THE LEGEND JACKIE CHAN-ஜாக்கிசானும் ஜாக்கிசேகரும்(பாகம்/2)  நண்பர்கள் என்னை ஜாக்கி என்று அழைக்க தொடங்கினார்கள்...
அனால் முதன் முறையாக  கடிதத்தில்   என்னை ஜாக்கி என்று என்னை அழைத்தது அதை எழுதியது  யார் என்றால்?   ஆனந்ராஜ்  என்ற எனது   பேனா நண்பர். அவர் எனக்கு எழுதிய கடிதங்களில் என்னை ஜாக்கி என்றே அழைத்தார்..,அவர் அப்போது மெங்களூருவில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார்....1996 ஆம் அண்டு அவருக்கும் எனக்கும் பேனா நட்பு  ஏற்ப்பட்டது... ===========================


ஒரு ஏ போர் ஷீட்டில் ஜாக்கியுடைய போட்டோவை  கார்னரில் வைத்து இருப்பது போல ஜெராக்ஸ் 50 தாள்களில் எடுத்து அதில்தான் நான் அப்போதையா நாட்களில் நான் கடிதம் எழுதுவேன்...ஏழைக்கு ஏத்த லட்டபேட் அதுதான்..


அதே போல நான் எழுதும் அனைத்து கடிதங்களிலும் எனது இயற்பெயரோடு சேர்த்து ஜாக்கிசேகர் என்று கையெழுத்து போடுவேன். நான் நண்பர் சுபாஷ் மற்றும் சூரி மூவரும் சேர்ந்து ஜாக்கிசானை பற்றி ஒரு ஆல்பம் ரெடி செய்தோம்... மூன்று பேருக்கு  முன்று காபி ஜெராக்ஸ் போட்டு  வைத்துக்கொண்டோம்....வீடியோ கேசட் கடைகளில் ஜாக்கி பற்றிய படங்களின் கவர்களை எடுத்து அந்த ஆல்பத்தை ரெடி செய்து... வீக்கிபீடியா துணையில்லாம் அந்த ஆல்பத்தை உருவாக்கினோம்... அதில் ஜாக்கியின் வரலாற்றை எழுதினோம்...கீதை, பைபிள், குரானுக்கு மேலாய் அந்த ஆல்பத்தை கொண்டாடிக்கொண்டு இருந்தோம்...


சுபாஷ் அவன் வீட்டில் டிரங்கன் மாஸ்டர் படத்தில் ஜாக்கிசான் தலைக்கீழாக தொங்கி  உடலை வளைத்து தலையால் முட்டியை  தொட வேண்டும் அந்த எக்ச்சைஸ் ரொம்பவும் கஷ்டமும் கூட.. ஒரு சினிமா ஆர்ட் டைரக்டர் போல  அப்படியே  மிக அழகாக செய்து இருந்தான் என்னால் அதில் 5க்கு மேல் செய்ய முடியவில்லை.. கீழ இருக்கும் வீடியோவில் இ அந்த காட்சி இருக்கின்றது... சரியா 2,20  நிமிடத்தில்  அந்த காட்சி வரும்.

 அந்த ஆல்பத்தில்  முதல் பக்கத்தில்  மோதியவர்கள் மீண்டதில்லை மோத துணிவிருந்தால் மோத வராலாம் என்று டைட்டில் எல்லாம் கொடுத்து இருந்தோம்... இப்போது அவைகளை பார்க்கும் போது எந்த அளவுக்கு இப்படி ஒரு விஷயத்தை செய்து இருக்கின்றோம் என்று நினைக்கும் போது செம காமெடியாக இருக்கின்றது.சுபாஷ் நன்றாக படம் வரைவான்...புத்தகங்கள் மற்றும் சினிமா விளம்பரங்களில் வந்த ஜாக்கிசான் முகத்தை வரைந்து தள்ளுவான்...


1991 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பரிட்சை... தினமும் ஜாக்கிசான் படம் ஸ்பேனிஷ் கனெக்ஷன் படம் கடலூர் கமலம் தியேட்டரில்  பார்த்து  விட்டுதான்  பரிச்சை எழுதினோம்... ஜாக்கிசான் மேல்  அப்படி ஒரு மையல்....


எங்கள் ஜாக்கி ஆல்பத்தில் நாங்கள் எழுதியவை...

புருஸ்லீக்கு அடுத்த படியாக அதிகமாக கைதட்டல் மற்றும் விசிலை பெறும் நடிகர் ஜாக்கிசான்... இன்று  ஆசியாவில்  சூப்பர் பாக்ஸ ஆபிஸ் நடிகராக வளர்ந்து இருக்கின்றார்...  சீனிவில் அபாரா பள்ளியில்  இவரை பெற்றோர் சேர்த்தனர்.. திரைப்படங்களில்  நடிக்க ஆரம்பித்த  காரணத்தால் பள்ளி படிப்பை பாதியில் விட நேர்ந்தது..

தன்னுடைய பள்ளி ஒப்பந்த முடிந்த உடன் ஜாக்கி ஆஸ்திரேலியாவில் உள்ள பெற்றோர்களிடம் வந்து சேர்ந்தார்... பிங்கான் குப்பிகளை கழுவுதல் முதற்க்கொண்டு கொத்தனார் வேலை வரை செய்தார். ஆனால் ஒரு ஹாங்கங் படத்தில் ஸ்டன்ட் காட்சியில் நடித்தார்... அது அவர் திரையுல வாழ்வின் திருப்பு முனையை  ஏற்ப்படுத்தியது...


நாட்கள் நகர்ந்தன.. ஜாக்கி சினிமாவில் ஸ்டன்ட் காட்சிகளில் நடித்துக்கொண்டும் ஸ்டன்ட் காட்சிகைளை அமைப்பதிலும் அவர் அதிகம் ஈடுபடுத்தப்பட்டார். அப்படியே சின்ன சின்ன  கதாபாத்திரங்களில்  நடித்து புகழ்பெற ஆரம்பித்தார்..

1978 ஆம் ஆண்டு பரிபூரிண சினிமா நட்சத்திரமாக மாறியதுடன் மறைந்த பூருஸ்லீயின் நேரடி  திரையுலக வாரிசாக  கருதப்பட்டார்... அது பற்றி ஜாக்கியிடம் கேட்ட போது....
புரூஸ்லீக்கும் எனக்கும் எந்த  சம்பந்தமும் இல்லை... அவர் ஒரு மாஸ்டர் அவரைர போல ஒருவர்தான் இருக்க முடியும்.


ஒவ்வோரு ஜாக்கிசான் படம் பார்க்கும் போதும் அதில் புரூஸ்லீயின் அழுத்தமான வேகத்தை பார்க்க முடியும்.

புரூஸ்லீயின் படங்கள் குங்பூ  ஆக்ஷன் டிராமா என்றால் ஜாக்கியின் படங்கள் ஆக்ஷன் காமெடிவகை என்று சொல்ல்லாம்...


பத்திரிக்கைகளில் வந்த செய்திகள், துணுக்குகள் போன்றவற்றை வைத்து இந்த ஆல்பத்தை உருவாக்கினோம்....தொடரும்...
=================== 
குறிப்பு ரொம்ப சோம்பறிதனம் அதிகம் வந்து விட்டது.. அப்புறம் எழுதலாம் அப்புறம் எழுதலாம் என்று தள்ளி போய்க்கொண்டே  இருந்து விட்டது... ஜாக்கி படம்  வந்தும் போய் விட்டது.. ஆனாலும் இந்த தொடரை எழுதி முடித்து  விட்டு அந்த படத்தின் விமர்சனத்தை  இதனோடு   சேர்த்து கண்டிப்பாக எழுதுவேன்...


நேற்று கவிதா சரன் என்ற  தங்கை ஒரு மெயில் அனுப்பி இருந்தார்....  இந்த பகுதி திரும்ப உத்வேகத்துடன் எழுத  இந்த கடிதமும் நல விசாரிப்பும் ஒரு காரணம் என்பதை மறுக்க வில்லை....இதை விட பெரிய பாராட்டு என்ன இருந்து விட முடியும்... கண்டிப்பாக எழுதுகின்றேன்மா... அந்த மெயில் கீழே..


Anna how r you, yr wife... and sweet yazhini pappa....
Thodakkame nallairukkunna... interesting...

Anna CZ review ezhuthaveillanna....
waiting anna....

moview parthachu irunthalum unga review ezhuthunganna... entha cinemavayum kurai solla matteenga.. athilulla niraikalai mathiram solluveenga..

we r waiting for yr review..

Please evvalavu work irunthalum weekly 2 postavathu podunganna...

Kavitha Saran


 அன்பின் கவிதா....

கந்த திரைப்படத்தையும் சாடுவது எனக்கு பிடிக்காது... சினிமாவில் இருந்துக்கொண்டே சினிமாவை சாடுவதில் எனக்கு உடன்பாட இல்லை... நல்லா இல்லாத படத்தை நான் எழுதுவது இல்லை...  நல்லா இல்லாத படத்தை நல்லா இல்லை என்று சொல்லவும் வேண்டுமா.. நன்றாக இருக்கும் படங்களை என் தளங்களில் அறிமுகபடுத்துகின்றேன்..

கண்டிப்பா  நேரம் கிடைக்கும் போது எழுதுகின்றேன். சீ இசட் கண்டிப்பாக இந்த  தொடர் முடிவு பெறும் போது எழுதுகின்றேன்.


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
 

6 comments:

 1. ஜாக்கி... six pack வேணுமின்னு எப்பயோ கேட்ட மாதிரி ஞாபகம்... அந்த தலைகீழாக தொங்கி செய்யும் பயிற்சியை செய்தால், six pack என்ன 12 பேக்கே வரும்...

  ReplyDelete
 2. ஜாக்கி... six pack வேணுமின்னு எப்பயோ கேட்ட மாதிரி ஞாபகம்... அந்த தலைகீழாக தொங்கி செய்யும் பயிற்சியை செய்தால், six pack என்ன 12 பேக்கே வரும்...

  ReplyDelete
 3. நீண்ட நாளுக்கு பிறகு இந்த பதிவு தங்களுடையதை பறை சாற்றுகிறது.

  ReplyDelete
 4. நல்லா இல்லாத படத்தை நல்லா இல்லை என்று சொல்லவும் வேண்டுமா.. நன்றாக இருக்கும் படங்களை என் தளங்களில் அறிமுகபடுத்துகின்றேன்..////////// எங்கேயோ கேட்ட குரல்..

  ReplyDelete
 5. நல்லா இல்லாத படத்தை நல்லா இல்லை என்று சொல்லவும் வேண்டுமா.. நன்றாக இருக்கும் படங்களை என் தளங்களில் அறிமுகபடுத்துகின்றேன்..// எங்கேயோ கேட்ட குரல்..

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner