(Phoenix Market City)வேளச்சேரி Phoenix மால் ஒரு பார்வை....சென்னை குருநானக் கல்லூரி சிக்னலில் இருந்து கிண்டி போகும் வழியில், 100 மீட்டரில் இந்த மால்   அமைந்து இருக்கின்றது...


மாலின் பெரிய குறை... அவசரத்துக்கு போகமுடியாததே... சத்தியம் போலவோ அல்லது எக்ஸ்பிரஸ்மால் போலவோ இரண்டு வழிகள் இருந்தால் மிக நன்றாக இருக்கும்..
மால்  கடந்த 24 ஆம் தேதி  பொதுமக்களின் பார்வைக்கு திறந்து விடப்பட்டது... அதிலிருந்து அந்த வழியாக மாலை செல்ல முடியவில்லை அவ்வளவு டிராபிக்..…


17 ஏக்கரில் 1.5 மில்லியன் சதுர அடியில் இந்த மால் அமைக்கப்பட்டு இருக்கின்றது.. நான்கு தளங்களை கொண்டு  இருக்கின்றது...

200க்கும் மேற்ப்பட்ட  உள்ளூர்  மற்றும் வெளிநாட்டு  தயாரிப்பு  பொருட்கள் இங்கே சந்தைபடுத்தப்படுகின்றது..

11 ஸ்கிரின் தியேட்டர்கள் இங்கே அமைக்கப்பட்டு இருக்கின்றது.. சினிமா அரங்குதானா என்று சந்தேகம் எழு வைக்கும் அளவுக்கு இழைத்து இழைத்து உருவாக்கி  இருக்கின்றார்கள்.. இன்னும் திறப்பு விழா நடக்கவில்லை.. எட்டி பார்த்த வரைக்கும் பைவ்ஸ்டார் ஓட்டல் ரேஞ் கணக்காக இழைத்து இழைத்து உருவாக்கி இருக்கின்றார்கள்..


ஜெ ஆட்சியில் ஐமேக்ஸ் தியேட்டர் கட்ட அரசின் அனுமதி கேட்க  வெள்ளையப்பன் பிரச்சனை காரணமாக பிரசாத் ஐமேக்ஸ் ஜதராபாத்தில் குடி கொண்டது.. அந்த குறையை தீர்க்க தற்போது சென்னையில் ஐமேக்ஸ் திரை  அரங்கு முதல் முறையாக சென்னையில்  திறக்க இருக்கின்றார்கள்..

இந்த முறை ஐமேக்ஸ் தியேட்டர்  சத்தியம் தியேட்டர் புண்ணியத்தில் சென்னையில் இரண்டு வரப்போகின்றது.. ஒன்று வேளச்சேரி மற்றது...கமலாதியேட்டர் எதிரில் விரைவில் வர இருக்கும் மாலில்   ஆரம்பமாகப்போகின்றது...

இன்னும் சத்தியம் தியேட்டரின் luxe  என்ற பெயர் கொண்ட தியேட்டர்கள் 11 ஸ்கிரினில் ஓப்பன் செய்ய இருக்கின்றார்கள்...இதில் ஐமேக்சும் அடக்கம்.... ரேட்  எக்கசெக்கமாக இருக்கும் என்று    நினைக்கின்றேன். 4கே டிஜிட்டல் புரஜக்ஷனில் திரையிட இருக்கின்றார்கள் என்பது கூடுதல் தகவல்…….


இன்னும் குழந்தைகளுக்கான பன் வேல்ட்  விளையாட்டு பொருட்கள் பாலிதீன்  பேப்பர் சுற்றப்பட்டு  கன்னிகழியாமல் இருக்கின்றன...

குடியரசு தினம் என்பதால்கூட்டம் கூட்டம் என்றால் அவ்வளவு கூட்டம்...

பார்க்கிக் இரண்டு அண்டர் கிரவுன்ட் பார்கிங் வைத்து இருக்கின்றார்கள்... ஏ1 இல் ஆரம்பித்து A1,B1,C1,D1,E1,F1,G1,    என்று கலர் கலர் பெயின்ட் அடித்து கலக்குகின்றார்கள்… காருக்கு வீக் டேஸ்இல்… இரண்டு மணி நேரத்துக்கு 40 ரூபாய் சனி ஞாயிறு அன்று இரண்டு மணி  நேரத்துக்கு 50 ரூபாய் என்று வயிற்றை கலக்குகின்றார்கள்..
டூவிலருக்கு இன்னும்  என்ன ரேட் என்று தெரியவில்லை… இன்னும் ரேட்பிக்ஸ் ஆகவில்லை என்பதால் கார் மற்றும் பைக்குகளுக்கு பரி  பார்க்கிங் தான்.. என்ஜாய் மக்களே...

 இன்னும் அதிகார பூர்வமாக திறக்கவில்லை  என்பதாலும் பல கடைகள் இன்னும் வேலை நடந்து கொண்டு இருக்கின்றன…பெரிய பெரிய காட் போர்ட்டுகளில் கம்மிங் சூன் போர்டுகள் தென்படுகின்றன...பெரிய பெரிய கார்மென்ட் கடைகளில்  இருக்கும் ஷோகேஸ் பொம்மைகள் புதிய உடைகளில் இருட்டு  லைட்டிங்கில் சில் அவுட்டில் காட்சி கொடுக்கின்றன….

 எக்ஸ்பிரஸ்  மால் போல புட் கோர்ட் பெரிதாய் இல்லை… ரொம்ப சின்னதாய் இருக்கின்றது… தரை தளத்தில் பிக்பஜார்  பாதி இடத்தை அடைத்துக்கொண்டு இருக்கின்றது..

அதே போல நான் பார்த்த வரையில் எக்ஸ்பிரஸ்மால் போல  சின்ன சின்ன ஈவன்ட் நடக்க ஏதுவாக பெரிய விஸ்தாரமான இடம் இல்லை என்று நினைக்கின்றேன்...யாழினிக்கு செம ஜாலி... எல்லா கடைகளில் போய் பொருட்களை எடுத்து இது என்னிது என்கின்றாள்...வயிறு கலக்க அந்த பொருளை அவனிடம் இருந்து பிடிங்கி வைத்து விட்டு வந்தேன்.


இன்னும் முழுதாய் சுற்றிப்பார்க்கவில்லை…. பேக் கடையில் உள்ளே போய் விலையை பார்த்தேன்….2500 ரூபாய் ஆனால் 20 பர்சென்ட் ஆப்பர் என்று 300 ரூபாய் பெறுமானமுள்ள பேக்  கண்ணடித்து தொலைக்கின்றது..

நடுத்தர மக்கள்…மாலில் இருக்கும் தியேட்டர் திறந்தால்  இரண்டு மாதத்துக்கு ஒரு முறை படம் பார்க்க  செல்லலாம்...பட் பொருள் வாங்க  சென்றால் உங்கள் சொத்து எழுதி வாங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்..


மழைகாலத்தில் இடம் தேடி செல்லும் எறும்புகள் போல இளைஞர் கூட்டம் சாரை சாரையாக செல்கின்றன. லேட்டஸ்ட் காஸ்டியூமில் நவநாகருக நங்கைகள்  மால் முழுவதும் வியாபித்து இருக்கின்றார்கள்… அப்பாக்களுடைய பாக்கெட் மணி கரைய தோதான மால் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை..


இன்னும் தியேட்டர் திறக்காமல் இருக்கும் போதே டிராபிக் இவ்வளவு இருக்கின்றது என்றால் இன்னும் தியேட்டர் திறந்தவிட்டால் கேட்கவே வேண்டாம்… போக்குவரத்து போலிசார் அதுக்குள் ஏதாவது மாற்று ஏற்ப்பாடு செய்ய வேண்டுமாய்  கேட்டுக்கொள்ள படுகின்றார்கள்..

வெளியூரில் இருந்து சொந்தங்கள் வந்தால் மாலை  சுற்றிக்காட்ட அழைத்து செல்கின்றேன் என்று பத்தா செய்தால் நிச்சயம் மாத பட்ஜெட்டில் பத்தாயிரம் துண்டு விழும் என்பதை மட்டும் போகின்ற போக்கில்  தெரிவித்துக்கொள்கின்றேன்.


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

7 comments:

 1. கொடுத்துவைத்தவர்கள் சென்னை மக்கள்...

  ReplyDelete
 2. காலையில் வாக்கிங் போகவில்லையென்றால் மாலையில் இந்த மாதிரி மால்களை ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வரலாம்..... அப்புறம் என்றாவது ஒரு நாள் படம் பார்க்கலாம்...

  ReplyDelete
 3. Jackie,
  I was there in Velachery for last 10 years and awaiting for this mall to open for a long period. last month I moved to US, Now they are opening. enna kodumai?
  Hhmmm, at least hearing about it from you. Thanks for sharing and Photos.

  ReplyDelete
 4. Today we visited.epada open panuvanga katgukitu irubdha mathiri ore jodi jodiya kootam. Mudiyala, full a open a avlo than!. Chennai la money earn panrathuku 5 ways irundha spend pana 10 ways iruku.

  ReplyDelete
 5. அப்புறம் elevator-ல போகும்போது யாழினி பாப்பாவை கீழே இறக்கி விட வேண்டாம். இங்கு பெங்களூரில் உள்ள பீனிக்ஸ் மால் திறந்து மூன்றாவது மாதத்தில் ஒரு சிறுவன் elevator-இல் சிக்கி உயிர் இழந்த சம்பவம் ரொம்பவும் கொடூரம். இந்த மாலில் உள்ள நபர்களுக்கு பெரும்பாலும் பேரிடர் மேலாண்மை பற்றி சொல்லிக்கொடுக்காமல் தான் பணிக்கு அமர்த்துகிறார்கள். அந்த சிறுவனை மீட்டெடுக்க கிட்டத்தட்ட 4 மணி நேரம் ஆனதினாலேயே அந்த சிறுவன் உயிர் இழக்க நேரிட்டது...

  ReplyDelete
 6. அப்புறம் elevator-ல போகும்போது யாழினி பாப்பாவை கீழே இறக்கி விட வேண்டாம். இங்கு பெங்களூரில் உள்ள பீனிக்ஸ் மால் திறந்து மூன்றாவது மாதத்தில் ஒரு சிறுவன் elevator-இல் சிக்கி உயிர் இழந்த சம்பவம் ரொம்பவும் கொடூரம். இந்த மாலில் உள்ள நபர்களுக்கு பெரும்பாலும் பேரிடர் மேலாண்மை பற்றி சொல்லிக்கொடுக்காமல் தான் பணிக்கு அமர்த்துகிறார்கள். அந்த சிறுவனை மீட்டெடுக்க கிட்டத்தட்ட 4 மணி நேரம் ஆனதினாலேயே அந்த சிறுவன் உயிர் இழக்க நேரிட்டது...

  ReplyDelete
 7. கருத்துக்கு மிக்க நன்றி...சுதாகர் இதைதான் நேரம்ன்னு சொல்லுவாங்க..  செந்தில் தகவலுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner