தாய்மை




இன்று அண்ணா சாலையில்
 தலைமை தபால் நிலையத்தில்  ஒரு அனுமதிக்கடிதத்துக்காக வெயிட் செய்து கொண்டு இருந்தேன்.

நான் கொடுத்த கடிதத்தை அவர்கள் தொலைத்து விட்டார்கள்... தேடிக்கொண்டு இருந்தார்கள்.. அந்த  சீட்டில் இருக்கும் பெண்மணி சேல்ஸ் விஷயமாக வெளியே  சென்று இருந்தார்.

 அந்த சீட்டில்  இருந்த வேறு ஒரு பெண்மணி   நான் கொடுத்த கடித நகலை வெகு நேரம் தேடிக்கொண்டு இருந்தார்...

 சிறிது நேரத்தில் ஒரு பெண்மணி 45 வயதுக்கு மேல் இருக்கும்...அவராக வந்தார் .... தேடிக்கொண்டு இருந்த பெண்ணிடம்  விஷயம் கேட்டார்..  என்னிடம் தகவல் பெற்றார்....அவரால் முடிந்த அளவுக்கு உதவி செய்து அந்த  கடிதத்தை தேடிக் கண்டுபிடித்துக்ககொடுத்துவிட்டார்... 

ஆனால் அவரை பார்க்க  பார்க்க என்னுள் இனம் புரியாத சிலிர்ப்பு... நான் அவருக்கு நன்றி  சொன்னேன்... தப்பா நினைத்துக்கொள்ள வில்லை என்றால் ஒன்று  சொல்லலாமா?  என்றேன்..

 சொல்லுங்க....

நீங்க  எங்க அம்மா போல இருக்கிங்க...

அவர்  கண்களில் ஆச்சர்யம்..

இத்தனை வருடத்தில் நான்  பல ஊர் சுற்றி இருக்கின்றேன்... நிறைய பேரை சந்தித்து இருக்கின்றேன்.. எங்க  அம்மா சாயலில் இதுவரை எந்த பெண்மணியையும் நான் இதுவரை பார்த்தது  இல்லை... கொஞ்சம் சதை போட்டால் நீங்க  என் அம்மாவேதான்...40 வயதில்  எங்களை விட்டு  போய்  விட்டார் ... எங்க அம்மாவுக்கு நாங்க அஞ்சு பேர் என்றேன்...

மலர்ச்சியாக அப்படியா என்றார்.....

எங்க அம்மாவும் உங்களை போலத்தான் முடிந்த அளவுக்கு உதவிகள்  செய்வார்...என்றேன்..

 அவர்  மிகவும்  சந்தோஷபட்டார்...

உங்க பேர்...

சாவித்திரி...இப்பதான் நானே கொஞ்சம் எலச்சி இருக்கேன்....பையன் அமெரிக்காவில் இருக்கின்றான் என்றார்...

ரொம்ப நன்றிங்க... கடிதத்தை தேடி கொடுத்தமைக்கு.... 

உங்களை பார்த்த பிறகு ஒரு இனம் புரியாத உணர்வு....ஒரு சிலிர்ப்பு எங்க அம்மா மேனாரிசம் உங்க கிட்ட நிறைய.... ஒரு அரசு துறை அலுவலகத்தில் எங்க அம்மா வேலை செஞ்சா எப்படி இருக்கும்ன்னு கற்பனை பண்ண வேண்டியதே இல்லை.... அப்படியே இருக்கிங்க... சான்சே இல்லை...திரும்பவும் ரொம்ப நன்றிங்க என்றேன்..


 என் அம்மாவை போலவே முக மலர்ச்சியுடன்  அந்த பெண்மணி...ச்சே அந்த அம்மா.......எப்ப வேணா வாங்க என்று சொன்னார்...

அந்த கடிதத்தை பெற்று  விட்டால்  அந்த பக்கம் எனக்கு எந்த வேலையும் இருக்காது.....என்றாலும் எங்க அம்மா போல  நீங்க இருக்கிங்க என்று  நான் சொன்னதுக்கு  பதிலாக,   அந்த பெண்மணி தாய் பாசத்துடன் எப்ப வேணா வாங்க என்கின்றார்...


தாய்மை  என்பது சட்டென விட்டுக்கொடுக்காமல், சூழ்நிலை மறந்து  திடும் என  புரட்டி போடும் விஷயம்தான் என்பதை  உணர்ந்தேன்...

வயது வித்தியாசம் இல்லாமல் ஒரு  நிமிட கணத்தில்  அந்த பெண்மணியும் நானும்.... அம்மா பிள்ளையானோம்...



பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

10 comments:

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner