ஜட்கா வண்டிகள் (கால ஓட்டத்தில் காணமல் போனவைகள்/26)எழுத்தாளர் அசோகமித்திரன்
எழுதிய  ஒரு பார்வையில் சென்னை நகரம் புத்தகத்தில் ஜட்கா வண்டிகள் பெருமைகளை சொல்லி இருக்கின்றார்.. 

மோட்டார் வாகன பெருக்கத்துக்கு முன்  சென்னை மற்றும் தமிழ் நாட்டில் ஜட்கா வண்டிகள்தான் கோலோச்சிக்கொண்டு இருந்தன...

குதிரை வண்டிகளைதான் ஜட்கா வண்டி என்று அழைக்கின்றார்கள்... மாட்டு வண்டி, ஜட்கா வண்டி இரண்டும் அன்றைய மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றோரு இடத்துக்கு பயணப்பட சிறந்த வாகனமாக கருதப்பட்டது.

எனக்கு மாட்டு வண்டிகளைவிட  ஜட்கா வண்டிகள்தான் எனக்கு பிடிக்கும்...பண்ருட்டியில் இருந்து  லட்சுமி நாரயணபுரத்துக்கு என் சின்ன தாத்தா  எங்கைளை அழைத்து செல்ல மாட்டு வண்டி  ஓட்டிக்கொண்டு வந்து இருந்தார்...


பண்ரூட்டி பேருந்து நிலையத்தில் இருந்து  இரண்டரை கிலோ மீட்டர் இருக்கும் வீட்டுக்கு வண்டியில் ஏறி உட்கார்ந்து  மெல்ல ஆடி ஆடி சென்று  சேர்வதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது... இன்றைய டிஸ்கவர் 125யில் பறக்கும் போது இருக்கும் வேகம் அல்ல என்றாலும் அந்த காலத்தில் மாட்டு வண்டி என்பது என்னை  பொறுத்தவரை ரொம்ப ஸ்லோ....மாடு குதிரை  போல வேகமாக ஓடாது... அசைப்போட்டுக்கொண்டு மிக சாவகாசமாக நடக்கும் சாட்டையில் இரண்டு அடி அடித்தால் சூத்தை இரண்டு ஆட்டு ஆட்டி வேகமாக  செல்வது போல பாவனை ஏற்ப்படுத்துமே ஒழிய அது வேகமாக  செல்லாது. நடந்து செல்வதான வேகத்தில்   செல்வதால்  எனக்கு அவைகளை பிடிக்காது.


ஆனால் ஜட்கா வண்டிகள்  அப்படி அல்ல... வேகமாக செல்லும்.. காரணம் குதிரை வேகமாக ஓடும்... அதனாலே ஜட்கா வண்டிகள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் ... அந்த வயதில் வேகம்  என்பதுதான் முக்கியம். அப்பா எங்களை கடலூர் கூத்தப்பாக்கத்தில் இருந்து கடலூர் தேவனாம்பட்டிணம்  சில்வர் பீச்சுக்கு ஜட்கா வண்டிகளில் நான்  நிறைய முறை பயணப்பட்டு இருக்கின்றேன்.


மாட்டு வண்டியை விட வேகமாக செல்லும் எதாவது மாட்டு வண்டியை நான் பயணப்படும் ஜட்கா வண்டி கிராஸ் செய்தால் சந்தோஷத்தில் மனம் கூத்தாடும்.

  அம்மா வைத்துக்கொள்ளும் பெரிய பொட்டு ஷேப்பில் இருக்கும் பிரிட்டானிய பிஸ்கெட் பாக்கெட்டை வாங்கி  கையில் திணித்து விடுவார். பீச் போய் விட்டு வீடு வரும் வரை அந்த பாக்கெட்டை  தின்று  தீர்க்க முடியாது. அதனால் ஒவ்வோரு மின் கம்ப்த்தை ஜட்கா வண்டி கடக்கும் போது பிரிட்டானிய பிஸ்கெட்டை  தூக்கி போட்டுக்கொண்டு வருவேன்


லாரன்ஸ் ரோட்டில் பனாரஸ் ஸ்விட் கடையில்  இருந்து கடலூர்  எம்போரியம் கடை வரை எதிரே இருக்கும் ரயில்வே குவார்ட்டர்ஸ் மதில் சுவர் ஓரம் ஜட்கா வண்டிகள் அதிகம் இருக்கும். கடலூர் எம்போரியத்துக்கும் பன்பாரி மார்கெட்டுக்கும் நடுவில் குதிரை லாயம் ஒன்று இருந்தது.. அஇதில் குதிரை தண்ணீர் குடிக்க தொட்டி கட்டி இருந்தார்கள்....

கடலூர் ஓடியில் ரயில் நிலைய  மதில் சுவர் ஓரம் ஜட்கா வண்டிகள் ஸ்டான்ட் இருந்தது. பண்ரூட்டியில் விஜயா தியேட்டர் அருகில் ,நெல்லிகுப்பத்தில் தற்போதைய போலிஸ்ஸ்டேஷன்   பேருந்து நிறுத்தம் அருகில் என்று நிறைய இடங்களில் கோலோச்சியது..


சென்னையியில் வால்டாக்ஸ்  சாலை தொடக்கத்தில் தென்னகரயில்வே தலைமையக கட்டிட மதில் சுவர் ஓரம் ஜட்கா வண்டிகள் இருந்தன.... பொதுவாக ஜட்கா வண்டிகள் எல்லா ஊரிலும் ரயில்வே நிலைய மதில் சுவரை ஓட்டியே தன்  ஜாகையை வைத்து இருந்தன.. காரணம் பயணிகள் மட்டும் மூட்இ முடிச்சி சவாரி அதிகம் அங்கு கிடைக்கும் என்பதும்  அக்காலத்தில் ரயில் பயணத்தையே மக்கள்  பெரிதும் நம்பி இருந்தார்கள் என்பதால்.,


1960களில் 50க்கு மேற்ப்பட்ட ஜட்கா வண்டிகள் சென்னை வால்ட்டாக்ஸ்  சாலையில் வரிசைகட்டி நின்றன... இன்று எப்படி கால்டாக்சி,  ஆட்டோ டிரைவர்கள் சென்ட்ரல் நிலைய வாசலில் சவாரி பிடிக்க நின்று இருக்கின்றார்களோ? அது போல அந்தகாலத்தில் ஜட்கா வண்டிக்காரர்கள் பயணிக்ளை மொய்த்துக்கொண்டு உண்டு இல்லை என்று பண்ணி விடுவார்களாம்.....சென்னை தெருக்களில் டிராம் வண்டிகள்  கோலச்சிக்கொண்டு இருந்த போது ஜட்கா வண்டிகள்த்தான் கொடிகட்டி பறந்து இருக்கின்றன...சென்டரலில் மட்டும் 50 வண்டிகள் என்றால் நகரின்  பிறபகுதிகளில் எத்தனை வண்டிகள் இருந்து இருக்கும் என்று கணக்கு போட்டுக்கொள்ளுங்கள்...எனக்கு  தெரிந்து அன்றைய மக்கள்தொகையை வைத்து கணக்கு பார்த்தால் 300  ஜட்கா வண்டிகளாவது சென்னை நகரில் இருந்து இருக்கும் ஆனால் இன்று மூன்று வண்டிகள்தான் இருக்கின்றன...
 இரண்டு வண்டிகள் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் எவரெஸ்ட் ஓட்டல் அருகில் குதிரைலாயத்தித்தில் இரண்டு வண்டிகள் இருக்கின்றன... எப்போது பார்த்தாலும் அந்த  இரண்டு ஜட்கா வண்டிகள்  வானத்தை  பார்த்து அண்ணாந்து, வாய் பிளந்தபடியே நிற்கின்றன.  ...மற்றது அதே சென்னை சென்ட்ரல் பக்கத்தில் இருக்கும் வால்டாக்ஸ் சாலை தொடக்கத்தில்  தென்னக ரயில்வே தலைமையக  கட்டிடத்தின் மதில் முனையில்  இருக்கின்றது....அர்ஜூனன் என்பவர் அந்த ஜட்கா வண்டி ஓட்டி வருகின்றார்... 
அவருக்கு வயது 67....


ஒரு  நிகழ்ச்சியின் பேட்டிக்காக மூன்று நாட்கள் அலைந்து   அவரை சந்தித்தேன்...


அண்ணே வணக்கம்...உங்க பேரு..?


அர்ஜூனன், வயசு 67 ஐயா.


எந்த வயசுல இந்த தொழிலுக்கு வந்திங்க...?


 பத்து வயசுல இந்த தொழிலுக்கு எங்க அப்பாரோட வந்தேன் ஐயா.உங்க தொழில் அனுபவத்தை பத்தி  சொல்லுங்க...?


எனக்கு வயசு 67 ஆகுதுங்க... எவரெஸ்ட் ஓட்டல் பக்கத்துல இருக்கற லாயத்துல இருக்கற வண்டிங்களை இப்ப அவுங்க பசங்க பார்த்துக்கறாங்க....ஆனா 67 வருஷமா இந்த  ஜட்கா வண்டியை இந்த ஏரியாவுல ஓட்ற ஓரே ஆள் நான்தான்.. .


50 வண்டிங்க மேல இருந்துச்சி, கவர்மென்ட் ஆட்டோ வண்டிங்க பஸ்சுங்க,பெருக்க சொல்ல குதிரை வண்டி, மாட்டு வண்டி ரோட்டுல ஓட்டக்கூடாதுன்னு கவர்மென்ட் சட்டம் போட்டுச்சு  அப்ப  இந்த வால்டாக்ஸ் ரோட்டு குரிரைலாயத்தையும் எடுக்க சொல்லிடுச்சி.... பல வருஷமா தொழில் செஞ்ச பல பேரு நடுத்தெருவுல நின்னோம்.

சரி... எவரெஸ்ட் ஓட்டல்கிட்ட மட்டும் எப்படி இன்னும் குதிரை லாயம் இருக்கு..?

ஐயா அவரு, அந்த குதிரை  லாயத்தை ரெஜிஸ்டர் பண்ணி வச்சி இருந்தாங்க... லாயத்தை எடுக்க  சொன்னப்ப  ரசிது எல்லாம் கட்டினாரு... கோட்ல கேஸ்  போட்டாரு... அதனால  கோட் அதை எடுக்க கூடாதுன்னு சொல்லிடுச்சி..
சரி இன்னும் இந்த தொழில் பார்க்கறிங்களே? வருமானம் எப்படி?
வருமானம் முன்ன போல கிடையாது ஐயா ,ஒரு நாளைக்கு 100 ரூபாய் தேத்தறது செம கஷ்ட்டம்.அனா அன்னைக்கு பணம் கையில பொறண்டுச்சி.. எங்கைளை விட்டா இந்த சனத்துக்கு நாதியில்லை... ஆனா இன்னைக்கு அப்படியா?


உங்க குடும்பத்தை பத்தி சொல்லுங்க..?


எனக்கு ரெண்டு சம்சாரம் எட்டு பசங்க.. மூனு பசங்க இறந்து  போச்சிங்க.. இப்ப 5 பசங்க இருக்கறாங்க..


உங்களுக்கு வீடு எங்க.?


பக்கிம்காம் காவா  ஓரமா, பெரிய ஆஸ்பித்திரிக்கு  பின்னாடி பக்கம்  காந்திநகர் இருக்கு அதுலதான் இருக்கேன்.. அர்ஜூனன் அப்படின்னு சொன்னா சின்ன குழந்தை கூட என் வீட்டை காமிச்சிடும்...

தண்ணி சாப்பிடுவிங்களா?


முன்னாடி சாப்பிட்டேன்... இப்ப இல்லை..  எல்லாம் கலப்பட சரக்கா இருக்கு..
பீடி சிகரேட்-?


முன்னாடி புடிச்சேன்....அதுவும் இப்ப இல்லை வயசாகுது இல்லை... நம்ம உடம்பை நாமதானே பார்த்துக்கனும்..


50 ரூபாய் பணத்தை கொடுத்து  டீ சாப்பிட சொன்னேன்......முகம் மலர்ந்து அர்ஜுனன் வாங்கிக்கொண்டார்.


இரண்டு நாட்கள் கழித்து அவரை பார்க்க  சென்ற போது, அவர் இல்லை விசாரித்த போது உடம்பு சரியில்லை வீட்டில் இருப்பதாக தகவல் கிடைத்தது... ஆனால் குதிரையும் வண்டியும் அங்கேயே இருந்தது...யாராவது சவாரிக்கு வந்தால் அவுங்க  தம்பி பையன் ஓட்டுவார் என்றார்கள்... குதிரை சின்ன  குதிரைதான்...12 மணிவெயிலில்  காய்ந்த போன புல்லை தின்றுக்கொண்டு இருந்தது...ஆனால் குதிரையின் ஆண்குறி  ஒன்றரை அடி நீளத்துக்கு சிட்டுக்குருவி லேகியம் சாப்பிடாமலே தொங்கிகொண்டு இருந்தது 12 மணி கத்திரி வெயிலில் அதுக்கு என்ன பிலிங்கோ...????? ஆனால்ஒரு போன் பண்ணி விட்டு திரும்பினேன்... தரையில் விழுந்து புரண்டது...இப்போது பார்த்தால் அந்த ஒன்றரை அடி எங்கே போனது என்று தெரியவில்லை...,,,,??கர்ந்தி நகருக்கு செல்ல முடிவெடுத்தேன்.... பூங்கா நகர் ரயில் நிலையம் பின்புறம்  வெள்ளைக்காரர்கள் கல்லறை தோட்டம் நிறைய இருக்கின்றது... அதை ஒட்டி அந்த குடியிருப்பு இருக்கின்றது...  அந்த ஏரியாவில் கொஞ்சம் வசதி படைத்தவர்கள் கல்லு வீடும் மற்ற்றவர்கள் வரிசையாக ஆஸ்பெட்டாஸ் ஷீட் போட்ட வீட்டில் இருக்கின்றார்கள்...பெரும்பாலும் காந்திநகரில் இருப்பவர்களின் தொழில் ஆட்டோ ஓட்டுவதாகவே இருக்கின்றது...தெருவுக்கு தெரு  மாட்டிரைச்சி  கடைகள் இருக்கின்றன... மிக பிரமாண்ட சதையோடு  மாட்டுக்கறி தொங்கிக்கொண்டு இருக்கின்றது... மூன்று நான்கு கழிவறைகள் அரசு கட்டிக்கொடுத்தும் அதை பயண்படுத்தாமல் அதை நாஸ்தி செய்து தெருவில் ஆய் போய் இருக்கின்றார்கள்.. நாற்றம் குடலை புடுங்கி தள்ளியது.. பத்துக்கு பத்தடி வீட்டில் பாத்திரம் கழுவி குளித்து பக்கத்திலேயே பாய் போட்டு படுத்து கொள்கின்றார்கள்... அந்த வாழ்க்கையை பார்க்கும்  போது மனம் ஆடி விட்டது... 


உச்சிவெயில் மண்டையை பிளக்கும் போது  காந்தி நகர் உள்ளே சென்றேன்...சின்ன சின்ன சந்துகள்... மனிதர்கள், மனிதர்கள்... விளிம்பு நிலைமனிதர்கள்.. தெருவுக்கு தெரு இயேசு  ரட்சிப்பார், இயேசு வருகின்றார் நல்லவர் என்று வாசகங்கள்... ஆனால் இயேசு அவர்களையும் அவர்கள்  வாழ்க்கையையும்  ரட்சித்தது போல  தெரியவில்லை...


அர்ஜூனன் சொன்னது போல சின்ன குழந்தைக்குகூட அவரை தெரிந்து இருக்கின்றது... சரி காந்திநகர் என்றால் உங்களுக்கு சற்று குழப்பாமாக இருக்கும்.. சில மாதங்களுக்கு  முன்பு சென்னையில் ராணுவ அதிகாரி வீட்டில்  பாதம் பழம் எடுக்க  சென்ற பையனை சுட்டு சாகடித்தார்களே  நினைவு இருக்கின்றதா? அந்த ஏரியாதான்... அவர் வீட்டில் படுத்து இருந்தார் .. அவர் மனைவி வெளியே இருந்த அடுப்பில் குழம்பை கொதிக்க விட்டுக்கொண்டு இருந்தார்....முதல் மனைவியா ரெண்டாவது மனைவியா என்று டவுட் எனக்கு வந்தது.. இப்ப ரொம்ப முக்கியம் என்று என் மனதை அடக்கினேன்.


கலர் எதாவது வாங்கியாரட்டா , இல்லை காபிதண்ணி  போடட்டுமா-? என்றார்கள்.. ஏதுவும் வேண்டாம் என்றேன்... அவருக்கு மிகவும் சந்தோஷம் 100 ரூபாய் பணம் கொடுத்து உடம்ப்பை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு வந்து விட்டேன்.


இரண்டு நாட்கள் கழித்து அவரை சந்தித்தேன்... 

இந்த பரபரப்பான சென்ட்ரலில் மேலும் பரபரப்பான விஷயம் ஏதாவது நடந்து இருக்கா என்றேன்...?


நெறைய நடந்து இருக்கு...1996ன்னு நினைக்கிறேன்...17டி பஸ் நேரா பிரிட்ஜிலர்ந்து நேரா பார்சல் ஆபிஸ்ல இருக்கற மலபாருக்கு  போற மீன்,ஒரு பூக்கார அம்மா எல்லாரையும் நசுக்கிட்டு 11 பிளாட்பாரத்துல முட்டிக்கிட்டு நின்னுச்சி, அப்பாலிக்கா 18கே சென்ட்ரல் மதில் சுவத்தை இடிச்சிக்கிட்டு உள்ளே போயிடுச்சி.. அப்புறம் ஒரு நேபளக்காரன் கிளாக் டவர்ல ஏறிக்கினு தற்க்கொலை பண்ணிக்கபோறேன்னு மிரட்டல் விட்டான்., அப்புறம் ஒரு புக் கடை  எறிஞ்சி போச்சி,


சவாரி எங்க எல்லாம் அப்ப போவிங்க.. ?

சவுக்கார்  பேட்டை, பீச்சி, செத்தக்காலேஜ், உயிர்காலேஜ்,மியூசியம் எக்மோர் ரயில்வேஸ்டேஷ்ன் என்றார்...


வால்டாக்ஸ் ரோட்டின் முனையில் இன்னமும் தன் குதிரையோடு அர்ஜூனன் சவாரி எதிர்பார்த்து  நம்பிக்கை தளராமல் இன்மும் காத்துக்கொண்டு இருக்கின்றார்...


30 வருடங்க்ளுக்கு முன் குதிரை வண்டியில் பயணபட்டு இருக்கின்றேன்... வெகு நாட்களுக்கு பிறகு நானும் எனது கேமராமேன் நண்பர் தாமஸ்சும் அவர் வண்டியில் ஏறினோம்.. முன்பாரம்  சரியாக இருக்க முன்னே நகர்ந்து வர சொன்னார்... 50 ரூபாய் சவாரி தொகையை முன்னாடியே கொடுத்து விட்டேன்..தென்னகரயில்வே தலைமைசெயலக கட்டிட வளாகத்தை ஒரு ரவுண்ட் அடித்தோம்... சிறுவயதில் அப்பா அம்மாவோடு குதிரை வண்டியில் பீச்சுக்கு போன நியாபகம் என் நெஞ்சில் நிழல் ஆடியது... நிறைய மின் கம்பங்கள் என்னை கடந்து போயின.. ஆனால் கம்பத்துக்கு கம்பம் பிஸ்கெட் வீச என்னிடத்தில் பிரிட்டானியா   பொட்டு  பிஸ்கெட்  இல்லை.பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

15 comments:

 1. மாட்டிரைச்சி Is it a new tamil word?

  ReplyDelete
 2. நீர் சுஜாதா மாதிரியே எழுதுகிறீர் , அவராக இருந்தால் "குதிரைக்கு மட்டும் பீம புஷ்டி லேகியம் நிறைய குடுப்பார் போலும்" என்று எழுதியிருப்பார்.

  ReplyDelete
 3. திருச்செந்தூரில் பேரூந்து நிறுத்ததிலிருந்து கோவில் வரை செல்ல ஜட்கா வண்டிகள் நிறைய உண்டு. தற்சமயம் கோவில் வாசல் வரை பேரூந்துகள் செல்வதால் ஜட்கா குறைந்து போய் ஒன்றிரண்டு இருக்கிறது என்று நினைக்கிறேன். ஜட்கா பட்டைகள் shock observer மாதிரி செயல்படுவதால் மாட்டு வண்டியை விட இது சொகுசாக இருக்கும்

  ReplyDelete
 4. super Jackie.very nice heart with you.wish u long live to give some social anomalies in our society to your valued readers like me>uma

  ReplyDelete
 5. உங்களுடைய பதிவு அனைத்தும் மனதைத் தொடுவதாக உள்ளது..சொல்வதற்கு மன்னிக்கவும்..நிறைய எழுத்துப் பிழைகள் உள்ளன.திருத்தவும்...

  ReplyDelete
 6. இல்லைங்க...காலையில அவசரத்துல ஆபிஸ் போற ஜோர்ல அப்படியேபோட்டு விட்டேன். பிரகாசம்

  ReplyDelete
 7. நீர் சுஜாதா மாதிரியே எழுதுகிறீர் ,//ஏன் வெற்றி நல்லாத்தானே போயிக்கிட்டு இருக்கு.

  ReplyDelete
 8. நீங்கள் சொல்வது உண்மைதான் பொன்சந்தர்.

  ReplyDelete
 9. நன்றி ஜோதிடம், மற்றும் கலியபெருமாள்...நேரம் கிடைக்கும் போது பிழை திருத்துகின்றேன். நன்றி.

  ReplyDelete
 10. செயின்ட் தாமஸ் மவுண்ட் ஸ்டேஷனில் முன்பெல்லாம் குதிரை வண்டிகள் இருக்கும். அங்கும் ஒரே ஒருவர் வைத்திருப்பதாக ஏதோ ஒரு பத்திரிகையில் படித்தேன்.

  ReplyDelete
 11. Good article. For writing a good article you went and met people and took interview. good. keep it up...

  ReplyDelete
 12. அருமையான கட்டுரை. காலம் மாறும் போது அவரவர் தொழில்களையும் அதற்கேற்ப மாற்றி கொள்ள வேண்டும். ஆனால் ஓர் குறிப்பிட்ட வயதை தாண்டி விட்டால் மாற்றங்களை ஏற்று கொள்ள முடியாத இல்லை ஏற்று கொள்ள பயப்படும் நிலை வந்து விடுகிறது. அர்ஜுனனின் நிலை மன வருத்தத்தை உண்டு பண்ணியது.

  பல வருடங்களுக்கு முன் ராமேஸ்வரம் சென்ற போது, அதிகபடியான குதிரை வண்டிகளை பார்த்ததாக ஞாபகம், இப்போது நிலைமை எப்படியோ!

  ReplyDelete
 13. அருமையான கட்டுரை. காலம் மாறும் போது அவரவர் தொழில்களையும் அதற்கேற்ப மாற்றி கொள்ள வேண்டும். ஆனால் ஓர் குறிப்பிட்ட வயதை தாண்டி விட்டால் மாற்றங்களை ஏற்று கொள்ள முடியாத இல்லை ஏற்று கொள்ள பயப்படும் நிலை வந்து விடுகிறது. அர்ஜுனனின் நிலை மன வருத்தத்தை உண்டு பண்ணியது.

  பல வருடங்களுக்கு முன் ராமேஸ்வரம் சென்ற போது, அதிகபடியான குதிரை வண்டிகளை பார்த்ததாக ஞாபகம், இப்போது நிலைமை எப்படியோ!

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner