விஸ்வரூபம் திரைப்பட தடை. பொதுமக்கள் மனநிலை.



விஸ்வரூபம் திரைப்படத்தக்கு தடை என்பது யாரும் எதிர்பார்க்கத ஒன்று... பலர்
பக்கத்து மாநிலத்துக்கு போய் படத்தை பார்த்து விட்டு வருகின்றார்கள்.இப்படியே  நீடித்தால் ஒரு படமும் வெளிவராது,...

==============
ஒன்னும் பிரச்சனையில்லை, ஒன்னுமே பிரிச்சனையில்லை, சென்சார் போர்ட்டை இழுத்து முடிடுவோம்..இனிமே தமிழ் திரையுலகில் எடுக்கப்போற எல்லா படத்தையும் எடுத்து முடிச்சதும், எல்லா மதத்திலேயும், எல்லா ஜாதியிலேயும் ஒரு ஆள் படத்தை பார்த்து அவுங்க ஒகே சொன்னதுக்கு அப்புறம் ரிலிஸ் செய்யட்டும், சப்போஸ் அவுங்க ஓகே சொல்லலைன்னா?- 

100 கோடி போட்டு படம் எடுத்தா என்ன? 200 கோடி போட்டு படம் எடுத்தா எனக்கு என்னா? என் பணமா அது..? எவனாவது நட்டுக்கிட்டு சாகட்டும்...இந்த படம் ரிலிஸ் செய்யப்ப்பட்டு இது போன்ற காட்சிகள் எங்கள் மதத்தை வேதனை படுத்தும் படி வைத்து இருக்கின்றார்கள் அதை தடை செய்யவேண்டும் என்று சொன்னால் அதில் நியாயம் இருக்கின்றது...தற்போது கமல் மாட்டிக்கிட்டான்டான்னு தமிழ் திரையுலகம் சந்தோஷப்பட்டுக்கொண்டு இருக்கின்றது... அதே ஆப்பு அவர்கள் பக்கம் திரும்ப வெகு நாள் ஆகாது என்பதை மறந்து விடுகின்றார்கள்....எனக்கு தெரிந்து, இந்த பிரச்சனைக்கு டிடிஎச்லாபிதான் முக்கியகாரணம் என்று நினைக்கின்றேன்...


டிடிஎச்சில் படம் ஒரு போதும் வெளிவந்து விடக்ககூடாது என்று நினைக்கும் சிலரின் தூண்டுதலாக இருக்க கூட அநேகமாக வாய்ப்பு அதிகம் இருக்கின்றது... மிஸ்டர் கமல் பேசாம நீங்க சம்பூர்ண ராமாயணம் படத்தை எடுத்து இருக்கலாம்,அப்கோர்ஸ் ராமனே எதிர்த்தாலும் ஆச்சர்யப்படறதுக்கு இல்லை... அவரும் நீங்க எடுத்த படத்தை பார்க்காமலே, நாலவது சீன்ல எனக்கு கிருதா பெரிசா வச்சி என் மனதை புண்படுத்தி இருப்பதால் படத்தை ரிலிஸ் செய்ய விடமாட்டேன்னு சொன்னாலும் சொல்லலாம். who knows???

=====================
 அதே  போல...தமிழ் திரையுலகினர் முக்கியகவனத்திற்கு…..

உங்க படத்துக்கும் டிரைலர் ரெடி பண்ணாதிங்கஏன்ன அதை வச்சே நீங்க என்ன கதை பண்ண போறிங்க....? யாரை காயப்படுத்த போறிங்கன்னு எங்களால ஈசியா கண்டுபிடிச்சிட முடியும்

அடுத்த யாருக்கும் படத்தை போட்டு காட்டாதிங்கஅவுங்க யாரும் மத்திய சென்சார் கமிட்டியோ அல்லது ஆஸ்கார் ஜூரிக்களோ அல்ல.. அப்படி மீறி படத்தை காமிச்சிங்கன்னா படத்தை கண்டிப்பா தடை பண்ண மனு கொடுத்துடுவாங்கஅப்புறம் கோர்ட்டுக்கு நடக்க வேண்டியதுதான்

ரொம்ப முக்கியம் படம் ரிலிசுக்கு முன்ன எந்த அரசியல் விழாவுல கலந்துக்காதிங்கஇயல்பா தமிழர்களின் பாராம்பரிய உடை வேட்டி என்று சொன்னா கூட பிரச்சனைதான்….. என்ன பிரிஞ்சிதா?

==========

இந்தியாவில் அனேக இடங்களில் இந்து ,முஸ்லீம் கலவரம்  வெடித்து இருக்கின்றது... ஆனால் தமிழ்நாட்டில் இருமத மக்களும் அமைதி  காத்து இருந்தார்கள் என்பதுதான் வரலாறு....அரசியல் சுயலாபத்துக்காக பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, தமிழ்நாட்டில் இருமதத்தினரும் அமைதி காத்து இருக்கின்றார்கள்.......முதன் முறையாக தமிழ்நாட்டில்  கோவை குண்டுவெடிப்பு கரும்புள்ளியாக அமைந்தது.. அப்பாவி பொதுமக்கள் பலர் இறக்க காரணமாய் இருந்த அந்த குண்டு வெடிப்பை  தமிழ  மக்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது...



ஆனாலும் தமிழகம் அமைதி காத்தது...மதத்தலைவர்கள் தங்கள் அரசியல் லாபத்துக்கு மசூதியையும் இடிப்பையும் குண்டு வெடிப்பையும் நிகழ்த்தினார்கள்... இதில் அப்பாவி இந்துக்களுக்கோ அப்பாவி  முஸ்லீகளுக்கோ கிஞ்சித்தும் தொடர்பு இல்லை..
ஆனால் கோவை குண்டு வெடிப்பினால்  தமிழ்நாட்டில் பெரிய கலவரமோ இருமதத்தினருக்கான  பாதிப்போ இங்கே ஏதும் கோவையை தவிர ஏற்ப்பட்டதில்லை.... அப்படித்தான் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றோம்... அப்படித்தான் கட்டமைக்கப்பட்டு இருக்கின்றோம். அதில்  சேற்றை வாரி பூசும் சம்பவங்கள் இந்த விஸ்வரூப படத்தின்  தடை மூலம்  தொடர்ந்து நடந்து வருகின்றன...


 முக்கியமாக  தம்பி அண்ணன் அப்துல்லா மற்றும் பிரியா தம்பி போன்றவர்கள்  ஒரு கருத்தை வலுவாக முன் வைத்தார்கள்... முக்கியமாக தம்பி அப்துல்லா எழுதிய முகநூல் தகவல் இங்கே கீழே கொடுத்து இருக்கின்றேன்...
==========
கமல் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாக காட்ட முயற்சித்தாரோ என்னவோ... ஆனால் அதை எதிர்க்கிறேன் என்ற பெயரில் கிளம்பியவர்களால் இன்று தமிழகத்தில் உள்ள பொதுவான மக்களின் மனதிலும்கூட இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள்தான்போல என்ற எண்ணம் உருவாகிவிட்டது.
# எதார்த்தம்.
================
 அப்படித்தான்  ஆகி விட்டது....



சமுக வலைதளங்களில் இயக்கும் அத்தனை  இஸ்லாமிய தோழர்களையும் வெறுப்புடன் பார்க்கும் அளவுக்கு விஸ்வரூப திரைப்படத்துக்கான எதிர்ப்பு அமைந்து விட்டது என்பதுதான்   உண்மை. சில காரசார விவாதங்களை படிக்கவே பிடிக்கவில்லை... இன்னும் கமல் ரசிகர்கள் போராட்டங்கள் நடத்து இருக்கின்றார்கள்... பாதுகாப்பை பலப்படுத்தி போராட்டத்தை தடுத்து இருக்கின்றார்கள்...


அவர் வேறு  நிறுவனத்தில் வேலை   செய்யும் இஸ்லாமிய தோழர், தினமும் டீக்கடையில்  சந்தித்துக்கொள்ளுவோம்... இரண்டு நாட்களாக என்னிடத்தில் சரியாக பேசவில்லை... உங்களுக்கு சினிமா ரொம்ப புடிக்கும்... அது மட்டும் அல்ல  உங்களுக்கு கமலை பிடிக்கும்ன்னு  தெரியும்... எங்கிட்ட பேசுவிங்களா ?மாட்டிங்காளான்னு எனக்கு சின்ன கன்பியூசன் அதான் என்றார்.... ஏங்க அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்...??? என்றேன்.. இது சின்ன  சேம்பிள்தான்.. இத போல பல பேர் அப்படித்தான்  யோசிக்கின்றார்கள்... இன்னும் சிலர் இந்த தடையை நியாயப்படுத்துகின்றார்கள்...


சென்னை எப்போதுமே அமைதியாகத்தான்  திகழ்ந்து வருகின்றது...இதுவரை எந்த  விபரீதமும்  ஏற்ப்பட்டதில்லை..ஆனால்  விநாயகர் சதூர்த்தி  அன்று ஐஸ் ஹவுஸ் பகுதியை சிலைகள் கடைக்கும் போது பாதுகாப்பை பலபடுத்துவார்கள் காரணம் யாராவது விஷமிகள் தையாவது செய்து வைத்து மதக்கலவரத்தக்கு  வழிவகுத்துவிடுவார்கள் என்பதால்.....டிசம்பர் ஆறாம் தேதி, சுதந்திரதினம்,குடியரதினம் போன்ற நாட்களில் கூடுதல்  பாதுகாப்பை சென்னைக்கு காவல்துறையினர் அளிப்பார்கள்.. மற்றபடி சென்னையில் பெரிய அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்த்தே கிடையாது...


ஆனால்  மதல் முறையாக  எங்கோ வெளியான ஒரு படத்துக்கு, முக்கியமாக அந்த படத்து பெயர் கூட அண்ணாசலையில் பயணித்த மக்களுக்கு  தெரியாது... ஆனால் சென்னையில்  அமெரிக்க தூதரகம் முன்பு போராட்டம் நடத்தி அமெரிக்க தூதரகத்தை முற்றுக்கையிட்டு சென்னையை ஒரு வாரத்துக்கு ஸ்தம்பிக்க வைத்தார்கள்... மகத்தான வெற்றியும் பெற்றார்கள்... இதை முதல்வர் ஜெயல்லிதாவே  எதிர்பார்க்கவில்லை... பொதுமக்கள் டிராபிக்கில் திண்டாடி போனார்கள் என்பதுதான் உண்மை... சிறுபான்மையாராக இருந்தாலும் ஒரு நகரத்தை ஸ்தம்பிக்க வைக்க முடிகின்றது  என்று மகிழ்ந்தார்கள்.


அடுத்ததாக தமிழகத்தில் வெளியான  துப்பாக்கி படத்தில் அவர்கள் மதத்தினை புண்படுத்தும் காட்சிகளை எடுக்க சொன்னார்கள்...  எடுத்தார்கள்...வெற்றி பெற்றார்கள்..
அடுத்து ஒரு படி முன்னேறி விஸ்வரூபம் படம் ரிலிஸ் செய்யும் முன்  நிரந்தர தடை வேண்டும் என்று போராடி வருகின்றார்கள்..

ஒருவேளை படம் ரிலிசாகி தங்கள் மனதை புண்படுத்தும் காட்சிகள் இருக்கின்றது அதனை எடுக்கவேண்டும் என்று   சகோதரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்து இருந்தால் இன்னும் அவர்கள் போராட்டத்துக்கு வலு சேர்ந்து இருக்கும்...ஆனால் படம் ரிலிசுக்கு முன்பே போராட்டம்  என்பது.... அவர்கள்  மீது விமர்சனத்தை  வைத்து இருக்கின்றது...



ஆனால் ஒரு ஏழை முஸ்லீம் வீட்டில்  சிலிண்டர் வெடித்ததை குண்டு வெடித்து இருக்குமோ என்று  ஊடகங்கள் கிளப்பிய பீதியை இன்று எதிர்க்கும் யாரும்  எதிர்க்கவேயில்லை.
எல்லாம் திரைப்பட சார்ந்த போராட்டங்கள்தான்... என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஆப்கான், பாகிஸ்தான், தீவிரவாதிகளை வேறு எப்படி காட்டுவது? அப்படி காட்டவே கூடாதா? அப்படி தீவிரவாதமே நடக்கவில்லை என்று சொல்லுகின்றீர்களா? பாகிஸ்தான் காரன் தலையை கொய்த்து எடுத்து சென்றதை ராமன் செய்தான் என்று சொல்லவேண்டும் என்று சொல்லுகின்றீர்களா? இரண்டு நாள் முன் கள்ள நோட்டு மாற்றிய போது கைதான ரபிக்கை பெயர் மாற்றி சொல்லவேண்டுமா? என்று சமுகவலைதளங்களில் பட்டியல் போட்டு காரசாரமாக கேள்வி மேல்  கேள்வி கேட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்...


கமல் அப்படி ஒரு வேளை புண்படுத்தும் விதமாக காட்சி அமைத்து இருந்தால் அது கண்டிக்கதக்கது...  அந்த காட்சிகளை எடுக்கவேண்டும் என்பதில் மாற்று கருத்து என்பது இல்லவே இல்லை என்பது என்கருத்து...

இந்த தடை மூலம்   ஒன்று மட்டும் தெரிகின்றது....கருத்து  மோதல்கள் என்ற பெயரில் நன்றாக பழிகிய நண்பர்கள் பலரை  பலர் இழந்துக்கொண்டு இருக்கின்றார்கள்...பேஸ்புக்கிலும் டூவிட்டரிலும் நடக்கும் விவாதங்களை பார்கையில் கொடுமையாக இருக்கின்றது...

எப்படி ஜாதியை சொல்வதும் ,கேட்பதும்  அநாகரீகம் என்று  நினைத்து வாழ்ந்த சமுகத்தில் இன்று தொலைகாட்சியில் தன்னை ஜாதி வெறியன் என்று எப்படி காட்டிக்கொள்ளுகின்றார்களோ? அது போல வெளிப்படையாக  நீங்கள் மட்டும் யோக்கியமா? என்று பொத்தாம் பொதுவாக  அனைவரையும்  வெறுப்பான கண்ணோட்டத்தில் கேள்வி கேட்டக வைத்து விட்டது...இந்த திரைப்படத்துக்கான  தடை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை... 



பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.



நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS... 

33 comments:

  1. சென்னையின் பல பகுதிகளில் விஸ்வருபம் வெளிவராது என்று பல போஸ்டர்கள் அடிக்கப்பட்டுள்ளது படத்தின் போஸ்டர்களை பார்த்து பழகிய பொதுமக்கள் இதை வியாப்பா கநின்று படித்து விட்டு செல்கிறார்கள் கமலை தவிர பலபேர் இந்த படத்தை வைத்து கல்லா கட்டி கொண்டு இருக்கிறார்கள் என்பதுநிதர்சனா உண்மை

    ReplyDelete
  2. மற்றவர்களை விட முஸ்லிம்கள் இப்பொழுது கமலுக்கு ஆதரவு அளிக்க வேண்டியது அவசியம். இது உள்ளத்தால் முஸ்லிமாக இருப்பவருக்கு மட்டுமே சாத்தியம். ஒப்பனை மற்றும் உடையால் முஸ்லிமாக இருப்பவருக்கு சாத்தியம் இல்லை.

    ஐ சப்போர்ட் கமல் ஹசன்.

    ReplyDelete
  3. எனக்கென்னவோ இது சட்டமன்ற தேர்தலுக்கான ஒத்திகை என்றே படுகிறது. அல்லது மேலிடத்து ஒத்திகையாகவும் இருக்கலாம். விஸ்வரூபம் படம் வௌிவந்தால் தங்களுக்கும், தங்கள் சமயத்திற்கும் எவ்வளவு இழுக்கு வரும் என்று நினைத்தார்களோ அதைவிட பலமடங்கு கெட்டப்பெயரை அவர்களாகவே ஏற்படுத்திக் கொன்டார்கள்.

    ReplyDelete
  4. ஜாக்கி!யாரையும் விட நான் இஸ்லாமிய நம்பிக்கையாளர்களிடம் அன்றாட வாழ்வில் உரையாடி வாழ்ந்து வருகிறேன்.தமிழகத்திலும்,இணையத்திலும் இயக்க ரீதியாக ஒரு சிலர் மட்டுமே இஸ்லாத்தை வளர்க்கிறேன் என்ற பெயரில் தீவிரத்தன்மையோடு நடக்கிறார்கள்.இவர்களால் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களுக்கும் அவப்பெயரை கொண்டு வருகிறார்கள்.மனுஷ்யபுத்திரன் போன்ற பொது ஊடக கருத்தாளர்களையும் கூட அவமதிக்கும் வகையில் கட்டுரை எழுதி கேவலப்படுத்துகிறார்கள்.இன்று கலைஞர் தொலைக்காட்சியில் மனுஷ்யபுத்திரனே இது குறித்து தனது எண்ணத்தை வெளிப்படுத்தினார்.

    இங்கேயுள்ள அடிப்படைப்பிரச்சினை என்னவென்றால் இந்த கலாச்சார தீவிரவாதிகளை மீறி மிதவாத இஸ்லாமியர்களின் குரல்கள் உரக்க எழும்பாமல் இருப்பதுதான்.இதோ நீங்களும்,நானும் இவர்களை சார்ந்து குரல் எழுப்ப வேண்டியிருக்கிறது.

    ஒரு தீவிரவாத நிகழ்ச்சி உலகின் எந்த மூலையில் நிகழ்ந்தாலும் இறந்தவர்களுக்காக நாம் வருத்தப்படுகிறோம்.கூடவே மதத்தின் பெயரால் உருவாகும் மதவாதங்கள் தவறு என்று நாம் விமர்சித்திக்கொண்டிருந்தால் இந்த கலாச்சார தீவிரவாதிகள் தலிபான்களும்,அல்ஹைதாவும் சுதந்திர போராளிகள் என்கிறார்கள்.இந்த சூழலில் தீவிரவாதத்திற்கு எதிராக படம் எடுத்தாலும் கூட அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.இதில் ஜெயலலிதாவின் சுயநலமும் சேர்ந்தே கமலுக்கு எதிரான சூழலை உருவாக்கி விட்டது.

    இவர்கள் கலாச்சார தீவிரவாதிகள் என்று அறியாமல் இவர்களின் மூளை நாளங்கள் எப்படி செயல்படுகின்றன என்று உணராமல் நட்பாக இவர்களுக்கு படம் போட்டுக் காண்பித்தது கமலின் தவறு என்ற போதிலும் அவரது நேர்மையான செயலால் இவர்களின் தீவிரவாதத்தன்மை முகத்திரை கிழிந்து போய் விட்டது.

    உயிரோடு இருக்கும் ஒரு பெண்ணின் கழுத்து வெட்டப்படுவதைக் கண்டிக்க வக்கில்லாதவர்கள் ஒரு திரைப்படத்தில் கழுத்தை கெடா வெட்டுவது மாதிரி கமல் காட்சிப்படுத்தியிருக்கிறார் என இஸ்லாமியர்கள் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.எல்.ஏ புதிய தலைமுறையில் குற்றம் சாட்டுகிறார்.

    தொடரும் தவறான மதவாதங்களை தடுப்பதற்கான வழிகள் இவர்கள் அரசியல்,கலாச்சார ரீதியாக மதக்கருத்துக்களை திணிப்பதை குறைக்க வேண்டுமென்றால் மிதவாதி இஸ்லாமியர்கள் சமூக தளத்தில் விவாதிக்க முன் வரவேண்டும்.இல்லையென்றால் தவறான வழிகாட்டுதல்களால் பாதிக்கப்படுவது ஒட்டுமொத்த தமிழகமாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ராஜ நடராஜன்...

      விவாதங்கள் நடப்பது ஒரு புறம் இருக்கட்டும்...

      கமல் தானாக இந்த படத்தை இஸ்லாமியர்களுக்கு போட்டு காட்டவில்லை. படம் பற்றி நெகடிவ் கருத்து வந்ததும், இஸ்லாமிய இயக்கங்கள் தமிழக உள்துறை செயளரை அணுகி தங்கள் ஆட்சேபங்களை தெரிவித்தனர். அதன் பின் தமிழக அரசின் வழிகாட்டுதலின் பேரிலே படம் போட்டு காட்டப்பட்டது...

      படம் பார்க்காமலே எதிர்க்கும் முஸ்லிம்கள் என்று எதிர்க்கும் நீங்கள், விஷயம் தெரியாமலே பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது..

      Delete
    2. தமிழ் நாட்டில் வாழும் இஸ்லாமிய சகோதரகள் இன்னமும் சகோதர மனப்பான்மையை உடையவர்கள் என்பதில் துளி கூட சந்தேகம் வேண்டாம். ஆனால் அரசியல், சமுக சேவை செய்கிறோம் என்று கூறும் சிலரே அவர்களை தவறாக வழி நடத்த பார்க்கிறார்கள். கிரிக்கெட்டில் இந்தியாவை பாகிஸ்தான் வெற்றி பெற்றால் இங்கு பாகிஸ்தானை புகழ்ந்து கோஷம் போடுவது இனிப்புகள் வயங்குவது போன்ற செயல்கள் யாரால் இங்கு நடத்த படுகின்றது.

      Delete
  5. கமாண்டு போடவே பயமாக இருக்கிறது.வேற என்ன சொல்றது ஜாக்கின்னே

    ReplyDelete
  6. Jackie sekar! This is really a very good post :).

    ReplyDelete
  7. This is really very good post. Still know nobody is thinking the wrong way. But this situation make everybody what have you said.

    ReplyDelete
  8. arsiyal+kamal ethirupu+aanavam = viswaroopam thadai

    ReplyDelete
  9. Arumayana pathuvu nanbare..ithai mutrum amothikkiren

    ReplyDelete
  10. மதம் என்ற போதை இந்தியாவில் தான் அதிகம்... இஸ்லாமிய நாடான மலேசியாவில் விஸ்வரூபம் திரையிடபடும் போது இங்கு ஏன் இந்த நிலை??

    மற்றவர்களுக்கு மதம் என்பது உறுகாய் என்றால் நம்மவர்களுக்கு அது சாப்பாடு போல உள்ளது ... நல்லதுக்கு இல்லை ...

    ReplyDelete
    Replies
    1. மலேசியாவில் தடை செய்யப்பட்டுவிட்டது.மத்திய கிழக்கு நாடுகளில் .இலங்கை/ ஆந்திரா கர்நாடகா கேரளா உட்பட பல இடங்களிலும் தடை செய்யப்பட்டு விட்டது.

      Delete
  11. your thuppaki review "final kick" :
    பைனல்கிக்.

    பொதுவா படத்தின் உள் அரசியலை அதிகம் நான் அலசமாட்டேன்... படம் நன்றாக இருக்கின்றதா இல்லையா என்று பார்த்து விட்டு அடுத்த வேலை பார்க்கப்போகும் ரகம்....ஆனால் மதப்பிரச்சனையில் வெற்றியின் மகிழ்ச்சியை சுவைக்க முடியாமல் இருக்கின்றார்கள் படக்குழுவினர்...

    உன்னை போல் ஒருவன் படத்தில் போலிஸ் ஆபிசராக முஸ்லிம் நடித்து இருப்பார்.. தீவிரவாதியில் ஒரு இந்து இருப்பார்... அதனால் அந்த படத்துக்கு எதிர்ப்பு இல்லை...இந்த படத்தில் எல்லோரும் முஸ்லிம்களாக இருக்கின்றார்கள்... தீவிரவாதிகளுக்கு உறுதுனையாக 5 சதவிகிதம் பேர் இருக்கின்றார்கள் என்று வைத்துக்கொள்வோம்...ஆனால் 95 சதவிகித மக்கள் ஒரு பாவமும் அறியாதவர்கள்.. நம் சகோதரர்கள்..


    . சொந்த வீடு வைத்து இருப்பவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை...ஆனால் வாடகைக்கு வீடு கிடைக்காமல் அவர்கள் படும் துயரம் சொல்லி மாளாது... அஸ்தினாபுரத்தில் என் மாமியாருக்கு சொந்தமான சிங்கிள் பெட்ரூம் வீடு இருக்கின்றது...அதன் பக்கத்தில் எழு வருடமாக ஒரு முஸ்லிம் குடும்பம் இருக்கின்றது. அவர்களுக்கு வீடு வேண்டும்.... தயங்கி தயங்கி வீடு கேட்டது ரொம்ப கொடுமை.. பட் அவர்களுக்குதான் வீடு வாடகைக்கு விடச்சொன்னேன்...

    ReplyDelete
  12. படம் பார்த்துவிட்டேன், அருமையான படம், இந்திய முஸ்லீமை தன்னுடைய கதாபாத்திரம் மூலம் பெருமை படுத்தியுள்ளார், ஒரு முஸ்லீம் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் அவர் சண்டையினால் வரும் வழியை உளவியல் ரீதியாக சொல்லியிருக்கிறார். இந்தப்படத்தை எதிர்க்க தீவிர இந்துந்துவ சிந்தனை உள்ளவர்கள் எதிர்க்கவாவது கொஞ்சம் வாய்ப்பு இருக்கிறது. கமல் இந்திய முஸ்லீம்களை கவுரவப்படுத்தியிருக்கும் படம், அனைத்து முஸ்லீம்களும் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம் முக்கியமாக ஆராய்ச்சி செய்யவேண்டியது கமல்ஹாசன் கதாபாத்திரம்.

    ReplyDelete
  13. சகோதரர் ஜாக்கி இந்தியாவில்
    எத்தனையோ அனாச்சாரங்கள் நடந்து கொண்டுதாண் இருக்கிறது

    அதையெல்லாம் விட்டு விட்டு முஸ்லிம்களை மட்டும் தீவிரவாதி என்று எப்பா பார்த்தாலும் படம் எடுத்துக்கொன்டேயிருக்கிரார்கள்
    இந்து திவிரவாதி இல்லியா மாவோயிஸ்ட் திவிரவாதி இல்லியா காந்தியை கொண்டானே கோட்ஷே அவன் திவிரவாதி இல்லியா

    இன்னும் சொல்லிக்கொன்டே போகலாம் ஜனநாயக நாட்டில்
    யாரும் திவிரவாதி நடத்தினாலும்

    தவறு தான் வண்மையாக கண்டிக்க வேண்டும் பட் எதோ ஒரு முட்டாள் செய்த தவறுக்காக
    ஒட்டு மொத்த முஸ்லிம்களை திவிரவாதிகள் என்று சொன்னால் எந்த விதத்தில் ஞாயம்
    அதுவும் விஸ்வரூபம் திரைப்படம் முழுக்க முழுக்க முஸ்லிம்களை பற்றியே எடுத்துரிக்கிரார்கள்

    அது தான் வேதனையாக இருக்கிறது!

    ReplyDelete
  14. கருத்து சுதந்திரம் டேம் 999 க்கு பொருந்தாதா ஜாக்கி அண்ணா???

    டிடிஹெச் சில் வெளியிட முடியாதபடி செய்தார்களே தியேட்டர் அதிபர்கள்.. அவர்களை யாரும் ஏன் எதிர்க்கவில்லை ஜாக்கி???

    கமல் படத்தை டி.டி.எச் சில் வர முடியாமல் செய்த தியேட்டர்காரர்களின் தியேட்டர்களில் தானே படம் பார்க்கிறீர்கள்? தியேட்டரில் படம் பார்க்க மாட்டோம் என்று ஏன் யாருமே போராடவில்லை???

    டி.டி.ஹெச் சில் பிப்ரவரி 2 அன்று படம் வந்துவிடுமே?? வெயிட் பண்ணி கமலுக்கு ஆதரவாக டிவியிலே அனைவரும் பார்த்து இருக்கலாமே?? அதை விடுத்து வெளியூர் போய் படம் பார்க்க வேண்டிய அவசியம் என்ன??

    இத பத்தியும் கொஞ்சம் அடுத்த பதிவில் எழுதுங்களேன்??

    ReplyDelete
    Replies
    1. //கருத்து சுதந்திரம் டேம் 999 க்கு பொருந்தாதா ஜாக்கி அண்ணா??? //

      டேம் 999 படம் நடக்காத ஒன்றை நடப்பதாக மிகை படுத்தி எடுத்த படம், அதுவே அது உண்மையாக நடந்த ஒரு சம்பவம் என்றால் தடை என்பது தவறுதான்... ஆனால் விஸ்வரூபம் படத்தில் ஆப்கனிஸ்தானில் நடந்த உண்மைகள் தான் படமாக எடுக்கப்பட்டுள்ளது, கமலும் எல்லாவற்றுக்கும் தன்னிடம் 300 ஆதாரங்கள் இருபதாக கூறுகிறார்...

      உண்மைக்கு புறம்பான சம்பவங்கள் இருந்தால் எடுக்க சொல்லி போராடுங்கள் நாங்களும் ஆதரவு தருகிறோம்.. உதாரணத்துக்கு உமர் கோவை, மதுரையில் தங்கி இருந்ததாக கூறபடுவது..


      Delete
  15. உணர்ச்சிகள் தூண்டபடுவதால் நீதியை மறந்து விட வேண்டாம் .!

    கோயில் இடம் பெரும் காட்சியாக இருந்தால் மணி ஓசையும், தண்ணீர் தடாகமும், அமைதியான (?) பிராமன பூசாரியையும் காட்சிப்படுத்துவார்கள்.

    கிருத்தவ தேவாலயமாக இருந்தால் அமைதியாக சூழலும், வெள்ளை ஆடையில் அமைதியான தோற்றத்தில் ஒரு பெரியவரும், பைபிலின் காட்சியம் சித்தரிக்கப்படும்.

    இதுவே பள்ளிவாயலாக இருந்தால் ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளுக்கு அடைக்களம் கொடுக்கும் இடமாகவும், திருமறைக் குர்ஆனை ஓதிக் கொண்டே பொது மக்களை கொலை செய்யும் மனிதர்களும் தான் காட்டப்படுவார்கள். ஏன் இந்த இஸ்லாமிய எதிர்ப்பு வெறி? ஏன் இந்த துவேஷப் பார்வை?


    ஆரம்ப காலத்தில் ஊதுபத்தி கொழுத்துபவர்களாகவும் தர்காக்களில் மந்திரிப்பவர்களாகவும், பேய் ஓட்டுபவர்களாகவும் காட்டப்பட்ட முஸ்லிம்கள் இன்று தெளிவாக தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். முஸ்லிம்களின் நல்ல பண்புகள் எதுவும் இதுவரைக்கும் சினிமாக்களில் காட்டப்பட்டதில்லை. இதற்கு எதிராக யாராவது பேசினால் கருத்து சுதந்திரத்தை எதிர்க்கிறார்கள் என்ற பெயரில் அதே முஸ்லிம்கள் மீது பழி போடப்படுவது வேடிக்கையாக இருக்கிறது.

    ReplyDelete
  16. பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி.

    ராஜநடராஜன் மிக்க நன்றி.

    சீராஜ் தம்பி ஒங்க கேள்விகள் அருமை..

    கடந்த வருடம் 144 படங்கள் வந்தன அதில் எத்ததனை படம் முஸ்லிம்களை அவமதிக்கும் படங்கள் வந்து இருக்கின்றன.... அப்படி என்றால் முஸ்லிம்கள் விமர்சனத்துக்கு அப்பார்பட்டவர்களா?

    நன்றி ஹை

    ReplyDelete
  17. உலக சினிமாக்களில் எத்தனையோ திரைப் படங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக வந்து கொண்டே இருக்கிறது. நாமும் அதை தடுப்பதற்காக இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் செய்து கொண்டுதான் இருக்கிறோம்.. நம்மால் அவற்றை நிறுத்திவிட முடிவதில்லை காரணம் நாம் அவற்றை புறக்கணிக்க விரும்பவில்லை... ஆர்பாட்டம் பன்னுபவர்களில் பல பேர் அத் திரைப்படத்தை பார்க்கத்தான் போகின்றனர்... முஸ்லிம்கள் எதிர்கிறார்கள் என்று யாரும் பயப் படுவதில்லை மாறாக அதுவே அவர்களின் திரைப் படத்துக்கு விளம்பரமாக மாறி விடுகிறது என்பதை நினைத்து சந்தோசப் படுகிறார்கள். எனவே குறுகிய சிந்தனையுடன் நோக்காமல் தூர நோக்கு சிந்தனையுடன் செயற்பட வேண்டும்.

    இத் திரைப் படத்தை முஸ்லிம்கள் பார்க்க மாட்டோம் என்று பகிஷ்கரித்தால் பொருளாதார ரீதியா பாரிய பின்னடைவை ஏற்படுத்த முடியும். இப்படியான படம் எடுப் போருக்கு அது ஒரு அச்சுறுத்தலாய் இருக்கும். இதற்க்கு நம் முஸ்லிம்கள் தயாரா?

    இன்றைய பிரச்சினைகளுக்கு மூல காரணம் திரைப் படங்கள் அல்ல நம் சமூகத்தில் ஒற்றுமையின்மை.

    அப்படியே இந்த வீடியோ வையும் முஸ்லிம்கள் பார்த்து விடுங்கள்... இஸ்லாம் என்ன சொல்கிறது? நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று உங்களுக்கே விளங்கும்.

    வீடியோ

    ReplyDelete
  18. இங்கு தமிழ் நாட்டில் உள்ள பணக்கார முஸ்லிம்கள் பணம் போட்டு படம் எடுத்து உங்கள் நல்ல கருத்துக்களையும் நல்ல குணம் படைத்த கதாபாத்திரமும் வைத்து வெளியிடுங்கள் யார் வேண்டாம் என்று சொன்னது.

    ஒருவன் பொய்யே கூறினாலும் அதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை மாறாக அவன் கூறுவது பொய் என்று சொல்லலாம் அவ்வளவுதான் இவன் பொய் பேசுகிறான் இவன் வாயை தைக்கவேண்டும் என்று யாரும் கூறமுடியாது.

    கவிதை காவியம் கலைச்சிற்பங்கள் இவை அனைத்தும் உண்மையானதாக இருக்கவேண்டிய அவசியமும் இல்லை.

    மாயன் காலண்டர்படி உலகம் அழிவதாக கருவை அமைத்து படங்கள் வெளிவந்தன இதனால் மக்கள் மரண பயத்திற்குள் தள்ளப்படுகிறார்கள் என்று யாராவது எதிர்த்தார்களா தடை செய்யகோரினார்களா?.

    ஒருவன் படத்தில் காட்டுவதை வைத்து ஒட்டுமொத்த சமூகத்தையும் மக்கள் தவறாக நினைப்பார்கள் என்று கூறுவீர்களேயானால் நீங்கள் மற்ற அனைத்து தமிழர்களையும் சிந்திக்க தெறியாத கூமுட்டைகள் என்று கொச்சைப்படுத்துகிறீர்கள் என்றே நான் கருதுகிறேன்.

    ReplyDelete
  19. ஒருவன் படத்தில் காட்டுவதை வைத்து ஒட்டுமொத்த சமூகத்தையும் மக்கள் தவறாக நினைப்பார்கள் என்று கூறுவீர்களேயானால் நீங்கள் மற்ற அனைத்து தமிழர்களையும் சிந்திக்க தெறியாத கூமுட்டைகள் என்று கொச்சைப்படுத்துகிறீர்கள் என்றே நான் கருதுகிறேன்.

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete

  21. பொதுவாக ஒரு விஷயத்திற்காக போராடுபவர்களை
    இரண்டு வகையாக பிரிக்கலாம் .
    1.மிதவாதி
    2.தீவிரவாதி
    மிதவாதத்தால் கிடைக்கும் வெற்றி நிரந்தரமானது
    மிதவாதியின் பெயர் ராம் ஆக இருந்தாலும் ராபர்ட் ஆக இருந்தாலும்
    ரஹீம் ஆக இருந்தாலும் பாராட்டப் பட வேண்டியவர்கள்

    தீவிரவாதத்தால் பெரும்பாலும் வெற்றி கிட்டாது .அபபடியே கிடைக்கும் வெற்றி நிரந்தமானது அல்ல
    அது மேலும் பிரச்சனையை வளர்க்கும்.
    தீவிரவாதியின் பெயர் அமர் ஆக இருந்தாலும் அக்பர் ஆக இருந்தாலும் அந்தோணி ஆக இருந்தாலும்
    அவர்களுக்கு நல்லவர்களின் ஆதரவும் அவர்கள் கும்பிடும் கடவுளின் ஆதரவும் கண்டிப்பாக கிடைக்காது



    விஸ்வரூபம் பிரச்சினையில் முஸ்லிம்கள் போராட விரும்பினால் ,மிதவாதம் மூலமாக போராடி ,அதாவது ஒரு முஸ்லிம் கூட
    இந்த படத்தை பார்க்ககூடாது என முடிவு செய்திருந்தால் ,இந்த மாதிரி பிரச்னைக்கு நிரந்திர முடிவு கிடைத்திருக்கும்


    அதை விட்டுவிட்டு இப்படி ஒரு பெரிய விளம்பரம் கிடைத்திருப்பதால்

    இனி வரும் சிறு இயக்குனர்கள் கூட தமக்கு பெரும் விளம்பரம் கிடைப்பதற்காக வேண்டி சாதாரண படத்திற்கு கூட
    வில்லன் பெயரை ஒரு முஸ்லிம் பெயராக
    வைக்க ஆரம்பிக்கலாம்

    இப்பொழுது கூட தடையை வாபஸ் பெற வெய்த்து படம் பார்ப்பவர்கள் வசம் கமல் செய்தது சரியா அல்லது தவறா என தீர்ப்பளிக்க
    வாய்ப்பளித்து தங்களது மிதவாதத்தை காட்ட ஆரம்பிக்கலாம்
    வேலு

    ReplyDelete
  22. மனது வருந்தி எழுதி இருபது போல தெரிகிறது. உங்கள் கருத்தில் ஞாயம் இருக்கிறது. முஸ்லிம் தலைவர்கள் இந்த போராட்டத்தை விட்டால் தமிழக முஸ்லிம்களுக்கு மிக பெரிய சேவை செய்தவர்களாக ஆவார்கள்.

    கமலை பொறுத்த வரை அவருக்கு தேவை தான் என்று சொல்ல தோன்றுகிறது. அவரால் எதனை தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்டு இருகிறார்கள். அந்த வினை தான் இது? வேட்டையாடு விளையாடு தயாரிப்பாளர் காஜா மொஹிடீன் தற்கொலை அளவுக்கு போக வில்லை? கலைபுலி தாணு குட ரொம்பவே நோன்தாரே ஆளவந்தான் என்ற கேவலமான படத்தை எடுத்து. ஏன் இரண்டு மாதம் முன்மு அனாவசியமாக நாயகன் பட தயாரிப்பாளர் முக்தா ஸ்ரீநிவாசன் கமல் பேசினார்

    ReplyDelete
  23. முஸ்லிம்கள் பிரச்சனையை கைகழுவி விட்டு விட்டாலும் ,
    மம்மி சும்மா விடமாட்டாங்க ....போற போக்க பார்த்தால்
    அப்படித்தான் தெரிகிறது .....இதெல்லாம் DTH ஆல்
    வந்த வினை ...கள்ள DVD ஜோரா கல்லா கட்டுது ...!!
    படம் ரீலிஸ் ஆக எவ்வளவுக்கு எவ்வளவு தாமதம் ஆகுதோ
    அவ்வளவும் கள்ள DVD வியாபாரிகளின் காட்டில் அடை மழை,
    கொண்டாட்டம் தான் .......

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner