விஸ்வரூபம் DTH ஒளிபரப்பு பற்றி கமல் விளக்கம் சரியா...?தியேட்டர் கட்டண கொள்ளை(பாகம்/1)





நடிகர் கமலஹாசன் தனது புதிய படமான விஸ்வரூபம் படம் டிடிஎச்சில் ஒளிபரப்புவது குறித்து ஆடியோ  பைலில் தன் விளக்கத்தை பதிவு செய்து தனது பீஆர்ஓ நிகில் மூலம் வெளியிட்டு  இருக்கின்றார்....


அது உங்கள் செவிகளுக்காக....


ஆர்வமாக நான்  கேட்க ஆரம்பித்த போது அந்த விளக்கத்தின் முதல் இன்ட்ரோ எங்கேயோ கேட்டது போல இருக்கின்றதே? என்ற நினைத்த வினாடியில் கலிலியோ பேரை சொன்ன போது ஒரு கனம் ஆடித்தான் போனேன்...

கமலின் ஆடியோ விளக்க இன்ட்ரோ...

புதிய முயற்சிகளை, கண்டுபிடிப்புகளை முதலில் உதாசீனம் செய்வதும் ஏளனம் செய்வதும் ஏன்...அவைகளைக் கண்டனம் செய்வதும் கூட உலக வழக்கம். உலகம் உருண்டை வடிவம் என்று சொன்ன விஞ்ஞானி கலீலியோவை எரித்துக் கொல்ல வேண்டும் என்று சொன்ன இஸ்பானிய ராணி முதல் இன்றைய சினிமாத் துறையினர் வரை இம்மனப்பாங்கு நீடிக்கிறது என்று ஆரம்பிக்கின்றது...


நான் எனது கடந்த பதிவின் தொடக்க இன்ட்ரோ இவ்வாறு எழுதினேன்...


  எந்த ஒரு புது முயற்சியை முன் வைக்கும் போது  உலகம் முதலில் புது முயற்சியை முன் வைப்பவனுக்கு  பைத்தியக்கார பட்ட சூட்டி மகிழும்… இது இன்று நேற்று நடக்கும் விஷயம் அல்ல… காலம் காலமாக மனித சமுகம் இந்த  பிரச்சனைகளை எதிர்கொண்டு  அதனை அசமடக்கி சமாளித்துதான் முன்னேறி சென்றுக்கொண்டு இருக்கின்றது..
முதலில் ரயில் வண்டி   அறிமுகப்படுத்திய போதும் ,கலிலியோ பூமி  சூரியனை சுற்றி வருகின்றது என்று சொன்ன போது எழுந்த எதிர்ப்புகள்  உலகம் அறிந்த ஒன்றுதான்… என்று  எழுதினேன்... கமல் எனது பதிவை வாசித்து இருக்கலாம்.

சரி அதுவல்ல மேட்டர்....

கமல் தனது விஸ்வரூபம் படத்தை தியேட்டரில்  வெளியிடும் நேரத்துக்கு எட்டு மணி நேரத்துக்கு முன்பு டிடிஎச் ஒளிபரப்பில்  இந்த திரைப்படத்தினை  ரிலிஸ் செய்ய இருக்கின்றார்... இதுதான்  இப்போதைக்கு பெரிய சர்ச்சையை ஏற்ப்படுத்தி இருக்கின்றது...

1995க்கு பிறகு சன் டிவி கோலாச்ச தொடங்கியது.... தொடர்ந்து திரைப்படங்கள் வெளியிட்டால் தியேட்டருக்கு கூட்டம் வராது என்றார்கள்... கே டிவி தொடங்கிய போது இதே எதிர்ப்பை தெரிவித்தார்கள்.. ஆனால் இன்று சேட்டிலைட் உரிமை என்று படம் எடுக்கும் போதே அதனை விற்று தயாரிப்பாளர்கள் பல  கோடிகளை பார்த்துக்கொண்டு வருகின்றார்கள்...

அது போல புதிய படங்கள் டிடிஎச்சில் வெளியிட்டு வரும் காலத்தில் இன்னும் பெரிய பெரிய தொகையை அதுவும் நினைத்துக்கூட பார்த்திராத தொகையை தயாரிப்பாளர்கள் சம்பாதிக்க போகின்றார்கள்.. பூனைக்கு முதலில் மணி  கட்டுவது கமல்ஹாசன் அவ்வளவே...

டிடிஎச்சில்  ஒளிபரப்புவதால்  படத்தினை யாரும் ரெக்கார்ட் செய்ய முடியாது...  காரணம் ரெக்கார்ட் செய்யும் ஆப்ஷனை கொடுக்காமல் வைக்க முடியும்....

மல்ட்டிபிளக்ஸ் தியேட்டருக்கு வரும் கூட்டத்தில் அதுவும் தியேட்டருக்கு போய் படம் பார்க்க  சோம்பறித்தனம் கொண்ட கும்பலுக்கு இந்த ஆப்ஷன் உதவும்....

 இந்த படம் ஒளிபரப்பும் போது 100 பர்சென்ட் பேர் 1000 ரூபாய் பணத்தை கொடுத்து பார்க்கின்றார்கள் என்றால் அதில்30 பர்சென்ட் பேர் தன்  சொந்தங்களை வர வைத்து பெருமைக்கு  படத்தினை பார்க்க வைக்க வாய்ப்பு இருக்கின்றது... ஆனால் 70 பர்சென்ட் பேர் தன் குடும்பத்தை தவிர வேறு நபர்களை பார்க்க அனுமதிக்கவே மாட்டார்கள்.. முக்கியமாக  அதே  வீட்டில் தலை முறை தலைமுறையாக தோட்டவேலை செய்யும் தோட்டக்காரரை தன்னோடு சரிக்கு சமமாக உட்கார வைத்து படம் பார்க்க அனுமதிக்கவே மாட்டார்கள்... காரணம் பிரிஸ்டிஜ் இஷ்யூதான் காரணம்....

நான் விஸ்வரூபம் பார்த்துட்டேனே....

ஏம்பா ஒரு வார்த்தை கூப்பிடு இருந்தா நானும் வந்து இருப்பேன்.இல்லை...

இல்லை திடிர்ன்னு ஒய்பும் பொண்ணும் படம் பார்த்தே ஆகனும்ன்னு ஒத்தகால்ல  நின்னாங்க... அதான்... டக்குன்னு பணத்தை  கட்டி நாங்க மூன்று பேரும் பார்த்துட்டோம் என்று பெருமை அடித்துக்கொள்ள வாய்ப்பு இருக்கின்றது....


ஆனால்  படம் பார்க்கும் போது வீடியோ கேமராவில் ஷூட் செய்ய வாய்ப்பு இருக்கின்றது... 

படம் வெளியாகி ஒரு நாள் கழித்து வரும்  திருட்டி சிடி ஒருநாள் முன்னதாக வரும்.. அவ்வளவே..  பெரிய அளவில் குவாவிட்டியை எதிர்பார்க்க முடியாது.. ஆனால்  டிவியில்  ஓடும் படத்தை வீடியோ ஆவுட் எடுத்து ரெக்கார்ட் செய்ய வாய்ப்பு இருக்கின்றது..  எப்படி செய்தாலும் அதற்குள்  பாதிக்கு பாதி லாபத்தை தயாரிப்பாளர் பார்த்து விடுவார் என்பதுதான் நிதர்சனமாக உண்மை...

தியேட்டர் அனுபவம் கமல் சொன்னது போல....என்னதான் வீட்டில் பெருமாள் படம் இருந்தாலும், திருப்பதியில் போய் கால் கடுக்க நின்று ஜருகண்டி கேட்டு, ஒரு சில வினாடிகள்  நின்று பெருமாளை தரிசிக்கு போது ஏற்படும் பரவசத்தை  விவரிக்க வார்த்தைகள் இல்லை ....

அது போல என்னதான் வீட்டில் படத்தை பார்த்தாலும் தியேட்டர் அனுபவம் வீட்டில் இருக்கும்  டிவியில்  ஏற்ப்படுவதில்லை..100 பர்சென்ட் டிடிஎச் வாடிக்கையாளரில் சரவுண்ட் சவுண்ட் போட்டு ,புரஜக்ஷன் செட் செய்து இருப்பவர்கள்2 பர்சென்ட் பேரிடம்  இருக்க வாய்ப்பு  இருக்கின்றது.......


தியேட்டரில் படம் ரிலிசுக்கு முன் டிடிஎச் இணைப்பில் படத்தை ரிலிஸ் செய்தால் திரை அரங்கிற்கு  யாரும் படம் பார்க்க வர மாட்டார்கள் என்று திரையரைங்கை மூட வேண்டிய சூழல் ஏற்ப்பட்டு விடும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் கொடி  பிடிக்கின்றார்கள்....

தியேட்டர் கட்டணம் ஒன்றுதான் திரை அரங்கிற்கு மக்கள் வருகையை குறைத்தது  என்று காட்டுக்கத்தல் கத்தினாலும் அதனை தியேட்டர் உரிமையாளர்கள் காதில் போட்டுக்கொள்ள தயாராக இல்லை...

விரிவாய் அடுத்த பாகத்தில்...


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.





நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

10 comments:

  1. புதிய தொழில்நுட்பத்தை நாம் வரவேற்க வேண்டும்... ரெண்டு மூணு படம் இந்த மாதிரி வெளியிட்டால் எல்லாம் தானாகவே சரியாகும்... பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  2. Muthalil Viswarobam eathipartha vilaikku virkavilai. Kamal puthiya tholilnutpam endru mutal thanamaga seithirukkum audio tholilnutpam entha thiraiyarangilum illai. Naan e-il samparicha producerai kaiyil thiruvndu eantha vittirupathai maraikka avar adikkira stunt ulaga nadippu than! DTH murayil Rs.1000/- knduthu parkka vendiya avasiyam appadi enna antha padathula irukkunu kelviyai mudi maraikka avar adum nadakathirkku nenga kuda paliyanathu than varuthama irukku.

    ReplyDelete
  3. கலைஞானி எப்பவும் சரியான வழியை தான் பின்பற்றுவார் எதிர்கமா கை கோர்த்து செல்லுதல் நலம்

    ReplyDelete
  4. படம் வரட்டும் பார்ப்போம், அருமையான பகிர்வு நண்பரே

    ReplyDelete
  5. அரைவேக்காடுகளும் புரிந்து கொள்ளும் படியான நல்ல பதிவு ஜாக்கி!!!

    ReplyDelete
  6. kindly upload to all theatre tickets.

    ReplyDelete
  7. naan ninaichen neenga sollitinga.ok thank you

    ReplyDelete
  8. இது உங்கள் அனுமானம்; முற்றிலும் தவறான பார்வை; முதல் TV எங்கள் கிராமத்தில் எங்க அம்மாவிற்க்காக வாங்கியது! அப்பா ஓய்வு பெற்றபின் விவாசாயம் பார்க்கப் போய்விட்டார்; பாதி கிராமம் எங்கள் வீட்டில் தான்; இதில் கொடுமை ஹிந்தி படத்தையும் போடச் சொல்லுவார்கள்; அங்க அம்மாவும் போடுவார்கள்; என்னை ஓசியிலே இந்திப் படத்திற்கு கூட்டிக்கொண்டு போறேன் என்று சொன்னாலே பல முறை யோசிப்பேன்.

    எங்க கிராமத்திற்கு சென்றால், இந்தக் கூட்டம் காரணமாக் அன்று நான் அங்குள்ள் டென்ட் கொட்டாடையில் ஓடும் பாடாவதி பழய தமிழ் படங்களுக்கு செல்வேன்!

    இதுலே சில பேர் எங்க அம்மவிடம், தாயி கொஞ்சம் காபி தண்ணி, மோர் இப்படி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

    பின்குறிப்பு: என் அம்மா பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான்; சென்னையில் என் மாமியார் வீட்டிலும் அப்போ கூட்டம் அலை மோதும்.

    ----
    [[தோட்டவேலை செய்யும் தோட்டக்காரரை தன்னோடு சரிக்கு சமமாக உட்கார வைத்து படம் பார்க்க அனுமதிக்கவே மாட்டார்கள்... காரணம் பிரிஸ்டிஜ் இஷ்யூதான் காரணம]]

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner