காலையில்
அலுவல் வேலை காரணமாக சென்ட்ரல் நோக்கி
சென்று கொண்டு இருந்தேன். கிண்டி
ஒலிம்பிய டவர் பின்பக்கமுள்ள லாசர்
தெருவில் ஒரு பெண்ணை சுற்றி பெரிய கூட்டம்....
என்னவென்று விசாரிக்கையில் பத்து
நிமிடத்துக்கு முன்ன இந்த பொண்ணு கழுத்துல இருந்த செயினை பறிச்சிக்கிட்டு
போயிட்டாங்க... பைக்காரனுங்க என்றார்... வேடிக்கை பார்த்தவர்..
எத்தனை பவுன் என்றேன்....
மூனு
பவுன்....
ஒரு
சவரம் 30 ஆயிரம் என்றால் 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செயினை பத்து நிமிடத்துக்கு முன்னால்
அடித்துக்கொண்டு போய் இருக்கின்றார்கள்.. வருங்கால தூண்கள்...
அந்த பெண் லாசர் தெருவுக்கு பின் பக்கம்
இருக்கும் ஹாஸ்டலில் தங்கி இருக்கின்றாராம்.. ஒலிம்பிய டவரில் உள்ள வேரியன் கம்பெனியில் வேலை செய்வதாக அவரது ஐடி தெரிவித்தது...
வேலைக்கு கிளம்பி பவுடர் ஈரம் காய்வதற்குள்
மூன்று பவுனை பறிகொடுத்து விட்டு மலங்க மலங்க விழிக்கும் அந்த பெண்ணை பார்க்கையில்
பரிதாபமாக இருந்தது.
இரவு நேரம் செயின்
அடித்து விட்டான் என்றால் கூட மனம் சாந்தியடையும் .... பட்டபகலில் அதுவும்
காலை ஒன்பதே முக்கால் மணிக்கு செயினை அறுத்து சென்று இருக்கின்றார்கள்..
இத்தனைக்கும் அது பிசியான சாலை....
அந்த பெண்ணின் நேரம்.,.. அந்த நேரத்தில்
யாரும் இல்லை அந்த பெண் டிஎச்எல் பார்சல் சர்விஸ் நோக்கி
நடந்து வருகையில் இந்த சம்பவம் நடந்து
இருக்கின்றது... பெண்ணின் அலறல் சத்தம்
கேட்டு வண்டியை திருப்பினால் ஹெல்மெட்
அணிந்த படி ஹீரோ ஹோன்டா பேஷன் புரோவில்
சிட்டாக பறந்து விட்டானாம்.
சாமா
போன்ற ஒருவர் அந்த பெண்ணுக்கு ஆறுதல்
சொல்லிக்கொண்டு இருந்தார்...100க்கு அவர் சற்றுமுன்தான் டயல் செய்து
இருக்கின்றார்... அவருக்கு பல இணைப்புகளில் இருந்து போன் வந்துக்கொண்டே இருந்தது....
அந்த பெண்ணின் செயின் அறுத்து அந்த வெள்ளை கழுத்தை
சுற்றி காயம் இருந்தது... வீங்கி இருந்தது...
அந்த காயத்தை அந்த பெண் தடவி கூட பார்க்கவில்லை...
எதிர்பாராத
இந்த அதிர்ச்சியில் இருந்து அந்த பெண் மீளவில்லை., கூட்டம் சேர சேர ......டாமல் என்ற
வெடித்து அழுதார்.. எனக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகலை... நான் என்ன பண்ணறது என்று
வெடித்து அழுதார்,...
போலிஸ்
வந்தது அடுத்து ஏரியா இண்ஸ்பெக்டர் என்று போலிஸ் பட்டாளம் குவிய தொடங்கியது..
உண்மையில் காவல் துறையினரை பாராட்ட வேண்டும்... செயின் ஸ்நாட்சிங் நடந்த கால் மணி
நேரத்தில் அங்கே எட்டு போலிஸ்காரர்கள்
மாப்ட்டியில் நால்வர் என்று குவிந்தார்கள்..
பெண்ணை போலிஸ்
ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்து விட்டு தடயங்களை தேட ஆரம்பித்தார்கள்... பிளிஸ் டிராபிக் ஆவுது... கொஞ்சம் கலைந்து போங்க என்று
கோரிக்கை விடுத்தனர்...
நான்
அந்த பெண் கழுத்து வலியை மீறி எனக்கு
இன்னும் கல்யாணம் ஆகலை என்று சொன்ன போது எனக்கு இந்த சமுகத்தின் வரதட்சனை பேய்
மீது கோபம் கோபமாய் வந்தது... சின்ன சின்னதாக அவள் திருமணத்துக்கு நகை சேர்த்து
இருக்கலாம்...5 பவுன் பெண்டிங்கில் ஒரு திருமணம் அவளுக்கு தள்ளி போய்
இருக்கலாம்... வந்தவர்கள் அவள் உடம்பில்
கத்தி போன்ற கிழிச்சல்கள் செய்யாமல் ஓடினார்களே என்று ஆறுதலாக இருந்தது.
அந்த பெண் காலையில் எழுந்து பல் விளக்கும் போது
கூட தனக்கு இப்படி நேரும் என்று நினைத்துக்கூட பார்த்து இருக்கமாட்டார்.....குவிந்த போலிசார் குற்றவாளிகளை பிடித்தால் படிகாட் முனிஸ்வரனுக்கு ஒரு சூரைதேங்காய் உடைக்கலாம்... நடக்க பிரார்த்திப்போம்.
நகை போட்டு செல்லாதீர்கள் என்று சொன்னால்
யாரும் கேட்க போவதில்லை... ஆனால் தனியாக
பகலில் சென்றாலும் இரவில் சென்றாலும் ஹெல்மட் பைக்காரர்கள்.... பின்னால் முன்னால் வரும் போது இன்னும் கவனமாக இருங்கள் .....
போன் செய்துக்கொண்டே கவனமற்று நடக்காதீர்கள்...
உங்கள்
பெண் பிள்ளைகளிடம் இந்த விஷயத்தை பகிருங்கள்...
சென்ட்ரல்
அருகே வந்து ஒரு டீ சொன்னேன்...
எனக்கு
இன்னும் கல்யாணம் ஆகலை,... நான் என்ன பண்ணபோறேன் என்று தெரியலை என்று அழுதது
நினைவுக்கு வந்தது
டீ
யில் எந்த சுவையும் இல்லை..
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
super
ReplyDeleteதே பசங்க............... Sorry Jackie sir......... வேற என்ன சொல்றதுன்னு தெரியல.................
ReplyDeleteவருங்கால தூண்கள்!!
ReplyDeleteசட்டத்தில் உள்ள ஓட்டையால்தான் இத்தகைய குற்றங்கள் அதிகரிக்கின்றன.
ReplyDeleteஎன்ன பாஸ் பன்றது நம்மால அனுதாபம் மட்டுமே பட முடியும்
ReplyDeleteநகையை இழந்த பெண் பரிதாபத்துக்குரியவர்...
ReplyDeleteதிருடினவர்கள் செத்தாலும் திருந்தமாட்டார்கள்...
இவனுகளை எல்லாம் கட்டி வைத்து செருப்பால் அடித்தாலும் திருந்த மாட்டார்கள் ஜாக்கி அண்ணா...
சமூகத்தின் மீதும், மனிதத்தின் மீதும் ஆழ்ந்த வெறுப்பை உண்டாக்குகிறது இந்த மாதிரியான சம்பவங்கள். நாகரீக வாழ்க்கையின் அழுத்தமும் வெறுமையுமே இது போன்ற குற்றச்செயல்களை செய்ய வைக்கிறது. நம்மால் இது போன்ற தருணங்களில் இயலாமையின் பெருங்கோபத்தை மட்டுமே காட்ட இயலும். அந்த பெண்ணின் கலங்கிய முகம் என் முன்னால்.
ReplyDeleteஜாக்கிக்கே உரிய பரிவும் அக்கறையும் கோபமும் கட்டூரையில். இன்னும் சில நாட்களுக்கு நான் குடிக்கும் தேநீரிலும் சுவை இருக்காது. இது போன்ற சமூகத்தின் நச்சு பாம்புகளை என்ன தான் செய்வது !
இது இங்க (பிரான்ஸ்) சகஜமாகி விட்ட நிலை.
ReplyDeleteநம் தமிழ் நாட்டு பெண்கள் தாலியை கழுத்தில் அணியாமல் மஞ்சள் கயிறை மட்டும் கையில் நோம்பு கயிர் போல் சுற்றிக்கொள்கிறார்கள்.
கழுத்திலோ காதிலோ பவுன் கலரில் கூட நகை அணிவது கிடையாது.
இதை எங்கே போய் சொல்வது?
I feel really bad for that girl.
ReplyDeleteகாலை ஒன்பது மணி அளவில் நடந்து இருப்பது என்ன சொல்வது நீங்கள் சொல்வது போல் அவளுக்கு எந்த பாதிப்பும் உடல் அளவில் தோன்றது நன்மையே என்று நினைத்து கொள்ள வேண்டியது தான் ஒரு பெண் என்பவள் எப்படித்தான் இருக்க வேண்டும் பாதுகாப்பாக எதுக்குதான் பயப்பிடாமல் இருப்பது மரபாச்சி பொம்மையாய் தான் இருக்க வேண்டும் போல்
ReplyDeleteVery sad post. What else to say?
ReplyDeleteHi jackie, 3 poun Rs 60000?
ReplyDeleteHi jackie, 3 poun Rs 60000? calculation mistake.......
ReplyDeleteWhy the attraction to gold ornaments , It is an asset not to publicise
ReplyDeleteஎத்தனை பவுன் என்றேன்....
ReplyDeleteமூனு பவுன்....
ஒரு சவரம் 30 ஆயிரம் என்றால் 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செயினை???????
90 ஆயிரம் ரூபாய்
ஆச்சர்யமா இருக்கு. இன்னும் திருட்டு பசங்களுக்கு ஆதரவா அந்தப் பெண்ணின் மீதுதான் தவறு என்பது போலவும் ஒரு கருத்தும் வரவில்லையே. நாட்டில் கருத்து சுதந்திரம் செத்து விட்டதா? முரளிதரன் ஒரு சிறிய ஆரம்பத்தைக் கொடுத்திருக்கிறார், இருந்தாலும் இன்னும் கருத்து சுதந்திரம் அதிர வேண்டாமா?
ReplyDeleteFor some youths its easy money , if they cross a road they can see metrol rail labourers working hard to earn 200-250 per day . Eventhough its not girls mistake , as you said public has to be careful while walking . Really i feel sorry for that girl , it might be her 2-3 months salary , those bastards should be killed in an accident
ReplyDelete\\உங்கள் பெண் பிள்ளைகளிடம் இந்த விஷயத்தை பகிருங்கள்...\\ who cares jackie? unless oterwise gets burn!.
ReplyDelete\\Hi jackie, 3 poun Rs 60000?//
ReplyDelete\\எத்தனை பவுன் என்றேன்....
மூனு பவுன்....
ஒரு சவரம் 30 ஆயிரம் என்றால் 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செயினை??????? 90 ஆயிரம் ரூபாய்//
DO NOT NOTE THE VALUE OF CHAIN. JUST OBSERVE HIS ABSENCE OF MIND DEARS THAT'S WHAT HE TOLD HIS LAST LINE..
\\சென்ட்ரல் அருகே வந்து ஒரு டீ சொன்னேன்...
எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை,... நான் என்ன பண்ணபோறேன் என்று தெரியலை என்று அழுதது நினைவுக்கு வந்தது
டீ யில் எந்த சுவையும் இல்லை..//
நன்றி அருனா செல்வம்.... நம்ம ஊர்லதான் இப்படின்னு பார்த்தா பிரான்ஸ் இன்னும் கேவலமா இருக்கும்... இக்கரைக்கு அக்கரை பச்சைதான் போல..
ReplyDelete\\Hi jackie, 3 poun Rs 60000?//
ReplyDelete\\எத்தனை பவுன் என்றேன்....
மூனு பவுன்....
ஒரு சவரம் 30 ஆயிரம் என்றால் 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செயினை??????? 90 ஆயிரம் ரூபாய்//
DO NOT NOTE THE VALUE OF CHAIN. JUST OBSERVE HIS ABSENCE OF MIND DEARS THAT'S WHAT HE TOLD HIS LAST LINE..
\\சென்ட்ரல் அருகே வந்து ஒரு டீ சொன்னேன்...
எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை,... நான் என்ன பண்ணபோறேன் என்று தெரியலை என்று அழுதது நினைவுக்கு வந்தது
டீ யில் எந்த சுவையும் இல்லை..//
நன்றிங்க சேவியர் அந்த பெண் அழுத காட்சிதான் பதிவு எழுதும் போது கூட நினைப்புக்கு வந்ததேகோசரம் பவுனை கணக்கு போட கான்சடன்ட்ரேட் பண்ண முடியலை..
ஆச்சர்யமா இருக்கு. இன்னும் திருட்டு பசங்களுக்கு ஆதரவா அந்தப் பெண்ணின் மீதுதான் தவறு என்பது போலவும் ஒரு கருத்தும் வரவில்லையே. நாட்டில் கருத்து சுதந்திரம் செத்து விட்டதா? முரளிதரன் ஒரு சிறிய ஆரம்பத்தைக் கொடுத்திருக்கிறார், இருந்தாலும் இன்னும் கருத்து சுதந்திரம் அதிர வேண்டாமா?///
ReplyDeleteஅமரபாராதி.... செம டைமிங்....
காலை ஒன்பது மணி அளவில் நடந்து இருப்பது என்ன சொல்வது நீங்கள் சொல்வது போல் அவளுக்கு எந்த பாதிப்பும் உடல் அளவில் தோன்றது நன்மையே என்று நினைத்து கொள்ள வேண்டியது தான் ஒரு பெண் என்பவள் எப்படித்தான் இருக்க வேண்டும் பாதுகாப்பாக எதுக்குதான் பயப்பிடாமல் இருப்பது மரபாச்சி பொம்மையாய் தான் இருக்க வேண்டும் போல்//
ReplyDeleteநான் அப்படித்தான் நினைத்தேன் பூவிழி...பெண் பிள்ளை முகத்தில் கத்தியால் கித்தியால் கோடு போட்டு இருந்தால்...? தலைக்கு வந்துச்சி... தலைப்பாதையோடு போயிடுச்சி.
தன்னந்தனியாக சிட்டியில் நகை அணிந்துகொண்டு செல்லத்தான் வேண்டுமா? ஏன் பெண்களிடம் இந்த நகைமோகம்? சாதாரண கவரிங் நகை போடலாமே எதுவும் நடந்த பின் புலம்பி என்ன பிரயோஜனம்? பெண்களிடம் பொன்னாசை குறைய வேண்டும் இது போன்றவர்களால் அப்பா அல்லது கணவர்களுக்குதான் துன்பம்.
ReplyDelete