The Impossible -2012 /உலகசினிமா/ஸ்பெயின்/சுனாமி அரக்கன்.
மற்றவர் படும் துயரம் பார்த்து கண் முடி  இந்த உலகத்தில் வாழும் மனித இனம் சென்று இருக்குமேயானால் இந்த உலகம் எப்போதே அழிந்து  போய் இருக்கும்.
ஆனால் பிறர் படும் துயரம் பார்த்து, ஒரு சிலரை தவிர இந்த பூமியில் வாழும் 95 சதவிகித மக்கள் தன் துயரமாக நினைக்கின்றார்கள்...

சென்னை சாலையில் துப்பாட்டா ரோட்டில் பிரள இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பெண்ணை எக்கேடாவது கெட்டு போகட்டும் என்று விட்டு விட முடிவதில்லை. துரத்தி போய் துப்பாட்டாவை ஒழுங்கா போட்டுக்கோ என்று சொல்கின்றோம்...  கார் கதவை சரியா சாத்தலைன்னா என்ன உயரா போய் விடும்...?? கார் கண்ணாடி கதவை  தட்டி டோர் ஒழுங்கா  சாத்தலைன்னு சொல்லறோம்..

இவ்வளவு ஏன் பைக்ல சைடு ஸ்டேன்ட்  எடுக்காம வண்டி ஓட்டறவனை  ஓத்தா எங்கயாவது வளையற எடுத்துல உழுந்து வாரி முஞ்சி மொகரை பேத்துக்கிடட்டும் என்று விட்டு விடுகின்றோமா? முக்கியமா ஹெல்மெட் போட்டு புல்லா கவர் பண்ணி இருக்கறவன் கிட்ட இந்த சைடு ஸ்டாண்ட் விளக்கி புரியவைக்கறதுக்குள்ள பொழுது விடிஞ்சிடும்...  சலுச்சிக்கிட்டாலும் சொல்லாமவா போறோம்...


இவ்வளவு ஏன் பைக்ல பகல்ல லைட்   எறிஞ்சா நாம என்ன  கரெண்ட் பில் கட்டப்போறமா? அல்லது  லைட்டு போட்டு ஓட்டபோறவன் கட்டப்போறானா? ஏதுவும் இல்லை... பட் லைட்டை நிறுத்துக்கன்னு புதிய பாதை பார்த்திபன் ஐஸ்வர்யா கிட்ட  கையால பிசைஞ்சி அழுத்தி சொல்லறது போல சொல்லலை..??? ஏன் மனிதாபிமானம்தான்...

வண்டி ஓட்டறவனுக்கு நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. ஆனா நம்ம வீட்டு மூதேவி ஒன்னு இப்படி வண்டி ஓட்டிக்கிட்டு போனா நம்மாள சும்மா இருக்க முடியுமா? காச்சி முச்சின்னு  கத்தறமே... அது போலத்தான்...நம்ம புள்ளையா இருந்தா அப்படியே விட்டு விடுவோமா?என்ற எண்ணம்தான் கொஞ்சம் பாலிஷா சக மனிதனை நேசிக்க வைக்குது...


சிம்மி போடலையா,?

இல்லை அவசரமா கிளம்பினேன்...அண்ணன் அவசரப்படுத்தினான் அவன்  ஆபிஸ்க்கு போவனும்ன்னு...அதான் கண்ணாடி முன்ன கூட நிக்காம ஓடி வந்துட்டேன்... அசிங்கமா இருக்கா?

சுடிதார் சீ துருவுல   உன் மார்ல பாதி  தெரியுது... டல் லைட்டுல  தெரியலை ... ஹார்ஷ் லைட்டுல தெரியுது..

என்ன லைட்டோ ? அசிங்கமா இருக்கா இல்லையா?

சூரிய வெளிச்த்துல நல்லா தெரியுதுன்னேன் .

சரி ஷால் வச்சி மறைஞ்சிக்கறேன்... பக்கி மாதிரி பார்த்துக்கிட்டு இருக்காம சொல்லி  தொலைச்சியே? தேங்ஸ்...

ஏதோ பார்த்த ஒரு செகன்ட்  பக்கியா இருக்கலாம், ஆனா 24 மணி நேரமும் பக்கியா இருக்க முடியாது என்று நக்கல் விட்டேன்...  என் தோழி ஆமோதித்து புன்னகைத்தாள்... சபையில் தனக்கு தெரிந்த பெண் காட்சி பொருளாய் இருப்பதை எவர் மனமும் விரும்புவதில்லை....

ஒரு மாசத்துக்கு முன்ன நியூஸ் டெஸ்க்ல  நியூஸ் எடிட்டர் எடிட் பண்ணிக்கிட்டு இருக்கும் போது ஒரு  வேலூர் கிளிப் ஒன்னை பார்த்தேன்.. சிம்னி விளக்கு துணியில புடிச்சி விடியற்காலையில தீ விபத்து, கூறை வீடு ஏறிஞ்சிடுச்சி வீட்டுல ஆறு பேர் பலத்த தீக்காயம்... ஒரு இரண்டு வயசு கொழைந்த  முடி பொசுங்கி  மேல் தோல் வைட்டி துடிச்சிக்கிட்டு இருந்துச்சி, விசிறியால விசிறிக்கிட்டு இருக்காறங்க... அந்த கொழந்தையோடு உடம்பு அதிர்ச்சியில வலியில துடிக்குது பார்த்த ஒரு செகன்ட் ஆடிப்போயி  கண்ணுல தண்ணி வந்துடுச்சி...

முந்தாநாள் கோவை  வணிகவாளக தீயில நாலு பேர் செத்து போனாங்க.. அதுல ரெண்டு பொண்ணுங்க வயசு பொண்ணுங்க... அதுல ஒரு பொண்ணு பத்து நாளக்கு முன்னாடிதான் வேலைக்கு சேர்ந்து இருக்கு...  பொதுவா மர்டர் நடந்தா என் பார்டர் உன்பார்டர்ன்னு பிரிச்சி பேசற போலிஸ் தீயணைப்பு வீரர்களோடுகளம் இறங்கி போராடி இருக்காங்க..  போலிஸ்  பொதுமக்கள் பயர் சர்விஸ் பார்த்துக்கும்ன்னு கைய கட்டி வேடிக்கை பார்க்கலை...? அதுதான் மனிதம்.

ஈழத்துல போர் சமயத்துல மக்கள் படற  அவஸ்தைய பார்த்த போது மனசு துடிச்சி போவுதே? அது ஏன்?   காரணம் சக மனிதனா நாம எல்லரையும் நேசிக்கின்றோம்...சென்ட்டிமென்ட்டுகளால் நிறைந்தது இந்த உலகம் ..  இதில் யாரும் விதிவிலக்கில்லை...

யார் வூட்டு எழவோ பாய போட்டு அழுவோ என்றில்லாமல் சக மனிதர்களை நேசிக்க கற்றுக்கொடுக்கின்றது இந்த படம்... எதிர்பாராத நிலையில் நடக்கும் இயற்கை சீற்றத்தின் போது மக்கள் எப்படி இருக்க வேண்டும் என்று  உணர்ச்சிகரமாய் பாடம் எடுக்கின்றது இந்த  இம்பாசிபில் என்கின்ற ஸ்பேனிஷ்  நாட்டு திரைப்படம்.


===============
The Impossible -2012 படத்தின்  ஒன்லைன் என்ன?

சுனாமியில் சிக்கிய ஒரு குடும்பத்தின் உண்மைகதை.
=========


The Impossible -2012 படத்தின் கதை என்ன?
மருத்துவர் மரியா (Naomi Watts) தனது கணவன்ஹென்றி பென்னட் (Ewan McGregor) மற்றும் மூன்று ஆண்பிள்ளைகளோடு கிருஸ்மஸ் விடுமுறைக்கு  தாய்லாந்து வருகின்றார்கள்...2004 ஆம் ஆண்டு இந்திய பெருங்கடலில் ஏற்ப்பட்ட சுனாமி   அவர்தகளின் விடுமுறை கனவையும்,இந்த குடும்பத்தை சின்னாபின்னமாக்குகின்றது. அவர்கள்  என்னவானார்கள் என்பதே படத்தின் கதை.

================
 தமிழ்நாட்டில் சுனாமி ஏற்ப்படுத்திய தாக்கம்  கொஞ்சம் நஞ்சமல்ல.... அது எல்லோருக்கும் தெரியும்... ஆனால் நம்மவர்கள்  அதன் பின் இருக்கும் சோதனை   வேதனை கதைகளை யாரும்  காட்சிபடுத்தவில்லை.. ஆனால் கமல் அந்த சுனாமியை  தன் தசாவதாரம் திரைப்பட கிளைமாக்ஸ் காட்சிக்கு பயண்படுத்தி இருப்பார்...வேறு யாரும் தமிழ்சினிமாவில் பயண்படுத்தியதாக நினைவில்லை.. அட பிளாஷ்  பேக்குல கூட சுனாமி நடந்த அன்னைக்கு   காலைல எட்டு மணிக்கு மெரினாவுக்கு  என் காதலியை வரச்சொல்லி காதலை சொல்லறதுக்குள்ள என் காதலி கடல்ல போயிட்டான்னு எந்த ஹீரோவும்  சோகமா டெபனிஷன்  கொடுக்கலை..

உண்மை சம்பவம் இதில் என்ன சுவாரஸ்யம்  இருக்கப்போகின்றது என்று ரொம்பநாள் பார்க்காமல் இந்த படத்தின் டிவிடியை வைத்து இருந்தேன்.. படத்தை பார்த்து கண் கலங்கி பிரம்மை பிடித்து உட்கார்ந்து இருந்தேன்...


சுனாமி தாய்லாந்து கடற்கரை ஹோட்டல்களை தரைமட்டமாக்குவதை மிக தத்ரூபமாக எடுத்து இருக்கின்றார்கள்...

சனாமிக்கு பிறகு அது  ஏற்ப்படுத்திய அழிவு எப்படி இருக்கும்  என்பதை டீடெயில்லாக சொல்லி இருக்கின்றார்கள்..

சுனாமி வந்த சமயம்  இலங்கையில் ஒரு சாலை  சத்திப்பில் பேருந்து உயரத்துக்கு  கடல் தண்ணீர் ஓடிக்கொண்டு இருந்தது...மூன்று பெண்கள் ஒரு கட்டிடத்தில்  நீட்டிக்கொண்டு இருந்த கம்பை பிடித்துக்கொண்டு இருந்தார்கள்… வேறு ஒரு பெண் அவர்களை வந்த பிடிக்க பிடி நழுவி தண்ணீரில்  அடித்து  சென்ற காட்சி காலத்துக்கும் மறக்காது…

 எல்லா சுனாமியையும் அடித்த சாப்பிட்டது…  இந்த நுற்றாண்டில் ஜப்பானில் ஏற்ப்பட்ட சுனாமிதான்… கார் ,பஸ், மினி கப்பல், பிளைட் என்று கபளிகரம் செய்த காட்சியை மறக்க முடியுமா?

சுனாமி தண்ணி ஏறிச்சின்னா மிதக்க வேண்டியதுதான்… என்று நினைக்காதீர்கள்  அது எப்படி சுழற்றி அடிக்கும் நகரத்தில் இருக்கும் பொருட்களை எடுத்துக்கொண்டு  தண்ணீரில் மிதப்ப்பவர்களை அது எப்படி தாக்கும் என்பதை முதல் காட்சியில் மரியா படும அவஸ்தையில் சொல்லி இருப்பார்கள்…


மரியா (Naomi Watts) சான்சே இல்லாத நடிப்பு… ஒரு அம்மாவா தன்புள்ளைக்கு என்ன கத்து தரனும்ன்னு எப்படி தைரியபடுத்தனும்ன்னு சொல்லி கொடுக்கும் இடங்கள் அருமை.

சுயநலமாக இருக்கும் பெரிய பையன் லுகாஸ் எப்படி அவனுள் மனிதநேயம் எப்படி ஏற்ப்படுகின்றது.. அதை எப்படி அவன் அம்மா  வளர்ந்து விடகின்றாள் என்பதையும்… அம்மாவுக்கு உதவி செய்தது போக ஒரு தகப்பனையும் பிள்ளையும்  தேடி  சேர்த்து வைத்த அந்த  பெரிய பையன் லுகாசின்  நேசம் ..  சான்சே இல்லை.


கால் மெல்ல மெல்ல தன் தாயக்கு அழுகும் அந்த காட்சியும், தம்பி அப் என்னவானார்கள் என்ற பரிதவிப்பும்.. அற்புதம்… வேனில் ஆஸ்பிட்டல் ஆஸ்பிட்டலாக உறவுகளை தேடி அலையும் அந்த காட்சிகள் காலத்த்துக்கு நம் நினைவில் இருக்கும்….


படம் பெற்ற விருதுகள்..Academy Awards  Best Actress Naomi Watts Nominated
AACTA Awards Best International Actress Naomi Watts Nominated
Art Directors Guild  Best Excellence in Production Design for a Contemporary Film Eugenio Caballero Nominated
Broadcast Film Critics Association Awards[38] Best Actress Naomi Watts Nominated
Best Young Actor Tom Holland Nominated
Capri Awards Capri Director Award Juan Antonio Bayona Won
Capri European Director Award Juan Antonio Bayona Won
Chicago Film Critics Association Awards Best Actress Naomi Watts Nominated
Most Promising Performer Tom Holland Nominated
Dallas-Fort Worth Film Critics Association Awards[42] Best Actress Naomi Watts Nominated
Central Ohio Film Critics Association AwardsRunner-Up[43] Best Actress Naomi Watts Won
Detroit Film Critics Society[44] Best Film The Impossible Nominated
Best Director Juan Antonio Bayona Nominated
Best Actress Naomi Watts Nominated
Best Supporting Actor Ewan McGregor Nominated
Empire Awards[45][46] Empire Award for Best Newcomer Tom Holland Won
Empire Award for Best Actress Naomi Watts Nominated
Gaudí Awards[47] Best Director Juan Antonio Bayona Won
Best Editing Elena Ruiz and Bernart Vilaplana Won
Best Cinematography Óscar Faura Won
Best Sound Oriol Tarragó and Marc Orts Won
Best Hair/Make-up David Martí and Montse Ribé Won
Best European Film The Impossible Won
Golden Globe Awards[48] Best Actress - Motion Picture Drama Naomi Watts Nominated
Goya Awards[49] Best Film The Impossible Nominated
Best Director Juan Antonio Bayona Won
Best Actress Naomi Watts Nominated
Best Supporting Actor Ewan McGregor Nominated
Best New Actor Tom Holland Nominated
Best Original Screenplay Sergio G. Sánchez and María Belón Nominated
Best Cinematography Óscar Faura Nominated
Best Editing Elena Ruiz and Bernat Villaplana Won
Best Art Direction Eugenio Caballero Nominated
Best Production Supervision Sandra Hermida Muñiz Won
Best Sound Peter Glossop, Marc Orts and Oriol Tarragó Won
Best Special Effects Pau Costa and Félix Bergés Won
Best Makeup and Hairstyles Alessandro Bertolazzi, David Martí and Montse Ribé Nominated
Best Original Score Fernando Velázquez Nominated
Hollywood Film Festival[50] Spotlight Award Tom Holland Won
Houston Film Critics Society[51] Best Actress Naomi Watts Nominated
Las Vegas Film Critics Society[52] Sierra Award for Best Picture The Impossible Nominated
London Film Critics Circle Awards[53] Young British Performer of the Year Tom Holland Won
National Board of Review USA[54] Best Breakthrough Actor Tom Holland Won
Palm Springs International Film Festival[55][56] Desert Palm Achievement Award Naomi Watts Won
Phoenix Film Critics Society[57] Best Youth Performance in a Lead or Supporting Role - Male Tom Holland Won
San Diego Film Critics Society Awards[58] Best Actress Naomi Watts Nominated
Saturn Awards[59] Best Horror or Thriller Film The Impossible Pending
Best Actress Naomi Watts Pending
Best Young Actor Tom Holland Pending
Best Make-up David Martin, Montse Ribé and Vasit Suchitta Pending
Screen Actors Guild Awards[60] Outstanding Performance by a Female Actor in a Leading Role Naomi Watts Nominated
Washington D.C. Area Film Critics Association Awards[61] Best Youth Performance Tom Holland Nominated
Young Artist Awards[62] Best Performance in a Feature Film - Leading Young Actor Tom Holland Pending
Best Performance in a Feature Film - Supporting Young Actor Samuel Joslin Pending
Best Performance in a Feature Film - Supporting Young Actor Ten and Under Oaklee Pendergast Pendingஸ்பெயின் டைரக்டர் J.A. Bayona இயக்கி இருக்கும் இந்த படம், மிக டிடெய்லான இயற்கை  சீற்றத்தையும்,  மனித நேயத்தையும்  உணர்வுபூர்வமாய் காட்சி படுத்தி இருக்கின்றார்…


==========
படத்தின் டிரைலர்.

==============
படக்குழுவினர் விபரம்

Directed by J.A. Bayona
Produced by Álvaro Augustin
Belen Atienza
Enrique López Lavigne
Written by Sergio G. Sánchez
Starring Naomi Watts
Ewan McGregor
Tom Holland
Music by Fernando Velázquez
Cinematography Óscar Faura
Editing by Elena Ruiz
Studio Apaches Entertainment
Telecinco Cinema
Distributed by Warner Bros. (Spain)
Summit Entertainment
(United States)
Release date(s)
9 September 2012 (TIFF)
11 October 2012 (Spain)
11 January 2013 (Wide)
Running time 113 minutes[1]
Country Spain
Language English
Swedish
Thai
Budget $45 million[2]
Box office $172,477,293===========
பைனல்கிக்…
 இந்த படம் பார்த்தே தீரவேண்டிய திரைப்படம். மனித உணர்வுகளில் உன்னதங்களை காட்சிபடத்தி இருக்கின்றார்கள்.. இதை ஒரு சிலர் சென்டிமென்ட் என்று நக்கல் விடலாம்… சென்ட்டிமென்ட் இல்லை என்றால் உலகம்  இயங்காது… அத்தான் இந்த படத்தின் அடி நாதம்… இந்த படம் குடும்பத்தோடு  பார்க்க வேண்டிய திரைப்படம்… திரைப்படகுழுவினருக்கு பாராட்டுக்கள்.
பிரியங்களுடன்
ஜாக்கி சேகர்

நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

2 comments:

  1. thanks jackie anna for sharing this film

    ReplyDelete
  2. சுனாமியின் பாதிப்பு ஆசியாவிலேதான் அதிகமாக இருந்தது. அதிலும் நம் தமிழ்நாட்டு கடற்கரையோர மக்கள் பட்ட துன்பம் எளிதில் சொல்லிவிடமுடியாதது இருந்தும் நாம் அதைப் பற்றி ஒரு ஆவணப் படம் கூட எடுக்கவில்லை. காந்தியைப் பற்றி ஆங்கிலேயரான ரிச்சர்ட் அட்டன்பரோ படம் எடுத்ததும்தான் நம் ஆட்கள் விழித்துக் கொண்டார்கள். அதே போலத்தான் இதுவும். அப்படி நாம் சுனாமி பற்றி படம் எடுத்தாலும் அது ஒரு மசாலா படமாகவே இருக்கும் தசாவதாரம் போல.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner