2012 ரிவைன்ட் (பாகம்/3)




2012 ஆம் ஆண்டு என்னை பொறுத்தவரை மறக்க முடியாத ஆண்டுதான்…. 
நிறைய மாற்றங்கள்…. நிறைய மறக்க முடியாத சம்பவங்கள். என்று நிறைய சொல்லிக்கொண்டு  போகலாம்


காதல் மற்றும் நட்பு  இல்லையேல் வாழ்க்கை இல்லை என்றாலும், நல்ல நட்பு நெகிழ வைத்த நட்பு, கழுத்தை அறுத்த நட்பு, கைதூக்கி விட்ட நட்பு, நற்றாற்றில் தள்ளி விட்ட நட்பு,கை விட்ட ரத்த உறவுகள்,நெகிழவைத்த பெண் நட்புகள்,புதுப்பித்த காதல் ,புரிந்துகொண்ட காதல், இனம் புரியாத தவிப்பு,  உணர்த்திய காதல், உணர்ந்த காதல், கட்டுப்படுத்தியகாமம்,அசைவ காமம்,ப்ரெக்லர்கார்டு பயங்கள், என்று பிசிக்கலாக பல கலவையான உணர்வான காலகட்டங்களை  இந்த 2012 ஆம் வருடம் எனக்கு  அளித்து விட்டு சென்றது   என்று சொல்லலாம்

கூண்டு  கிளி போல ,இரண்டு வருடங்கள் சிறைப்பறவையாய் இருந்த நான்  மெல்ல சுதந்திரபறவையாக மாறிப்போனது 2012 ஆம்   ஆண்டில்தான்….


குழந்தைகள் வளர்ப்பு பற்றி ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு அனுபவங்கள் பெற்றுக்கொடுத்ததும் 2012 ஆம்  ஆண்டில்தான்….


பச்சைக்குழந்தையை நான் பார்த்துக்கொள்ள மனைவி வேலைக்கு சென்று வந்ததுகுழந்தையை பார்த்துக்கொள்ள  தவித்த தவிப்புகள் 2012 ஆம்  வருடத்தில்தான்
வீட்டை பெருக்குவது, பத்து பாத்திரங்கள் கழுவி வைப்பது… 

துணியை மிஷினில் போட்டு எடுத்து டிரையரில் உலர்த்துவதுநேரத்துக்கு குழந்தைக்கு ஆகாரம் கொடுப்பது….  ஆய்  துணி, சூசு துணி அலசுவது என்று பல  வித்தைகள் கற்றுக்கொண்டது 2012 ஆம் ஆண்டில்தான்….

முக்கியமாக அழும் குழந்தையை சமாளிக்கும் வித்தை கைவரப்பெற்றது  2012 ஆம்  ஆண்டில்தான்.

மகளை பார்த்துக்கொள்ளும் போது ஐந்து பிள்ளையை அம்மா எப்படி வளர்த்து ஆளாக்கி இருப்பாள் என்று  அம்மாவை ரொம்ப ரொம்ப மரியாதையாக நினைக்க வைத்தது 2012 ஆம்  ஆண்டில்தான்

இரண்டு பேரும் வேலைக்கு போக வேண்டிய கட்டாயம்குழந்தையை  பார்த்துக்கொள்ள ஒரு வயதான பெண்மணியை நியமிக்க அது சீரியல் பார்த்து குறட்டை விட்டு பிள்ளை ஏங்கிபோனது 2012 ஆம்  ஆண்டில்தான்

கீரிச் என்ற உலகத்தை அறிமுகபடுத்தியதும்  அதற்கு பிள்ளை கொடுத்த ஒத்துழைப்பும்  2012 ஆம் ஆண்டில் மறக்க முடியாதவை.



 என்னதான் ஆங்கில படங்கள் அதிகம் பாத்தாலும் ஆங்கிலத்தின் மீது ஒரு நடுக்கம் இருந்ததுஅது சுக்கு நூறாக உடைந்து 100 எப்பிசோட்டுகள் வரை ராய்டர் நியூசில் வரும் செய்திகளை எளிய  தமிழில் எழுதி நிகழ்ச்சி செய்தது  2012 ஆம்  வருடத்தில்தான்.
அதன் பின் புரோகிராம் புரொட்யூசர் என நிறைய எப்பிசோடுகள் என்று பயணிக்கின்றது. எந்த தளத்திலும் இயங்கும் சக்தியையும்  நம்பிக்கையையும்  கொடுத்தது2012 ஆம்  ஆண்டில்தான்.
வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்த நட்ராஜ் என்கின்ற ஜெகனுக்கும்என் நன்றிகள்.

மிகுந்த நெருக்கடியில் நான் வீடு வாங்கும் போது பணம் கொடுத்த நண்பர்கள் அவர்கள் வீடு வாங்க பணம் கேட்ட போது  2012 ஆம் வருடத்தில் மட்டும் இரண்டரை லட்சம்  லோன் டாப்  ஆப் பண்ணி கடனை கொடுத்தேன்... 2013 ஆம்  வருடம் முழு கடனையும் அடைக்க இறைவன் அருள் புரிய வேண்டும்... இந்த வருடமும் அதே போன்ற சிக்கல்.... சொல்லிய தேதியில் பணத்தை கொடுக்க டைம் கேட்டு இருக்கின்றேன்.. இல்லையென்றால் இந்த வருடத்தில் நான் ஆசையாக வாங்கிய வீட்டை  விற்றாவது பணத்தை கொடுக்கின்றேன் என்று சொல்லி இருக்கின்றேன்....  போன வருடம் இருந்த இந்த பணம் சிக்கல்   இந்தே வருடத்திலும் தொடர்கின்றது.... இதன் காரணமாக என்னால் வேலையிலும்  எழுத்திலும் கவனம் செலுத்த முடியவில்லை... எல்லாம் இந்த வருடம் சரியாகும் என்று நம்புகின்றேன்........ புரிந்து கொண்ட நண்பர்கள்  சின்னபையன் மற்றும் ஸ்ரீராமுக்கு நன்றிகள்.


எனது  சொந்தகிராமமான கூத்தப்பாக்கத்தில்  எனது புகைப்படம், எனது கட்டுரைகளோடு எனது தளம் , என் விகடனில் வெளிவர 60 வயது பெண்மணி ஒருவர் புத்தகத்தை படித்து விட்டு  வைத்திலிங்க புரத்தில் இருந்து எனக்கு போன் பண்ணி வாழ்த்து தெரிவித்தார்….சுகுனா திவாகர் மற்றும்  வாய்ப்பளித்த விகடனுக்கு நன்றி..


 அதே போல நான் ஈ திரைப்படத்துக்கு தினகரன் வெள்ளிமலரில் கலந்துரையாடல் பகுதியில் பாஸ்கர் சக்தி, பிரியாதம்பி ,முத்துராமலிங்கம் போன்ற சீனியர்களோடு நானும் எனது கருத்தை முன்  வைத்து ஒரு கட்டுரை வெளியானது , அப்பா பார்த்து விட்டு மகிழ்ந்தார்ஊரில் எனது மாமா மற்றும் உறவினர்கள் அந்த புத்தகத்தை வைத்துக்கொண்டு அனைவரிடத்திலும் பெருமையாக காட்டிக்கொண்டு இருந்தார்கள்.. நன்றி திரு  சிவராமன்.


மைதிலியின்  கல்வி உதவிதொகையில் சிக்கல் எழுந்த போது,  தடைபடாமல் காத்து துணை  நின்று, அந்த பெண்ணின் படிப்பை தொடரவைத்தும்,ஒரு கதவு மூடினாலும் மறுகதவு திறக்கும் என்ற நம்பிக்கை கொடுத்ததும்.. என்னோடு பக்கபலமாக நின்ற வாசக நண்பர்களின் மூலம் அதீத நம்பிக்கை பெற்றதும்  2012 ஆம் ஆண்டில்தான்.

2005 இல் இருந்து என்னோடு பயணித்த பஜாஜ் சிடி100 பைக் கரும்புகையை  கக்கி வைக்க மேலும் செலவு வைக்கும் என்ற காரணத்தினால் எக்ஸ்சேஞ் செய்து டிஸ்கவர் 125 பைக் ஸ்ரீராமில் லோனில் வாங்கியதும் சரியான நேரத்தில் உதவி கரம் நீட்டிய நண்பர் பிரசன்னா வேணுவுக்கும் என் நன்றிகள்

அதே போல மூன்று வருடமாக  நான் வைத்து இருந்த  சாம்சங்  செல்போன் சரியான  நேரத்தில் மக்கார் செய்ய மைக்ரோமேக்ஸ் ஆன்ராய்ட் போனுக்கு மாறியதும் இந்த வருடத்தில்தான்...

2012 ஆம்  வருடம் நான் படித்து  நெஞ்சை விட்டு அகலாத  நாவல் என்றால்  கண்மணி குணசேகரன் எழுதிய நெடுஞ்சாலை   நாவல்தான்.. அதனை எனக்கு பரிசாக  கொடுத்த நண்பர் மணிஜிக்கு மிக்க நன்றி

ஆனந்தவிகடன் மற்றும் குமுதம் வாரா வாராம் வாங்கி படிக்கும்  எதிர்பார்ப்பை தினகரன் இணைப்பாய்வெள்ளிக்கிழமை தோறும் வெள்ளிமலரை மிஸ் பண்ணாமல் படிக்கும் அளவுக்கு தென்னிந்திய சினிமா செய்திகளை சுவாரஸ்யமாக எழுதும் திரு கே சிவராமன் உழைப்பு மெச்சதக்கது….முக்கியமாக 2012 ரிவைன்ட் சினிமா செய்திகளில் எல்லா மொழிதிரைப்படங்களையும் அலசினார்எனக்கு ரம்பா  போஜ்புரி மொழி படங்களில் நடிப்பதாக கேள்வி பட்டு இருக்கின்றேன்.. ஆனால் போஜ்புரி ,பெங்காலி, பஞ்சாப்  போன்ற மொழிகளில் டாப் விஷயங்களை சுவாரஸ்யமாக  சினிமா ஆர்வலர்களுக்கு   கொடுத்தது பெரிய விஷயம்

 விகடனில் தொடராய் வந்த வட்டியும் முதலும் எனக்கு மிகவும் பிடித்த தொடர் வாரம் வாரம் அதனை வாசித்து சிலாகித்து இருக்கின்றேன்.

 பதிவுலகல் ஆயிரத்தில் ஒருவன்  மணி அவர்களின்  இழப்பு மனதை பிசைந்த்து
பதிவுலகில் இருக்கும் சைக்கோக்களை  அதிகம்  புறக்கணித்தேன்....

 அதுக்கு ஈடுகட்டு விதமாக  அயனாவரம் ஆனந்,பாலராஜன் கீதா போன்றவர்களின் நட்பு கிடைத்தது... முக்கியமாக அயனாவரம் ஆனந் சந்திப்பை மறக்கவே முடியாது...

=============
மற்றபடி  2012இல்  ரொம்பவும் மிஸ் செய்தது...
========


நித்யகுமாரன் நட்பை.....


வருடா வருடம் கலந்து கொள்ளும் சென்னை உலக படவிழாவில் இந்த வருடம் நான்  கலந்துகொள்ளவே இல்லை…. ஒரு பிரேம் கூட பார்க்கவில்லைஅந்த அளவுக்கு வேலைபளு.

ஈரோடு சங்கமம் நான் ரொம்பவே மிஸ் செய்த ஒரு  நிகழ்சி…. வருடத்துக்கு ஒரு முறை  நண்பர்களோடு கொண்டாடும் அந்த  நிகழ்வு இந்த முறை  மிஸ் சிங்.

கடவுளுக்கு நன்றி.

வண்டி வாங்கி  இரண்டு மாதத்தில் ஒரு ஆட்டோகாரனால் கீழே விழுந்து மார்பில் நல்ல அடிமெல்ல மெல்ல ரெக்கவர் ஆனதும் தம்பி அலைகள் பாலா மற்றும் டாக்டர் புருனோ கொடுத்த நம்பிக்கைகளுக்கும்  நன்றிகள்.

என் திண்டிவனம் அத்தை பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்தது...

=================
இந்த வருடம் என்  திறமை மீது நம்பிக்கை வைத்து ஒரு புராஜக்ட் செய்கின்றேன்... இந்த வருடத்தில் அந்த வேலையை முடித்து விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கின்றது... பரம்பொருளின்  அனுகிரகத்தோடு.
=============

I have been reading http://www.jackiesekar.com/ for one and half years+  and your writings are very close match to my and many's initial life here.
Especially UPPPU KATHU & Kala otthathil Kanamal Ponavai. It is really good to see you kind of people, spending time to write , in-spite of family  commitments , the same I and Many are not able to do it.


About myself, I am Balaji, BE Graduate engineer from from Trichy, But fortunately/unfortunately  Jumped into the IT Industry here in Bangalore and running along with many
to lead my day-to-day life.

Happened to read your site once and I first saw your write up on Bangalore NICE ROAD. ( I guess that time you used to travel to bangalore often as your wife was here) and 
It attracted me and was quite interesting. Then I started reading regularly. Many a times, whenever I come to Chennai, thought of calling you, But that time only you have started 
concentrating on work and did not want to disturb you and some times my personal commitments and time made me not to call you.

Want to chat with you once when I come to chennai. I am not a good writer as you and I can not write what ever is there in my mind as letter, 
So better we will chat when we meet.

Don't mistake me for sending mail to this address, as you are using this for your commercials( I don't find any other address or I might have missed to notice).

Please convey my regards to your wife and Yalini and Best of Luck for your career.

Thanks 
Balaji.

இது போன்று மனதுக்கு நெருக்கமாக கடிதங்கள்  எனக்கு வரும் போது ஏன் நாம் எழுதாமல் சோம்பேறியாக இருக்கின்றோம் என்ற கோபம் எனக்கு என் மேல்  அதிகம் வரும்....



2012 ஆம்  ஆண்டு நான் எழுதிய மொத்த  பதிவுகள்  177 மட்டுமே மிக குறைச்சல் என்பது எனக்கே தெரியும்... இந்த வருடம் தொடர்ந்து நிறைய எழுத வேண்டும்.... எப்போதோ நான் எழுதிய படத்துக்கும், கட்டுரைக்கும் இன்றுவரை பாராட்டுகள் தொடர்கின்றன....அதற்க்காகவேனும் இந்த வருடத்தில் முடிந்தவரை நிறைய எழுதவேண்டும்... பரம் பொருளின் துணையோடும் ஆசியோடும்......



=====
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.



நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

5 comments:

  1. Jackie,

    Thanks for mentioning me in this. i never expected this. Nalaiku freeya irundha sollunga engayavadhu meet pannaalaam :)

    ReplyDelete
  2. டியர் ஜாக்கி பல வருடங்களாக தங்கள் தள‌த்தை வாசித்துக்கொண்டிருக்கிறேன். இதுவரை பின்னூட்டம்கூட போட்டதுகிடையாது.ஆனால் இன்று அதற்கான அவசியம் வந்துவிட்டது.

    "இரண்டு பேரும் வேலைக்கு போக வேண்டிய கட்டாயம்…குழந்தையை பார்த்துக்கொள்ள ஒரு வயதான பெண்மணியை நியமிக்க அது சீரியல் பார்த்து குறட்டை விட்டு பிள்ளை ஏங்கிபோனது 2012 ஆம் ஆண்டில்தான்…"

    இது வாசிக்கையில் சற்று வருத்தமாக இருந்தது. 5 பிள்ளைகளை வளர்த்த உங்கள் அம்மாவைப்பற்றி மரியாதையாக நினைக்கத்தெரிந்த உங்களுக்கு ஒரு வயதான அம்மாவை உங்கள் தேவைக்காய் வேலைக்கு வைத்துவிட்டு ( இதில் நீங்கள் இரண்டு பேரும் வேலைக்கு போக வேண்டிய கட்டாயம் என்று உங்கள் நிலைக்கு நியாயம்மும் கற்பித்துக்கொண்டிருக்கீரறீர்கள் ) அவர்கள் சீரியல் பார்த்திவிட்டு தூங்கியதால்தான் உங்கள் குழந்தை ஏங்கிவிட்டது என்று அவர்களை குறைகூறுவது, ( அவர்கள் எத்தனை பிள்ளைகள் வளர்த்தார்களோ இன்றும் வேலைக்கு வரவேண்டியா நிர்பந்தம் என்னவோ )அதுவும் அது இது என்று மரியாதை இல்லாமல் பேசியிருப்பது மனதை என்னமோ செய்கிறது.மற்றபடி உங்களின் ஆசைகள் தேவைகள் முய்ற்ச்சிகள் அனைத்தும் நிறைவேற பரம்பொருள் அருள்புரியட்டும்.

    ReplyDelete
  3. goodluck for 2013 and all the best
    -surya

    ReplyDelete
  4. All Very Success Behind You.

    Happy and Keep Smile

    ReplyDelete
  5. உங்க ப்ரோஜக்ட் வெற்றி அடைய நல்வாழ்த்துகள்

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner