2012 ரிவைன்ட் (பாகம்2)


சினிமா


பெரிய படங்களை விட்டு தள்ளுங்கள்.... அசத்திய படங்கள் என்றால் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்தான்....  பிட்சா, வழக்கு எண், போன்ற படங்களை சொல்லலாம்... சாட்டை படத்தை பற்றிய விமர்சனங்கள் இருந்தாலும்... வணிக சமரசங்களை பூசிக்கொள்ளவேண்டியாகிவிட்டது.. இருப்பினும் அந்த படம் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய திரைப்படம்தான்..


  சின்ன  லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் லீலை  திரைப்படம் இந்த ஆண்டில் என்னை மிக கவர்ந்த காதல்  திரைப்படம் என்று சொல்லுவேன்...

 அதே போல அந்த வரிசையில் நீதானே என் பொன்வசந்தம் திரைப்படத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டி இருக்கின்றது....இந்த வருடம்  நடிகர்களில் விஜய் சேதுபதியும், நடிகைகளில் சமந்தா மற்றும் லீலை ஹீரோயினும் ரொம்பவே  என்னை கவர்ந்தார்கள்..
ஜனரஞ்சக படம் என்றால் ஒகே ஒகே என்று  சொல்லலாம்தடையறதாக்க,நான்  போன்ற படங்கள் சற்று கவனத்தை கவர்ந்து நிமிர்ந்து உட்கார வைத்தன


மற்றும் இங்கிலிஷ் விங்லிஷ், பர்பி, ஷாங்காய்,22 பிமேல் கோட்டயம்,மைன்ட் நெக்லஸ்,பிசினஸ்மேன்,ஜூலாயி,லைப்ஈஸ் பீயூட்டிபுல்,நான்ஈ,பிரிமியம் ரஷ் , திரெய்டு ,சைனிஸ் ஜோடியாக் போன்ற மனதில் நிற்கும் படங்களை பட்டியல் இட்டு விடலாம்


பெரிய அதிர்ச்சி என்று பார்த்தால்  மாலை பொழுதின் மயக்கத்தில் ஹீரோயின் சுபா புட்டேலா தனது 21 வயதில் இறந்நது போய் விட்டார் என்ற செய்திதான்..  என்ன அழகு அழகு சான்சே இல்லை.... சின்ன வயதில்... கொடுமை....


அதே போல அழகிய தீயே திரைப்படத்தில் என்னை அண்ணன்ற கெட்ட எண்ணத்தோடயா நீ பழகின.. என்று கேட்ட திலீபன் ...தனது 32 வயதில்   இறந்த போனது  சோகம்.. 


எஸ்என் லட்சுமி, அஜக்தா காகாராதகிருஷ்ணன், திலகன் ,ராஜஷ் கண்ணாபோன்றவர்கள்  பெரிய சாதனை செய்தவர்கள் மறைந்து போனார்கள்.

============
சினேகா பிரசன்னா திருமணம்  இந்த வருடத்திய ஸ்டார் அட்ராக்ஷன்எப்போதுமே சினேகாவின் புன்னகையில் ஒரு செயற்கை தனம் தெரிவது போல இருக்கும்  பட் பிரசன்னா சிரிப்பில் ஒரு நிஜம் இருக்கும்உட்கார்ந்தது, நடந்தது, எழுந்தது, என்று எல்லாமே செய்தி ஆயின
==============
சின்ன திரை விசிட்டிங் காட்டை எடுத்துக்கொண்டு போய் பெரிய  திரையில் கலக்குபவர்கள் இரண்டு பேர்... ஒன்று சந்தானம் மற்றது சிவகார்த்திகேயன், இவர்கள் இருவரின்   உழைப்பும் சாதாரண விஷயம் இல்லை... 

இந்த வளர்ச்சிக்கு திறமையும் கடின உழைப்பு மட்டுமே காரணம்... சந்தானம் படம் தயாரிக்கும் அளவுக்கு வளர்ந்து இருப்பது சுக்கிர திசை......... சூ........... ஏம்பா சுக்கரா நம்ம வீட்டு பக்கம் எல்லாம் வர்றது.

============
விளம்பரம்....

2012  வருடத்தில் எனக்கு மிகவும்  பிடிச்ச விளம்பரம்...

கவித்துவமான நெகிச்சியான விளம்பரம்...


==============


சீயட் டயர் விளம்பரம்...

================

hindu add/

==========


நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

4 comments:

 1. /*அதே போல அழகிய தீயே திரைப்படத்தில் என்னை அண்ணன்ற கெட்ட எண்ணத்தோடயா நீ பழகின.. என்று கேட்ட திலீபன் ...தனது 32 வயதில் இறந்த போனது சோகம்.. */

  இவர எனக்கு ரொம்ப புடிக்கும்னே!! ரொம்ப நாளா இவர எல்லா படத்திலையும் தேடிகிட்டு இருந்தேன். முக்கியமா பிரகாஷ்ராஜ் குழும படங்களின்.. அதிர்ச்சி தான்!!

  ReplyDelete
 2. சை......... சூ........... ஏம்பா சுக்கரா நம்ம வீட்டு பக்கம் எல்லாம் வர்றது.


  :-D

  ReplyDelete
 3. sir I am expecting CZ12 Review from you

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner