Six Bullets/2012/ சிக்ஸ் புல்லட்/அப்பாவி பெண்குழந்தைகள்.




இங்கு இருக்கும் நடிகர்கள்
போல இன்னும் மரத்தை சுற்றி டுயட் பாடாமல் நான் ரசித்த அத்தனை ஹாலிவுட் ஹீரோக்களுக்கும் வயதாகி விட்டது என்பதை நேர்மையாக நிருபிக்கின்றார்கள்.....

 அவர்கள் நடிக்கும் படத்தில் கண்டிப்பாக ஒரு மகள் அல்லது மகள் கேரக்டர் கட்டாயமாக வைக்கப்படுகின்றது..  சின்ன வயது மகள் அல்ல...22 வயது மகள் இருக்கின்றாள் என்று காட்டுகின்றார்கள். உதாரணத்துக்கு டைஹார்டு படத்தில் புருஸ்க்கு மகள் இருந்தால் 5 ஆம்  பாகத்தில் ஒரு மகன் இருக்கின்றான் என்றார்கள்.

6 புல்லட் படத்தில் வான் டேமுக்கும் ஒரு மகன் இருக்கின்றான் அவனும் போலிஸ்  வேலையில் இருக்கின்றான்.. பிளட் ஸ்போர்ட் பார்த்து விட்டு அந்த  படத்தில் இருக்கும் வேன்டேம் போலவே  உடலை முறுக்கி உடற்பயிற்சி  செய்த கணங்களை நினைத்துப்பார்க்கின்றேன்.. இந்த  படத்தில் இருக்கும் சிறப்பு என்னவென்றால் வேன்டேம் பையன்... Kristopher Van Varenberg  அவருக்கு மகனாகவே நடித்து இருக்கின்றார்.

இந்த 6 புல்லட்  ஆக்ஷன் படத்திலும் வேன்டேம்  அசத்தி இருக்கின்றார்.

=============
Six Bullets/2012 படத்தின்  ஒன் லைன் என்ன?

விபச்சாரத்துக்கு கடத்திய குழந்தையை மீட்கும் கறிக்கடைகாரன்.
===============

Six Bullets/2012 படத்தின் கதை என்ன?

வேன்டேம் ஒரு போலிஸ்காரர்... ஒரு சின்ன பையனை விபாச்சாரத்துக்கு கடத்தில்காரர்கள் கடத்தி  விட்டார்கள்... அவனை கண்டு பிடித்து அவனை மீட்டு வரும் போது  அந்த வளாகத்தில் இருந்த அப்பாவி பெண் பிள்ளைகள்  இரண்டு பேர் இறந்து போகின்றார்கள்.. வேலையை ராஜினாமா செய்து விட்டு கறிக்கடை வைக்கின்றார்.. மேலோடோவா ஊருக்கு சுற்றுலா வரும் குத்து சண்டை வீரரின் மகள்  விபச்சாரத்துக்கு கடத்தபடுகின்றாள்.. உதவி கேட்டு முன்னாள் போலிஸ்காரர் வேனிடம் வருகின்றார்கள்.. வேன்டேம் அந்த  பெண் குழந்தையை  காப்பாற்ற ஒத்துக்கொள்ளுகின்றாரா என்பதே மீதிக்கதை.


========================
படத்தின் சுவாரஸ்யங்கள்

 உலகம் எங்கும் விபச்சாரத்துக்காக  இரண்டரை கோடி பெண்கள் கடத்தப்படுகின்றார்கள்... அதில் 25 பர்சென்ட் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து கடத்தப்படுகின்றார்கள் என்பதுதான் படத்தின் மையக்கரு..

முன்பு எல்லாம் பெண்களை விபச்சாரத்துக்கு கடத்துவார்கள் . ஆனால் இப்போது சின்ன சின்ன  ஆம்பளை பசங்களையும் விட்டு வைப்பதில்லை .

முதல் காட்சியில் வேன் ஒரு சின்ன பையனை தேடி செல்லும் அந்த காட்சியிம் அந்த பார் பைட்டு சொல்லும் சேதி என்னவென்றால் சிங்கம் சிங்கிளாதான் வரும்என்பதற்கு உதாரணம்.
 அந்த பைட் சும்மா  அதகளம்தான் போங்கள்...

ஹூயூமன் டிராபிக்கில் எப்படி எல்லாம் பெண்கள் சிக்குகின்றார்கள்.. அந்த நெட்ஒர்க் எப்படி இயங்குகின்றது என்பதை பட்டவர்தனமாக சொல்லுகின்றார்கள்.

அமெரிக்க பெண்கள் என்றால் ரிஸ்க்  எப்படியும் அவர்கள் தூதரகம் மூலம் பிரஷர் கொடுப்பார்கள் அதனால் அந்த நாட்டு பெண்களை தொடதீர்கள் என்று  இந்த படம் மூலம் மறைமுக எச்சரிக்கையை விடுகின்றார்கள்...

அமேரிக்கர்கள் பொது புத்தியில் நாங்கள்தான் உலகிள் ஹீரோ என்பதை சொல்லாமல் சொல்லி பதியவைத்துக்கொண்டே இருப்பார்கள்.. சும்மா  சொல்லக்கூடாது அந்த நாடும் அப்படித்தான்  அவர்களுடைய  மக்களை அப்படி பார்த்துக்கொள்ளுவார்கள்..

 ===========
படத்தின் டிரைலர்.


=============
படக்குழுவினர் விபரம்

Directed by Ernie Barbarash
Produced by Brad Krevoy
Written by Chad Law
Evan Law
Starring Jean-Claude Van Damme
Joe Flanigan
Anna-Louise Plowman
Release date(s)
September 11, 2012
Running time 93 min
Country United States
Language English
Moldovan
Budget $10 million
Box office $25 million

============
பைனல்கிக்.

    அரைத்த மாவாக இருந்தாலும் இந்த படத்தை பார்க்க வேண்டிய படம் என்று சொல்லுவேன்.. வழக்கமான ஆக்ஷன் திரைப்படம் என்றாலும் வேன்டேமுக்கா கண்டிப்பாக இந்த படத்தை பார்க்கலாம். இந்த படம் அதிக ஆக்ஷன் இருப்பதால் தனியாக பாத்தால் நலம். 3 ஸ்டார் கொடுக்கலாம். படம் பார்த்து இருந்தால்  இந்த படத்தை பற்றிய கருத்தை  பகிருங்கள்.


நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

5 comments:

  1. In Vandamme movie
    1. He will stand on walls with both legs in line
    2. Fully naked Vandamme
    These scene must

    ReplyDelete
  2. என்ன ஆச்சு ஜாக்கி?

    விமர்சனம் உங்க வழக்கமான தரத்தில் இல்லையே?

    ReplyDelete
  3. என்ன ஆச்சு ஜாக்கி?

    விமர்சனம் உங்க வழக்கமான தரத்தில் இல்லையே?

    ReplyDelete
  4. ஜாக்கி,
    உங்க ப்ளாக்கை விடாம படிச்சிட்டிருக்கேன்.
    நான் பார்த்த சில ஹாலிவுட் படங்களை, நீங்களும் பார்த்து உங்க ஸ்டைல்ல விமர்சனம் எழுதணும்னு ஆசை.
    1. Franklyn
    http://www.imdb.com/title/tt0893402/?ref_=sr_1
    2. Tu£sday
    http://www.imdb.com/title/tt1042570/
    இன்னும் சில படங்களை விரைவில் தெரிவிக்கிறேன்.

    ReplyDelete
  5. ஜாக்கி,
    உங்க ப்ளாக்கை விடாம படிச்சிட்டிருக்கேன்.
    நான் பார்த்த சில ஹாலிவுட் படங்களை, நீங்களும் பார்த்து உங்க ஸ்டைல்ல விமர்சனம் எழுதணும்னு ஆசை.
    1. Franklyn
    http://www.imdb.com/title/tt0893402/?ref_=sr_1
    2. Tu£sday
    http://www.imdb.com/title/tt1042570/
    இன்னும் சில படங்களை விரைவில் தெரிவிக்கிறேன்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner