THE LEGEND JACKIE CHAN-ஜாக்கிசானும் ஜாக்கிசேகரும்(பாகம்/1)
எதையும் பக்கவா எழுதனும் இல்லைன்னா எழுதக்கூடாதுன்னு நினைச்சி எழுதாம இருக்கும் படங்கள் எப்படியும்  ஒரு 300 திரைப்படங்கள் தேரும்...
.இப்படியோ போனா என்னைக்குதான் பக்காவா  எழுதறது.... ஆனா நிச்சயமா ஒரு விஷயத்தை எவ்வளவு வேலையா இருந்தாலும் நான் பதிஞ்சே ஆகனும்....

 காரணம் அந்த  பெயர் எனக்கு சமுகத்தில் ஒரு அந்தஸ்த்தை  பெற்று தந்தது... அந்த பெயருக்கு அப்படி ஒரு வசீகரம்... அந்த பெயரை நானே வைத்துக்கொண்டேன்... எனக்கு அந்த பெயர் மிகவும்  பிடித்து இருந்தது... அந்த  பெயரில் என்னை அழைக்கும் போது என்னுள் புத்துணர்ச்சி பரவுகின்றது...1990 களில் இருந்து அந்த பெயரை என்னோடு சேர்த்து வைத்துக்கொண்டு அலைந்து கொண்டு இருக்கின்றேன்...ஆனால் யாரும் அப்போது என்னை அப்படி  அழைக்கவில்லை.... ஆனால் அது பற்றி நான் கவலை கொண்டதில்லை....காரணம் இன்று சரை எனக்கு என்ன தோன்றுகின்றதோ அதை செய்து வருகின்றேன்..கையெழுத்து போடும் போது கூட என் இயற்பெயரோடு அந்த  பெயரையும் சோத்தே   நான் கையெழுத்து போட்டு இருக்கின்றேன்... எனக்கு பிடித்த அந்த பெயர் ஜாக்கிசான் என் பெயரான தனசேகரனை  ஜாக்கிசேகர் என்று  எனக்கு நானே சூட்டிக்கொண்டேன்...


ஜாக்கி அறிமுகம்....

எம்ஜியார் படங்கள் ரசித்தக்கொண்டு , அப்படியே ரஜினி படங்களுக்கு ஷிப்ட் ஆகி திடிர் என்று , விக்ரம்,சிப்பிக்குள் முத்து , நாயகன் என்று தடம் மாறிக்கொண்டு இருந்த வேளையில் கடலூரல் ஜாக்கிசான் வந்து கால் பதித்து எனக்கு அறிமுகம் ஆன ஆண்டு1988 ஆம் ஆண்டு... சியோலில் ஒலிம்பிக் நடந்த ஆண்டு என்று நினைக்கின்றேன்....1988 இல் இருந்து 1990 காலக்கட்டத்தில் தான்.... கடலூருக்கு ஜாக்கிசான் அறிமுகம்.. இப்ப போல அப்ப பெரிய என்டர்டெயின்டமென்ட் எல்லாம் இல்லை... மெல்ல பிளாக் அன்டு ஒயிட் டிவிக்கள் நடுத்தர குடும்பங்களில் சாத்தியப்பட்டுக்கொண்டு இருந்த காலம்...ஆர்மர் ஆப் காட் படம் நியுசினிமாவுல  ஓடிச்சி....  எங்க  வீட்டுல என்னை விட்டு விட்டு  பொருட்காட்சிக்கு போயிட்டாங்க... என் பிரண்ட் லட்சுமி நாரயணன் படத்தை பார்த்துட்டு வந்து அடிச்சி விட்டுகிட்டு இருந்தான்.... எங்க அத்தை பசங்க எல்லாரும்  அந்த படத்தை பார்த்துட்டாங்க...இதுல கொடுமை எங்க அந்த பொண்ணுகூட அந்த படத்தை பார்த்துட்டா..... ஆனா நான் பார்க்கலை.... என்னை பொருட்காட்சிக்கு வீட்டுல விட்டு விட்டு போன கோபத்துல  நேரா நியுசினிமா தியேட்டர்ல ஆர்மட் ஆப் காட் படம் பார்க்க போனேன்...

அப்படி ஒரு ஆக்ஷன் படம் நான் இதவரை பார்த்ததே இல்லை.. குங்பூ மற்றும் மொட்டைங்க படம் எல்லாம் பார்த்து இருந்தாலும்...  காமெடியோடு கூடிய அந்த பைட் படம் எனக்கு பிரமிப்பை கொடுத்துச்சி..... எப்படி இப்படி ஒரு படத்தை இவ்வளவு விற விறுப்பா எடுக்க முடியும்... அது மட்டும் அல்ல.. படம்  முடிவில் முதல் முறையாக புளுப்பர்ஸ்  என்ட்கிரடிட்ல பார்க்கறேன்.. அதுல ஜாக்கிக்கு தலையில அடிபட்டு ஸ்டெச்சர் தூக்கிகிட்டு போவாங்க... அந்த ஷாட்டை பார்த்த போது  நான் அப்படியே உறைஞ்சு போயிட்டோம்... சண்டை என்ற  பெயரில் புஷ்க்கா புஷ்க்கா என்று வாயால் வண்டி ஒட்டி சண்டை போடும் ஹீரோக்களை ஏனோ பிடிக்காமல் போய் விட்டது...

ஆர்மர் ஆப் காட் படத்தை பற்றி நான்  நம் தளத்தில் எழுதிய பதிவு திரும்ப உங்கள் பார்வைக்கு...

(THE ARMOUR OF GOD) உலகில் என்னை வசீகரித்த ஒரே நடிகர் ஜாக்கிதான்...

ஒரு படத்தை நீங்கள் எத்தனை முறை பார்ப்பீர்கள்... ஒரு முறை அல்லது இரண்டு முறைஅல்லது 5 முறை... நான் இந்த படத்தை தியேட்டரில் 45 தடவை பார்த்தேன்... ஏன் அப்படி என்று இதுவரை தெரியவில்லை... இது போல் வேற எந்த படமும் என்னை வசீகரிக்கவில்லை...அப்புறம் டிவிடியில் பார்த்தவை கணக்கில் அடங்காதவை. அப்படி ஒரு படம் ஒருவனை வசியம் செய்யுமா?

இந்தனைக்கும் எனக்கு அவ்வளவு ஆங்கில அறிவு கிடையாது... எனது நண்பன் லட்சுமிநாரயணன் சுவற்றில் இரண்டு குருவி படம் வரைந்து, இரண்டும் பேசுவது போல் எழுதினான் ஒரு குருவி ஐ லவ் யூ என்றது பக்கத்து குருவி ஐ லைக் யூ என்றது... எனக்கு லைக்யூ என்றால் என்ன? என்ற அர்த்தம் தெரியாது... எனது எட்டாம் வகுப்பில் ஐலைக்யூ என்ற ஆங்கில சொல்லுக்கு அர்த்தம், தெரியவில்லை என்றால் என் கல்விதகுதியை சற்றே யோசி்த்துக்கொள்ளுங்கள்... அப்படி பட்ட எனக்கு அந்த ஆங்கலிபடம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது....

அந்த நடிகன் குரங்கை விட வேகமாக இயங்கினான்... காற்றிலே லாஜீக்காக பறந்து எதிரிகளை பந்தாடினான்... கார் சேசிங் ஆகட்டும், அல்லத பைக் ஓட்டவதாக இருக்கட்டும் எதிலும் ஒரு லாவகம் இருந்தது...முகத்தில் எப்போதும் ஒரு குழந்தை தனமான புன்னகையை நிரந்தரமாக வைத்து இருந்தான் அவன் பாடி லாங்வேஜ்கள் என்னை வெகுவாய் கவர்ந்தன... என்னை அவன் வெகுசீக்கரத்தில் வசிகரித்தான்...


அவன் நடிகன்தான் என்றாலும் வேலையை இஷ்டப்பட்டு செய்தான் அந்த ஜாப் சேட்டிஸ்பேக்ஷன் எனக்கு அவனிடத்தில் பிடித்து இருந்தது... உயிர் போய்விடும் என்று தெரி்யும் அளவுக்கான காட்சிகளில்கூட டூப்போடுவதை அவ்ன தவிர்த்தான் .. மிக முக்கியமாக அவன் இளமை துள்ளலும், அந்த சுறுசுறுப்பும் என்னை அவன் அடிமையாக்கியது... அந்த ஹாங்காங் நடிகனின் பெயர் ஜாக்கிசான்... என் பெயரில் பாதியை எடுத்து விட்டு அவன் பெயரை வைத்துக்கொண்டதும் அவன் உழைப்பின்மேல் உள்ள காதாலால்தான்.... அப்படி பெரிய திரையில் மட்டும் 45 முறை நான் பார்த்த அந்த படம் ஜாக்கிசானின், தி ஆர்மர் ஆப் காட் இந்த படத்துக்கு பிறகுதான் எனக்கு ஆங்கில படத்தின் மேல் காதல் வந்து மொழி புரியாமல் பார்த்து பார்த்து இப்போது லேசாக புடிபடுகின்றது...


திஆர்மர் ஆப் காட் படத்தின் கதை இது தான்....
ஸ்பில் பெர்க்கின் இன்டியான ஜோன்ஸ் படங்களை நீங்கள் பார்த்து இருக்கலாம்... ஒரு பழங்கால பொக்கிஷத்தை பற்றிய தேடல்தான் கதைகரு... இந்த படமும் அப்படித்தான்... பழங்கால மதி்ப்பு மிக்க 5 முக்கிய பொருட்கள் தேி செல்கின்றான்... அதில் ஒரு பொருளான கத்தியை ஆப்பிரிக்காவின் பழங்குடினிரிடம் இருந்து மீட்கின்றான மீதம் 4 பொருட்களை ஆர்மர் ஆப் காட் எனும் சாமியார் கூட்டத்திடம் இருக்கும் மீத பகுதிகளை மீட்க ஜாக்கி தேடிச்செல்வதும் அதனால் ஏற்படும் இடர்பாடுகளை சுவைபடவும் ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்து சொல்லி இருப்பார் ஜாக்கி...

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....


இந்த படத்தின் ஒவ்வோறு காட்சியும் எனக்கு அத்துபடி.... எல்லா சீன்களும் என் நினைவுகளில்....

இந்த படம் 1986ல் வெளி வந்தது...


இந்த படத்தின் முதல் காட்சியில் ஜாக்கி பழங்குடியினரிடம் வாள் எடுத்து சண்டை போட்டு தப்பிக்கும் காட்சியில் ஒரு மரத்தை பிடித்து தாண்டும் போது மதல் ஷாட்டில் ஓகே... ஜாக்கி அந்த காட்சியை ரீடேக் எடுக்க மரக்கிளை முறிந்த பதினைந்து அடி உயரத்தில் இருந்து கீழே விழந்து மண்டையை உடைத்து கொண்டதும்.... அதன் 8 மணி நேரம் ஆப்பேரஷன் இருப்பினும் காது ஓரத்தில் நிரந்தரமாக இருக்க அதனை பிளாஸ்டிக் வைத்து அடைத்தனர்... ஒரு பக்க காத கேட்கும் திறன் கொஞ்சம் அவுட்....

எல்லா படத்திலும் படம் முடிந்து டைட்டில் போடும் போது தியேட்டரில் பாதி கூட்டம் இருக்காது ஆனால் ஜாக்கி படங்களில் மட்டும் படம் முடிந்து டைட்டில் போடும் போது தேசியகீதம் போட்டது போல மந்தித்துக்கு கட்டுபட்டது போல எல்லா மக்களும் நின்று அவர் படத்தில் பட்ட கஷடங்களை மக்களுக்கு தெரிவிப்பார்....

என் குறுபடங்கள் எல்லாவற்றிலும் இந்த முறையை விடாது பின் பற்றுகின்றேன்... அதனால் எனக்கு கிடைத்த நன்மைகள் ஏராளம்.. அது தனி கதை..

ஜாக்கியின் இந்த செயலால் அவரை எந்த இன்ஷுர் நிறுவனமும் அவரை சேர்த்தக்கொள்ள தயங்குகின்றன....அவர் உடம்பில் அடிபடாத இடமே இல்லை எனலாம்....

டூவின் பிரதர் படத்தை தவிர ஜாக்கி எந்த படத்திலும் சிகரேட் புகைப்பது போல் காட்சி வைத்து இல்லை... ஏனெனில் தன்னை பார்த்து எந்த ரசிகனும் கெடக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்தார் ...

அவர் போல் வேலைக்காக உயிரை கொடுத்து நடிக்கும் நடிகர்கள் இந்த உலகில் குறைவு...

இந்த படத்தில் கிளைமாக்சில் அந்த 4 பெண்களுடன் போடும் சண்டையும் அதில் ஒரு பெண்ணை மார்பில் குத்தி விட அந்த காட்சியை அப்போது எல்லோரும் பரபரப்பாய் பேசினர்... அதன் பிறகு அந்த பெண்களை வீழ்த்துவது அற்புதமான ஆக்ஷன் பேக்....

ஜாக்கி பப்புள் கம் கையில் வைத்து வில்லனிடம் பேசியபடியே சட் சடடென வாயில் போடும் அழகே அழகு...அதை தமிழில் யாரும் செய்து பார்க்கவில்லை...

ஜாக்கி நண்பனாக வரும்Alan Tam கேனத்தனமாக செய்யும் காட்சிகளில் சிரித்து மகிழலாம்...

கடைசிகாட்சியில் பலூனில் பறந்து வரும் போது, படத்தில் இடம் பெறும் அந்த கடைசி பாடல் ஜாக்கிதான் பாடுவார் என்று நினைக்கிறேன் ... அது யூடியுபில் இரந்தால் தேடி பிடித்து லிங்க் கொடுக்கவும் , அந்த பாடல் என் ஆல்டைம் பேவரிட்....

தன் நண்பனையும் காதலியையும் தப்பிக்கைவைக்க அவர் போடும் சண்டைகாட்சிகள் அபாரம்....

இந்த படத்தில் கார் இரண்டு பாலங்களுக்கு தாண்டும் அதே போல் ஒரு பைக்கும் தாண்டுவது போலான காட்சி மெய்சிலிர்க்கும் ரகம்....

பாமை பத்த வைத்து விட்டு அவர் செய்யும் காமெடிகள், தேர்ந்த நகைச்சுவையாளானால் மட்டுமே செய்ய முடியும்....படத்தின் பெரும்பாலான காட்சிகள் யுகோஸ்லோவாகியாவில் படம் பிடிக்கபட்டன...

எதி்ரிகளிடம் உதை வாங்கி அதன் பிறகு திருப்பி அடிக்கும் ஒரே ஹீரோ ஜாக்கி மட்டும்தான்...

அமெரிக்காவின் ஹீரோ சில்வஸ்டர் ஸ்டோலன் நடித்த படமான ராக்கி 5 பாகத்தின் வசூலை இந்த ஒரு படம் எடுத்துவிட்டதாக சொல்லுவார்கள்...

Directed by Jackie Chan
Eric Tsang
Produced by Leonard Ho
Chua Lam
Written by Jackie Chan
John Sheppard
Eric Tsang
Starring Jackie Chan
Alan Tam
Maria Dolores Forner
Rosamund Kwan
Music by Michael Wandmacher
Cinematography Bob Thompson
Distributed by Golden Harvest
Toho
Release date(s) 1986
Country Hong Kong
Yugoslavia
Croatia
Language Cantonese

அன்புடன்/ஜாக்கிசேகர்


=====================
  ஒன்பதாவது படிச்சிக்கிட்டு இருந்த நேரம்....நான்,சுபாஷ், சூரி என நண்பர்கள் வட்டம் உருவானது... ஜாக்கிசான் படங்களை தேடி தேடிப்படித்தோம் வடை மடித்த  பேப்பரில்  ஜாக்கிசான் படம் இருந்தால் கூட பத்திரபடுத்த ஆரம்பித்தோம்....  இப்பதுபோல் அப்போது எந்த விக்கிபிடியாவும் எங்களுக்கு உதவவில்லை... நிறைய தகவல்கள்  தேடி  தேடி சேர்க்க ஆரம்பித்தோம்... முதல் நாள் படம் ரிலிஸ் அன்று முதுல் டிக்கெட் எடுத்து முதல் ஷோ பார்ப்பதோடு நிறுத்திக்கொண்டோம்...கற்புரம், தேங்காய் உடைப்பு போன்றவற்றில் எங்களுக்கு விருப்பம் இல்லை... ஆனால் மற்ற நண்பர்களை விட என் செயல்களில் ஜாக்கி அதிகம் குடி கொண்டு இருந்தார்... மாடியில் ஏறுவது, குதிப்பது,  மரக்கிளைகளில் இருந்த  மொட்டை மாடிக்கு தாவுவது என்று  அசத்திக்கொண்டு இருப்பேன்....ஆனால் ஜாக்கி நடிக்கும் போது தனக்கு பாதுகாப்பு ஏற்ப்பாடுகள் செய்து கொண்டு நடிப்பார் என்ற அந்த அடிப்படை தெரியாமல் போய்....ஒரு பெண்ணை கவரை நான் ஜாக்கிசான் வேடம் போட மொக்கை வாங்கியது ஒரு பற்றி முன்பு பதிவாக போட்டு இருந்தேன்....உங்களுக்கா அது கீழே...

நடிகர் ஜாக்கிசானால் நான் பட்ட அவமானம்...


தமிழகத்தில் 1990களில்  என் ரோல் மாடல் ஹாங்காங்  நடிகர் ஜாக்கிசான் தமிழகத்தில் வசூலில் சாதனை படைத்த நேரம்.... புராஜக்ட் ஏ... படம் பட்டையை கிளப்ப... அதில் மணிக்கூண்டு பைட் ரொம்பவும் பிரபலம்... கடைசியில் அந்த  படத்தில் எடுத்த காட்சிகளை போடும் போது அதில் ஜாக்கி அடிபட்டு கீழே விழும் காட்சியை பார்த்து திகைக்காதவர்கள்  உலகத்தில் இருக்கவே முடியாது.....
 யங் மாஸ்டர் படத்தில் தலைக்கீழாக ஜாக்கி அந்த படத்தில் ஒரு எக்சஸைஸ் செய்வார்... அது போல என்  நண்பன்  சுபாஷ் அவன் வீட்டில் அது போலவே வேப்பம் மரத்தில் ஒரு பலகை அமைத்து மிக அழகாக செட் செய்து இருந்தான்... அதில் இரண்டு மூன்றுக்கு மேல் தலைக்கீழாக தொங்கி மேல் நோக்கி எழும்ப முடியாது..செல்பும் எடுக்காது... ஆனாலும் தொடர்ந்து முயற்ச்சிப்போம்...


ஜாக்கி அப்போது எங்களை முழுமையாக ஆக்கிரமித்து இருந்தார்.. எங்கள் எல்லா செயல் களிலும் ஜாக்கி நிறைந்து இருந்தார்....


 நடையில், உடையில்,ஓட்டத்தில்,மரத்தில் இருந்து குதிப்பது, சைக்கிளில் போகும் போது  சின்ன பிளாட்பார்மில்  சைக்கிள் ஓட்டுவது என்று எங்களிடத்தில் ஜாக்கியின் பிரதிபலிப்பு எல்லா இடத்திலும் இருக்கும்... அதுவும் என்னிடத்தில் ரொம் ப அதிகம்..


ஜாக்கியின் உலகளாவிய வளர்ச்சிக்கு படத்தில் பின் புலத்த்தில் நடந்த காட்சிகள் படத்தின் என்ட் கிரடிட்கார்டின் போது ஜாக்கி நடித்த படத்தில் போடுவார்கள்...  படத்தின் பின்புறத்தில் நடக்கும்... பி ஹைண்ட் த சீன் காட்சிகளும்  அவரின்  வெற்றிக்கு ஒரு காரணம் என்றால் அதை யாராலும் மறுக்க முடியாது...  ஆர்மர் ஆப் காட் படத்தின் ஒவ்வொரு பிரேமும் எனக்கு இன்னும் அத்துபடி.....  அந்த படத்தில் வருவது போல் பபிள்காம் ஸ்டைலாக போடுவது என்று அப்பட்டமான காப்பி வாழ்க்கை வாழ்ந்தவன் நான்...மேலே உள்ள  ஆர்மர் ஆப் காட் டிரைலரில் வரும் ஆங்கில பாடல் எனக்கு ரொம்ப பிடித்தமானது... எனக்கு ஆங்கிலம் தெரியாவிட்டாலும் அந்த பாடலை அப்போதெல்லாம் சத்தமாக பாடியபடி சைக்கிள் மிதிப்பேன்..

அந்த  பாடலை இப்போது பாடினாலும் எனக்கு  உற்சாகம் வந்து விடும்...இன் டு த ஸ்கை என்பது மட்டும் ரொம்ப சத்தமாக மிஸ்டர் பீன் சர்ச்சில் பாடவது போல் சத்தமாக பாடுவேன்........ அந்த படத்தில் வருவது போல் பப்பிள்காம் கையில் வைத்து வாயிக்கு சாகசம் செய்வது என்று பயங்கரமாக பிராக்டிஸ் பண்ணுவோம்..... 


ஆனால் பேனர் கட்டுவது , தேங்காய் உடைப்பது என்று செய்யாமல் , எங்கள் உடலில் வலு ஏற்ற ஜாக்கியை இன்ஸ்பிரேஷனாக வைத்துக்கொண்டோம்...


ஏன் இவ்வளவு விரிவாய் சொல்கின்றேன் என்றால்.... பின்னால் வரும் கதை அப்படிப்ட்டது....

 என் அத்தை வீட்டு பக்கத்து வீட்டு மாடியில்  கிளிப் விழுந்து விட்டால்  பக்கத்து வீட்டுகாரர் வீட்டு கதவை தட்டி மாடிக்கு போய்  எடுக்கும் பழக்கம் எல்லாம் இல்லை.. அப்படியே அடுத்த வீட்டு மாடிக்கு  ஜாக்கி போல் தாவி கிளிப் மற்றும் விழுந்த பொருட்கள் எடுத்து வருவதுதான் என் ஸ்டைல்....

தனியாக கடலூர் சில்வர் பீச்சில் குதிப்பது பல்ட்டி அடிப்பது  எகிறி குதிப்பது என ஜாக்கி போல் பல ஆட்டங்கள்  போடுவோம்.. ரொம்ப எனர்ஜியாய் இருப்போம்...


என் உறவுகாரர்.... திருட்டுக்கு பயந்து  அவரது வீட்டு மாடியில் அவரின் அரை சைக்கிளை ஏற்றி வைத்து இருந்தார்.... நான் கொஞ்சம் விபரம் என்பதால் என்னை எடுத்து வர சொல்லி  சைக்கிள் சாவி கொடுத்து இருந்தார்... அவர் வீட்டின்  மாடியில்தான் நான் கதை புத்தகங்கள் வார பத்திரிக்கை படிப்பது வழக்கம்..
அந்த வீட்டின் படிகள்வீட்டின் சைடில் இருக்கும்,ரோட்டை ஒட்டி இருக்கும்...

 


 நான் சைக்கிளை படிகளில் தூக்கி கொண்டு தரைக்கு இறங்கி வந்து சைக்கிள் ஓட்ட வேண்டும்...இப்படி நடந்து இருந்து இருந்தால் இந்த கட்டுரை எழுத வேண்டிய அவசியம் இப்போது வந்த இருக்காது... விதி யாரை விட்டது....மாடியில் இருந்து எட்டி பார்த்தேன்... தூரத்தில் நாங்கள் தவமாய் தவம் கிடக்கும் எங்கள் நகரின்  தேவதை, அவளின் அக்கா குழந்தையை கை பிடித்து நடத்தி அழைத்து வருவதை பார்த்தேன்.....பெரிய அளவில் அவளை அசத்த தீர்மாணித்தேன்... அதாவது புராஜக்ட் ஏ படத்தில் ஜாக்கி சைக்கிள் சாகசம் செய்வது போல் படியில் சைக்கிளில் இறங்கி அவள் பக்கத்தில் சட்டென போய் வளைந்து அவளை அசத்த வேண்டும் என்பது பிளான்...

 நான் இருக்கும் வீட்டு படியின் அருகில்  நடந்து வந்து விட்டாள்... முன் பிரேக் பின் பிரேக் ரெண்டையும் அழுத்தி பிடித்தேன் முன் சக்கரத்தை இரண்டு படிகளில் இறக்கினேன்... அதாவது கொஞ்சம் விசையை செலுத்தினால் 25 படிகள் கொண்ட அந்த மாடி படியில் இருந்து சைக்கிளோடு நான் சட சட வென இறங்கி வேண்டும்... சத்தமாக சைக்கிளில் நான் இறங்கும் போது அவள் பார்த்து கலவரபடவேண்டும்..... இது நம்ம பிளான்.... ஆண்டவன் வேற பிளான் வைத்து இருந்ததை நான் அப்போது அறியவில்லை....
அவள் வந்துவிட்டாள்... நான் என் சைக்கிளில் முன் சக்கரத்தை  ஒரு படிதான்  இறக்கினேன்... பின் சக்கரத்தை மாடியின் படி விளிம்பில் வைத்தேன்....அவள் வந்து விட்டாள்.... கொஞ்சமாக சைக்கிளை நகர்த்த... அப்போதுதான் நியூட்டன் கண்டு பிடித்த புவியீர்ப்பு விசை பேய் வேகத்தில் வேலை செய்ய ஆரம்பித்தது....சைக்கிளின் வெயிட் ,என் வெயிட், மற்றும் 25 படிகள் கொண்ட செங்குத்தான படியில் இருந்து புவியீர்ப்பு விசைவேகம் என்னை பலம் கொண்ட மட்டும் இழுக்க ...முன் பிரேக், பின்பிரேக் எல்லாத்தையும் காறி துப்பி விட்டு புவியீர்ப்பு விசை தன்னகத்தே எடுத்துக்கொண்டது...

அப்போதுதான் ஜாக்கி எந்த சண்டை மற்றும் சாகச காட்சிக்கு முன் பலமுறை ரிகர்சல் செய்வார்... என்ற உண்மையும்... கீழே விழுந்தால்  தூக்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஒரு படையே வரும் என்பதும் ரொம்ப லேட்டாக நினைவுக்கு வந்து தொலைத்தது...

நான் பக்கத்தில் உள்ள கைபிடியில் சாய்ந்து வேகமாக தடதடத்து, அதில் புவியீர்ப்பு விசை காரணமாக விழுந்து என் கட்டுபாட்டை இழந்தேன்...

விடியலில்... நாய் ஒரு மாதிரி ஊலை இடுமே... அது போலான சத்தம் என் வாயில் இருந்து என்னை அறியாமல் பயத்தில் வெளிப்பட..... சட சட சட சட சட சட சட சட சட சட சட சட சட சட சட என பெருத்த சத்தம் எழுப்பியபடி சைக்கிளும் நானும் அவள் காலடியில் போய்  சொத் என்ற சத்தத்துடன் விழுந்தோம்.....


என் சைக்கிள் கேரியரில் வைத்து இருந்த புத்தகங்கள் எல்லாம் நெல்லிகாய் மூட்டையை பிரித்து கொட்டினால் சிதறுமே அது போல் சிதறி கிடந்தது... அவள் பயத்தில் நடத்தி வந்த குழந்தையை  இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டாள்...நான் தூசி மண்டலத்துக்குள் இருந்து எழுந்து அவள் முகத்தை பார்த்தேன்... அவள் ராஜேந்திரகுமார் எழுதும் ஙே போல் ஒரு கேவலமான,பயம்கலந்த பார்வை பார்த்து விட்டு நடக்க...அந்த பார்வையை  என் ஆயுசுக்கும் என்னால் மறக்க முடியாது.. இது நடந்து 1992 களில் என்று நினைக்கின்றேன்... அது ஜாக்கியால் நான் போட்டுக்கொண்ட சூடு....


நான் புத்தகங்களை சேகரிக்க... பக்கத்து விட்டு மாடியில் இருந்து ஜாக்கி என்று குரல் கேட்டது..  அது என் நண்பர்கள் கூட்டம்..ஜாக்கிபோல் சாகசம் செய்து பெயிலர் ஆனதால் அந்த குரல்களில் நக்கல் வழிந்தது...


இரண்டு மாதத்துக்கு முன் ஊருக்கு போய் இருந்தேன்... பேருந்து நிறுத்தத்தில் யாரோ களுக் என சிரிப்பது போல இருந்தது....தவமாய் தவம் கிடந்த அந்த தேவதை சிசேரியனுக்கு பிறகு  சின்ன தொப்பையோடு ம் இரண்டு பெண் குழந்தைகளோடும் காட்சி கொடுத்து கொண்டு இருந்தது...

என்னை பார்த்து நான்விழுந்து வைத்ததை நினைத்து அவள் சிரித்து வைத்து இருக்க வேண்டும்... அவளை பார்த்த போது அது உறுதிபடுத்தினாள்...அவளின் இரண்டு குழந்தைகள்... தமன்னா அணியும் உடைகள் அணிந்து புசு புசு என்று காட்சி அளித்தார்கள்...


பேருந்து வந்தது....பேருந்தில் நல்ல கூட்டம் அவள் முதலில் பேருந்தில் ஏறிவிட்டாள்... நான் அவள் குழந்தைகள் ஏற உதவி செய்தேன்.... தேவையில்லாமல் பழைய ஞாபகம் வர உதட்டில் சிரிப்புடன்... ஓடும் பேருந்தின் ஜன்னல்  கம்பியில் வவ்வால் ஆனேன்...


தவமாய் தவம், பேருந்தின் உள்ளே இருந்து என்னை பார்த்தாள்...சட்டென வலையோசை கல கலவென என்று சத்யா படத்தின் பாடல் மனதில் ஒலிக்க ஆரம்பித்தது..
உன்னை காணும் சபலம் வரக்கூடும்... 
நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள் ஆகும்...


நான் மீண்டும் பேருந்தின் உள்ளே பார்க்கும் பார்வையை தவிர்க்க ஆரம்பித்தேன்....================
இப்படி விழுந்து மொக்கை வாங்கி நான் வெறுத்து போய்  இடுப்பை பிடித்துக்கொண்டு எழுந்த போது, இரண்டு வீடு தள்ளி என் பள்ளி நண்பன்... ஸ்ரீகாந் தற்போது கடலூரில் போட்டோகிராபராக இருக்கின்றான்...அவன் தன் அக்கா, அம்மா ,தங்கைகளோடு மொட்டை மாடியில் இருந்தான்... எதோ சத்தம் வந்து இருக்கின்றது என்று எட்டி பார்க்க நான் சைக்கிள் மற்றும் புத்தகம் சிதற அந்த பெண்ணின்  காலில் விழுந்து கிடத்தேன்... அதை பார்த்து விட்டு,  நான் ஜாக்கியை பார்த்து அப்படி ஒரு முயற்சி செய்து இருப்பேன் என்று யூகித்து ஜாக்கி டேய் ஜாக்கி என்று அழைத்து நக்கல் விட்டான்...  நானும்  இடுப்பு வலியோடு எழுந்து கையசைத்தேன்... என்னை முதன் முதலாக ஜாக்கி என்று நக்கலாக  அழைத்தவன் அவன் என்று நினைக்கின்றேன்.....


வரும் 12/12/12/12 அன்று ஜாக்கிசான்  நடித்து உலகம் எங்கும் சைனிஸ் ஜோடியாக் திரைப்படம் ரிலிசாக போகின்றது... ஜாக்கியின் கடைசி அக்ஷன் படம்... இது...  அர்மர் ஆப் கார்டு படத்தின் மூன்றாம் பாகம்.... எந்த படம் என் வாழ்வில் நிறைய மாற்றங்களுக்கு வித்திட்டதோ அந்த படத்தின் மூன்றாம் பாகமும் ஜாக்கிசானின் ஆக்ஷன் படங்களில்  இனிமேல் நடிக்க மாட்டேன் என்று அறிவித்து இருக்கின்றார்....முதல் நாள் முதல் ஷோ  என்று  முன்பு இருந்த அளிவுக்கு இப்போது இல்லை என்றாலும்  என் மானசீக நடிகர் பற்றி எனக்கு தெரிந்ததை அந்த படம் ரிலிஸ் வரை தொடர்ந்த பகிர்ந்து கொள்ள  இருக்கின்றேன்....

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

7 comments:

 1. ஒரு அருமையான அனுபவத்தையும் ஜாக்கி சான் பெருமையயும் சூப்பரா சொல்லிருக்கீங்க..நன்றிங்க/.

  ReplyDelete
 2. பயபுள்ள!!! என்னமா ரசித்து எழுதி இருக்கு !!!...
  ஒரு பிரிண்ட் எடுத்து ஊட்ல போய்தான் படிக்கணும் ..
  கலக்கல் கலக்கல் சூப்பர்

  ReplyDelete
 3. பயபுள்ள!!! என்னமா ரசித்து எழுதி இருக்கு !!!...
  ஒரு பிரிண்ட் எடுத்து ஊட்ல போய்தான் படிக்கணும் ..
  கலக்கல் கலக்கல் சூப்பர்

  ReplyDelete
 4. போன வாரம் நானும் என் மனைவியும் சேர்ந்து திஆர்மர் ஆப் காட் பார்த்து கொண்டு இருந்தோம். வில்லனிடம் கத்தி தேடி வரும் முன்பு தன் நண்பனிடம் ஜக்கி பேசும் காட்சி ஓடும் போது பின் புல காட்சி என் மனைவிக்கு மிகவும் பரிசையமாக தோன்ற அது வியென்னா Schonbrunn (summer palace of King of Vienna )ல எடுக்க பட்டது தெரிந்தது .
  http://www.schoenbrunn.at/en.html
  We live walkable distance from Vienna ..
  I am also Jackie fan.. both jackies :)

  ReplyDelete
 5. நன்றி கோவை நேரம்... யானைக்குட்டி ராஜேந்திரன்....

  சுந்தரம் கொடுத்து வைத்தவரய்யா நீர்.... நமக்கு இந்த பாக்கியம் எல்லாம் இன்னும் கைவரவில்லை.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner