Coincidence /கோ இன்சிடன்ஸ்.



பொறம் போக்கு... பேமானி சர்ருன்னு சந்துலஇருந்து எந்த ஹாரனும் அடிக்காம மெயின் ரோட்டுல எப்படி வந்து வளையுது பாரு?


டென்ஷன் ஆகாதிங்க...

டென்ஷன் ஆவாமா? பின்ன என்ன செய்ய சொல்லற? இந்நேரம் நாம சில்லரை வாங்கி இருப்போம் தெரியுமா?...

நேத்து  நைட்டு ஒரு கனா...பொதுவா மறந்துடுவேன்.. இதை உங்ககிட்ட சொல்லனும்ன்னு தோனித்து,மறக்க்கூடாதுன்னு காலையிலேயே பேப்பர்ல வேற  எழுதி வச்சேன்னா பாருங்களேன்.....

இன்டரஸ்டிங்... என்ன கனா..?

காஷ்மீர் வரை கார்ல போற பிளான்...நாம யாழினியோட கார்ல போக்கிட்டே இருக்கோம்...

ம்.

யாழினி பின் சீட்டுல  நல்லா தூங்கற... நைட்டு பத்துமணி ஒரு ஹேட்டல் கூட இல்லை...இரண்டு பேருக்கும் செம பசி....

அது எந்த ஊரு?

அக்காங்.... உனக்கு ஊரு, கார் போன கிலோமீட்டர் ஸ்பீட், எல்லாத்தையும் சொல்லனும்... இது கனவுப்பா...

ச்சே ஒரு ஆர்வம் அதான்  கேட்டேன்...

வடநாடு அவ்வளவுதான்....

ஓகே,

சின்ன சின்ன கிராமம்தான் வருதே கோசரம்... ஒரு சின்ன டவுன்  அதுல ஒரு கையேந்தி பவன் அப்படின்னு எதுவுமே இல்லை.... உன்னை பார்க்கறேன்... நீ டென்ஷன்ல இருக்கறே... காரணம் 100 கிலோ மீட்டருக்கு முன்னையே ஒர சின்ன டவுன்ல  சாப்பிடலாம்ன்னு சொன்னே... பட் எனக்கு  பசிக்கலை... கொஞ்சம் தூரம் போய் சாப்பிடலாம்ன்னு நான்தான் சொன்னேன்.. என் நேரம் ஒரு ஹோட்டல் கூடவழியில  இல்லை.

நான் என்ன பண்ணிக்கிட்டு இருந்தேன்..?

ம்...  இராமகிருஷ்ண பரமஹம்சர் போல சாந்தமா உட்கார்ந்து கார் ஓட்டிக்கிட்டு இருந்தே...

இருக்காதே ...?எனக்கு பசின்னா ரகளை பண்ணி இருப்பேனே?

அதான்  தெரிஞ்ச கதையாச்சே...எள்ளும் கொள்ளும் வெடிக்க டென்ஷனா கார் ஒட்டிக்கிட்டு இருக்கறே...நான் அப்பயே சொன்னேன்.... கேட்டாதானேன்னு, வழக்கம் போல கத்திக்கிட்டு வர்ரே...

புரியாத புதிர் ரகுவரன் போலவா?

அதை நான் வேற சொல்லனுமா?

சரி கனவுக்கு வா..

நான் கடவுளையும் இஷ்ட்ட தெய்வத்தையும் வேண்டிக்கிட்டு வரேன்... இந்த கடன்காரங்கிட்ட பாஷை தெரியாத ஊர்ல இப்படி ராத்திரியில  திட்டு வாங்க வச்சிட்டியே பெருமாளே...ஏதாவது ஒரு ஓட்டலை கண்ணுல காமிச்சிடேன்னு  வேண்டிக்கறேன்....
 பத்து கிலோமீட்டரருக்கு மேல  கார் போவுது ஒரு ஈ, காக்கா கூட இல்லை... யாழினி வேற பொரண்டு படுக்கற.. எழுந்துக்கிட்டா பசியில் அது அவ அப்பனை விட பெரிசா கத்தி சாகடிக்குமேன்னு  கடவுள்கிட்டு வழிபுல்லா வேண்டிக்கிட்டே வரேன்..

ச்சே யாழினி எழுந்து இருந்தா நல்லா இருந்து இருக்கும்...

கவலையே படாதே... நீ பெத்தது எழுந்துடுச்சி... வாழ் வாழ்ன்னு  கத்தி விரியுது...ஏன்டி ரெண்டு சப்பாத்தியாவது  பார்சல் கட்டி இருக்கலாம் இல்லை.. இப்ப பாரு குழந்தை பசியில அழுவுதுன்னு திரும்பவும் நீ என்னை பார்த்து கத்தறே..

நாய் மாதிரின்னு  சொல்லிடு....

புரிஞ்சா சரி............... தூரத்துல சீரியல்  செட்டு  தெரியுது... கிட்ட போக போக அது கல்யாண வீடு... பெரிய பணக்கார வீட்டு கல்யாணம்...

அங்க நாம காரை நிறுத்தறமா?

ஆமாம்....  காரை நிறுத்திட்டு என்னை பார்த்து சொல்லறிங்க... இப்பயாவது நான் சொல்லற பேச்சை கேளு.... இந்த கல்யாண வீட்டுல சாப்பிட்டுடலாம்ன்னு...

வழக்கம் போல நீ  ஒத்துக்க மாட்டியே,.?

எஸ்... தெரியாதவங்க வீட்டு கல்யாணத்துல போய் எப்படி  சாப்பிடறது..? யாராவது ஒரு வார்த்தை சொல்லிட்டா,.?உடனே நீங்க,இன்னும் எத்தனை கிலோமீட்டர்ல ஓட்டல் இருக்குன்னு தெரியலை.. அதனால இங்கயே சாப்பிட்டு போகலாம்... யாராவது ஏதாவது சொன்னா  நான் பேசிக்கறேன்...  சொல்லறிங்க...ஒரு நாள் நைட்டு பசியோட இருந்த தப்பில்லைன்னு நான் சொல்லிக்கிட்டு இருக்கும் போதே ப்ப்பே ஸ்டால் இருக்கற பக்கம் அழைச்சிக்கிட்டு போயிடுறிங்க..

என்ன லாங் வேஜ்ல பேசிக்கறாங்க...

இந்தியிலதான்...

நான் இந்தியில பேசினேனா?

ரெண்டு பேருக்கு நமஸ்த்தேன்னு சொன்னே.... அதுல உன் மூஞ்சில  இந்தியில பேசிட்டோம்னு பெருமை வேற...குழந்தை பசியில அழுவுது, நான்டென்ஷன்ல இருக்கேன்.. அந்த நேரத்துல கூட ரெண்டு சேட்டு பொண்ணை பார்த்து நீ  சைட் அடிச்சிகிட்டு இருக்கே...

ரனகளத்துல கிடைக்கும் கிளுகிளுப்பு வேல்யூவானது... மறக்க முடியாதது...

ம்க்கும் வாயில நல்லா வந்துடும்.. நான்  கேக்கறேன்...ஏன்யா இப்படி வழியறேன்னு...? ஒரு போட்டோகிராபர் பாயிண்ட் ஆப்வியூல பார்க்கறேன்னு.. வழக்கமான டயலாக்கை அடிக்கறே... பேசிக்கிட்டு இருக்கும் போதே.. ஒரு சர்வர் பையன் ஜூஸ் கொடுத்துட்டு போறான்....ஒரே டம்பளர்தான் அதை யாழினிக்கு கொடுக்கறேன்...
கொஞ்ச  நேரம் கழிச்சி  அதே பையன்  டிரே நிறைய பெப்சி கிளாஸ்ல ஊத்தி எடுத்திக்கிட்டு வந்தான்...

நான் சொல்லறேன்....அந்த பய எனக்கு பெப்சி கொடுக்காம? முதல்ல உனக்கு கொடுத்துட்டு , அதுக்கு அப்புறம் பெப்சி கிளைசை .எனக்கு கொடுத்து இருப்பானே?

கரெக்ட்   எப்படி சொல்லறே...?

ஒரு கெஸ்தான்...

ஒரு பெரியவர் ஏன் சாப்பிடாம நிக்கறிங்க.. போய்  சாப்பிடுங்க.... நான்வெஜ் அயிட்டம் கூட இருக்குன்னு  இந்தியில சொல்லறார்.... நான் இந்தியில அவருக்கு நன்றி சொன்னேன்... என்கிட்ட  அந்த பெரியவர் இந்தியில  சொன்னதை உனக்கு தமிழ்ல சொல்லறேன்...
ச்சே நான்வெஜ் அயிட்டம் கூட இருக்காம்... வா சாப்பிடலாம்ன்னு  சொல்லறே.... குழந்தைக்கு மட்டும் இரண்டு இட்லியை, நம்ம நிலையை சொல்லி வாங்கிக்கிட்டு இந்த  இடத்தை விட்டு காலி பண்ணலாம்ன்னு  நான் திரும்பவும் சொல்லறேன்...

ம்...

நீ வெறுத்து போய் நிக்கறே... நான் யாழினிக்கு ரெண்டு இட்லி வாங்கி வரேன்...போலம்ன்னு  கார்க்கிட்ட  போகும் போது ஜாக்கின்னு குரல் கேட்குது? எப்படி இருக்கிங்க... ?எங்க இவ்வளவு தூரம்? என் பிரண்டோட கல்யாணம்...சென்னையில இருந்து வந்து இருக்கேன்... வாட் ஏ பிளசன்ட் சர்ப்பிரைஸ்... நீங்க எப்படி இவ்வளவு தூரம்...ஏன் யரிழினி அழறா?ன்னு  அந்த பையன் கேட்கிறான்...?

அட  அப்புறம்..?????

நான் முழுச்சிக்கிட்டேன்..

ச்சே அந்த கல்யாணத்துல  சாப்பிட்டமா?  இல்லையா? 


நான்தான் முழுச்சிக்கிட்டேனே....

ச்சே...

யம்மா...

என்ன...?

ஸ்பீட் பிரேக்ல  பிரேக் அடிச்சு பொறுமையா போகக்கூடாது...,-?  இப்படியா வண்டி ஓட்டறது...? ஆமாம் நீ தலையை சிவினியா இல்லையா?  தூங்கி எழுந்து  ஆபிசுக்கு போறது போலவே இருக்கு.... முதல்ல தலையை வாரு...

ஏற்க்கனவே ஆபிசுக்கு லேட்டு இதுல இது வேற...

 ஒரு நிமிஷத்துல ஒன்னும் குடி மூழ்கிடாது முதல்ல தலைய வாரு..

நான் வண்டியை நிறுத்தினேன்... சுற்றும் முற்றும் பார்த்தேன்.. தலையில் இருக்கும் நாளு முடிக்கு சீப்பு வைத்து  வருட்டு வருட்டு என்று வாருவதை பார்த்தால் சிரிக்க போகின்றார்கள் என்று கவனமாக சீப்பை தலையில் வைத்து ஒரு வருட்.....

எக்ஸ்கியூஸ் மீ...இங்க  பொன் வித்யாசரம் ஸ்கூல் எங்க இருக்கு...????

நான் டென்ஷனில் திரும்பினேன்... ஹெல்மட் போட்டவன் வழி கேட்டான் பின்னால்  உட்கார்ந்து இருந்தவன்..முகம் முழுவதும்  பிரகாசத்தோடு ......

அண்ணே ஜாக்கின்னே... எப்படி இருக்கிங்க...? யாழினி பாப்பா எப்படி இருக்கா? நல்லா இருக்கிங்களா?

நல்லா இருக்கேன் என்று சொல்லிவிட்டு  அந்த பள்ளிக்கு வழி சொல்லி விட்டு, ஆபிசுக்கு  நேரமாயிடுச்சின்னு சொல்லி விருட்ன்னு வண்டியை எடுத்துட்டேன்..

வழக்கமா பேர் கேட்பேன்.. பேர் கூட கேட்கலை... ஆபிசுக்கு நேரமாயிட்டதால்  விசாரிக்க கூட நேரமில்லை அவ்வளவு அவசரம்...

இவ கனவை சொல்லி முடிக்கறா? அதே போல பரிட்சமில்லாத ஒருத்தன்  எதிர்க்க நின்று ஜாக்கிஅண்ணேன்னு வாய் நிறைய கூப்பிடுறான்....


வாட் ஏ கோ இன்சிடன்ட்..??


குறிப்பு
தம்பி  பேர் கூட கேட்கலை தப்பா  நினைச்சிக்காத.. ஒரு வேளை  இதை வாசிச்சா.. உன் பேர் சொல்லு...

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.



நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

3 comments:

  1. சில நேரங்களில் சில கனவுகள் நனவாவதுண்டு...
    ரசனையா எழுதியிருக்கீங்க...

    ReplyDelete
  2. வித்தியாசமான கனவுதான்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. jackie anna, its me rajeshkannan, irukkura naalu mudiya seevumbothu namma disturb panrome, tension aagiduvaro apdinnu ninachu pakkathula vandha athu neega, i was over excited athanaala neenga sonna vazhi kooda naan gavanikkala. i could understand that you were running late to office so that you could not speak with us for few mins. not a problem anna. ஒரு வேளை இதை வாசிச்சா? i will never miss your blog :) and i read your blog for years but this is my first comment that too because you asked :)

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner