ayalum njanum thammil -2012 /பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்.




படம் எழுதுவதே குறைந்து போய் விட்டது...
அப்படியே எழுத உட்கார்ந்தாலும் நேரம் கிடைப்பதில்லை... அல்லது அன்று யாராவது அந்த படத்தை எழுதி விடுகின்றார்கள்.. அதனால் பார்த்த படத்தை பதிந்து விடுவோம்... டைம்பாஸ் படம்  எழுதி பல வருஷம் ஆகி விட்டது.

மலையாள படங்கள் நிறைய பார்க்கின்றேன்....  இதுவரை எத்தனை நல்ல படங்களை தவற விட்டு இருக்கின்றேன் என்று பார்க்கும் போது என் மீதே எனக்கு கோபம் கோபமாக வருகின்றது...  

நெகிழவைத்த திரைப்படங்கள் எவ்வளவோ இருக்கின்றன... ஆனால் அவைகள் எழுத நல்ல மனநிலை வேண்டும் ஏனோ தானோ என்று  அந்த படங்களை எழுதுவதில் எனக்கு உடன்பாடு இல்லை... 

அதனால் டைம்பாஸ் படத்தில் இருந்து  மலையாளபடத்தை ஆரம்பிப்போம்
லால் ஜோஸ் இயக்கத்தில் நடிகர் பிருத்திவிராஜ் நடித்த  ஆயாலும் நஜனும் தம்மில்..( எனக்கும் அவனுக்கும் இடையே) என்ற திரைப்படம் கேரளாவில் பிளாக்பஸ்டர் திரைப்படம்... அது பற்றி....

===========
ஆயாலும் நஜனும் தம்மில் படத்தின்  ஒன்லைன்.


அலட்சியமாக இருக்கும் போது ஒருவன் சந்திக்காத பிரச்சனைகளை நேர்மையாக   அவன் இருக்கும் போது சந்திப்பதே இந்த படத்தின் ஒன்லைன்.

=========
ஆயாலும் நஜனும் தம்மில் படத்தின் கதை என்ன?


பிருத்திவி, நரேன் ரெண்டு பேரும் டாக்டர்ஸ்க்கு படிக்கறாங்க.. ரொம்ப அலட்சியம் படிப்புல சின்சியாரிட்டி இல்லை...டாக்டர் தொழில் எவ்வளவு உயர்வான தொழில் என்று அறியாமல் அலட்சியமாக படிக்கின்றார்கள்... ஆனால்  கல்லூரி முடித்து மூனாரில் பிராதாப் போத்தன் நடத்தி வரும் மருத்துவமணைக்கு பணிக்கு பிருத்வி அவர் அப்பாவால் அனுப்பி வைக்கப்படுகின்றார்.. பிரதாப் போத்தனிடம் தொழில் கற்றுக்கொள்ளும் பிருத்திவி பல பிரச்சனைகளை அங்கே சந்திக்கின்றார்....  

அதன் பின் ஒரு சிறுமிக்கு  பெற்றோர் அனுமதி இல்லாமல் ஆப்பரேஷன் செய்ய, அந்த சிறுமி இறக்கின்றாள். அது கொலை பழியாக பிருத்வி மீது விழுகின்றது எப்படி அதில் இருந்து மீள்கின்றார் என்பது கதை.
=============
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

 இந்த படம் கேரளாவில் பிளாக் பஸ்டர் திரைப்படம்... எனக்கு பீல் குட்  இல்லாவிட்டாலும் இந்த படத்தை டைம்பாஸ் படமாக ரசிக்க முடியும்...

இந்த படத்தில் முதலில் நரேன் பாத்திரத்தில் குஞ்சக்கோ பூபன் நடிக்க கமிட் ஆகி இருந்தார்... தவிர்க்க முடியாத காரணத்தால் அவர் நடிக்காமல் போக  அந்த பாத்திரத்தை நரேன் செய்தார்.. நரேன்   நன்றாக நடித்து இருக்கின்றார்.

மருத்துவ தொழிலை உயர்வாக சித்தாரித்தாலும் அந்த துறையில் இருக்கும் தகிடுதத்தங்ளையும் சொல்லி இருக்கின்றார்கள்..

2008 இல் மிஸ் கேரளாவாக வாகை சூடி  தன் கேரியரை ஆரம்பித்த ரிமா கலிங்கல் பட்டையை கிளப்பிக்கொண்டு இருக்கின்றார்... இந்த படத்தில் பெரிதாய்  வேலை  இல்லை என்றாலும் ரீமாவிடம் ஏதோ ஈர்ப்பு இருப்பதை மறக்க முடியாது..



பிரதாப் போத்தனுக்கு காட்பாதர் கேரக்டர்.... நன்றாகவே செய்து இருக்கின்றார்...22 பிமேல் கோட்டயம் படத்தில் வில்லன் கேரக்டர் இந்த படத்தில் நல்லவன் கேரக்டர் நாட்  பேட்.
ஷம்ருதாசுனில் ரம்யா நம்பிசன் போன்றவர்கள் தத்தம் பணிகளை சிறப்பாகவே   செய்து  இருக்கின்றார்கள்.- வழக்கம் போல கலாபவன் மணி தன் பாத்திரத்தை முழுமையாக ரசித்து செய்து இருக்கின்றார்...  பிருத்திவி காலில் விழுந்து தன்  பிள்ளையை காப்பாற்ற மன்றாட சொல்லும் காட்சி அருமை.

பிருத்வி மேல் விசாரனை வைக்க அங்கே பிரதாப் போத்தன் வந்து தன் தரப்பை சொல்லி விட்ட செல்லும் அந்த காட்சி ஒரு உணர்வுபூர்வமான காட்சி...

2012 ஆம் ஆண்டு கேரளா அரசின் சினிமா விருதில் நான்கு விருதுகளை தட்டிசென்றது இந்த திரைப்படம் என்பது குறிப்பிடதக்கது...

  சிறந்த நடிகர் , சிறந்த இயக்குனர், சிறந்த படம்... போன்ற  விருதுகளை பெற்றது.

தான் செய்த தவறுக்கு வருந்தி  கலாபவன் மணி மகளுக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து அவள் கால் தொட்டு  சாரி  சொல்லி விட்டு வரும் காட்சி நெகிழ்ச்சி.

============
படத்தின் டிரைலர்..


=============
படக்குழுவினர் விபரம்.

Directed by Lal Jose
Produced by Prem Prakash
Written by Bobby Sanjay
Starring Prithviraj
Pratap Pothen
Narain
Samvrutha Sunil
Rima Kallingal
Remya Nambeesan
Music by Ouseppachan
Cinematography Jomon T. John
Editing by Ranjan Abraham
Studio Prakash Movie Tone
Distributed by Century Films
Release date(s)
19 October 2012
Country India
Language Malayalam
Box office 270 million


==============
பைனல்கிக்.
ஒருவேளை மலையாளிகளுக்கு இந்த படம்  பீல் குட் முவீயாக  இருக்கலாம்... எனக்கு இந்த படத்தை டைம்பாஸ் திரைப்படம் என்று  சொல்லலாம். ஆனால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்பதில்  மாற்றம் இல்லை...

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

4 comments:

  1. வேலைப்பளு அல்லது வேறேதோ பளு. உங்கள் சமீபத்திய விமர்சனங்கள் ஆழமாக இல்லை என்பது என் அன்பான அபிப்பிராயம்.தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. என்ன ஆச்சு ஜாக்கி?

    விமர்சனம் உங்க வழக்கமான தரத்தில் இல்லையே?

    ReplyDelete
  3. குறைந்த பட்ச நேர்மையாக இருப்பது எனக்கு பிடிக்கும்... அதனால் வடகரை அண்ணாச்சி ,மீனுக்குள்கடல் ரெண்டு பேர் கருத்தையும் மனப்பூர்வமாய் ஏற்றுக்கொள்ளுகின்றேன்....எழுதுவது குறைந்து விட்டது.. சிறப்பாக எழுத வேண்டும் என்று உட்கார்ந்து எழுத முடியாமல் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கின்றது... அதனால் முதலில் மனதில் தோன்றியதை எழுதுவோம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று எழுதிய மலையாள திரைப்படம் இது... இந்த படம் பலிகாடா என்றும் சொல்லலாம்.. இன்னும் நெஞ்சை தொட்ட படங்கள் நிறைய பார்த்து விட்டேன்.. அப்படியான படங்களை ஏனோ தானோ என்றோ? வந்தானுக்கு வந்தான் போனானுக்கு போனான் என்று எழுத மனம் ஒப்பவில்லை.... இன்னும் சிரத்தை எடுத்து எழுதுகின்றேன்... உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி... எழுது முடித்த பின் வாசித்து பார்த்தேன்... இடத்தை ரொம்ப எழுதியது போலவே உணர்கின்றேன்... நீங்கள் சொல்வது போல என் சாயல் இல்லை....கொஞ்சம் வேலை பளு மற்றும் யாழினியோடு இருப்பதால் எழுத நேரம் கிடைக்கவில்லை ... ஆனால் இதை காரணமாக சொல்ல என்னால் இயலவில்லை... அடுத்து எழுத போகும் படங்களில் நிவர்த்தி செய்து கொள்ளலாம்... 2007 இல் இருந்து எழுதுகின்றேன்... நடுசில் சில காலம் ரொம்பவே குறைந்து விட்டது...வெகு நாட்களுக்கு பிறகு துப்பாக்கி பிடித்து இருக்கின்றேன்.. இரண்டு மூன்று குண்டுகள் குறி தவறுகின்றது.... நாலாவது ரவுண்டில் சரி செய்து கொள்ளலாம். உங்கள் இருவர் கருத்துக்கும் மிக்க நன்றி...

    ReplyDelete
  4. நல்ல விமர்சனம்..என் பேவரைட், படத்தின் ஹீரோயின் சம்வ்ருதா பத்தி கொஞ்சம் சொல்லியிருக்கலாம்..

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner