... ஆனா அங்க கை வைக்க ரொம்ப யோசிக்கறாங்க... அதை விட அவன் வீட்டுல ரேய்டுக்கு கூட ரொம்ப யோசிக்கறாங்க.. காரணம் மனித உரிமை... பட் சில நேரத்தில் இது போன்ற பண்ணாடைகள் விஷயத்தில் மீறலாம்...


லாங்க ஷாட்டில் அலாஸ்கா மற்றும் அதன் புறநகர் பகுதிகள் இரவு மற்றும் ஆம்பியன்ஸ் லைட்டிங்கில்  மிக அருமையாக காட்சி படுத்தி இருக்கின்றார்கள்...

படம் முடியும் போது மிஸ் ஆனா பெண்களின் உண்மை படங்களை போட்டு அவர்கள் பினங்கள் இன்று வரை கிடைக்கவில்லை என்று சொல்லும் போது  மனது கவலை கொள்கின்றது.


Scott Walker மிக அற்புதமாக இந்த திரைப்படத்தை இயக்கி  இருக்கின்றார்...
சீரியல்  கில்லர் கதாபாத்திரத்தில் John Cusack நடித்து இருக்கின்றார்....ரேப் காட்சிகளை தவிர்த்து, ஆனால்  அந்த பெண்களின் கதறிலிலேயே நம்மை சில்லிட வைக்கின்றார்கள்...


 படம் நெடுக  பார்களில் ஆடும் விபச்சார பெண்களை   காட்டும் போது மேக்சிமம் அரை நிர்வாணத்தோடு இருக்கின்றார்கள்.. 

இதே கான்சப்ட்டில் உருவான படம்தான்...  naked fear இந்த  படத்தை இந்த தளத்தை தொடர்ந்து வாசிப்பவர்களால் மறக்க  முடியாது. பாக்கியாவில் வெளி வந்ததே அதே படம்தான்...

================
 
படத்தின் டிரைலர்...




=============
 படக்குழுவினர் விபரம்.


Directed by     Scott Walker
Produced by     50 Cent
Randall Emmett
George Furla
Mark Ordesky
Jane Fleming
Written by     Scott Walker
Starring     Nicolas Cage
John Cusack
Vanessa Hudgens
Music by     Lorne Balfe[1]
Cinematography     Patrick Murguia
Studio     Grindstone Entertainment Group
Cheetah Vision
Court Five
Emmett/Furla Films
Distributed by     Lionsgate
Release date(s)    

    July 19, 2013 (United Kingdom)
    August 23, 2013 (United States)

Running time     105 minutes[2]
Country     United States
Language     English
Budget     $27,220,000


================
பைனல்கிக்.

இந்த படம்... நல்ல திரில்லர் படம் மற்றும் உண்மைகதை என்பதைல் மேலும் சுவாரஸ்யம் கூடுகின்றது... அவசியம்  பார்க்கவேண்டிய படம் குடும்பத்தோடு பார்க்க வேண்டாம்....வயது வந்தவர்களுக்கு மட்டும்.

================
படத்தோட ரேட்டிங்..
பத்துக்கு...ஆறு

==========
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

3 comments:

  1. கடந்த வாரம் சென்னை சத்யம் சினிமாவில் Romance ஹிந்தி படம் பார்த்தேன். ஒன்று இரண்டு காட்சிகளை தவிர மற்ற எதுவும் புரியவில்லை. முடிந்தால் அதன் விமர்சனம் ப்ளீஸ்.

    அநியாயத்துக்கு கிஸ்ஸிங் காட்சிகள். (எனக்கே கண் கூசுது ) இதற்கெல்லாம் சமூக அமைப்புகள் ஏன் கொடி பிடிக்கவில்லை?

    ReplyDelete
  2. (அந்த சைக்கோ இதுதான்..)

    "இதுதான்.." , அருமை :)

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner