2012 ஒரு ரிவைன்ட்...சர்ச்ல ஜெனி பார்த்தா....  சிரிச்சா அதுக்குள்ள ஒரு வருஷமா போயிடுச்சி...?
இப்பதான் தண்ணி அடிச்சி கொத்து போட்டது போல இருக்கு.... அதுக்குள்ள ஒரு வருஷம் போயிடுச்சா...?போன நுயர்ல  கோவிலுக்கு போய் குடும்பத்தோட அப்படியே பிச்சிக்கு போனத நேத்து நடந்த்து போல இருக்கு.... என்று நிறைய சொல்லிக்கொண்டு  போகலாம்...

ஒவ்வோரு முறை  புத்தாண்டு வரும் போதும் எனக்கு  என்னாச்சி...  இப்பதான் வந்தது போல இருக்கு... அதுக்குள்ள ஓ வருஷம் ஓடிடுச்சா என்று நினைக்க வைக்கும்  நிகழ்வாக  புத்தாண்டுகள் மாறிப்போய் விட்டன....  கடந்த ஒரு வருடத்தை சின்னதாக ரிவைன்ட் செய்து பார்த்து விடலாம்...

தானே புயல்  கோர  தாண்டவத்தில் எங்கள்  ஊர்  கடலூர் சின்னா பின்னாமாகி போனது... அரசு எந்திரம் பத்திரிக்கையில் சொன்னது போல பெரிய அளவில் போர்க்கால நடவடிக்கையை உடனே நிகழ்த்தவில்லை... காரணம்... சேதம் மிகப்பெரியதாக இருந்தது.... முக்கிய சாலைகளில் உள்ள மரங்களை அப்புறப்படுத்தவே இரண்டு வாரகாலம் எடுத்துக்கொண்டது.. மின்சாரம் கொடுக்க ஒன்றரை மாதங்கள் எடுத்துக்கொண்டன...  மின் ஊழியர்களில் இரவு பகல்பாராத  உழைப்பும் வெளிமாநில நண்பர்களின் உதவியோடும் மின் வினியோகம் சீரமைக்கப்பட்டது...  கட்டமைக்கும் போது சில உயிர்  இழப்புகள்  ஏற்ப்பட்டது.....

 தம்பி ரோஸ்விக் கொடுத்த  உதவியை நானும் தம்பியண்ணன் அப்துல்லா ஜோசப்பால்ராஜோடு உரியவர்களிடம்  நேரில் போய் சேர்ப்பித்து விட்டு வந்தோம்... போன வருடத்தின் மறக்க முடியாத நிகழ்வு அது......

 சென்னையில் பெருங்குடி பேங்க்  கொள்ளை வருட ஆரம்பத்தின் முதல்  மாதத்தில்  பெரிய செய்தியாக வந்து பரபரப்பை ஏற்ப்படுத்தியது... முதல் என்கவுண்டர் ஹரிஓம் என்று  ஆரம்பித்து பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி  வைக்கப்பட்டது.

அதே அளவு பரபரப்பை  பிப்ரவரி மாதம்  சென்னையில் ஒரு மாணவன் டீச்சரை கத்தியால் குத்தி கொன்றான்... என்ற செய்தி டீச்சர் சமுகத்தையே  கிடு கிடுக்க வைத்தது... ரோட்டில் போகும் கத்தியால் குத்தி இருந்தால் கூட அத பெரிய விஷயம் இல்லை.. பள்ளி வளாகத்திலேயே  நடந்த இந்த தக்குதலை என்ன வென்று சொல்ல....


அதே போல பள்ளி சிறுமி பஸ் ஓட்டையில் விழுந்து மரணித்தது...பத்ம சேஷாத்திரி நீச்சல் குளத்தில் பள்ளி மாணவன் இறந்து போன துர்பாக்கிய சம்பவங்கள் கல்விதுறைய நோக்கி  சுண்டு விரல் நீட்டி கடுமையான குற்ற சாட்டை முன் வைத்தது.... பத்ம சேஷாத்திரி  பள்ளி மாணவன் மரணம் பற்றிய செய்திகள் வழக்கம் போல பத்திரிக்கையில் இருட்ட்டிப்பு செய்யப்பட்டன.


அண்ணா நுலகத்தை மாற்றினால் தீக்குளிப்பேன் என்று கலைஞர் சொல்ல அந்த செய்தி பெரிய பரபரப்பை பெற்றது இதுதான் சாக்கு என்று காத்திருந்த நட்ட நடு சென்டர்கள் கலைஞரை கலாய்த்து  தள்ளி தன் ஆற்றாமையை வெளிப்படுத்திக்கொண்டார்கள்...
பஸ் தின கொண்டாட்டம் என்ற பெயரில் பசங்கள் பண்ணிய அராஜகத்தால் சென்னை ஸ்தம்பித்தது... ஆட்சிக்கு வந்த ஆறுமாதத்தில் மின் பிரச்சனை இருக்காது என்று சொல்லி ஆட்சிக்கு வந்து  18 மணி நேர தொடர் மின்வெட்டை தமிழகம் சந்தித்தது வரலாற்று பதிவு...  இந்தி போராட்டம் மற்றும் ஈழபிரச்சனைக்கு பிறகு தமிழர்கள் ஒன்றினைந்த போராட்டங்கள் என்று  பார்த்தால்.... அது முல்லை பெரியாறுக்கு பொதுமக்கள் கூடிய  கூட்டம். அதன்  பிறகு இடிந்தகரை மக்கள் என்று சொல்லலாம்..நிறைய போரட்டங்கள் தமிழகத்தில் நடக்க மின்வெட்டுபெரிய துணையாக நின்றது... முக்கியமாக கோவை மாவட்ட மக்கள் பொங்கி தீர்த்து வீட்டார்கள்.


இந்திய அளவில் பெரிய போராட்டம் என்று பார்த்தால் இந்த வருடத்தில் அன்னா ஹசாரே போராட்டத்தை குறிப்பிட்டு  சொல்லலாம்.


 விபத்தில் பெரிய விபத்தாக அண்ணா மேம்பாலத்தில் பேருந்து கவிர்ந்த விபத்து மற்றும் கோத்தகிரியில்  மினி பேருந்து  கவிழ்ந்தது.... வால்பாறைக்கு செல்லும் வழியில் அரசு பஸ் கவிழ்ந்த  விபத்து என்று பெரிய விபத்துக்களாக சொல்லலாம்.


 ஒரு விபத்து அதுவே அட்ராக்ஷனாக மாறிப்போனது..  சென்னையில் பிரதீபா கப்பல் கரை தட்டியதுதான்... அப்படி ஒரு பிரமாண்டத்தை மிக அருகில்   நான் பார்த்ததில்லை...
வருட முடிவில் டெல்லி பெண் கற்பழிப்பு பெரிய  போராட்டத்தை இந்திய தலைநகரில் ஏற்ப்படுத்தியது..  இறந்த பெண்ணுக்கு பிரதமர் சோனியா அஞ்சலி செலுத்தி விட்டு ஒர மணி நேரத்தில் பயந்து போய்  எரித்த்தில் தெரிந்து போனது  போராட்டத்தில் பலன்....
அந்த பெண்ணுக்கு வரிந்து கட்டிக்கொண்டு களம் இறங்கிய ஆனேகம் பேர் தமிழகத்தில் கற்ப்பழிக்கபட்டு கொலைசெய்யப்பட்ட புனிதாவுக்கு இரக்கம் தெரிவிக்கவில்லை... என்பதுதான்...


வாழையடி வாழையாக  மாறாத காட்சிகள் என்று  பார்த்தால்.....


ஆட்சியாளர்கள் வழக்கம் போல சாலை மேம்பாடு போன்ற உள்கட்டமைப்பில் போதிய கவனம் செலுத்தவேயில்லை...

ரயிலில் அடிக்கடி தீப்பற்றி ஏரிந்து நிறைய பேர் இறந்து போனார்கள்... கனிசமான ரயில் விபத்துகள் இந்த ஆண்டு  அதிகம் நடந்தது....சென்னையில்  300 பேருக்கு மேல் ரயில் மோதி இறந்து போனார்கள்....


முன்பு நின்ற லாரியில் மோதி நிறைய  விபத்துகள் நடந்தன அதே போல இந்த வருடம் பஞ்சராகி நின்ற வண்டிகள் மீது எல்லாம் வாகனங்கள் மோதி  பலி எண்ணிக்கையை கணிசமாக  உயர்த்தின....


தமிழகத்தின் திருஷ்ட்டி பொட்டாக தருமபுரி கலவரம் நடந்தது...பலரது வீடுகள் ஜாதி வெறியில் தீக்கிரைஆக்கப்பட்டன..


 அரசியல் காமெடிகள்...


முதலில் ஆதாரிக்கமாட்டேன் என்றார் .. பிறகு ஆதரிப்பேன் என்று கலைஞர் டபுள் கேம்  விளையாடினார்...அன்னிய முதலீட்டில்...


தயநிதிஅழகிரி கிரனைட் வழக்கில்  எஸ்  ஆகி ஜாமின் பெற்றார்

 எல்லாத்தை விட பெரிய காமெடி... வைகோவின் போர்வாள் என்று அழைக்கப்பட்ட நாஞ்சில் சம்பத்... ஜெவின் பாதுகாவலராக மாறிப்போனார்....இன்னவோ கார் பரிசாக பெற்றார்...  அதோடு விட்டு இருக்கலாம்... இனி ஈழம் பற்றி பேசமாட்டேன் அம்மாவை பற்றி மட்டுமே பேசுவேன் என்று சொல்லி தேர்ந்த அரசியல் வாதியாக மாறிப்போனார்...

விஜயகாந். பாண்டியன்... நோ கமென்ட்ஸ்...


நீதி மன்றத்தில்  ஜெ அரசு நிறைய குட்டுக்களை பெற்றது...

எல்லாத்தையும் விட  பெரிய காமெடி....  என்னது காந்தி செத்துட்டாரா என்பது போல... என்ன  சென்னை அண்ணாநகர்  அண்ண வளைவை எடுக்கின்றார்களா? என்று  கேள்வி கேட்டு தமிழக மக்களையே வியப்பில் ஆழ்த்தினார்....

இரட்டை இலைக்கு  குதிரையின் சிறகு என்று புதிய நாமகரணம் சூட்டினார்கள்...
சைதை துரைசாமி பற்றி வெளியான செய்திகள் பெரிய அதிர்ச்சியை ஏற்ப்படுத்தின..
டெங்கு காய்ச்சலில் உயிர் இழப்புகள் நிறைய நடக்க மிக லேட்டாக விழித்துக்கொண்டு நடிகர் கார்த்தியை வைத்து விளம்பர படம் எடுத்து  மக்களுக்கு  விழப்புணர்வு கொடுத்தார்கள்.. அவுங்க  அப்பா சிவக்குமாரை வைத்து மலை வேம்பு டெங்குவுக்கு நல்லது என்றார்கள்...


பெரிய லஞ்சலாவன்யம் இல்லாமல் அரசு வேலைகள் மிக  நேர்மையான முறையில் இந்த ஆட்சியிலும் கிடைக்கின்றன...அதற்கு   சரியான ஆளாக இருக்கும் நட்ராஜ் அவர்களுக்கும் இந்த அரசுக்கு நன்றிகள். சில இடங்களில் தரமான சாலைகள்  போட்டு இருக்கின்றார்கள்... ஆனால் அது தமிழகம் முழக்க நடக்க வேண்டும் என்பதே நம் ஆசை...

 ஜெ அரசு கொண்டு வந்த திட்டத்தில் மிக நல்ல திட்டம்.. மழை நீர் சேகரிப்பு அதை இன்னும் விளம்பரபடுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்ப்படுத்த வேண்டும்....


 நிறைய காட்சிகள் நடந்தேறின...

சினிமா மற்றும் இன்னும் மனதில் தோன்றிய பல விஷயங்களை அடுத்த பாகத்தில்   தொடரூவோம்..

என்னோடு பயணிக்கும் அத்தனை  நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும், பதிவர்களுக்கும் மற்றும்  அனைருக்கும்  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...2013....நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

24 comments:

 1. இந்த புதிய வருடத்திலும் நல்லதே நடக்க எண்ணுவோம், வழக்கம் போல

  ReplyDelete
 2. Happy new year jackie,i enjoyed ur writings ,uppukattu series is very touching
  ur writing is very emotional most of the times
  i think that makes u succesful and popular,
  te letter to your father and ur exp in the goverment hospital was the higlights of ur writings in 2012

  al te best for 2013 ,

  ReplyDelete
 3. wish you a happy healthy prosperous successful and satisfied new year 2013
  anbudan
  sundar g rasanai chennai

  ReplyDelete

 4. wish you and your family a happy healthy prosperous successful satisfied new year 2013.
  anbudan
  sundar g rasanai chennai

  ReplyDelete
 5. Happy New Year to you and your family

  ReplyDelete
 6. Wish you a happy new year Mrs. Mr .JACKIE & Yazhini...

  ReplyDelete
 7. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. ஜாக்கி ரசிகர் இன்னும் ஜாக்கியின் பட விமர்சனம் ஏன் எழுதவில்லை ????

  ReplyDelete
 11. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner