சாண்ட்வெஜ் அண்டு நான் வெஜ்16/1/2013(புதன்)



 ஆல்பம்..
எல்லையில் தொடர்ந்து பதற்ற சூழ்நிலை நிலவி வருகின்றது...
தலையை கொய்த்து எடுத்து செல்வது எல்லாம் வெறி ஏற்றும்  செயல்... அவர்கள் கடைசி வரை திருந்த போவதில்லை. இந்த ஆடு புலி ஆட்டம் தீர்வு இல்லாமல்  தொடர்ந்து  நடந்துகொண்டுதான் இருக்கப்போகின்றது.. எல்லாம் நாம வாங்கி வந்த வரம். எந்த பிரச்சனைக்கும் போவமாட்டோம் என்ற கொள்கை உடைத்து காட்டுவோம்.. அப்படியும் இல்லை என்றால் சீண்டி  காட்டுவோம்...  என்பதாய் இந்த  செயல்  இருக்கிறது...சீண்டி ஏற்படுத்தும் சண்டையின் விளைவுகள் ரொம்ப கொடுமையாக இருக்கும் என்பதுதான் நாம் கடந்த வரலாறுகள்  தெரிவிக்கின்றன.  ரொம்ப நாளைக்கு பிறகு  இந்திய பிரதமர் பாகிஸ்தானுக்கு எதிராக  கடுமையாக குரல் உயர்த்தி இருக்கின்றார்.
================
மிக்சர்...
இரண்டு விஷயங்களுக்கு  இந்த அரசை பாராட்ட வேண்டும்...
 பென்னிகுக் அவர்களுக்கு மணி மண்டபம்... அதே போல கரிகால் சோழனுக்கும் மணி மண்டபம் கட்டப்படும் என்று அறிவித்து இருக்கின்றார் முதல்வர்... ஜெ....

பென்னிகுக் பற்றி 2011 ஆம் ஆண்டு எழுதிய பதிவு இது...வாசிக்க இங்கே கிளிக்கவும்...http://www.jackiesekar.com/2011/12/blog-post_12.html


இப்போது மணி மண்டபம் கட்டி இருக்கின்றார்கள். விரைவில் வளரும் தலைமுறை படிக்கும் வரலாற்று பாட திட்டத்தில் பென்னிகுக் பற்றிய பாடத்தையும் சேர்த்து விட்டால்... ரொம்பவே நல்லது.....தமிழக அரசுக்கு மிக்க நன்றி....

முக்கியமாக வீடியோ கான்பிரன்சிங் மூலம் பென்னிகுன் மணி மண்டபத்தை திறந்து வைக்காமல் , நேரில் சென்று திறந்து வைத்து பென்னிகுக் என்ற மாமனிதருக்கு உரிய மரியாதை கொடுத்த தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு மிக்க நன்றி....

==================

  சென்னையில் 1000 உணவகங்கள் திறக்க முதல்வர் ஜெ உத்தரவு...இட்லி ஒரு ரூபாய், சாம்பார் சாதம் 5 ரூபாய், தயிர்சாதம் 3 ரூபாய் விலையில் உணவகங்களில் விற்க ஏற்ப்பாடு... இன்றளவும் மின்ன குறைந்த விலையில் தரமாக சைதாப்பேட்டையில் இருக்கும் வர்தக சங்கத்தில் உணவுகள் விற்பனை  செய்து வருகின்றார்கள்...ஆனால் சரவனபவனில் ஒரு வடை 23 ரூபாய்க்கு விற்கின்றார்கள்...எலைட் கஸ்டமர் வந்தால் போதும் என்று நினைக்கும் உணவகம் அது...ஆனால் இந்த திட்டத்தை படிபடிப்பாய தமிழகம் முழுவதும் திறக்க வேண்டும்...குறிப்பிட்ட கோவில்களில் அன்னதான திட்டத்துக்கு இந்த திட்டம் நிச்சயம் பாராட்டபட வேண்டிய ஒன்று... இந்த ஐடியாவை கொடுத்த ஐஏஎஸ்சுக்கு இதை செயல்படுத்த உத்தரவிட்ட முதல்வருக்கும் நன்றிகள்...

=============================
மத்திய அரசு 20 பர்சென்ட் ரயில் கட்டனத்தை உயர்த்திய போது மக்கள் நலனில் அக்கறை இல்லை என்றார் ஜெ... ஆனால் ஆட்சிக்கு வந்து மறுகனம் பால் விலை மற்றும் பேருந்து கட்டண உயர்வை பாதிக்கு பாதி  அப்படியே உயர்த்தி மக்கள் நலனில் அக்கறை கொண்டது உலகம் அறியும்... அதுமட்டுமல்ல... ஒரே நாள் இரவில் அந்த கட்டண உயர்வை செயல்படுத்தி பல  பேர் நடைபயணத்துக்கு வழி வகுத்தவர்... தற்போதைய முதல்வர் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது...

=====================
டெல்ட்டா விவசாயிகள் வாழ்வு போலவும், தற்போதைய வயிறு போலவும்... சோதனையாக கடைகளில் விற்க்கப்படும் அனைத்து கரும்புகளுமே திடகாத்திரமாக இல்லாமல் சூம்பி போய் இருக்கின்றன.

=============

உன்னை பார்க்காம உங்க ஆத்தா ஏங்கி போயிடுச்சி... என் பசங்களை பார்க்காம எந்த வேலையும் எனக்கு ஓடவேயில்லை... அவளை பார்க்கம கண்ணு பூத்து போயிடுச்சி, என்னை விட்டு என் பொண்ணும் பையனும் ஒரு நிமிஷம் கூட பிரிஞ்சி இருக்க மாட்டாங்க.... போன்ற கிளிஷே வாக்கியங்கள் மிகை படுத்தபட்டவை என்று நினைத்து இருக்கின்றேன்..வேலைப்ளு...மூன்று நாட்கள் ஆகி விட்டது... என் மகள் என்னோடு விளையாடி...நைட்டு ஆனா ஒரே அழ... அப்பா எங்க? அப்பா எங்கன்னு...?? இப்ப அவளுக்கு ஜூரமே வந்துடுச்சி... மறக்கமுடியாத பொங்கல்தான்...

=============
நன்றாக தூங்கும் ஒன்றரை வயது குழந்தையை, வலுக்கட்டாயமாக எழுப்பி ,குளிக்க வைத்து, கிரீச்சில் விட்டு விட்டு,தம்பதிகள் பொருளீட்ட செல்வது போன்ற கொடுமை உலகில் வேறு எதுவும் இல்லை.

===================
ஒரே அலைவரிசையில் சிந்திக்கும் பெண்ணை காதலித்து திருணம் செய்து கொள்வதும்,படித்த பெண்களை திருமணம் செய்து கொள்வதிலும் இருக்கும் பெரிய பிரச்சனையே... எந்த திருட்டு தனத்தை ஸ்மார்ட்டாக,ஒரு முறைக்கு பத்து வாட்டி யோசித்து ,யோசித்து செய்தாலும், அந்த யோசிப்புக்கு மரியாதையே இல்லாமல் அவர்கள் மிக எளிதாக கண்டுபிடித்து, அவர்களிடம் மாட்டிக்கொண்டு, ஙே என்று விழித்து ,பல்பு வாங்கி அசடு வழிய அவர்கள் எதிரில் நிற்ப்பதுதான்பெருங்கொடுமை.... எங்கப்பாருஅப்பயே சொன்னாரு கள்ளக்குறிச்சி பக்கத்துல ஒரு பொண்ணை பார்த்திருக்கேன்ன்னு... ஹூம் விதி வலியது... சத்திய சோதனை....#ஜாக்கிசேசகர் அவதானிப்பு

===========

2007 இல் வாங்கிய சிஸ்டம்.. மொத்தமாக ஊத்திக்கொண்டது என்று பயந்தேன்..4000 ரூபாய் ரீசார்ஜ் செய்து திரும்பவும் என் வீட்டுக்கு வந்து இருக்கின்றது. ஹார்ட் டிஸ்க் கோவிந்தா கோவிந்தாவாகி விட்டது..

ஒரு வாரம் செம கடுப்பாக போனது...

டெஸ்க்டாப் இருந்தாலும் ஒரு லேப்டாப் அவசியம் என்பதும் அது ரொம்பமுக்கியம் என்பதையும் உணர்ந்தேன்.. இந்த வருடம் எப்படியாவது ஒரு லேப்டாப் வாங்கி விட வேண்டும்...

இந்த 5 வருடத்தில் இந்த சிஸ்டம் எப்போதெல்லாம் பிராது கொடுக்கின்றதோ அப்போதெல்லாம் என் மீது வைத்து இருக்கும் அன்பு காரணமாக ,தங்கள் வேலைபளு மத்தியில் வீட்டுக்கே வந்து சிஸ்டத்தை சரிசெய்து கொடுத்துச் சென்ற நண்பர்கள்... முக்கியமாக வலையுலகத்தால் எனக்கு கிடைத்த நண்பர்கள்... வடிவேலன், ராஜசிம்மன்,மென்பொருள் பிரபு,இருதயராஜ் போன்றவர்களுக்கு என் நன்றியும் அன்பும்...

தன் வேலை பளுவிலும் என் சிஸ்டத்தை சரி செய்து கொடுத்த நண்பர் ராஜசேகர் அவர்களுக்கு என் நன்றிகள்...

மிக்க நன்றி நண்பர்களே.......
==========================


ரப்னே பனாதி ஜோடி... படத்தை சில நாட்களுக்கு முன் நைட்டு டிவியில பார்த்தேன்...புருசனே காதலனாவும் நடிக்கறான் அது தெரியாம தத்தி போல மனைவி இருக்கறா... ஒவ்வோரு மனுசனுக்கும் மனுஷிக்கும் ஒரு வாசனை இருக்கும் அதுக்கூட தெரியாம பொண்டாட்டி இருக்கறது பெரிய கொடுமை.. அப்புறம் குரல்... சரிப்பா அதெல்லாம் விடுங்க... சின்ன மரு கூட ஷாருக் கன்னத்துல வச்சிக்காம வித்தியாசத்தை காட்டி இருக்காறே அதுக்கு செம கெத்து வேணும்.
====================

ரெசிடென்ட் ஈவில் படத்துல வைரஸ் தாங்கனவங்க மத்தவங்களை கடிச்சா அவுங்களும் வைரஸ் தாக்கிய மனிதரா மாறி எல்லோரையும் கடிச்சி குதற கிளம்பிவிடுவார்கள்... அது போல கற்பழிப்பு வைரஸ் இந்தியா முழுக்க பரவி விட்டாதா??? என்று தெரியவில்லை...?முன்னை காட்டிலும் இந்த மார்கழி குளிரில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து விட்டன என்றே சொல்ல வேண்டும்... இந்தியா முழுவதும் கொந்தளித்து கிடைக்கின்து....ஒரு மாதத்தில் தீர்ப்பு வந்து விடும்., குற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கு , ஆண்மை நீக்கப்படும் என்று பத்திரிக்கை செய்திகள் சொல்லியும் , குற்றசெயல்களில் துணிந்து ஈடுபாடுகின்றார்கள் என்றால் வேறு என்னவோ பிரச்சனை இருக்கின்றது என்றுதானே அர்த்தம்.. இல்லை தினமும் நடக்கும் கற்பழிப்பு செய்திகளுக்கு ஊடகங்கள் இப்போதுதான் முதல் பக்கத்தை ஒதுக்குகின்றனவா?
================
எனக்கு டெல்லி வாசகி ஒருவர் விரிவான மடல் அனுப்பி இருக்கின்றார்....

அன்புள்ள ஜாக்கி சேகர் அவர்களுக்கு,
அலுவல்களுக்கிடையே கிடைக்கும் சிறிது நேரத்தில் உங்கள் ப்ளாக்கைப் படித்துவிடுவேன். உங்களுடைய மற்றும் யாழினியின் ரசிகை நான். முடிந்தால் இதைப் பதிவிடுங்கள்.

தில்லியில் பணிக்குச் சென்று வீடு திரும்பும் வரை பத்திரமாகப் போய்ச் சேருவோம் என்ற நம்பிக்கையில்லாமல் இருக்கும் பெண்களில் நானும் ஒருத்தி.
இந்தியர் என்று சொல்லவே வெட்கப்படும் வகையில் நடந்துள்ள ஒரு விஷயம் இந்தியாவை ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது. பாலியல் பலாத்காரம் நடந்ததாகச் சொல்லப்படும் இடமான முனிர்கா, ஆர்.கே.புரம் இந்தப் பகுதிகளெல்லாம் அமைதியாக இருக்க, பார்லிமென்ட் சாலை, ஜந்தர் மந்தர் சாலை, இண்டியா கேட் பகுதிகளில் தொடர்ந்து இரண்டு வாரங்களாக போராட்டங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. வேதனையளிக்கும் விதமாக இன்று அதிகாலை 2 மணியளவில் மிருகத்தனமாக பலாத்காரம் செய்யப்பட்ட அந்த 23 வயதுப்பெண் இறந்துவிட்டாள். இன்றும் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
சாதாரணமாக DTC பஸ்ஸைத் தவிர வேறு எந்த பஸ்ஸுமே பாதுகாப்பானதாக இருக்காது. டிரைவர், கண்டக்டருடன் இன்னும் நான்கைந்து பேர் உட்கார்ந்து கொண்டு பெண்களை தரக்குறைவான முறையில் விமர்சித்து வருவதை பலமுறை பார்த்திருக்கிறேன். பணத்தை மட்டும் வாங்கிக் கொள்வார்கள். டிக்கெட் கொடுக்கமாட்டார்கள். முடிந்தவரை அத்தகைய பஸ்களைத் தவிர்த்தே வந்திருக்கிறேன்.
டிசம்பர் 16 இரவு தன் நண்பருடன் திரைப்படம் சென்று திரும்பியவள் முனிர்காவில் தனியார் பஸ் ஒன்றில் ஏறியிருக்கிறாள்.
இந்த விபரீதம் நடந்தபிறகு காவல்துறை விசாரணையில் தெரியவந்திருப்பது அந்த குறிப்பிட்ட பஸ் 6 முறை (?) தகுதியற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பது.
யாரைக் குற்றம் சொல்வது? அந்நியன் படத்தில் சொல்வதுபோல் அடிமட்டத்திலிருந்து வந்தால் பஸ்ஸின் க்ளீனர் முதல் போலீஸ் தொட்டு அரசியல்வாதிகள் வரை எத்தனை பேர் குற்றவாளிகள்?
அந்தப் பெண் அடாவடித்தனமாகப் பேசிய டிரைவரை கடுமையாக சாடியிருக்கிறாள். அவளுக்கு ஆதரவாகப் பேசிய அவளுடைய நண்பரை இரும்புக் கம்பியால் தாக்கியிருக்கிறார்கள். தப்பிப் பிழைத்த அவர் அருகிலிருந்த காவல்நிலையத்தில் சொன்னபோது அது எங்கள் ஜூரிஸ்டிக்ஷனில் வராது. நீங்கள் ஆர்.கே.புரம் போங்கள் என்று கூறியிருக்கிறார்கள். (போராட்டம் ஆரம்பமானபின் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்) காவலர்கள் (?) கொஞ்சம் பொறுப்புணர்ச்சியோடு செயல்பட்டிருந்தால் அவள் இன்று உயிரோடு இருந்திருப்பாள்
அவள் என்னை அவமானப் படுத்தினாள். அதனால்தான் அப்படிச் செய்தேன் என்று சொன்னானாம் அந்த டிரைவர்.
பிறப்புறுப்பில் இரும்புக் கம்பியை நுழைக்கும் அளவுக்கு மனிதன் எப்படி அவ்வளவு குரூரமானவனாக மாறமுடியும்? அவளுடைய அந்தரங்க உறுப்புகள் பலவற்றை நீக்கியபின்பும் உயர்தரமான சிகிச்சை கொடுத்தும் அவள் இறந்துபோனதை நினைக்கும்போது எவ்வளவு கடுமையான பாதிப்புக்குள்ளாயிருந்திருக்கிறாள் என்பது புரியும். ஒரு சக மனுஷியிடம் இப்படி காட்டுமிராண்டித்தனமாக நடக்க அந்த ஆறு பேருக்கும் எப்படி முடிந்தது? நினைக்க நினைக்க ரத்தம் கொதிக்கிறது.
கொஞ்ச நேரம் நினைவு திரும்பும்போது அவள் திரும்பத் திரும்ப சொன்னது நான் வாழ விரும்புகிறேன் என்பதுதான். என்னால் அழுகையைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
மக்கள் தொகை நிறைந்திருக்கும் பெருநகரங்களில் குற்றங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அதைத் தாண்டிப் போய்க்கொண்டே இருக்கிறோம். எங்கே போகிறோம் நாம்?



========================
புத்தாண்டு அன்று பெரிய வருத்தமான சூழலை சந்தித்தேன்...ஏதேதோ யோசித்த படி....மாலை 6.30 மணிக்கு வழக்கமாய் பயணிக்கும் சாலையில் பயணித்துக்கொண்டு இருந்தேன்....50 வயதை தாண்டிய பெரிய உடம்புடன் இருக்கும் பெண்மணி அவர்... என் வண்டியில் அவ்வப்போது லிப்ட் கேட்பார்....இதுவரை நான்கு முறை அவரை அழைத்து சென்று அவர் சொல்லும் இடத்தில் இறக்கி விட்டு இருக்கின்றேன்.. காய்கறி கடை, பழக்கடை,மளிகை ஸ்டோர் என்று அவருக்கு தேவைப்பட்ட இடத்தில் இறங்கிக்கொள்வார்....இன்று ஏதோ யோசனையில் அவரை கடந்து விட்டேன்... பட் ....என்னவோ சட்டென அனிச்சைசெயலாக திரும்பி பார்க்க அவர் நடந்து வந்துக்கொண்டு இருந்தார்... நான் வண்டியை நிறுத்தினேன்....என் அம்மா மார்கழி குளிருக்கு கோலம் போட விடியலில் காதுமடல் தெரியாதவாறு ஸ்கார்ப் கட்டிக்கொண்டு கோலம் போடுவார்.... அது போல அவரும் கட்டிக்கொண்டு நடந்து வந்தார்...... என்னை பார்த்ததும் அவருக்கும் பெரிய உட்சாகம்...ரொம்ப நன்றி சார்.... என்னை பார்த்ததும் வண்டியை நிறுத்தினதுக்கு... ஏறியதும் வண்டி ஐத்தடி தூரம் போனதும் ஹேப்பி நியூயர் சார் என்றார். மிக்க நன்றி உங்களுக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்றேன். எஸ்பிஐ ஏடிஎம்கிட்ட இறங்க வேண்டும் என்றார்... இறக்கி விட்டேன்... வாழ்கவளமுடன் என்றார்... என் அம்மாவே உயிரோடு வந்து வாழ்த்தியது போல மகிழ்ந்தேன்... இதை விட பெரிய வாழ்த்து வேறு என்ன இருந்து விட முடியும்...:-) :-) :-) :-) :-) :-)
=====================

பார்த்து ரசித்து சிரிங்க....செம டுவிஸ்ட்




=======================

 ரொம்ப நீட்ட பிரசன்ட் பண்ணி இருந்தாங்க.. முக்கியமா கேமரா ஒர்க் மற்றும் மீயுசிக் அற்புதமா இருந்திச்சி.... வாழ்த்துகள் ஸ்ரீஹரி பிரபாகரன் அண்டு டீம்.



=======================
நடந்தவைகளை மறந்து விட, ஆறுதலான சில வார்த்தைகளே போதுமானதாக இருக்கின்றது...
=========

நான்வெஜ்...






நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

7 comments:

  1. ஹாய் ஜாக்கி அண்ணா
    சாண்ட்வெஜ் அண்டு நான் வெஜ் நன்றாக இருந்தது மிக்க நன்றி

    ReplyDelete
  2. Touching post on your helping the old woman and her blessings to you.

    ReplyDelete
  3. ஒரே அலைவரிசையில் சிந்திக்கும் பெண்ணை காதலித்து திருணம் செய்து கொள்வதும்,படித்த பெண்களை திருமணம் செய்து கொள்வதிலும் இருக்கும் பெரிய பிரச்சனையே... எந்த திருட்டு தனத்தை ஸ்மார்ட்டாக,ஒரு முறைக்கு பத்து வாட்டி யோசித்து ,யோசித்து செய்தாலும், அந்த யோசிப்புக்கு மரியாதையே இல்லாமல் அவர்கள் மிக எளிதாக கண்டுபிடித்து, அவர்களிடம் மாட்டிக்கொண்டு, ஙே என்று விழித்து ,பல்பு வாங்கி அசடு வழிய அவர்கள் எதிரில் நிற்ப்பதுதான்பெருங்கொடுமை.... எங்கப்பாருஅப்பயே சொன்னாரு கள்ளக்குறிச்சி பக்கத்துல ஒரு பொண்ணை பார்த்திருக்கேன்ன்னு... ஹூம் விதி வலியது... சத்திய சோதனை....#ஜாக்கிசேசகர் அவதானிப்பு
    why blood same blood............. ha ha ha

    ReplyDelete
  4. அருமையான பகிர்வு.... எல்லாமே சூப்பர்...
    அதுவும் ஒரே அலைவரிசையில்..... ஹா... ஹா.... கலக்கல் அண்ணா.... எல்லா இடத்துலயும் இந்தக் கதைதானா....????????

    ReplyDelete
  5. என் அப்பாவுக்கு படிச்சுபடிச்சு சொன்னேன் எங்க கிராமத்தில் ஒரு பொண்ணை பாருங்கள் என்று, ஆனால் மனுசன் படிச்ச பொண்ணாகப் பக்கத்து டவுணில் பார்த்து வைத்து என் தலைவிதியும் அதுதான். விதி யாரை விட்டது. யதார்த்தமான உண்மை.
    பொங்கல் வாழ்த்துக்கள்.
    லிங்கம்.

    ReplyDelete
  6. என் அப்பாவுக்கு படிச்சுபடிச்சு சொன்னேன் எங்க கிராமத்தில் ஒரு பொண்ணை பாருங்கள் என்று, ஆனால் மனுசன் படிச்ச பொண்ணாகப் பக்கத்து டவுணில் பார்த்து வைத்து என் தலைவிதியும் அதுதான். விதி யாரை விட்டது. யதார்த்தமான உண்மை.
    பொங்கல் வாழ்த்துக்கள்.
    லிங்கம்.

    ReplyDelete
  7. ஹாய் ஜாக்கி...
    இது தான் நான் முதல் முறை உன் Website பார்ப்பது. First Impression is the best impression என்பது போல உன்னுடைய ஒரு கருத்தை சொல்லும் முறை பிடித்துள்ளது.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner