ஜாக்கெட் பிட்...
பெங்களூரில் என்
நண்பரின் நண்பர் ஒருவரை சந்தித்தேன் நண்பர் அவரை பற்றி அதிகம் சொல்லி
இருந்தாலும்... அவரோட நேரிடையான பழக்கம்
எனக்கு குறைவுதான்.... எங்கள் இருவரையும்
அவர் சந்தித்தார்... நிறைய பேசிக்கொண்டு இருந்தோம்...
சிறிது நேரத்தில் அவர் விடைபெற்றார்... அவர் என்ற மரியாதை
வேண்டாம்... நட்புக்குள் என்ன மரியாதை வாழுது...? வழக்கம் போல அவருக்கு ஒரு பெயர் சூட்டுவோம்... பெயர் ராகவ் என்று
வைத்துக்கொள்ளுவோம்... ராகவுக்கு திருமணமாகி ஒன்றரை வருடம் ஆகின்றது... காசு
விஷயத்தில் பயங்கர கெட்டி... என் அளவுக்கு
எல்லாம் கெட்ட பழக்கம் இல்லாத நல்ல பையன் ராகவ்...
சாகவ் ச்சே ராகவ் எங்களிடம்
விடைபெற்று சென்ற பின்.... என் நண்பனிடம்
கேட்டேன்.. ராகவுக்கு குழந்தை ஏதாவது என்று நான் கேட்க? அது ஒரு பெரிய கதை என்று
சொல்ல ஆரம்பித்தான்...
குடும்பத்தினர் பார்த்துதான் ராகவுக்கு திருமணம் செய்து வைத்தனர்...பெண்
15 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் அடுத்த
ஊர் பெண்தான்... அந்த பெண்ணும் நன்றாக படித்தவர்தான்...ராகவ் அவன் திருமணத்துக்கும் எங்களுக்கு பத்திரிக்கை வைத்து இருந்தாலும்
எங்களால் திருமணத்துக்கு செல்ல முடியவில்லை...ராகவ் ஹைதிராபாத்தில்
வேலைபார்த்து வந்தான்.....திருமணம் வெகு விமர்சியாக நடைபெற்றது... கூட்டம் என்றால்
கூட்டம் அப்படி ஒரு கூட்டமாம்...
திருமணம் முடிந்து தம்பதிகள்... ஹைதிராபாத்தில் குடியேறினார்கள்...
இரண்டு மாத காலம் சந்தோஷமாகத்தான் மணவாழ்க்கை போய் கொண்டு இருந்த போதுதான்...
பெண்ணிடம் பெரிய மாற்றங்கள் தெரிய
ஆரம்பித்த்து....
அந்த பெண்ணுக்கு நிறைய பாய் பிரண்டுகள் இருந்து இருக்கின்றார்கள்...
அடிக்கடி பப்புக்கு சென்று வருவது வாரம்
தவறாமல் வெள்ளிக்கிழமை கோவிலுக்கு செல்வது போல மிஸ் ஆகாமல்
பார்த்துக்கொள்ளுமாம்....
வீட்டில் சமைக்காமல் போனில்
மணிக்கணக்காக தனது நண்பர்களுடன்
பேசிக்கொண்டு இருக்குமாம்..ராகவ் நிறைய முறை அட்வைஸ் செய்தும் அந்த பெண் காதில் வாங்கிக்கொள்ளவில்லையாம்...
பொறுத்து பொறுத்து பார்த்து வேறு வழியில்லாமல் குடும்பத்திரிடம்
விஷயத்தை குமுறி கொட்ட... அவர்களும்
விசாரித்து பார்த்ததில்... உண்மை என்று
தெரிய... சரி விவாகரத்து செய்து வைத்து விடுவோம் என்று முடிவு எடுத்து
விட்டார்கள்...
விவாகரத்துக்கு பெண் வீட்டார் கல்யாண செலவை கொடுக்க வேண்டும் என்று
வாதிட்டு இருக்கின்றார்கள்...செலவு செய்த்தை
விட நாலுமடங்கு தொகையை கேட்டு இருக்கின்றார்கள்... திருமணத்துக்கு போட்ட
நகை சீர் வரிசை பொருட்கள் என்று எல்லா
வற்றையும் திரும்ப பெற்று இருக்கின்றார்கள்.. அது மட்டும் இல்லாமல் நான்கு மடங்கு
தொகையாக 10 லட்சத்தை கேட்டு இருக்கின்றார்கள்..... கொடுத்து
வெளிவந்தால் போதும் என்று ராகவ் குடும்பம் பணத்தை கொடுத்து செட்டில் செய்து இருக்கின்றார்கள் என்று
நண்பர் சொல்லி ஒரு பெருமூச்சு
விட்டார்....
ஏன் பெருமூச்சி விடறே...?
இல்லை நம்ம ராகவ் பத்தி
உனக்கு எந்த அளவுக்கு தெரியும்.. ?அப்படியே சொல்லு...
நல்ல பையன்.. தான் ரொம்ப ஸ்மார்ட்டுன்னு கூட்டத்துல காட்டிக்க
கொஞ்சமா அலட்டுவான்...அமைதியான பையன்...
கெட்ட பழக்கம் இல்லை... கோபமே
படமாட்டன்... சிரிச்ச முகத்தோட
இருப்பான்...அவன் யாரையும் திட்டி நான் பாத்ததில்லை.... என்றேன்...
நண்பன் இடைமறித்து வெயிட்
என்றான்...
அப்படி கோபமே வராத நம்ம ராகவ் அசிங்க திட்டி இருக்கான்னா
பார்த்துக்கோயேன் என்றான்...
எனக்கு ஆர்வம் மேலிட
என்னாச்சி என்றேன்..?
நகை நட்டு ,சீர்வரிசை பாத்திரங்கள், எல்லாவற்றையும் பேக்கர்ஸ்
அண்டு மூவர்சில் ஏற்றி அனுப்பினான்...
அடவாடியாக சொன்ன செட்டில் மென்ட் பணம்
பத்து லட்சத்தையும் செட்டில் செய்து அனுப்பியது
ராகவ் குடும்பம்...
விவாகரத்து முடிந்து பணம் பொருள் எல்லாம் செட்டில் செய்து இனி புது வாழ்க்கை வாழ வேண்டும்...அவளுக்கும் நமக்கும் இனி எந்த
உறவும் இல்லை என்ற மனநிலைக்கு வந்து....பெருத்த அவமானத்தை சந்தித்து...இரண்டு வார தாடியோடு நம்ம ராகவ்
வீட்டுல உட்கார்ந்து இருக்கான்...
ஞாயிற்று கிழமை காலையில எட்டு மணிக்கு எல்லாரும் வீட்டு தூங்கிகிட்டு இருந்து இருக்காங்க...லீவ் நாள்ல
ரொம்ப லேட்டாதான் எழுந்திருப்பாங்களாம்... ராகவ் தூக்கம் வராம காலையில எழு
மணிக்கே எழுந்து டிவி பார்த்துக்கிட்டு
தன் வாழ்க்கையை நினைச்சி நொந்து நூலாகிட்டு இருக்கும் போது....
கதவை யாரோ தட்டி இருக்காங்க...
சலிச்சிக்கிட்டு ராகவ்தான் எழுந்து போய் கதவை திறந்து இருக்கான்...
அங்க இரண்டு வாரத்துக்கு முன்ன உனக்கு எனக்கும் எந்த சம்பந்தமும் இனி
இல்லை என்று சொல்லி விட்டு கிளம்பிய முன்னாள்
மனைவியோடு பக்கத்து வீட்டு பையன் நின்னுகிட்டு இருந்து இருக்கான்...
இவன் இன்னாத்துக்கு நம்ம
வீட்டுக்கு இப்ப வந்து இருக்கான்னு ராகவனுக்கு ஒரே கன்பியூசன். இருந்தாலம் மொறப்பா...
என்னப்பா என்ன வேணும்ன்னு கேட்டு
இருக்கான்...
மாஸ்டர் பெட்ரூம்ல கீழ் செல்ப்புல அக்காவோட ஜாக்கெட் பிட் ரெண்டு
இருக்காம் அதை எங்க அக்கா வாங்கிக்கிட்டு
வரச்சொல்லுச்சி என்று சொல்லி இருக்கான்...
என்ன கேட்டே???...
ங்கோத்தா.... கண்டாற ஓழி முண்டை அவ சொன்னான்னா நீயும்..... என்று அந்த பையனையும்
அவனை அனுப்பியமுன்னாள் மனைவியையும் பேசிய
அசிங்க வார்த்தைகளுக்கு இனிதான் அசிங்க வார்த்தை டிக்ஷனரியில் அர்த்தம் கண்டு
பிடிக்க வேண்டி இருக்கும் என்றான்.........
திட்டிய ராகவனையும், திட்டு வாங்கிய அந்த பையனையும் அந்த காட்சியையும் நினைத்து பார்க்கின்றேன்... சிரிப்புதான்
வருகின்றது.... எப்படியெல்லாம் இருக்கின்றார்கள் மனிதர்கள்...?????
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
========
ஓகே ஜோக்ஸ் அப்பார்ட்... லெட் மீ கம் டூ த பாயிண்ட்.
===========
குறிப்பு
ராகவ் ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்தான்...ஆனால் ராகவ் வீட்டில் காதலித்த பெண்ணை கரம் பிடிக்க சம்மதிக்கவில்லை....நண்பர்கள் எவ்வளவோ சொன்னார்கள்...முதலில் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.. திருமணம் முடிந்தால் அதன் பின் கண்டிப்பாக ஏற்க்கொள்ளுவார்கள் என்று ராகவை கன்வின்ஸ் செய்து வற்புறுத்தினார்கள்... ஆனால் ஒரு போதும் பெற்றோம் சம்மதம் இன்றி திருமணம் செய்துக்கொள்ளமாட்டேன் என்று ராகவ்பிடிவாதமாக இருந்தான்...
அப்ப இன்னா மயிறுக்கு லவ் பண்ணே ?? என்று நண்பர்கள் கேட்டதுக்கு ராகவ் அமைதிகாத்தான்...
ராகவ் பெற்றோர் நகரத்து பின்னனில் வளர்ந்த பெண் என்றால் வீட்டுக்கு அடங்காது என்று அவர்கள் ஊருக்கு அருகில் இருந்த பெண்ணைதான் தேடிதேடி பார்த்து அவனுக்கு திருமணம் செய்து வைத்தார்கள்...
திருமணத்துக்கு முன் ராகவ் மற்றும் அவனது காதலி மீட்சூவல் ஆன்டர்ஸ்டேன்டிங்கில் பிரிந்தனர்.. அந்த பெண்ணும் உயிருக்கு உயிராய் அவனை காதலித்தாள்...
கண்ணீருடன் விடைபெற்றாள்...250 பவுன் பெற்றோர் பார்த்த பெண்ணுக்கு போடுகின்றேன் என்ற காரணத்தால் அந்த பெண்ணை கழட்டி விட்டு இருக்கலாம் என்று ஒரு டவுட் எனக்கு ராகவ் மேல் உண்டு....
அந்த பெண்ணுக்கு திருமணம் ஆகி விட்டது...
ராகவ் உயிருக்கு உயிராய் காதலித்த பெண்ணுக்கு எல்கேஜிக்கு தினமும் சென்று வரும் ஒரு பையன் இருக்கின்றான்....ராகவ் இரண்டு வார தாடியோடு கண்ணில் பெரும் சோகத்துடன் இருக்கின்றான்...
நினைப்பது அல்ல... நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
பாவம் ராகவ்
ReplyDeleteகோழை ராகவ்
ReplyDeleteபெண் பாவம் சும்மா விடாது என்பது புரிகிறது! நல்ல பகிர்வு! நன்றி
ReplyDeleteராகவ் கோழையா? இந்த மட்டில் ராகவ் தப்பித்தது புண்ணியம். பணம் போனால் போகிறது. ஆனால் பெண் வீட்டில் பொய் புகார் கொடுத்து இருந்தால் ராகவை ஜட்டியுடன் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து நொங்கெடுத்திருப்பார்கள்.
ReplyDeleteகோழை ராகவ். பாவம் ராகவ்.
ReplyDeleteஇந்த வாட்டி அவ்வளவு சிறப்பாக உப்பு காத்து இருக்கவில்லை ஜாக்கி அன்னே.
ReplyDeleteஎன்னத்த சொல்ல..
ReplyDeleteதப்பித்தான் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
ReplyDeleteஎன் பதில் குறிப்பு ku மட்டும்
ReplyDeleteநல்ல கதை
ReplyDeleteLove La ponnu than strong iruganum .
ReplyDeleteAappram ellam namma pocket than.
ராகவ் !!
//ராகவ் கோழையா? இந்த மட்டில் ராகவ் தப்பித்தது புண்ணியம். பணம் போனால் போகிறது. ஆனால் பெண் வீட்டில் பொய் புகார் கொடுத்து இருந்தால் ராகவை ஜட்டியுடன் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து நொங்கெடுத்திருப்பார்கள்.//
ReplyDeleteஆம் உண்மைதான் அதுவும் 498ஏ வரதட்சணைகொடுமை புகார் கொடுத்திருந்தால் குடும்பத்தொடு "உள்ளே" வைத்திருப்பார்கள் அப்புறம் பலவருடம்
கோர்ட்டு கேசுன்னு அலையனும்..
கொடுத்துவைத்தவர் ராகவ், எந்த தொந்தரவும் இல்லாமல் விவாகரத்து கிடைத்துவிட்டது
http://ipc498a-victim.blogspot.com