சாதனை மனிதர் ஜான் வில்லியம்ஸ்(John Williams) (பாகம்/1)




51 படங்களை இயக்கிய இயக்குனர் அவர்... சினிமாவை கரைத்து குடித்தவர்..
கோடம்பாக்கத்தின் உதவி இயக்குனர்கள்...காலையில்  குளித்து இடுப்பில்  துண்டுக்கட்டிக்கொண்டு சாமி படத்தை கும்பிடும் முன் இவர் படத்தை கும்பிடும் அளவுக்கு சினிமா உலகின் ஆளுமைக்கு சொந்நதக்கார்ர் அவர்...


ஹாலிவுட் சினிமா உலகின்  பிரம்மா அவர்... அந்த இயக்குனர் ஒரு படத்தினை இயக்க விரும்புகின்றார்....

 இதுவரை 94 படங்களுக்கு மட்டும் இசையமைத்த இசையமைப்பாளர் அவர்.  அந்த இசையமைப்பாளரிடம் பிரம்மா  இயக்குனர்  தன் புதிய படத்துக்கு மியுசிக் போட சொல்கின்றார்...

 இசையமைப்பாளரிடம் இயக்குனர் தன் மனதில் உதித்த கதையை சொல்கின்றார்...

கதையை  கேட்ட இயக்குனர் அதிர்ந்து போய் இந்த படத்துக்கு என்னை விட ஒரு  நல்ல  இசையமைப்பாளரிடம் சென்று மியூசிக் போட்டுக்கொள் என்கின்றார்... அப்படி பயந்து போய் சொன்ன   இசையமைப்பாளர் ஒன்றும் சாதாரண இசையமைப்பாளர்  அல்ல... ஒன்னு இல்லை ,ரெண்டு இல்லை 5 ஆஸ்கார்  அவார்டு வாங்கியவர்....


 சான்சே இல்லை... நீ எப்படி கன்வின்ஸ் செய்தாலும்  இந்த படத்துக்கு  நான் மியூசிக் பண்ணலை... நீ வேற யாரையாவது வச்சி இந்த படத்துக்கு மியூசிக் பண்ணு .... ஆல் த பெஸ் என்கின்றார்...

இயக்குனர்  எனக்கு நீதான் வேண்டும் என்கின்றார்...

இல்லை இயக்குனரே....  நாம் இணைந்து  நிறைய படங்கள் செய்து இருக்கின்றோம்.. ஆனால் இந்த படத்துக்கு வேறு ஒருவர்தான் என்னை விட பெஸ்ட்  சாய்ஸ் என்கின்றார் அந்த இசையமைப்பாளர்......

ஓகே  நிச்சயமாக நீங்கள் சொல்வது போல நான் வேறு ஒருவரை இந்த படத்துக்கு மியூசிக்  பண்ண வைக்கலாம் என்று யோசித்தேன்... ஆனால் அவர்கள் யாரும் இப்போது உயிரோடு இல்லை... இப்போது இந்த பூமி பந்தில் உயிரோடு  இருக்கும்  இசைக்கிழவன் நீ.. நீதான்.... இந்த படத்துக்கு  நீங்கள்தான் மீயூசிக் போட வேண்டும் என்று  சொல்கின்றார்...

அந்த  இசையமைப்பாளரும் இசையமைக்க பயத்துடன்  சம்மதிக்கின்றார்..

அந்த இயக்குனரின் பெயர்... ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்..

 அந்த இசையமைப்பாளரின் பெயர்... ஜான் வில்லியம்ஸ்..





அந்த படம்.... Schindler's List (1993)



 Schindler's List படத்தின் இசைக்கோர்வை உங்களுக்காக,....



================
பெஸ்ட் டைரக்டர் விருது ஸ்டீவனுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தாலும் முதல் முதலாக ஆஸ்கர் பெற்றுக்கொடுத்தது.... Schindler's List திரைப்படம்தான்.... இதுவரை இரண்டு ஆஸ்கர்  விருதினை ஸ்டீவன் வாங்கி இருக்கின்றார்... Schindler's List மற்றது Saving Private Ryan இந்த இரண்டு படத்துக்கும் இசையமைத்தவர் ஜான் வில்லியம்ஸ்...



Schindler's List  திரைப்படத்துக்கு ஸ்டீவன் ஸ்பீல் பெர்க்  ஆஸ்கார் வாங்கிய  காட்சிகள் உங்களுக்காக,..


ஸ்டீவன் இதுவரை தான் இயக்கிய இரண்டு படங்களை தவிர மற்ற அத்தனை படங்களுக்கும் ஜான் வில்லியம்ஸ்தான் மீயூசிக்.. அந்த இரண்டு படங்கள் Duel  மற்றும் The Color Purple திரைப்படம்தான்,....

மேலே  ஸ்டீவன் ஆஸ்கார் வாங்கிய வீடியோவை பாருங்கள்.. பார்த்து  விட்டீர்களா? இப்படி ஒரு காட்சி தமிழ் திரைஉலகில் நடந்து இருந்தால்... 

ஜான்  வில்லியம்ஸ்சின் ஏதாவது ஒரு அல்லக்கை ஆஸ்கார் விருது வழங்கும் விழாவை பார்த்து  விட்டு 

அண்ணே மோசம் போயிட்டோம்னே...

 அந்த ஸ்டீவன் நாயி... உங்களை பத்தி விருது வாங்கும் போது ஒரு வார்த்தை கூட சொல்லலைன்னே... அவன்  பொண்டாட்டி ஆத்தாக்காரியை பத்திதான்னே சொன்னான்...ஊமை படத்தை வச்சி   ஊருல ஓட்ட முடியுமா?

 எத்தனை நைட்ட பகலா அந்த படத்துக்கு மியூசிங் போட்டு இருப்பிங்க... இப்படி பண்ணிபுட்டனே அந்த பாவி....

ஜான் வில்லியம்ஸ் இசை படத்துக்கு பெரிய பலம்ன்னு ஒரு வார்த்தை சொன்னா  குறைஞ்சா போயிடும்? என்று தூபம் போட்டு இருப்பார்கள்...

அதை நம்மவர்கள் அந்த அல்லக்கை எடுத்துக்கொடுத்த  விஷயத்தில் மனதில் உரு  போட்டுகொள்வார்கள்..

நான்  இசூத மேடையில் ஆஸ்கார் வாங்கினா  அந்த டைரக்டர்  பேரை சொல்லவே  மாட்டேன்... அவன் என்ன பெரிய புடுங்கியா என்பதாக மனதில் கருவிக்கொள்வார்கள்.
ஆஸ்கார் வாங்கும் போது பெயரை உச்சரிக்க மாட்டார்கள்...

பட் அதே ஆஸ்கார் மேடை ஜான் வில்லியம்ஸ்க்கு அதே மேடையில் விருது கிடைக்கின்றது... அந்த காட்சியை பாருங்கள்.. ஜான் வில்லியம்சுக்கு Schindler's List (1993) பெஸ்ட் ஒரிஜினல் ஸ்கோருக்காக ஆஸ்கார் விருதினை பெற்க்கொடுத்தது...



காசு  வாங்கி கொண்டுதான் இசையமைத்தோம்... நாம் நம் வேலையை இரவுபகலாக நம் வேலையில் திருப்தி வரும் வரை உழைத்தோம்... .. நம் பெயரை சொல்லி இருக்கலாம் சொல்ல வில்லை... டென்ஷனில் மறந்து  போய் இருக்கலாம்... நாம் சொல்லுவோம் இந்த வாய்ப்பை வழங்கியமைக்கு அதே மேடையில்  நன்றி சொல்லுவோம் என்று சொல்லி இருக்கின்றார் பாருங்கள்.. அதுதான் ஜான் வில்லியம்ஸ்...


அதனால்தான் ஸ்டீவனுக்கும் ஜானுக்கும்  அந்த நட்பு இன்று வரை தொடர்கின்றது..
இதோ ஸ்டீவன் இயக்கத்தில் லிங்கன் திரைப்படம் வந்து இருக்கின்றது.. இந்த படத்துக்கு சிறந்த இசைக்கு ஜான் வில்லியம்ஸ்  பெயர் பரிந்துரைக்கப்பட்டு இருக்கின்றது... அந்த அடக்கம்... அவரை இந்த வயதிலும் அரியனை ஏற்றி வைத்து இருக்கின்றது...அவர் இயக்குனர் நான் கம்போசர் என்ற  புரிதல்....



ஜான் வில்லியம்ஸ்சுக்கு வரும் பிப்ரவரி எட்டாம் தேதி வந்தால் 81 வயது ஆரம்பிக்க போகின்றது...

வால்ட் டிஸ்னிக்கு பிறகு  அஸ்கார் விருதுக்கு  அதிக முறை பரிந்துரைக்கப்பட்டவர் ஜான் வில்வியம்ஸ்தான்..இதுவரை 48 முறை  ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருக்கின்றார்...

வாழும் காலத்தில் அதிகமுறை   ஆஸ்கார் விருதுக்கு அதிகமுறை பரிந்தரைக்கப்பட்டவர் என்ற பெருமை பெற்றவர்...


ஜான் வில்லியம்ஸ் சொன்னதில் எனக்கு ரொம்பவே பிடித்த வாசகம்..


நம்மாலும் பிறராலும் மறக்கப்படுகிற செயல்களையே நாம் பெரும்பாலும் செய்துகொண்டிருக்கிறோம். அவற்றைச் செய்த நாமேகூட அவற்றை மறந்துவிடுகிறோம். எனவே மக்களின் நினைவில் என்றும் நிலைபெறுகிற ஏதேனும் ஒன்றை செய்வது என்பது எப்போதும் நிறைவு தருவதாக இருக்கிறது.
-ஜான் வில்லியம்ஸ்




அந்த 80 வயது இசை அளுமை பற்றி இன்னும்  அவரை பற்றி கொஞ்சம் விரிவாய்.... 


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.




நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

7 comments:


  1. Anna how r you, yr wife... and sweet yazhini pappa....

    Thodakkame nallairukkunna... interesting...

    Anna CZ review ezhuthaveillanna....
    waiting anna....

    moview parthachu irunthalum unga review ezhuthunganna... entha cinemavayum kurai solla matteenga.. athilulla niraikalai mathiram solluveenga..

    we r waiting for yr review..

    Please evvalavu work irunthalum weekly 2 postavathu podunganna...

    Kavitha Saran





















    Anna CZ Review ezhuthalanna...
    Romma waiting....

    ReplyDelete
  2. superb article about a wonderful person thanks anna keep going :)

    ReplyDelete
  3. கருத்துக்கு நன்றி... கவிதா கண்டிப்பாக எழுதுகின்றேன்..

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner