கிணறு(கால ஓட்டத்தில் காணாமல் போனவை) பாகம் 25
நாம் வாழும் பூமியில்
முன்று பகுதி நீரால் சூழுப்பட்டு இருந்தாலும் குடித்து உயிர் வாழ வேலைக்கு ஆகாது. குடி நீர் தேவையை ஆறு ,ஏரி ,குளங்கள் மனிதனின் நீர்தேவையை தீர்த்து வைத்தாலும்,   தண்ணீர் பிடிக்க வேண்டும் என்றால், சில பல கிலோ மீட்டர்காளாவது நடந்து தண்ணீர் எடுத்து வர   வேண்டும்...


ஆனால் கிணறுகள்  அப்படியல்ல  மனிதனின் நீர்தேவையை வீட்டுக்கு அருகில் இருந்து ஒரு காலத்தில் தீர்த்து வைத்தன... ஊரில் நடுவில் பொதுக்கிணற்றில் நீர் பிடித்து ,ஊர் வம்பு பேசி  வாழ்ந்தது ஒரு காலம்.. இன்று கிணறுகளை தேட வேண்டியதாக இருக்கின்றது..


  முன்பு எல்லாம் வீடு கட்டினால் முதலில் கிணற்றை  தோண்டிவிட்டுதான் வீடே கட்டுவார்கள்…..  சென்னையில் புறநகரில் இருக்கும் பல வீடுகள் அப்படி கட்டபட்டவைதான். 

ஒரு காலத்தில் சென்னையில்  புறநகர் என்று அறியப்பட்ட  மடிபாக்கம்,  நங்கநல்லூர் பகுதிகளில்   கட்டப்பட்ட தனி வீடுகளில் இப்போதும் கிணற்றினை காணலாம்.

எனக்கு தெரிந்து எங்கள் ஊரில் பொதுக்கிணறு என்று எதுவும் இல்லை. எல்லோருடைய வீட்டிலும்  கிணறு இருந்தது….காரணம் கோஸ்டல் எரியா என்பதால்  கிணறு தோண்ட பெரியதாய் சிரமம்  இருக்கவில்லை…
ஆனால் எங்கள்  ஊரில்  இருந்து 12 கிலோ மீட்டரில் இருக்கும்  திருமாணிக்குழி  மலை பகுதியில்  பொதுக்கிணற்றை பார்த்து இருக்கின்றேன்… பொதுவாக மலைப்பகுதிகளில்  உள்ள மக்கள் வாழ்வாதார பகுதிகளில் நீர்தேவைக்கு  பொதுக்கிணற்றை பார்க்கலாம்.கிணறு   பொதுவாய் வட்டவடிவத்தில்தான் இருக்க வேண்டும்  அப்போதுதான் மண் சரியாது… எந்த இயற்கை  இடர்பாடு வந்தாலும் தாங்கும் ரோல் பேரிங்  கெப்பாசிட்டி  முறையில் அந்த வட்டவடிவம் இருக்கும் என்பதால் அப்படி அமைத்தார்கள்…

 எங்கள் ஏரியாவில்  கற்களை   வட்டவடிவில் அடுக்க நீள் வடிவிலும் குத்துக்கல்லாக அடுக்கியும் கட்டி  கிணற்றை  கட்டி இருப்பார்கள்… இப்போது கட்டப்படும் கிணறுகள் சிமெண்ட் உறைகள்   ஒன்றின் மேல் ஒன்றாய் அடுக்கி கட்டிவிடுகின்றார்கள்.. ஆனால் ஈரோடு பக்கம் பாறைகளை உடைத்து கிணறுகளை அமைப்பதால் அவைகள்   செவ்வக வடிவில் அமைத்து இருப்பார்கள். பாறைகள் என்பதால்  ஒழுங்கற்று இருக்கும்...


கிணற்றில் தண்ணீர் எடுத்து குளிப்பது போன்ற சுகம் இந்த உலகத்தில் வேறு எதுவும் இல்லை என்பேன்..  கயிறு தண்ணீரில் நனைந்து தண்ணீர் எடுத்து பிறகு  வாளியை வேகமாக கிணற்றில்  கயிற்றை இறக்கையில்  ராட்டிணம் வேகமாக சுற்றுகையில் கயிற்றில் இருக்கும் தண்ணீர் நம் முகத்தில் தெரிக்கும்,… அதுவும் கொடைகாலத்தில்  அந்த நீர் முகத்தில் தெளிக்கும் போது பேராணந்தம்..

கிணற்று நீரில் விழும் வாளி உடனே தண்ணீர்  மொண்டுக்கொள்ளாது. 18 வயது பருவபெண் போல  பயங்கரமாக ஷோ காட்டும் …. இரண்டு மூன்று முறை மேலும் கீழும் வாளியை ஆட்டினால்   தண்ணீர் மொண்டுகொண்டு  தண்ணீரில்  முழ்கும் போது, கப்பென்று பிடித்து  மேலே இழுக்க வேண்டும். வாளி மேலே வரும் போதே  கால் வாசி தண்ணீர் கிணற்றில் விழும்… இப்படித்தான் தண்ணீர் இறைக்க வேண்டும்.

 எங்கள் ஊரில் இரண்டு பிரமாண்ட  கிணறுகள் இருந்தன… ஒன்று பழனிப்பிள்ளை மோட்டர் கொட்டாய் கிணறு மற்றது  முஸ்லிம்கள் சமாதி பக்கத்தில் இருக்கு வயல் வெளியில் இருந்த கிணறு.

வயல்வெளியில் இருந்த  கிணறு  பெரிய கிணறு அதில்தான் நான் நீச்சல் கற்றுக்கொண்டேன்… கிணற்றிவ் குளிப்பவர்கள் வெடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கும்போது  கிணற்றில் தள்ளி விட்டு என்னோடு இரண்டூ பேர் குதித்து எனக்கு  நீச்சல் கற்றுக்கொடுத்தார்கள்…   அவர்கள் யார் என்று எனக்கு தெரியாது… அவர்கள் திசை பார்த்து ஒரு  நன்றி கும்பிடு.


மழைகாலங்களில் ஊற்று பிடித்துக்கொண்டு பாம்ராஜ்ய கற்கள் இடைவெளிகளில் தண்ணீர் கசித்துக்கொண்டு  பார்க்க ரம்யமாக இருக்கும்....

உலகில் கிணறு போல மழை  சேகரிப்பு  சாதனம் வேறு எதுவும் இல்லை... கிணறு மட்டும் தான்  மழை நீரை சேகரித்து உள்வாங்கி பின்பு மக்களுக்கு அள்ள அள்ள கொடுக்கின்றது… மற்ற விஷயங்கள்  பூமிக்குள் இருக்கும் நீரை வெளியே உறிஞ்சி தள்ளுவதோடு சரி..  அதே போல நிலத்தடி நீரை   எந்த அளவு கோலும் இல்லாமல் சாமான்யனும் பார்த்து தெரிந்து  கொள்ள  இன்றும்  இருப்பது  சில கிணறுகள்தான் … 


நான்  வாழும் கொளப்பாக்கத்தில் 10 அடியில் தண்ணீர் இருக்கின்றது…. ஆனால் சுற்றிலும் அடுக்குமாடி குடியிருப்புகளை  கட்டி நீரை  உறுஞ்சி பயமுறுத்துகின்றார்கள்… தற்போது மழை நீரை உள் வாங்க வெறும் தரையை  தவிர வேறு  எதுவும் தற்போது இல்லை.

 சென்னையில் வெள்ளைக்காரர்கள் காலத்தில்  தண்ணீர்  பிரச்சனை  பெரிதாய் இருந்தது….. குளம் ஏரி போன்றவற்றில் இருந்து  தண்ணீர் தேவைகளை  சென்னைவாசிகள் பூர்த்தி செய்துக்கொண்டாலும், கோடை காலத்தில் தண்ணீர் பிரச்சனை வாட்டி எடுத்தது.. கேப்டன்  பேகர் என்ற ஆங்கிலேய பொறியாளர் மின்ட் பகுதியில்   பத்து  கிணறுகளை வெட்டினார். ஆனால் ஏழே கிணற்றில்தான்  ஊற்றுகள் மிகவும் சுவையாக இருந்தன… அதனால் இன்றும்  வடசென்னையில்  ஏழு கிணறு வரலாற்றில் இடம்  பிடித்து இருக்கின்றது… இன்றும் ஒரு சில கிணறுகள் 250 வருட வரலாற்றுக்கு சாட்சியாக இருக்கின்றன….

நகர வாழ்வில்  சில பொதுகிணறுகள் ரோட்டின் நடுவில் இருப்பதை இப்போதும் கூட சென்னையில் பார்த்து இருக்கின்றேன்…   சென்னை வெஸ்ட் கேகே நகர் வன்னியர் தெருவில்  சாலையின் நடுவில் இன்றும்  அந்த கிணறு இருக்கின்றது…


உலகிலேயே மிக ஆழமான கிணறு இந்தியாவில் இருக்கின்றது அது உலக அதிசியம் என்ற லிஸ்ட்க்குள் வரவில்லை… ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் இந்த பிரமாண்டக்  கிணறு ஆழமானது மட்டும் அல்ல, மிக அழகானதும் கூட. நம்மவர் கட்டிடக்கலைக்கு மிகசிறந்த எடுத்துக்காட்டும் ஆகும்  ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் நகரிலிருந்து சிறிது தொலைவில் அபநேரி (Abhaneri) என்ற கிராமத்தில் இந்தக் கிணறு உள்ளது. 13 அடுக்குகளாக 3500 படிகலைக் கொண்டது இது. ஆழம் சுமார் நூறு அடி. கிணற்றின் பக்கங்கள் சுமார் 110 அடி (35 மீட்டர்) நீளம் உடைய சதுரமான கிணறு இது…

உயிர் வாழ தண்ணீர் தேவை….. மின்சாரம் இல்லாமல், மோட்டர் வசதி  இல்லாமல் 3500 படிகள் இறங்கி தண்ணீர் எடுத்து அந்த காலத்தில் உயிர் வாழ நீர்தேவையை   நிறைவேற்றி இருக்கின்றார்கள்.., அந்த கிணற்றை எத்தனை ஆண்டுகள்  எத்தனை மக்கள் அந்த கிணற்றை கட்டி முடிக்கும் பணியில் ஈடுபடுத்தபட்டு  இருப்பார்கள் என்பது  நினைத்து பார்க்க  பிரமாண்டம்தான்.


ராஜாக்கள்  காலத்தில் ஊரில் இருக்கும் மக்களை பழிவாங்க பொதுக்கிணற்றில் எதிரி நாட்டவர் விஷம் கலந்து விட்டு சென்று விடுவார்கள்…நீர் அருந்தும் மக்கள் இறந்து போன பல வரலாற்று  நிகழ்ச்சிகளை கேள்விபட்டு இருப்பீர்கள்.

வெறியன் ஜெனரல் டயர்  ஜாலியன்வாலபாக்கில்  பொதுக்கூட்டத்தில் துப்பாக்கி சூடு நட்த்திய போது   அந்த பகுதியில் இருந்த  கிணற்றில் உயிர் பிழைக்க மக்கள் குதிக்க, ஆயிரக்கணக்கானோர் கிணற்றில்  விழுந்து  மடிந்து போனார்கள்…

குடி நீர் தேவையை  ஒருகாலத்தில் கிணறுதான்  மக்களில்   வாழ்வாதாரத்துக்கு பலமாக  பாலமாக இருந்தது.. ஆனால் இன்று நீர் மோட்டர் வருகைக்கு பிறகு கிணறுகளின் பயண்பாடு  பெருமளவில் குறைந்து கால ஓட்டத்தில் முற்றிலும் காணமல் போய்க்கொண்டு இருக்கின்றது…

எனக்கு மிகவும் பிடித்த கிணறு கொல்லை  புறத்தில் என் அத்தை வீட்டில் இருந்தது… மழை அதிகம் பெய்தால் கையால் மக்கால் மொண்டு குளிக்கலாம் அப்படி பட்ட கிணறு ஒரு நாளில் அதனை தூர்த்து செப்ட்டிக் டேங்காக மாற்றி விட்டார்கள்.


நிறைய  நன்மை செய்த கிணறுகளால் பெரிய மைனசும் இருந்து இருக்கின்றன……மனம் உடைந்தவர்களுக்கு  உடனடி தற்கொலைக்கு   ஏற்ற இடமாக பல கிணறுகள் இருந்து இருக்கின்றன.

சித்ரா என்பவர் தன் கணவருடம் ஏற்ப்பட்ட கருத்து மோதலால் தன் ஒரு வயது பிள்ளையுடன் இரவு ஒன்பது மணிக்கு  கணாமல் போனார்… இரண்டு தினங்களாக தேடாத இடம் இல்லை…, ஊர் மக்களுக்கு  ஒருடவுட் ஒருவேளை கிணற்றில்…..-?எங்கள்  ஊரில் பழனிபிள்ளை மோட்டர் கொட்டகைக்கு அருகில் ஒரு பெரிய கிணறு இருந்தது… 

தோட்டகாவலாளி குடும்பத்திடம் ஊர்காரர்கள்  விசாரித்த போது இரண்டு நாளைக்கு முன்ன நைட்டு டொம்முன்னு சத்தம் கேட்டுச்சி, தேங்கா விழுந்து இருக்கும்னு துங்கிட்டோம்… என்று சொன்ன அடுத்த வினாடி ஐஸ் வியாபாரம் செய்யும் கண்ணன்  மற்றும் இளசுகள் இரண்டு பேர் குபிர் என்று  கிணற்றில்  குதித்தார்கள்..

முதல் முழுகலில் வெளியே வந்தார்கள்… ஆனால்  நேரம் கழித்து கண்ணன் நீருக்கு  வெளியே வந்த போது அதிகமாக மூச்சிரைத்தார்… திரும்ப மூச்சை இழுத்துக்கொண்டு கீழே  தண்ணீருக்கு அடியில் போனார். சித்ரா  ஒன்றரை வயது குழந்தையை  துண்டால் மார்பில்  இருக்க கட்டி , காலில் கல்லை கட்டிக்கொண்டு குழந்தையை இறுக்க கட்டி பிடித்தபடி இறந்து  போய்  இருந்தார்.

உயிர் வாழ   நீர் கொடுக்கும் கிணறுகள் இது போன்ற பல சோகங்களை தன்னுள் மறைத்தபடி உலகமெங்கும் நிசப்தமாய் சலனமற்று  இருக்கின்றன.


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

11 comments:

 1. The final closure with JACKIE"s touch. In one tamil proverb- Ponnoda gunam kinathu papakkam pona therum enbargal ( Not bath )

  ReplyDelete
 2. வெறும் கிணறை வைத்து இவ்வளவு அழகான பதிவா? அடுத்த ரவுண்டு ஆரம்பிச்சீட்டீங்களா...நானும் திருமானிக்குழி சிவன் கோயிலுக்கெல்லாம் போயிருக்கன்

  ReplyDelete
 3. எங்கள் வீட்டு தோட்டத்திலும் ஒரு கிணறு இருந்தது ! அதில் மார்கழி மாத அதிகாலையில் வாளியை விட்டு தலையில் ஜில்லென்று தண்ணீர் கொட்டிகொள்ளும் சுகம் வார்த்தைகளால் விவரிக்க முடியாது முதலில் கயிறு கொண்டு இறைத்தோம் பின்பு டயரில் இருந்து பெறப்பட்ட வாரில் இருந்து நீர் எடுத்தோம் ! பிள்ளையார் சதுர்த்தி முடிந்த பின் எங்கள் வீட்டு பிள்ளையார் ஜல சமாதி அடைவதும் எங்கள் வீடு கிணற்றில் தான். சில நேரங்களில் பாத்திரம் துலக்கும்போது தவறி கிணற்றில் விழுந்தால் நான் உள்ளே இறங்கி எடுத்து தருவேன் சில சமயங்களில் இதுபோன்ற பாத்திரங்களை எடுக்கவென்றே ஒரு இரும்பு கொத்து வைத்திருப்பார்கள் !! தற்போது அதன் பெயர் மறந்து போய் விட்டது !

  ReplyDelete
 4. கிணறு பற்றி விரிவாக எழுதி இருக்கிறீர்கள் மடிப்பாக்கத்தில் எங்கள் வீட்டில் இன்றும் கிணறு உண்டு..
  காணாமல் போன கிணறுகள் என்று ஒரு சிறிய பதிவை கடந்த ஆண்டு எழுதி இருந்தேன்.
  கிணற்றில் குதித்துக் குளிப்பது ஒரு சுக அனுபவம்.

  ReplyDelete
 5. முரளிதரன், டிஎன் முரளிதரன் இரண்டு பேருக்கும் என் நன்றிகள்.

  ReplyDelete
 6. நன்றி கலியபெருமாள் பாண்டிச்சேரியில எங்க?

  ReplyDelete
 7. நன்றி ராஜவேலு... அது பேர் பாதாளசுரடு என்பார்கள்.

  ReplyDelete
 8. பாதாள சுரடு பற்றி நினைவூட்டியமைக்கு நன்றி ஜாக்கி ! நான் கூட பாண்டிச்சேரி தான். முதலியார்பேட்டையில் என் வீடு உள்ளது. நீங்கள் கடலூர் செல்லும் போது சமயம் கிடைத்தால் என் வீட்டிருக்கு வரவும். எனது மொபைல் நெம்பர் 9894720388.

  ReplyDelete
 9. நாம் சாதாரணமாக நினைக்கும் கிணறுபற்றி இவ்வளவு உணர்வு பூர்வமாக பதிவு ?நீங்கள் அனுபவித்ததை நானும் அனுபவித்து இருக்கிறேன் ஆனால் இப்படி ஒரு அழகான பதிவு போடமுடியும் என்று நினைத்தும் பார்க்கவில்லை.பாதாள கரண்டி என்று சொல்வார்கள் ஒருசென்ட் இரண்டு சென்டில் வீடு கட்டும் இன்றைய நகர வாழ்வில் கிணறு என்பதே கனவாய் போய்விட்டது நீங்கள் திருப்பூர் வந்தால் சந்திக்க விரும்புகிறேன் செல் 9486645545

  ReplyDelete
 10. கிணறுபற்றி விரிவாக எழுதியிருக்கின்றீர்கள்.

  எங்கள் கிராமத்து வீடுகளில் இப்பொழுதும் கிணறுகள் இருக்கின்றன. கைகளால் அள்ளுவதில்லை மோட்டார் வைத்து இறைத்துக்கொள்கிறார்கள்.

  அறுபது பாகை என்று சொல்லும் ஆழக்கிணறுகளும் இருக்கின்றன.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner