ஆரம்பமே...


வாழ்வில்  நெடுநேரம் அதனோடு  இருந்து இருக்கின்றேன்...
நிறைய  சண்டைகள் சமாதானங்கள், காமம் காதல், என்று அதனோடு மிக ஸ்நேகமாய் இருந்து இருக்கின்றேன்... 

எத்தனையோ முறை  அதை  போட்டு சுக்கு நூறாய் உடைக்க போகின்றேன் பாருங்க என்று  மனைவி சொன்ன போதும்,  கோபத்தோடு கத்திய போதும் பல பெருங்கோபங்களின் போதும் அதன் மேல்  கீறல்  கூட விழாமல் பாதுகாத்து இருக்கின்றேன். 

எனக்கு நிறைய புகழை பெற்றுக்கொடுத்தது  அதுதான்... எனக்கு தமிழ் ஒல்டு பழகிக்கொடுத்ததும் அதுதான்... என் எழுத்துக்களை  சேமித்து வைத்துக்கொண்டதும் அதுதான்...அப்பனை கைத்தடிய உபயோக படுத்தாதே என்று சொன்ன அப்பாவை அவர் எனக்கு  வைத்த பெயரை அழைக்காமல் வேறு பெயரில் என்னை அவர் எதிரிலேயே அழைக்க வைக்க காரணம் இதுதான்... 

தொலைகாட்சி பேட்டிகள், பத்திரிக்கை  பேட்டிகள்  நானும்  கொடுப்பேன் என்று கனவிலும் நினைத்தது இல்லை.. ஆனால் வெகு எளிதாக சாத்தியப்படுத் காரணம் இதுதான்....

பாலகுமாரன் வீட்டு வாசலில் ஒரு டாக்குமென்ட்ரிக்காக நின்றுக்கொண்டு இருந்த போது மனைவியோடு சென்றவர்... இறங்கி வந்து சார் நீங்க ஜாக்கிதானே...?உங்களை இங்க சந்திப்பேன் நினைக்கவேயில்லை... நான் அரபு நாட்டுல வேலை பார்க்கறேன்.. பொண்ணு அட்மிஷனுக்கு அலைஞ்சிக்கிட்டு இருக்கேன்... இரண்டு தெரு தள்ளிதான் என் வீடு....வெளிநாட்டுல இருக்கும் போது பெரிய துணை உங்க பதிவுகள்தான்  என்று யாரோ ஒரு முகம் தெரியாதவனின் கை குலுக்கலுக்கு உறுதுணையாக இருந்தது இதுதான்...  

இவ்வளவு ஏன் இன்னைக்கு சொன்த வீட்டுல இருக்க முக்கியகாரணங்களில்  இதுவும் ஒன்று...அளப்பறிய நண்பர்கள் மற்றும் வாசக வாசகியர் கூட்டங்களை சேர்த்து கொடுத்ததும் இதுதான்..


எனக்கு  நிறைய எதிரிகளை சம்பாத்தித்து கொடுத்ததும் அதுதான்.... என்னை போன்ற ஒரு மக்கு சமானியனின் கருத்துக்களை உலகம் முழுக்க கொண்டு போய் சேர்த்தது அதுதான்... உலகின் கடை கோடிவரை நண்பர்களை பெற்றுக்கொடுத்தது அதுதான்... இரண்டு மூன்று முறை பேராபத்தில் இருந்து  அது மீண்டு வந்து இருக்கின்றது... 


2007  இல் என்னோடு வந்ததில் இருந்து வீட்டை விட்டு ஒரு அடி எடுத்து வைத்தது இல்லை... ஆனால் தற்போது படி தாண்டி விட்டது...மூன்று முறை வீட்டு படியை இந்த ஒரு மாதத்தில் தாண்டி விட்டது.... கொஞ்சம் உயிர் ஒட்டிக்கொண்டு இருக்கின்றது... என்னுடைய சிஸ்டத்தின் மதர் போர்டு இன்டல்  கோர்ட்டு டியோ....ஈனஸ்வரத்தில் முனகிகொண்டு இருக்கின்றது...

ஸ்டார்ட் பட்டணை அழுத்தினால்  பத்து நிமிட்டத்துக்கு மேல் ஆகி என்ன -? என்னாச்சி என்று கேள்வி கேட்கின்றது....?இன்னும் கொஞ்சம்  நாட்களில் மதர் போர்டு மண்டையை போட்டு விடும் என்று சொல்கின்றார்கள்...மதர் போர்டு கொடுத்த தொல்லைகாரணமாக... ஹாட்டு டிஸ்க்கும் அபிட் ஆகும் கண்டிஷனில் இருக்கின்றது... ஏற்கனவே அதில் கொடுகள் இருக்கின்றது என்று தம்பி ராஜசிம்மன் சொன்னான்....

புதிது எவ்வளவு என்று கேட்டேன்.. ?லேட்டஸ்ட் சிஸ்டத்தை பற்றி விசாரித்தேன்.. ஹை பையாம்.... விலை 35 ஆயிரம் ஆகுமாம்...மானிட்டருடன் சேர்த்து சொன்னார்கள்... பிளாக் எழுத மட்டும் என்றல் இதையே சரிசெய்து கொள்ளலாம்... பட் ...சின்ன சின்ன எடிட்டிங் ஒர்க் இதில் செய்து இருக்கின்றேன்.... அதனால் ஹைகாக்பிகிரேஷன் எனக்கு தேவையாக இருக்கின்றது... 

ஏதாவது  இதில் தேறுமா? என்று கேட்டேன்... 
இது ஸ்கிராப்தான் என்று கூசாமல்  சொல்லுகின்றார்கள்...

 போர்டு மட்டும் மாத்தினா? சார் ரெண்டுமே கண்டம்..  சின்ன சின்னதா மாத்தறதை விட... மொத்தமா  மாத்திடறது பெட்டர்.. ஒன்டைம் இன்வெஸ்ட்மென்ட் லேட்டஸ்ட் இறக்கிடுங்க.. காரணம் டெய்லி ஒரு அப்டேட் வந்துக்கிட்டு இருக்கு என்று வாயல் மிக அழகாக சொல்லி விடுகின்றார்கள்...

....இந்த வருடம் மிக அமர்க்களமாக ஆரம்பித்து இருக்கின்றது... நன்றி2013
=====================


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.



நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

8 comments:

  1. அவஸதையைக் கூட அழகாய் சொல்லியிருக்கிறீர்கள் சேகர். என் கணிப்பொறியும் இந்தக் கட்டத்தை நெருங்கும் அபாயம் அருகில் இருப்பதை உணர்வதால் மனம் சற்றே கலங்குகிறது.

    ReplyDelete
  2. சென்ற வருட கடைசியில் எனக்கும் இப்படி ஒரு சோதனை! கொஞ்சம் சரி பண்ணி அதையே மேனேஜ் பண்ணிகிட்டு இருக்கேன்! நானும் 2007ல் தான் சிஸ்டம் வாங்கினேன்! ஆல் த பெஸ்ட்!

    ReplyDelete
  3. Jackie Sir, Ovvoru blog eluthum pothu Hot Hotter Hottest Photova maathunga.. Ellathaiyum update pandreenga.. ithamattum WHY..???

    Mani

    ReplyDelete
  4. சீக்கிரம் அன்னன ஒரு லேப்டாப் வாங்க வாழ்த்தும் தம்பி.

    ReplyDelete
  5. ஹி ஹி ஹி 2007 இல்? அப்போ என்னுடையது பரவாயில்லை 2006 தொடங்கி இது வரை தூசு கூட தட்டியதில்லை சிறப்பாக வேலை செய்கிறது. 2013 க்கு நன்றி சொல்லலும் தொனியிலேயே உங்கள் பரிதாபம் விளங்குகிறது.

    அப்படியே இந்த பதிவையும் வாசித்து விடுங்கள்
    "நல்லவனில்லை"

    ReplyDelete
  6. Anna, please go to google chromebook. its provide good quality products what you are expecting.. its very cheap compare then other laptop.

    ReplyDelete
  7. Please go to google chrome book. its provides good application what you are expecting.. its very cheap compare then other laptop.

    ReplyDelete
  8. இதே விசயத்த சாரு எழுதியிருந்தா எப்டி இருக்கும்னு நெனைச்சிப் பார்த்தேன். முடியல :-)
    wish u'll get a new laptop frm ur home minister soon..

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner