வருடா
வருடம் பச்சையப்பன் கல்லூரி எதிரில்
புத்தகக்ண்காட்சிக்கு செல்ல வேண்டும்
என்ற பொது புத்தி இந்த வருடம் மாற்றம்
பெற்றது...
மவுன்ட் ரோடு பக்கம் ஒய்எம்சிஏ செல்ல வேண்டும் என்று மீண்டும் மீண்டும்
சொல்லிக்கொண்டு அந்த பக்கம் சென்றேன்..
சென்னைக்கு
வந்த பிறகு உலக படவிழாவுக்கு செல்வது போல தவறாது செல்லும் இடம் புத்தக கண்காட்சிதான்...
மூன்று
நாட்களுக்கு முன் புத்தக கண்காட்சிக்கு சென்றேன்..
ஒய்எம்சிஏ
மைதானம்ன்னு பேரு வெச்சதுக்கு பதிலா... மஸ்கிட்டோ மைதானம்ன்னு பேரு வச்சி
இருக்கலாம்..ப்பா.............. கொசுவாடா அதுங்க..? பேய்மாரி
கடிக்கிதுங்க...(சென்னை புத்தககண்காட்சி மஸ்கிட்டோ பைட்)
அஜயன்
பாலா புத்தக ஸ்டாலில் கவிதை புத்தகம் வெளியிட்டார்கள்...போன வருடம் போல இந்த முறையும் கவிஞர் கவிதா
முரளிதரன் அவர்கள் என்னிடம் நலம் விசாரித்தார்கள்... தமிழ் ஸ்டுடியோ அருனோடு
பேசிவிட்டு சில புத்தகங்கள் வாங்கினேன்..
ஆனால் வருடா வருடம் புத்தக கண்காட்சிக்கு
தொடர்ந்து சென்றுக்கொண்டு
இருக்கின்றேன்...புத்தக கண்காட்சிக்கு நானும் வருகின்றேன் என்று நண்பர் வட்டியும் முதலும் ராஜுமுருகன் இந்த வார விகடனில் குறிப்பிட்டு இருக்கின்றார்..அது
கீழே....
அந்தப்
பக்கம் போகும்போதே,
'விடியல்’ வாசலில் ஃப்ரான்சிஸ் கிருபா
நிற்பார். கிறிஸ்துமஸுக்கு முதல் நாள் வாசலில் கட்டித் தொங்கும் நட்சத்திரம்
மாதிரி கண்கள் மின்ன, ''ராஜி... ஐ லவ் யூ... ஐ மிஸ் யூ... ஐ
ஹேட் யூ...'' எனக் கட்டிப்பிடி வைத்தியம் பார்ப்பார். '' 'காலச்சுவடு’ல கோணங்கி இருந்தாரே!'' என்ற தகவலைப் பிடித்துப்
போனால், வழியில் புலித் தோல் ஜீன்ஸில் சாருவும்
மனுஷ்யபுத்திரனும் ஆட்டோகிராஃபில் பிஸியாக இருப்பார்கள். யுவகிருஷ்ணாவும்
அதிஷாவும் 'மாற்றான்’ கெட்டப்பில்
ஒவ்வொரு ஸ்டாலாக உளவு பார்த்துத் திரிவார்கள். ''ஜெயமோகனுக்கு
நீங்க ஏன் இந்துத்துவ முகமூடி மாட்றீங்க...'' என ஆவேசமாகப்
பேசிக்கொண்டு இருப்பவரை ஸ்டாப்பி, ''இவர்தான் விஷ்ணுபுரம்
சரவணன்'' என அறிமுகப்படுத்துவார்கள். ''கேன்டீன்ல லேப்டாப்போட உட்கார்ந்து கேபிள் சங்கர் அப்டேட்ஸ் போட்டுட்டு
இருக்காரு. 'கறுப்புப் பிரதிகள்’ல ஜாக்கி
சேகரும்
கடங்கநேரியானும் நிக்கிறாங்க... டிமிட்ரியப் பார்த்தீங்களா..?'' என ஒரு
ப்ளாக்கர்ஸ் குரூப் சைனீஸில் பேசியபடி வேடியப்பனின் டிஸ்கவரி புக் பேலஸில்
கூடியிருக்கும். ''விகடன் ஸ்டால்ல கோணங்கி இருக்காரு...
பாக்கல..?'' என பரிசல் செந்தில்நாதன் சொல்லிவிட்டுப் போவார்.
