Udhayam NH4-2013/ உதயம் NH4 திரைவிமர்சனம்.
 வெளிநாட்டுல நம்ம ஊர் படங்களை பார்த்துட்டு...
ஏன்டா  உங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லையா? பிரச்சனையே இல்லையா? எப்ப பாரு  உங்க படத்துல  காதல்தான்  மெயின் தீமா இருக்கு... உங்களுக்கு காதலை சொல்லறதுதான் பிரச்சனையா?ன்னு  கேட்டு தொலைச்சி இருக்காங்க... 

அவுங்க கேக்கறது நியாம்தான்... பட்.. நம்ம நாட்டுல, தன் இணையான ஜோடியை ஒரு இளைஞன் தேர்ந்து எடுக்கவே   வாலிபத்தின் பாதி நாளை கடந்து விடுகின்றான்...  விஞ்ஞானம் வளர்ச்சி அடைஞ்ச இந்த நாளில் கூட இன்னும் காதலிச்ச கல்யாணம் பண்ணிய ஜோடியை பிரிச்சி வைக்கறோம் , ஊரையே ஏறிச்சி வைக்கிறோம்...  நிம்மதியா  வாழ உடாம  கல்யாணம் பண்ணி சந்தோஷமா  இருக்கற காதல் ஜோடிங்களை சமாதானம் பேசலாம்ன்னு அழைச்சி வந்த அடிச்ச சாவடிக்கிறோம்... கேட்டா அதான் கவுரவம்ன்னு சொல்லிக்கிட்டு அடிச்சிக்கிட்டு திரியறோம்.


ஆசை ஆசையா வளர்த்த மகளையே கவுரவத்துக்கு கொலை செய்யறோம்... அப்படி என்ன கவுரமயிறோ தெரியலை...???


மத்த நாட்டுல அறிவியல்  வளர்ச்சி  மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு இளைஞர்களின்  பங்கு மிக அதிகம்..  அங்கே காதலை சொல்ல்லாம் பிடித்தால் வாழலாம், பிடிக்கவில்லை என்றால்  பிரிந்து விடலாம்... ஆனால் இங்கே மனசுக்கு பிடிச்ச பெண்ணிடம் காதலை சொல்லவே மாமாங்கம் ஆகி விடுகின்றது... அப்புறம் எப்படி மற்ற விஷயங்களில் கவனத்தை செலுத்த  முடியும்-? காதல் மறுக்கப்பட்ட  தேசத்தில் காதலை பற்றிதான் படம் எடுப்பார்கள்.. எதுக்கு டிமான்ட் இருக்கோ அதுக்குதான்  வேல்யூ... அதுதான் கல்லா கட்டும்... அதனாலதான் காதலை பற்றிய படங்கள் இங்கே அதிகம் வருது...ஒரு  பெண்ணுக்கு ஒரு ஆணிடத்தில் பிடித்த விஷயம் அவன் அழகு அல்ல... அவனுடைய ஸ்மார்ட்நஸ்...  அவனுடைய சாதுர்ய பேச்சு, இங்கீதமா நடந்துக்கறது,  பிடிச்ச கையை அவுத்து விடாம  சமுகத்துல நிமிர்ந்து நடக்க வைக்கற எந்த ஆம்பளையையும் பெண்ணுக்கு பிடிக்கும்... அழகு கொஞ்சம் இருந்தா போதும்.... ஆனா நிறைய பேரு காதலுக்கு அழகுதான் மூலதனம்ன்னு  நினைச்சிக்கிட்டு திறயறாங்க....


உதயம்ன்னு ஒரு படம்.... தெலுங்குல ஷீவா.. நாகர்ஜூனா  நடிச்சி இருப்பார்... ராம்கோபால் வர்மா இயக்கிய  படம்.... இதுல சமான்யமான ஒருத்தனை டான்(ரகுவரன்) சீண்ட அவன் எடுக்கும் ருத்ர தாண்டவம்தான் அந்த படம்... முக்கியமா சைக்கிள் செயினை  புடிங்கி கையில சுத்தற அந்த ஷாட்டும் அதுக்கு பிறகு சைக்கிள் கிராங் மட்டும் தனியா சுத்தற ஷாட்டும் மறக்கவே  முடியாது... இப்படி அதே பேர்ல கூட என்எச் போர்ன்னு சின்ன டைட்டிலை சேர்த்திக்கிட்டு வந்து இருக்கு.... இந்த படம் எப்படின்னு பார்ப்போம்.


===================

 Udhayam NH4-2013/ உதயம் NH4 படத்தோட ஒன்லைன்


செல்வாக்குள்ள அரசியல்வாதி மகளை சாதரணமான எந்த செல்வாக்கும் இல்லாத பையன் எப்படி கரம் பிடிக்கின்றான் என்பதுதான் ஒன்லைன்.

===================


Udhayam NH4-2013/ உதயம் NH4 படத்தோட கதை என்ன?

சித்தார்த் ( பிரபு) ஆஷிரா ஷெட்டி (ரித்திகா) இரண்டு பேரும் ஒரே காலேஜ் பெஙகளூர்ல படிக்கறாங்க,..... பட் ஆஷிரா பெரிய பணக்கார அரசியல்வாதி பொண்ணு, சித்தார்த் சாதாரண குடும்பத்து பையன் இரண்டு பேரும் காதலிக்கறது தெரிஞ்சதும் ரெண்டு பேரும் ஓடிப்போறாங்க..  அவுங்களை பிடிக்கற வேலையை ஒரு முரட்டு இன்ஸ்பெக்ட்ர் கிட்ட அந்த வேலையை கொடுக்கறார் ஆஷிரா அப்பா... இரண்டு பேரும் பெங்களூர்ல இருந்து சென்னைக்கு எப்படி தப்பிக்கறாங்க என்ற சேசிங்தான் படத்தோடு  பரபரப்பான கதை.

========================

படத்தின் சுவாரஸ்யங்களில் சில.

தேசிய நெடுஞ்சாலை 45 இதான் இந்த படத்தோட முதல் பேரு... வெற்றிமாறன் பல பேட்டிகளில் சொன்ன விஷயம்... அவரோட முதல் ஸ்கிரிப்ட் இதுதான்.... தனுஷ் வச்சி பல புரோட்யூசர்  கைமாறி இரண்டு நாள் ஷூட்டிங் நடந்து நின்னு போன ஸ்கிரிப்ட், இந்த ஸ்கிரிப்ட். சரி இதையே கட்டிக்கிட்டு ஏன் அழுவனும்ன்னு வெற்றிமாறன்  கதிரேசன்னு ஒரு புரொட்யூசரை புட்ச்சி பொல்லாதவன்னு அடுத்த ஸ்கிரிப்ட்டை சொல்ல ,அந்த படத்தை ரிலிஸ் பண்ணி தன்னை ஒரு சிறந்த இயக்குனரா அடையாளபடுத்திக்கிட்டார் வெற்றிமாறன்... அதன் பிறகு ஆடுகளம் ஆடி வலுவான எடுத்துல காலை ஊனிக்கிட்டு... ஓம்மால இன்னா இந்த ஸ்கிரிப்ட் இப்படி ஆட்டம் ஓட்டம் காட்டிக்கிட்டு இருக்குன்னு இந்த என்எச்45 ஸ்கிரிப்ட்டை தூசி தட்டி எடுத்து திரைக்கதை வசனம் ரெண்டையும் தான் எழுதி தன் உதவியாளரை இயக்க வைத்து  இருக்கும் திரைப்படம் இந்த உதயம்.


 படம் பரபரபவென ஆக்ஷன் தமாக்காவாக இருக்கின்றது...

முதலில் இந்த படத்தோட திரைக்கதைக்கு ஒரு சபாஷ்... முதலில்  அந்த பெண்ணை கொலை  செய்ய தூக்குவது போல காண்பித்து விட்டு இன்ட்ராகேஷன் நடக்கும் போது  அவர்களோடு சம்பந்தபட்டவர்கள் நரேட்டிவ் ஸ்டைலில் இந்த படத்தின் கதையை சொல்ல வைத்து இருப்பது  நல்ல நடை...


சார் அவுங்க ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டாங்க.. பட் இரண்டு மாசம்  ஊருக்கு போயிட்டு  வீட்டுக்கு வந்தா, அவுங்க ரெண்டு பேரும்  கட்டிபிடிச்சிக்கிட்டு கிடக்கறாங்க... அதுகூட பரவாயில்லை  சார்... கதவை தட்டிட்டு உள்ள வரலாம் இல்லைன்னு சொன்னான் பாருங்க என்று சொல்லும் போது தியேட்டர் மகிழ்ச்சியில் திளைக்கின்றது..


எனக்கு இந்த படத்துல ரொம்ப பிடிச்ச ஆளு யாருன்னா அந்த (கே கே மேனன்)இன்ஸ்பெக்ட்ர்தான் சான்சே இல்லை... அந்த பாடிலாங்வேஜ் அதே போல ரொம்ப சீரியாசா போற சீன்ல... போன் டிராக் பண்ணற காண்ஸ்டபிள்..   எதுக்கெடுத்தாலும் எஸ்சார், ஐ வில் டூ இட் சார்ன்னு சத்தம் போட்டு பேசறது கல கல...


அவன் என்  கழுத்துல பிளேட் வச்சிட்டான்.... எதுக்கு இந்த நேரத்துல  அவன் உங்களுக்கு ஷேவ் பண்ணி விடனும் சார் போன்ற வசன  காட்சிகள் அருமை.


சித்தார்த் இயல்பா நடிச்சி அண்டர்பிளே பண்ணி நடிச்சி இருக்கார்... அதே போல அந்த புதுமுகம் ஷெட்டி  சின்ன குழந்தைதனம்  அந்த முகத்துல இருக்கு... ஒரு சில சமயம் அழகா இருக்கார் .. சில சமயம் அட்டு போல இருக்கார்...

வேல்ராஜ் கேமரா  வழக்கம் போல அசத்தல்.... அந்த டிரேயின் சேசிங்.. அதுக்கு ஏத்தது போல   அந்த போலிஸ் குவாலிஸ் வருவது நல்ல கம்போசிஷன் ஷாட்ஸ்.


ஜிவி பிரகாஷ் இசையில் ஒரு பாடல் நன்றாக இருக்கின்து...  நிறைய பாட்டு எடுத்து இருக்காங்க...  பட் இங்க லவ்டுயட் எல்லாம் கட் பண்ணிட்டாங்க போல...  ஆனால் அதே  பாட்டை தெலுங்குவாலாக்கள் என்ஜாய் செய்ய  வாய்ப்பு இருக்கு..


12 மணிதான் டெட்லைன்னா அந்த பய  புள்ளை ஏதுக்கு இழுத்துக்குட்டு ஓடனும்ன்னு ஒரு கேள்வி வரும்... சிம்பிளா அதுக்கு பதில் சொல்லலாம்.. அவன் தமிழ் பையன்... பெண்ணோட    அப்பா கர்னாடகாவுல இருக்கற பெரிய பொலிட்டிசியன்... போலிஸ் கர்நாடகா.. அவனுக்கு இருக்கற ஒரே சப்போட்... வக்கில் மாமா அதுவும் அவர் தமிழ்நாட்டல  இருக்கார். சோ அவன்  தமிழ் நாட்டுக்கு  ஓடி வந்தா மட்டும்தான் அவனுக்கு  ஆதரவு....


 ஓரளவுக்கு லாஜிக்கா படம் எடுத்துட்டு  கடைசி கிளைமாக்ஸ்ல நடு ரோட்டு  காதலியை கூட்டிக்கிட்டு ஓடறதும் பின்னாடி ஜிப்  இன்ஸ்பெக்டர்  தொறத்தறது... செம காமெடியா இருக்கு...


===============
படத்தோட டிரைலர்.
=============
படக்குழுவினர்   விபரம்.

 Directed by Manimaran
Produced by Dayanidhi Azhagiri
Vetrimaaran
Written by Vetrimaaran
Starring
Siddharth
Ashrita Shetty
Kay Kay Menon
Music by G. V. Prakash Kumar
Cinematography Velraj
Editing by Kishore Te.
Studio Meeka Entertainment
Grass Root Film Company
Distributed by Red Giant Movies
Release date(s)
April 19, 2013[1]
Country India
Language Tamil


================
பைனல் கிக்.

 இந்த படம் பரபரப்பான ஆக்ஷ்ன் தமக்கா பேக்.. அதுவும் ஏப்ரல்  மே மாசம் லீவுல ஒரு  பரபர லவ் சப்ஜெக்ட்... ரோட்  சேசிங் மூவிஸ் பொதுவா தமிழ்நாட்டுல வெற்றி பெறாது.. உதாரணம்  மீரா,திருடா திருடா,ன்னு சொல்லிக்கிட்டு போவலாம். ஆனா இந்த படம்  ஜெயிக்கும்ன்னு நான் நினைக்கறேன்...வெற்றியோ இந்த ஸ்கிரிப்ட் பரபரப்பாய் இருக்கின்றது... வாழ்த்துகள் வெற்றி மாறன். இந்த திரைப்படம் பார்க்கவேண்டிய திரைப்படம் ... யூஏ சர்ட்டிபிகேட் கொடுத்து இருக்காங்க...12 வயசுக்கு மேல பிள்ளைகளை கூட்டிக்கிட்டு போங்க..  கிளைமாக்ஸ்ல ஒரே மவுத் கிஸ்சிங் சீன் இருக்கு.... டோன்ட் மிஸ் இட் கைய்ஸ்...  மெய்யாலுமே அது இங்கிலிஷ் கிஸ்தான்.

மிஸ்டர் இயக்குனர் மணிமாறன்... இந்த படத்துல உங்க ஆசானோட நிழல்ல அதிக நேரம் இளைப்பாறி இருக்கிங்க.. இந்த இளைப்பாறல் தருணத்துல  அவர்க்கிட்ட கத்துக்கிட்ட வித்தையோடு ,அடுத்து படத்துல களம் இறங்கி தனியா நிரூபியுங்க...   அதுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்...  வாழ்த்துகள் மணிமாறம்... இந்த வாழ்த்தை வெற்றியும் பங்கு போட்டுக்குவார்... அதனால் மணியோட தனிஆவர்தனத்துக்கு  மீ வெயிட்டிங்.....
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

14 comments:

 1. jackie,
  why u r not write the review for paradesi film..we are waiting....

  regards
  tamil

  ReplyDelete
 2. இசை மட்டும் இன்னும் கொஞ்சம் சுறுசுறுப்பா இருந்திருக்கலாம். மற்றபடி அருமையான படம். நல்ல விமர்சனம்..

  ReplyDelete
 3. NICE REVIEW....ஜாக்கி சார் aanthaireporter ரோட விமர்சனம் படிச்சிங்களா............CONVEY MY BEST REGARDS TO YAZHINI BABY.......

  ReplyDelete
 4. விமர்சனத்துக்கு நன்றி.

  ReplyDelete
 5. நம்ம நாட்டுல, தன் இணையான ஜோடியை ஒரு இளைஞன் தேர்ந்து எடுக்கவே வாலிபத்தின் பாதி நாளை கடந்து விடுகின்றான்

  இ அப்ஜெக்ட் திஸ் யுவர் ஆனர்.

  இணையான ஜோடியை அல்ல. தனக்கு கொஞ்சம்கூட செட்டே ஆகாத ஜோடியை என்று வாசிக்கவும்

  ReplyDelete
 6. pls see "Human centipede" and review it. im waiting for your review jackie.......

  ReplyDelete
 7.  வெளிநாட்டுல நம்ம ஊர் படங்களை பார்த்துட்டு...
  ஏன்டா  உங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லையா? பிரச்சனையே இல்லையா? எப்ப பாரு  உங்க படத்துல  காதல்தான்  மெயின் தீமா இருக்கு... உங்களுக்கு காதலை சொல்லறதுதான்
  பிரச்சனையா?ன்னு  கேட்டு தொலைச்சி இருக்காங்க... 

  அவுங்க கேக்கறது நியாம்தான்... பட்.. நம்ம நாட்டுல, தன் இணையான ஜோடியை ஒரு இளைஞன் தேர்ந்து எடுக்கவே   வாலிபத்தின் பாதி நாளை கடந்து விடுகின்றான்...  விஞ்ஞானம்
  வளர்ச்சி அடைஞ்ச இந்த நாளில் கூட இன்னும் காதலிச்ச கல்யாணம் பண்ணிய ஜோடியை பிரிச்சி வைக்கறோம் , ஊரையே ஏறிச்சி வைக்கிறோம்...  நிம்மதியா  வாழ உடாம  கல்யாணம்
  பண்ணி சந்தோஷமா  இருக்கற காதல் ஜோடிங்களை சமாதானம் பேசலாம்ன்னு அழைச்சி வந்த அடிச்ச சாவடிக்கிறோம்... கேட்டா அதான் கவுரவம்ன்னு சொல்லிக்கிட்டு அடிச்சிக்கிட்டு
  திரியறோம்.

  ஆசை ஆசையா வளர்த்த மகளையே கவுரவத்துக்கு கொலை செய்யறோம்... அப்படி என்ன கவுரமயிறோ தெரியலை...???

  மத்த நாட்டுல அறிவியல்  வளர்ச்சி  மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு இளைஞர்களின்  பங்கு மிக அதிகம்..  அங்கே காதலை சொல்ல்லாம் பிடித்தால் வாழலாம், பிடிக்கவில்லை
  என்றால்  பிரிந்து விடலாம்... ஆனால் இங்கே மனசுக்கு பிடிச்ச பெண்ணிடம் காதலை சொல்லவே மாமாங்கம் ஆகி விடுகின்றது... அப்புறம் எப்படி மற்ற விஷயங்களில் கவனத்தை
  செலுத்த  முடியும்-? காதல் மறுக்கப்பட்ட  தேசத்தில் காதலை பற்றிதான் படம் எடுப்பார்கள்.. எதுக்கு டிமான்ட் இருக்கோ அதுக்குதான்  வேல்யூ... அதுதான் கல்லா கட்டும்...
  அதனாலதான் காதலை பற்றிய படங்கள் இங்கே அதிகம் வருது...////
  well said jackie sir.


  இது போள உங்க்அலாள மட்டுமே யோசிக்க முடியும்..


  நன்றி..  ReplyDelete
 8. ji jacky sir,vwey nice movie,,stock & commodity market in tamil www.way2mcx.blogspot.in

  ReplyDelete
 9. நிறைய பேர் இந்த படத்துக்கு விமர்சனம் எழுதி இருக்காங்க ஆனாலும் உங்க விமர்சனம் தனித்துவமா இருக்கு

  ReplyDelete
 10. டியர் தமிழ் பரதேசி படம் வந்த போது பரதேசி மனநிலையில் இருந்த காரணத்தால் படத்தின் ரிவியூவ் எழுத முடியவில்லை.. அதற்கு எதிர்வினைக்கு பதில் எழுதி பாதியில் இருக்கின்றது.. சரி முடிஞ்சு போனதை எதுக்கு சொறிஞ்சிக்கிட்டு இருக்கனும்? அப்படின்னு விட்டு இருக்கேன்... என்னைக்காவது தூசிதட்டி எழுதலாம்.... பார்ப்போம்

  ReplyDelete
 11. அருமையான விமர்சனம்..

  ReplyDelete
 12. என்ன ஆச்சு ஜாக்கி?

  விமர்சனம் உங்க வழக்கமான தரத்தில் இல்லையே?

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner