ரத்த தானம்




1997 ஆம் ஆண்டு.... மாம்பலம் கணபதி தெருவில்  நண்பர்கள் இருந்த அறையில்  வசித்து வந்தேன்.
அப்பட்டமான  வறுமை கோலோச்சிக்கொண்டு இருந்த காலக்கட்டம்.பையில் பணம் இல்லை.. அறை நண்பர் குளிக்க சென்ற போது அவர் வைத்து இருந்த பழைய சாதத்து தண்ணியை குடித்து பசியை  போக்கிக்கொண்ட  காலகட்டம் அது...

லட்சுமி விடியோ மாணிக்கம் என்பவரிடம் சம்பளத்துக்கு வீடியோ கேமராமேனாக வேலை செய்து கொண்டு இருந்தேன்...சென்னையில நிறைய இடத்துக்கு அலையறோம், நேரம் கெட்ட நேரத்துல போறோம் வரோம்.. ஆனா ஒரு எமர்ஜன்சின்னா நமக்கு என்ன பிளட் குருப் ரத்தம் என்று கேட்டால் என்ன சொல்வது..  காரணம் எனக்கு என் பிளட் குருப் என்னவென்று தெரியாது....

சரி பிளட் குருப் செக் செய்யனும்ன்னா காசு இல்லை... என்ன பண்ணலாம்..,-?. பிளட் டோனேஷன் செஞ்சா என்ன பிளட் குருப் என்பது தெரிந்து விடும் அல்லவா? சரி பிளட் டோனேட் செஞ்சிட்டு  என்ன பிளட்குருப் என்பதை கண்டு பிடித்து விடுவோம் என்று  பாக்கெட்டில் பத்து ரூபாய்  வைத்துக்கொண்டு 20/12/1997 ஆம் ஆண்டு,12 சி பஸ் பிடித்து கமலா தியேட்டர் பஸ்டாப்பில் இறங்கி, விஜயா ஆஸ்பிட்டல் போனேன்..

பிளட் கொடுக்கனும் என்றேன்... காசுக்கா...,-? என்றார்கள் இல்லை என்றேன்... வழக்கமான புள்ளி விபரங்கள் பெறப்பட்டன... முதல் முறை என்பதால் நெர்வர்சாக இருந்தேன்...இன்றளவும் எனக்கு ஊசி என்றால் பயம்தான்....

ரத்தம் எடுக்கும் பெண்ணிடம் ரத்தம் கொடுத்த பின் அப்படியே மயக்கம் போட்டு விழுந்திடுவேனா? ரத்தத்தை அப்படியே பைப் உரிஞ்சுவது போல உரிஞ்சி எடுத்துடுவிங்களா? ரத்தம் எடுத்து ஒரு வாரத்துல அப்படியே உடல் பலகீனமாய் மாறி ஓமக்குச்சி நரசிம்மன் போல மாறிடுவேனா என்று கேள்விகளால் துளைத்தேன்...
சப்போஸ்  டக்குன்னு  ஒரு பிகர் உசாரச்சின்னா மேட்டர் பண்ண முடியுமா? போன்ற  பல  கேள்விகள் என்னுள் எழுந்தன... இதுக்கு மேல கேள்வி கேட்டா உன் ரத்தமும் வேண்டாம்  ஒரு மயிறும் வேண்டாம் என்று வெளியே அனுப்பிடுவாங்களோன்னு பயம் வேறு....


உதவி செய்யும் நோக்கத்தில் எல்லாம்  நான் ரத்தம் கொடுக்கவில்லை.... என் பிளட் குருப் என்ன என்று அறிந்துக்கொள்ள வேண்டும் அவ்வளவே...

ரத்தம் எடுத்தார்கள்.. கையில் நரம்பு தேடி நிரண்டி குத்திய போது சின்ன பையன் போல கத்தி  வைக்க...கொஞ்சம் மிரண்டு போனார்கள்...ரத்தம் எடுத்து  முடித்ததும்  என்னை ஒரு  அறையில் உட்கார சொல்லி ஒரு புருட்டி பாக்கெட்டும் ஒரு 50/50 பிஸ்கெட் பாக்கெட்டும் கொடுத்து சாப்பிட சொன்னார்கள்...

அரைமணியில் என்னை அழைத்தார்கள்... போனேன்..

ரத்ததானம் கொடுக்க வந்தமைக்கு மிக்க நன்றி....ஒரு சிசேரியன் கேஸ் அவங்களுக்கு  அவசரமா தேவைப்பட்டுச்சி நல்ல நேரத்துல நீங்க வந்திங்க...

நம் ரத்தம் யார் உடலில் கலக்க போகின்றது என்ற ஆர்வத்தில் அந்த பேஷன்ட் பேரு தெரிஞ்சிக்கலாமா?  என்றேன்...

கண்டிப்பா... பேரு கவிதா என்றார்கள்...

நான்  சிரித்தேன்.....

ஏன் சிரிக்கறிங்க...?

இல்லை என் பெரிய தங்கச்சி பேருகூட கவிதாதான்....

வாட் எ கோ இன்சிடன்ட்ஸ் என்றார்கள்....

என் பிளட்குருப் என்னன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?

ஷ்யூர்..ஏ1 பாசிட்டிவ்.... என்றார்கள்... ஒரு அட்டையில் என் பெயர் விலாசம் எழுதி ஒரு கார்டை கொடுத்தார்கள்... என்னவோ  குற்ற உணர்ச்சி பிடிங்கி தின்றது.. பிளட் குருப்  செக் பண்ண வந்துட்டு  டோனர் கார்டு வாங்கும் போது உறுத்தலாய் இருந்தது... அதன் பின் கொடுக்கவேண்டும் என்று நினைத்தேன்.. அதற்கான வாய்ப்பு அமையவில்லை...


ஆனால் அதன் பின் பல பேருக்கும் எமர்ஜென்சிக்கு பிளட் வேண்டும் என்ற போது ஏற்ப்பாடு செய்து கொடுத்து இருக்கின்றேன்....பார்வெட் எஸ்எம்எஸ்சில் வந்த  செய்தியில் ஒரு மூன்று வயது குழந்தைக்கு ரத்தம் ஆப்பரேஷனுக்கு  தேவை என்று செய்தி வந்த போது அந்த பிள்ளையின் தகப்பனிடம் பேசி...நண்பருக்கு போன் செய்து அவர்கள் போய் ரத்தம் கொடுத்து விட்டு வந்தார்கள்.. போனில் அந்த தகப்பன் நன்றி தெரிவித்தார்... என் தங்கைருக்மணிக்கு சிசேரியன் அவளுக்கும் பிளட் தேவை என்ற போது பிளாக் உலக நண்பர்களை வைத்துக்கொண்டு ரத்தம் எளிதில் கிடைக்க வழி செய்தேன்...

கடந்த வெள்ளிக்கிதுமை நண்பரின் அப்பாவுக்கு அறுவை சிகிச்சைக்கு பிளட் தேவை என்று சமுக வலைதளத்தில்  படித்தேன்....இரண்டு பேருக்கும் ஒரே குருப்... நண்பரை   தொடர்பு கொண்டு நான்  அதே வகைதான் ரத்தம் கொடுக்கின்றேன் என்றேன். இரண்டு நாளைக்கு சரக்கு எதையும் தொடாதிங்க ஜாக்கி என்றார்.... இல்லை என்றேன்...


15 வருடம் கழித்து அதே விஜயா மருத்தவமனை... அதே டிசம்பர் மாதம்....நண்பரை சந்தித்தேன்...காலையில் என்ன சாப்பிட்டிங்க என்றார்கள்...  வெறும் வயித்தோடத்தான் வந்து இருக்கேன் என்றேன்...

ரத்தம் கொடுப்பதை விட அந்த மெனக்கெடல்தான் பெரிய விஷயம்...ஆபிசில் ஒன் அவர் பர்மிஷன் சொல்லலாம் என்று பார்த்தால் அங்கே நிறைய பேர் ரத்தம் கொடுக்க வந்த காரணத்தால் லீவ் சொல்லி விட்டேன்.....இந்த டென்ஷனில் எதையும் சாப்பிடவில்லை... சாப்பிட்டு விட்டு வரச்சொன்னார்கள்.. எதிர் ஒட்டலில் ஒரு  தோசை  சாப்பிட்டு விட்டு வந்தாலும் நிறைய கூட்டம் ....வரிசையில்  காத்து இருந்தார்கள்..,


15 வருடத்தில் முன்னை விட சொகுசான இருக்கை இருந்தது.. ஆனால் இடத்தை மாற்றி இருந்தார்கள்.முதலில் பிரஷ்ஷர் பார்க்கவேண்டும் என்றதும்... நான் கையெல்லாம் மடித்து விட்டு  அடியாள் கணக்காக மாற... அவ்வளவு  சீன் எல்லாம் தேவையில்லை... சட்டை கையை மடக்கி விட வேண்டாம் இறங்கி விடுங்கள்.... என்று சட்டை மேலேயே  பெல்ட் போட்டு இருக்கி பிரசர் ஏற்றினார்கள்...எதிரில்   இருந்த டிவியில் சிம்ரன் சேலையில வீடுகட்டவா என இடுப்பை ஒடிக்க.... நாராயணா இதை பார்த்து எங்காயவது பிரஷர் ஏறிதொலைஞ்சிட போவுதுன்னு பார்வையை திருப்பிக்கொண்டேன்...பிரஷர் பல்ஸ் பார்த்து இருக்கையில் படுக்க வைத்து, கையில் திரவம் தடவி  நரம்பு பார்த்தார்கள்...


சக்கென்று ஒரு சொருகு....  சொருகிய இடம் ஆடாமல் இருங்க இரண்டு பிளாஸ்டர் ஒட்டினார்கள்...பக்கத்தில்  இருக்கும் ஒரு  செவ்வக வடிவமான சின்ன பெட்டியில் ரத்தம் ஏறப்போகும் பிளாடரில் நம்பர் எழுதி படுக்கவைத்து இருந்தார்கள்..ரத்தம் இறங்க இறங்க... அது சாஞ்சாடம்மா சாஞ்சாடு சாய்க்கிளியே சாஞ்சாடு என்று ஆடிக்கொண்டு , அடிக்கடி பெருமுச்சி விட்டுக்கொண்டு இருந்தது... எதிரில் டிவியை மாற்றினார்கள்.. சன்லைப்பில் பிளக் அண்டு ஒயிட் பாட்டில்  நம் முதல்வர் அநியாத்துக்கு வெட்கப்பட்டார்....

ரத்தம் எடுத்த இடத்தில் பிளட் கசிய.... ஒரு எட்டனா அவளவு சின்ன ஜான்ஸ் அண்டு ஜான்சன் ஒட்டி விட்டார்கள்... அதே மஞ்சள் புருட்டி என்றே நினைத்தேன்... மஞ்சள் கலர் கவர் பட் ஆனால் வேறு கம்பெனி...ஒரே  தம்மில் உறிவது போல உறிய வேண்டும் என்று சர்ரென்று இழுக்க  பாக்கெட்டில்  வெற்றிடம் உருவாகி.... பர்ர்ர்ர்ர்ர்ரென்று அது சத்தம் போட...ஒரு நர்ஸ் என்னை அதிர்ச்சியாக பார்த்து சென்றார்... பட்அவர் மைன்ட் வாய்ஸ் கேட்ச் பிடித்தேன்...  எப்படி சத்தம் போட்டு பன்னி போல உறியிது என்று நினைத்து சென்று இருக்கலாம்....

வெளியே வந்தேன்.... நண்பரிடம் விடைபெற்றேன்....

ஒரே ஒரு உறுத்தல் தான்...

படிவத் நிரப்பும் இடத்தில்  இதுக்கு முன்ன ரத்தம் கொடுத்து இருக்கிங்களா  என்று கேட்டார்கள்...? கொடுத்து இருக்கேன்...

எப்ப

1997 ஆம் ஆண்டு....

ஏன்  அதுக்கப்புறம் கொடுக்கலை...?

சூழ்நிலை அமையலை... என்று சொன்னாலும்.... ஏன் கொடுக்காமல் இருந்தோம் என்று ரொம்பவே வருத்தப்பட்டடேன்.....

இனி மூன்று மாதத்துக்கு ஒருமுறை  கண்டிப்பாக கொடுக்க  வேண்டும் என்று உறுதி  பூண்டு இருக்கின்றேன்....நிச்சயம் செய்வோம்...

அதே மருத்தவமணை... முதலில் ரத்தம் வழங்கியது பிளட் குருப்  செக் பண்ண...ஆனால் இந்த முறை அந்த  உறுத்தல் ஏதும் இன்றி 15 வருடம் கழித்து ,அதே டிசம்பர் மாதத்தில் முன்னைவிட 100 மடங்கு பெருத்து விட்ட சென்னை டிராபிக்கில் நானும் ஒருவனாய் கலந்து ஐக்கியமானேன்.


குறிப்பு...

எனக்கு ஞானோதயம்  பிறந்து விட்டது... சமுகத்துக்கு ஏதாவது  செய்ய வேண்டும்... ரத்தம் கொடுப்பது நல்லது என்று ஜல்லியெல்லாம் அடிக்கப்போவதில்லை...அட்வைஸ்  மழை பொழிய போவதில்லை...ஆனால் மூன்று மாதம் கழித்து ரத்தம் கொடுக்கலாம் என்று இருக்கின்றேன்...  யாராவது உடன் ரத்தம் கொடுக்க கம்பெனிக்கு  வந்தால் வரலாம்...
========
தகவலுக்ககாக...


ரத்தம் கொடுக்க வேண்டும் என்று  விருப்பம் இருக்கும் நண்பர்கள்....கீழே உள்ள வலைதளத்தில் தங்கள் பெயரை பதிந்து கொண்டு ரத்ததானம் செய்யலாம்...

http://www.friends2support.org/

வலைதள முகவரி கொடுத்த நண்பர் சொக்குவுக்கு நன்றி...
========

அதே போல ரத்த தேவைக்கும் ,ரத்தம் கொடுக்கவும் கீழே உள்ள தளத்துக்கு செல்லவும்...

http://www.lionsbloodbank.net/

=========
அவசர தேவைக்கு...


Blood Bank Name.....Address with Phone Numbers

============
Apollo Hospitals 21 Greams Lane, Thousand Lights,
Chennai - 6
Tamil Nadu, India.
Phone: +91 - 44 - 28294870
===============

Cancer Institute 18 Sardar Patel Road, Chennai - 36,
Tamil Nadu, India
Phone: +91 - 44 - 22350241
==================
Child Trust Hospital 12-A Nageswara Rao Road, Chennai - 36
Tamil Nadu, India.
Phone: +91 - 44 - 42001800
=====================

CSI Rainy Hospital 45, Gowthiar Agraharam Road,
Chennai - 21, Tamil Nadu, India.
Phone: +91 - 44 - 25951204
====================

Devaki Hospital 148, Luz Church Road, Mylapore,
Chennai - 4, Tamil Nadu, India.
Phone: +91 - 44 - 24992607

=================
Govt. General Hospital Chennai - 3, Tamil Nadu, India.
Phone: +91 - 44 - 25363131


Govt. Kasturbha Gandhi Hospital Bells Road, Triplicane, Chennai - 5
Tamil Nadu, India.
Phone: +91 - 44 - 28545001
===========================

Govt. Stanley Hospital Blood Bank, Chennai - 1, Tamil Nadu, India.
Phone: +91 - 44 - 25284941
====================

Indian Red Cross Society 50, Montieth Road, Egmore, Chennai - 8
Tamil Nadu, India
Phone: +91 - 44 - 28554425

==================
Institute of Obstertrics and Gynaecology and Hospital for Women & Children Pantheon Road, Chennai-8, Tamil Nadu, India.
Phone: +91 - 44 - 28191982

===================
Institute of Child Health & Hospital Halls Road, Egmore, Chenai-8,
Tamil Nadu, India.
Phone: +91 - 44 - 28192138

==============================
Jeevan Blood Bank 7, Rutland Gate, Chennai - 34
Tamil Nadu, India.
Phone: +91 - 44 - 28330300

==========================

K J Hospital 182, PH Road, Chennai - 84
Tamil Nadu, India.
Phone: +91 - 44 - 26412514

==========================
Kilpauk Medical College Hospital Chennai - 10, Tamil Nadu, India.
Phone: 28255331

=======================
Lions Blood Bank 20, Marshalls Road, Egmore, Chennai - 8
Tamil Nadu, India
Phone: +91 - 44 - 28414949
====================

Madras Clinical Research Lab Pandalai Nursing Home, 160, PH Road, Chennai - 10, Tamil Nadu, India.
Phone: +91 - 44 - 28252080
=======================

Madras Medical Mission 4A, Dr.JJ Nagar, Mugappair, Chennai - 50,
Tamil Nadu, India.
Phone: +91 - 44 - 26565961
======================

Madras Port Trust Hospital 1, Rajaji Salai, Chennai - 1, Tamil Nadu, India.
Phone: +91 - 44 - 25362201
========================

Nagmani Hospital 116, GA Road, Chennai - 21
Tamil Nadu, India
Phone: +91 - 44 - 25952725
=========================

Vijaya Blood Bank 180, NSK Salai, Vadapalani, Chennai - 26
Tamil Nadu, India.
Phone: +91 - 44 - 24881392
========================

Southern Railway H Q Hospital Ayanavaram, Chennai - 23, Tamil Nadu, India.
Phone: +91 - 44 - 26461008

=================================
Sri Ramachandra Hospital Porur, Chennai - 116, Tamil Nadu, India.
Phone: +91 - 44 - 24768017

=====================
Voluntary Health Services Dr. K. Ranganthan Memorial Blood Bank, Adyar, Chennai-113, Tamil Nadu, India.
Phone: +91 - 44 - 22541972


==============

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.



நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

11 comments:

  1. நல்ல பகிர்வு....அப்புறம் இன்னொன்னு சொல்ல மறந்தீட்டிங்க..ரத்தம் கொடுக்கும் போது ஒரு பால் ஒன்னு தருவாங்களே..அதை அழுத்தி பிடித்து கொண்டே இருக்கனுமே...
    இது உங்களுக்கு இரண்டாவது தடவையா...ம்ம்ம்ம்...நானும் கொடுத்து இருக்கேன் 17 தடவை...blood donar association , kovai யில் மெம்பர்...
    கோவையில் இருக்கிற எல்லா ப்ள்ட் பேங்க் லயும் கொடுத்து இருக்கேன்...

    ReplyDelete
  2. எனக்கும் ரத்தம் கொடுக்க வேண்டும் என்று தோன்றும். ஆனாலும் ஏதோ ஒரு போபியோ.. ஊசியைப் பார்த்தாலே தலை கிர்ரடித்து ‘மயக்கம்’ வந்து விடும். 93ஆம் ஆண்டிலிருந்து என் உடம்பில் ஊசியே ஏறியதில்லை. இடையில் ஒருமுறை மனைவி உண்டாகி இருந்தபோது, என்னை ஏதோ டெஸ்ட் (எச்.ஐ.வி?) எடுத்தார்கள். அப்போது கிட்டத்தட்ட குழந்தை மாதிரியே behave செய்தேன் என்று லேபில் குறைபட்டுக் கொண்டார்கள்.

    btw, என்னுடைய ப்ளட் க்ரூப்பே எனக்கு இன்னமும் தெரியாது. இது மிகப்பெரிய ஆபத்து. அவசரத்துக்கு பிரச்னை என்று பலரும் சொல்கிறார்கள்.

    ReplyDelete
  3. கோவையில் என் மனைவிக்கு ரத்தம் தேவைப்படுகிறது என அடிக்கடி ஃபோன் வரும். அவரும் யார் யாருக்கோ ஃபோன் பண்ணி ரத்தம் ஏற்பாடு செய்துகொடுப்பார்கள். சில சமயம் அவர்களும் போய் ரத்தம் கொடுத்துவிட்டு வருவார்கள். சில நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து இந்த சேவையை செய்கிறார்கள்.

    ReplyDelete
  4. நன்றி ஜாக்கி...ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வுக்கு..

    ReplyDelete
  5. கோவையிலிருந்து கிட்னி ட்ரான்ஸ்ப்ளேன்டேஷனுக்காக அப்பாவும் மகளும் தில்லி வந்திருக்கிறார்கள். (மளிகைக்கடையில் அறிமுகமானார்கள்) ஹாஸ்பிடலில் ஆபரேஷனுக்கு முன்னாலேயே 6 யூனிட் ரத்தம் சேகரித்து வைத்துக்கொள்வார்களாம். ஃபேஸ்புக் மூலம் இரண்டு டோனர்ஸ் கிடைத்தார்கள். என் மகனும் ரத்தம் கொடுப்பதற்காக நேற்று எய்ம்ஸ் ஹாஸ்பிடல் போனான். உங்களைப்பார்த்தால் சரியாக தூங்காதது போல் உள்ளது. நாளை வாருங்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள்.(என் மகன் ஐ.டி.யில் வேலை பார்க்கிறான்) ரத்தம் கொடுக்கும் முன்தினம் நன்றாக தூங்கியிருக்க வேண்டும் என்பது எங்களுக்கு கிடைத்த பாடம்.
    பின்குறிப்பு: இன்று அந்த இருவருக்கும் ஆபரேஷன்.

    ReplyDelete
  6. ஜாக்கி சார், நேற்று தான் நண்பர்களுடன் பேசி கொண்டு இருந்தோம் ரத்த தானம் பற்றி , ஏன் என்றால் எங்களுடன் படித்த நண்பர் ரத்த தானம் தலைவராக 15 ஆண்டுகளாக சிறப்பாக பணி ஆற்றி கொண்டிருக்கிறார் எப்போது இரத்தம் தேவையாக இருந்தாலும் உடனடியாக ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார் அவர் சேவை தேவை என்றால் அணுகவும் அவர் பெயர் JEBA , TENKASI, TIRUNELVELI . CELL .NO:9865872733

    ReplyDelete
  7. நல்லதொரு விழிப்புணர்வு பதிவு! நன்றி!

    ReplyDelete
  8. அண்ணா ரெத்த தானம் செயவது உடம்புக்கு புத்துணர்ச்சி தரக்கூடியது . நான் கடந்த 3 வருடங்களாக 3 மதத்திற்கு ஒரு முறை கொடுத்து வருகிறேன்.நல்ல பதிவு. நன்றி.

    ReplyDelete
  9. Thanks anna. I saved this page in my system for future reference. With your permission shall i share this information in my face book ?

    ReplyDelete
  10. நண்பர்களே வாழ்த்துக்காக இதனை வெளிப்படுத்தவில்லை...தன்னலமில்லாமல் நிறைய பேர் ரத்தம் கொடுக்க நேற்று வந்து இருந்தார்கள்... ஏன் நாம் கொடுக்காமல், இதை பற்றி சித்திக்காமல் இத்தனை வருடம் இருந்து இருக்கின்றோம் என்று நினைத்து ரொம்பவே வருந்தினேன்... இன்னும் நிறைய பேர் இந்த பதிவை படிக்கும் போது ரத்தம் கொடுக்க வருவார்கள். என்பதால் இந்த பதிவை எழுதினேன்... பின்னுட்டத்தில் கருத்தை பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  11. Also those who are diabetic can also donate blood. There is a general misconception that people with diabetes cannot donate blood but it is not true.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner