At Point Blank-2003/ ஸ்வீடன்/ பேங்க் கொள்ளை,துப்பறியும் பெண் போலிஸ்.




டைம்பாஸ் படம் எழுதி ரொம்ப  நாள் ஆயிடுச்சி இல்லையா... ?


சரி ஸ்வீடன் பேங்க் ராப்பரி பிலிம் ஒன்னை பார்த்த்தேன்... அதை  இப்ப உங்களோட பகிர்ந்துக்கிறேன்..

=====

At Point Blank-2003 படத்தின் ஒன்லைன்...

டேலன்டான  பேங்க் ராப்பரி டீமை  கண்டு பிடிக்கும் பெண் டிடெக்ட்டிவ்.  இதான் படத்தோட ஒன்லைன்....

===============

At Point Blank-2003  படத்தின் கதை என்ன...?


கிளாரா....32வயதாகும்  துப்பறியும் போலிஸ் பெண்மணி..ஸ்டாக் ஹோம்  நகரில் பல பேங்க் கொள்ளைகள் நடக்கின்றன... ஆனால் ஒரு துப்பும்  கிடைக்கவில்லை... ஒரு பேங்கோடு நிறுத்தின கூட பராவாயில்லை... 

பயபுள்ளைங்க  தொடர்ந்து பேங்கை  கொள்ளை அடிச்சி தள்ளறானுங்க...ஒரு கட்டத்துல  சூத்தரதாரி யாருன்னு கிளாரா கண்டு பிடிச்சிடறா....

ஆனா ஒரு சுட்டி பையனை  பினை கைதியா பிடிச்சி வச்சிக்கிட்டு  பேங்க் கொள்ளையனுங்க... கிளராவுக்கு செக்  வைக்கறானுங்க... அதை எப்படி முறியடிக்கறா என்பதுதான் படத்தின் ஹைலைட்... அதை படத்தை பார்த்து தெரிஞ்சிக்கோங்க..

===================
 படத்தின் சுவாரஸ்யங்கள்...



முகத்தில் வடு இருக்கும் கதாநாயகியை எங்கேயாவது பார்த்து இருக்கிங்களா..?கிளாராவா நடிச்சி இருக்கற ,ஸ்வீடன் நடிகை  Sofia Helin முகத்துல வெட்டுக்காய வடு இருக்கின்றது..


படத்துல அலட்டிக்காம Sofia Helin அன்டர்பிளே  பண்ணி நம்மை படத்தோட டிராவல் பண்ண வைச்சி இருக்காங்க....


ஸ்வீடன் நாட்டோட வீடுகள் பனிசூழ்ந்த  சாலைகள் என்று பார்க்க ரம்யமாக இருக்கின்றன...

சின்ன டுவீஸ்ட் பட் அதை கண்டு பிடிக்க முடிஞ்சிடறது படத்தோட பலவீனம்தான்.. 


பட் அதனாலதான் டைம்பாஸ் படமா இந்த படத்தை  பார்க்கலாம்ன்னு சொல்லுவேன்..

===========
படத்தின் டிரைலர்..



======================
படக்குழுவினர் விபரம்

Directed by Peter Lindmark
Produced by Steve Aalam
Thomas Allercrantz
Written by Peter Lindmark
Starring Sofia Helin
Mikael Persbrandt
Stefan Sauk
Stina Ekblad
Music by Johan Söderqvist
Cinematography Eric Maddison
Editing by Mattias Morheden
Studio Röde Orm Film
Distributed by Universal Pictures Nordic
Release date(s)
13 December 2003 (Lucia Movie Night)
Running time 105 minutes
Country Sweden
Language Swedish




=-==============
பைன்ல்கிக்..

அக்மார்க் டைம்பாஸ் படம்..

===========


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

6 comments:

  1. அண்ணே ரொம்ப busy ah இருக்கீங்க போல இருக்கு, short ah முடுசுடிங்க.. anyway, going to download this movie...

    ReplyDelete
  2. குடும்பத்துடன் பார்க்கலாமா?

    ReplyDelete
  3. தம்பி இது டைம்பாஸ் படம்... இதுக்கு மேல எழுத அந்த படத்துல ஒன்னும் இல்லை அதான்.....

    ReplyDelete
  4. தமிழ் பையன் அது உங்க இஷ்ட்டம்...

    ReplyDelete
    Replies
    1. தமிழ் பையன் ..இந்த படம் வெஜ்- ஆ நான்-வெஜ் படமா ன்னு மறைமுகமா கேட்கறாரு அதை உடனே உங்க இஷ்டம் ன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொன்னா எப்படி ????

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner