தமிழ்சினிமாவின்
பெரிய சாபக்கேடு தமிழ்நாட்டில் ஏழு லட்சம் பேரும் திரை விமர்சகர்களாக
இருப்பதுதான் என்று விகடனில்
வலைபாயுதேவில் யாரோ ஒருவர் அழகாய்
எழுதி இருந்தார்... அது உண்மையும் கூட...
லீலை
என்ற படம் லோ பட்ஜெட்டில் தமிழில் வந்த
மிக நேர்த்தியான படம் என்று சொல்லுவேன்... அப்படி ஒஒரு படம் வந்ததா என்று பலருக்கு
தெரிய நியாமில்லை.. அப்படித்தான் தமிழ்
சினிமாவின் சூழல் இருக்கின்றது.
பொதுவாக
மற்றவர்கள் விமர்சனங்களை அதிகம் படிப்பது இல்லை… இங்கே சினிமா எடுத்து விட்டு அதன்
உள் அரசியல் அது இது என்று பேசி தங்கள் மேதாவிதனங்களை வெளிப்படுத்துகின்றார்கள்… அதுமட்டும் அல்ல சினிமா பற்றிய
புரிதலும் குறைவுதான்…. அதனாலும் அதிகம் படிப்பதில்லை…
அப்படியே சிலது படித்தாலும் டைரக்கடருக்கு கிளாஸ் எடுக்கின்றார்கள்..
ஒரு
படத்தை தன் விமர்சனங்களால் குத்தி கிழித்தால்தான்
தன்னை மிக சிறந்த விமர்சகன் என்று கொண்டாடுவார்கள் என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்…
அவர்கள் வேண்டுமானால் கொண்டாடப்படுவார்கள்.. ஆனால் தமிழ்சினிமா வாழாது அழிந்து விடும்…
முகநூலில் அப்படி இல்லை…. சிலர் இந்த படத்தை நல்லாவேயில்லை என்று சொன்னார்கள்… ஒருவேளை படம் மொக்கை போல என்று நினைத்து படத்தை பார்க்காமல் விட்டு விட்டேன்…ஆனாலும் ஒரு சிலர் இந்த படத்தை மிக நன்றாக இருப்பதாக சொன்னபோது கண்டிப்பாக பார்க்கவேண்டும் என்று
முடிவு எடுத்தேன்…
தினமும்
செயின் பறிப்பு சம்பவம் மற்றும் கொலை சம்பவங்கள் சமுகத்தில் சர்வசாதாரணமாக
நடந்து வருகின்றது.. அதன் பின்ன்னி என்னவாக இருக்கும் என்பதை
மிக அழகான திரைக்கதை மூலம் காட்சி படுத்தி இருக்கின்றார்… இயக்குனர்
கின்ஸ்லின்.
===============
Vatthikuchi-2013
/ (வாவ்) வத்திக்குச்சி படத்தின் ஒன்லைன் என்ன?
நகரில்
நடக்கும் குற்ற சம்பவங்களில் தன்னையாறியாமல் சிக்கிக்கொள்ளும் ஒரு ஷேர் ஆட்டோ டிரைவரின்
கதை.
==========================
Vatthikuchi-2013
/ (வாவ்) வத்திக்குச்சி படத்தின்
கதை என்ன?
ஒரு மார்வாடி, ஒரு ரவுடி, இரண்டு இளைஞர்கள் எல்லோரும் கொலை செய்ய காத்து இருக்கின்றார்கள்…
அவர்கள் கொலை செய்ய இருப்பது
சென்னையின் டான் அல்ல…ஒரு சாதாரண ஷேர் டிரைவர் ஆட்டோ டிரைவர்.
========================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில…
வாவ் முதல் இரண்டு மூன்று காட்சிகளிலிலேயே மிக அற்புதமான திரைக்கதையின் ஹூக்
விஷயத்தை அரங்கேற்றி இருக்கின்றார்… இயக்குனர் கின்ஸ்லீன் சான்சே
இல்லை… முக்கியமாக சாக கிடைக்கும் மகளை ஒரு பெரியவர் போலிசுக்கு
போன் செய்யுங்கள் என்று கெஞ்சும் போது, ஜெகன் போன் செய்யாமல் இவனுக்கு பதில் அவன் செத்துக்கிடந்தா எப்படி இருக்கும் என்று சொல்லும் காட்சியில் நம்மை நிமிர வைத்து இருக்கின்றார்..
திலிபன்
நல்ல வரவு.. சில இடங்களில் முதல் படம் என்பதை
நமக்கு உணர்த்துகின்றார்…சுள்ளன் தனுஷ் அடிப்பதையே பறந்து
பறந்து பசுபதியை அடிக்கும் போது திலிபன் அடிக்கையில்
சிரிப்பு வந்தாலும் நம்ப முடிகின்றது…
அஞ்சலி
பளிச் என்று மாறிவிட்டார்… இடுப்பு பெருத்து போய் இருக்கின்றார்.. அதை வேறு போட்டு
அந்த ஆட்டு ஆட்டுகின்றார்.. முக்கியமாக ஷாப்பிங் பாடலில்.
எல்லோரும் என்னை காதலிக்கின்றார்கள். ஆனால் நான்
யாரையும் காதலிக்கவில்லை என்று அஞ்சலி ஜெகனிடம் சொல்லும் காட்சியிலும்… நான் உன் கூட சண்டை போடனும் இவன்க தைரிய ம் எல்லாம் உன்னால….
அதனால் உன் கூட சண்டை போடனும் போன்ற காட்சிகள்… வசனம் அருமை.
ஜெகனுக்கு
அயனுக்கு பிறகு நல்ல கனமான பாத்திரம்… பின்னி எடுக்கின்றார்…சரண்யா பொன்வண்ணன் இட்லி
சூட்டுக்கொண்டே கவர்மென்ட் உத்யோக வீட்டில் மாத பலசரக்கு எப்படி வாங்குகின்றார்கள்
என்-று ஏக்கம் கலந்து பொருமும் இடம் நச்…
படம்
முழுக்க செம்ம டீடெயில்….
சான்சே இல்லை…. ஆளுக்கு இருபது லட்ச பணத்துக்காக
குழந்தை கடத்த திட்டம் போடும் இடம் அருமை.
அதுக்கு அவர்கள் துப்பாக்கி தேடி அலைவது… கொள்ளை அடிக்கனும் கொலை செய்யனும் ஆனா மாட்டிக்க கூடாது என்று ஜெகன் பேசும் வசனங்கள் நிதர்சன உண்மை…
அது
என்னவோ தெரியவில்லை…ஜெய்ப்பிரகாஷ் நடிப்பு
நாளுக்கு நாள் மேருகி ஏறி வருகின்றது.. அந்த பாடிலாங்வேஜ் வசன உச்சரிப்புகள் தேர்ந்த
நடிப்பின் வெளிப்பாடு….
ஜிப்ரான்
இசை…. சான்சே இல்லை டைட்டிலிலே வரும் அந்த
மியூசிக்கில் பரபரக்கவைக்கின்றார்…
பட்டிமன்ற
ராஜாவை இந்த படத்தில் அடக்கி வாசிக்க வைத்து
இருக்கின்றார்கள்..
குருதேவ்
ஒளிப்பதிவு இயல்பாய் ஷேர் ஆட்டோக்களில் பயணிக்கின்றது..
வத்திக்குச்சி
என்று பெயர்ஏன்.-..? உரசியதும் பரபரவென்று பற்றிக்கொண்டு எறிகின்றது… அது போலான திரைக்கதை…
சரி
இந்த படம் பெரிதாய் ஏன் கொண்டாட படவில்லை என்று என்னுள் கேள்வி எழுகின்றது... திலிபனை கதையின் நாயகனாக பார்க்கவில்லை… ஆனால் அவர் சரியான
பாத்திர தேர்வு… ரசிக கண்மணிகளுக்கு கோபம்
என்னவென்றால் அஞ்சலியோடு காட்டும் நெருக்கம்…
அவன்லாம் யாரு…? நல்லாக்கூட இல்லை இவனுக்கு
இப்படியா? என்ற வயிற்று எரிச்சல்…
தேவயானி
ராஜகுமாரன் திருமணம் நடந்த போது புகைச்சலில் எத்தனை பேர் வயிறு எரிந்தது அது போலத்தான்
இதுவும்.. அதுதான் முக்கியகாரணம் என்று நினைக்கின்றேன்... நல்ல ஸ்கிரிப்ட்.
===========
படத்தின் டிரைலர்.
==============
படக்குழுவினர்
விபரம்
Directed by Kinslin
Produced by A. R. Murugadoss
Written by Kinslin
Starring
Dhileban
Anjali
Music by M Ghibran
Cinematography RB Gurudev
Editing by Praveen K. L.
N. B. Srikanth
Studio Murugadoss Productions
Fox Star Studios
Distributed by Murugadoss Productions
Release date(s)
15 March 2013
Country India
Language Tamil
===============
பைனல்கிக்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
நல்லா இருந்துச்சு படம்..
ReplyDeleteநீங்கள் சொன்ன லீலை திரைப்படத்துக்கும், இந்த வத்திக்குச்சி திரைப்படத்துக்கும் தலைப்பே எதிரியாக அமைந்துவிட்டது எனலாம். படங்களுக்கான பெயர் ஓரளவுக்கு ஈர்க்க வேண்டும். லீலை கூட அந்த தவறை தான் செய்தது. வத்திக்குச்சி நிச்சயம் நல்ல படம் தான்.
ReplyDeletei like this movie
ReplyDeleteNice entry.
ReplyDelete"பெரிய சாபக்கேடு தமிழ்நாட்டில் ஏழு லட்சம் பேரும் "
ReplyDelete7 Crore?
திரைக்கதைக்காக மட்டும் ஓடிய படம் தமிழில் உண்டா?
ReplyDeleteஅந்த நிலை வரும் பொழுது நம்மை போன்ற சினிமா பிரியர்களுக்கு விதவிதமான விருந்து கிடைக்கும்
Dear Mr.Jackie,
ReplyDeleteExpecting your Review about Paradesi.....
Thanks & Regards
Victor
இப்படிக்கு அண்ணனின் விழுதுகள்
Deleteநம்ம ஊர்ல இன்னொரு பாலிடிக்ஸ் இருக்குதுங்க: கூட வெளிவர்ற படத்தின் அபிமானிகள் இதை 'நல்லாவே இல்லை' என்று எழுதுவார்கள். 'நீர்ப்பறவை'க்காக 'நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்' படத்தைத் மட்டம்தட்டி எழுதி இருந்தார்கள். இந்தப் படம் எந்தப் படத்துக்காகப் பலியாடு ஆக்கப்பட்டது என்று உங்களால் யூகிக்க முடியும் என்று நம்புகிறேன்.
ReplyDeletenalla vimarsanam..
ReplyDeleteanjali kuritha ungal paarvaiyai appadiye naanum aamothikkiren...!
வழக்கமான பழைய மசாலா கொஞ்சம் வித்தியாசமாய் அவ்வளவு தான்.
ReplyDeleteஇரண்டு நாள் பட்டினி அடி உதை இதற்கு பிறகு இரண்டு ரொட்டி சாப்பிட்டா ஆறு பேரை அடிக்கலாம்.
அரசாங்க வேலையில் கணவன் இருந்தாலும் ஆட்டோகாரனை காதலிக்க பச்சைக்கொடி காட்டும் அம்மா நிஜத்தில நடக்குமாங்க.
குடிக்காத உத்தியோகத்தர் ஒருத்தருமா கிடைக்கல.
கொலை பண்ண துப்பாக்கி தான் வேணுமா அதுகும் நல்லா பழகுற ஒருத்தன போடுறதுக்கு.கத்தி எல்லாம் சரி வராதா??கழுத்தில எதிர்பார்க்காத நேரம் ஒரு ஏத்து ஏத்தினா சரி.துப்பாக்கியை எடுப்பதற்கு ஒரு எக்ஸ்ட்ரா சீன்.
பிடிபட்ட திலிபனை கொண்டுபோக ஒரு வான் கூடவா கிடைக்கவில்லை அதுவும் ஒரு முதலாளியின் ஆதரவிருந்தும்.ஸ்லோ மோஷன் சண்டைகள் நன்றாகவா இருக்கிறன????
ஒரு பொறுப்பு வாய்ந்த அதிகாரியை போட்டுத்தள்ளுறத பற்றி நடுரோட்டில வச்சா டிஸ்கஸ் பண்ணுவாங்க.
எக்கச்சக்கமான ஓட்டைகள் படத்தில் இருக்கின்றன.இவ்வளவும் எனக்கு ஞாபகம் நின்றவை மட்டுமே.இவையெல்லாம் உஙகள் கண்ணில் தட்டுப்படவில்லையா??
நல்ல சினிமாக்கள் நம் மத்தியில் வெற்றிபெறகின்றன.வழக்கு எண் 18/9,பீட்சா போன்ற படங்கள் எல்லாம் வெற்றி பெறவில்லையா??
நல்ல படங்களுக்கு எப்போதும் மக்கள் ஆதரவு உண்டு.தமிழ் சினிமாவை வாழவைக்க ிது போதும்.
u r correct........
DeleteMe too watched this movie. Even me also felt 'evanellam hero va ' but once I saw the movie it was excellent. Hero scoring in action sequence.
ReplyDeleteஇந்தப்படம் அவ்வளவாய் ஈர்க்கவில்லை. இங்கே வந்துகருத்து சொல்லுங்கள்
ReplyDeleteநல்ல திரைப்படம்.. பாடல்களைப் பற்றியும் விரிவாகச் சொல்லியிருக்கலாம் சேகர்..வரிகள் அருமையாக அமைந்திருந்தன. திலீபன், அஞ்சலி நல்ல தெரிவுகள். இரண்டு கதாபாத்திரங்களிலும் வேறெவரையும் வைத்துப் பார்க்க இயலவில்லை.
ReplyDelete