=================
ஆனால் இந்த முறை புத்தகங்கள் ரொம்பவே ரேட் அதிகம்...200 ரூபாய்க்கு மேல்தான்
புத்தகங்கள் இருக்கின்றன....
பேஸ்புக்கில்
இந்த விலையேற்றம் குறித்து எழுதினேன். முக்கியமாக காணும் பொங்கல் அதுவுமாக கண்காட்சியில் கூட்டம் இல்லை.
=================
காணும்
பொங்கல் அதுவுமா... புத்தககண்காட்சியில பெரிய அளவுல எதிர்பார்த்த கூட்டம்
இல்லை...150ரூபாய்க்கு மேலதான் புத்தகங்கள் ரேட் இருக்கு...அநுராகம்,காந்தளகம்
போன்ற பதிப்பகங்கள் இன்னும் பத்துரூபாய் 15 ரூபாய்க்கும் 12 ரூபாய்க்கு சின்ன
சைசில் புத்தகங்கள் கொடுக்கின்றார்கள்.... நக்கீரன் பதிப்பக புத்தகங்கள்தான்..40
மற்றும் எழுபதுக்கு கிடைக்கினறது... மற்ற எல்லா பெரிய பதிப்பகங்களும் 200
ரூபாய்க்கு மேலதான் ரேட் வச்சி இருக்காங்க....ஒரு வேளை 150 ரூபாய்கு மேல ரேட்
வச்சாதான் நல்ல புத்தகம்ன்னு பொது புத்தியில உறைக்க வச்சி இருக்காங்களோ என்னவோ?....
வட்டியும் முதலும் வாங்கலாம்ன்னு போனா 225 ரூபாய் ரேட் போட்டு
இருந்திச்சி... ஷாக் அடிச்சது போல வச்சிட்டேன்... தியேட்டர் ரேட் எத்தின பிறகுதான்
திருட்டி டிவிடிக்கு டிமான்ட் அதிகமாச்சி.. இதே லெவல்ல போனா.. எதிர்காலத்துல எல்லா
புத்தகத்தையும் பிடிஎப்ல நம்ம பயபுள்ளைங்க ஏத்தி பிரியா நெட்டுல உலவ
விட்டுவிடுவானுங்க... அப்புட்டுதேன் சொல்லுவேன்...
==============
என்று
எழுதினேன்... அதற்கு ரபீக் முகமது என்ற
நண்பர் ஒரு கருத்தை முன் வைத்தார்... அது கீழே...
================
புத்தகங்கள்
இன்னும் ஒரு 20 சதவீதம்,
விலை குறைந்து இருக்கலாம். இருப்பினும் ஒரு ஷோவுக்கு 120 ரூபாய்
தாராளமாக செலவு செய்ய மனம் வருகிறது..சரக்குக்கு 500 வரைக்கும் செலவு செய்ய மனம்
வருகிறது. 50 விகடனின் செலவு குறைச்சலா 750 ஆகும்..அதில் உருப்படியா வந்த தொடரின்
விலை 225 ..கொடுக்க யோசிக்க தெவை இல்லையே. அது போல மனதுக்கு பிடித்த ... இன்னும்
சில வருடங்கள் நம் கூடவே வரபோற புத்தகத்திற்கு சில ஆயிரம் செலவு செய்வது அறிவு +
அனுபவ முதலீடு தானே தலைவா!!:)
=============
இதற்கு
நான் எழுதிய பதில்...
ரபீக் நீங்க முதல் வரியிலேயே ஒத்துக்கிட்டிங்க..
ஒரு 20 சதவிகிதம் விலை குறைத்து இருக்கலாம் என்று... அதேதான் நானும்
சொல்கின்றேன்..ரபீக் எதுக்கு எவ்வளவு செலவு செய்யனும் செய்யக்கூடாது என்பது அவர்
அவர்கள் விருப்பம்.. அது தனி மனித சுதத்திரமும் கூட... விகடன் வெளியிடான
பிரிட்டானிக்கா தகவல் களஞ்சியம் 4000 ரூபாய் இப்ப 1800 ரூபாய் ஒவ்வொரு வீட்டிலும்
வைத்து இருக்க வேண்டிய புத்தகம்தான் நான் இல்லைன்னு சொல்லலை....ஆனா எத்தனை பேர்
அதை வாங்கி இருப்பாங்கன்னு சொல்லுங்கள்...??குடும்பத்தோடு மங்காடு கோவிலுக்கு போக 2000 செலவு செய்கின்றார்கள்...1800
ரூபாய்க்கு பிரிட்டானிக்கா வாங்கினா என்னன்னு கேட்க முடியாது... நான் பொதுவான
விலையேற்றத்தை சொன்னேன்... நண்பர் ராஜுமுருகன் புத்தகம் ஒரு உதாரணம்... விகடன்
மட்டும் அல்ல .. போனவருடம்100 க்கு விற்றபுத்தகங்கள் இந்த முறை 75 பர்சென்ட் ரேட்
ஏத்தி வச்சி இருக்காங்க என்பதுதான் உண்மை.... விகடன் வெளியிட்ட மோட்டிவ் மற்றும்
கண்மணி குணசேகரனின் அஞ்சலை ரெண்டுதான் வாங்கினேன்... கடைசி நாளுக்குள்ள
எப்படியாவது வட்டியும் முதலும் வாங்கிடுவேன்... ஆயிரம் ரூபாய் எடுத்து போனா நாலு
புக்தான் வாங்க முடியுது... என்ற ஆதங்கத்தில் எழுதியது....
என்று
அந்த நண்பருக்கு பதில் சொன்னேன்....
திரும்ப நேற்று
குடும்பத்தோடு திரும்ப புத்தக கண்காட்சிக்கு சென்றேன்...
வண்டியை பார்க் பண்ணிட்டு உள்ளே
போறதுக்குள்ள போதும்டா சாமின்னு
ஆயிடுச்சி.
யாழினிக்கு
கதை சொல்லும் புத்தகங்கள் வாங்கினோம்.... நேற்று கூட்டம் மின அதிகமாக இருந்தது...
வட மாவட்டத்துக்கும் தென் மாவட்டத்துக்கு பொங்கள் விடுமுறையை பிழிய பிரிய அனுபவித்தவர்கள் அத்தனை பேரும்
இந்த ஞாயிற்றுக்கிமையை டார்கெட்டாக வைத்து விட்டார்கள் போலும்...
ஏற்கனவே
கண்மணி குணசேகரனின் அஞ்சலை வாங்கி விட்டேன்... திரும்ப நேற்ற பூரணி பொற்கலை,உயிர்தண்ணீர், வெள்ளருக்கு
போன்ற புத்தகங்களை வாங்கினேன்.
விகடனில்
தோற்றுப்போனவேன் கதை , மதராசபட்டிணம் டூ சென்னை மற்றும் ராஜூ முருகனின் வட்டியும்
முதலும் வாங்கினேன்... பில் போட்டு வெளியே வந்தால் ராஜுமுருகன் அனைவருக்கும் புத்தகத்தில் கையெப்பம் இட்டு போட்டோவுக்கு போஸ்கொடுத்துக்கொண்டு இருந்தார்....
அவர் புத்தகத்தை அவரிடத்தில் நீட்டினேன்....
உங்க
பெயர்..
ஜாக்கிசேகர்...
என்றேன்...
பேரைகேட்டதும்...
பக பகவென சிரித்து வைத்தார்... இப்பதான்
முத தடவை சந்திக்கறோம்... கண்டிப்பா
பிரியா இன்னோரு நாள் பேசுவோம் என்றார்..
விடைபெற்று கிழக்கில் சில
புத்தகங்கள் வாங்கி விட்டு , டிஸ்கவரி புக் பேலசில் விஜய வீரப்பன் சுவாமிநாதன்
அவர்களை சந்தித்தேன்...
அதே
போல கோழிக்கூவுது படத்து கேமராமேன்,
பண்புடன் குழும்ம் நண்பர்... பேர் மறந்து
விட்டேன்.. போன்றோரை சந்தித்தேன்..
டிஸ்கவரி
புக் பேலசில் டாக்டர் புருனோ,கேஆர்பி,கேபிள்
போன்றவர்களை சந்தித்து விட்டு
கண்காட்சி விட்டு வெளியேறிக்கொண்டு இருக்கும் போது.... வெகு நாட்கள் கழித்து நர்சிம்மை சந்தித்து நலம்
விசாரித்து விட்டு கண்காட்சி விட்டு வெளியேறினேன்..
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

என்னோட புக் மறந்தீட்டீங்களே...
ReplyDeleteநேரம் கிடைக்கவில்லை. நிச்சயம் போகவேண்டும். நன்றி
ReplyDeleteநீங்கள் முன்பு எப்போதோ refer செய்த 'நெடுஞ்சாலை' தமிழினியில் இல்லை என்று கூறிவிட்டார்கள்
ReplyDelete/*பண்புடன் குழும நண்பர்*/ ஜாக்கி, அது நான் தான்.
ReplyDelete