முந்தநாள் காலையில் பெருங்குடியில்நாலு மாணவர்கள் பேருந்தின்
பின் பக்கத்தில் லாரி மோதி இறந்த போன துயர
சம்பவத்தை கேள்விபட்டு நொந்து போய் இருந்தேன்...
இதில் லாரி மீதுதான் பிரச்சனை என்பது தெளிவாக தெரிகின்றது இருப்பினும் அதீத
வேகத்தினால் பேருந்து டிரைவரால் கண்ட்
ரோல் செய்ய முடியவில்லை என்பதே உண்மை... வேகமாக
வண்டி ஓட்டிக்கொண்டு இருக்கும் போது லாரி பின்னால் வந்துக்கொண்டே இருந்தால் யார்தான் என்ன செய்ய முடியும்...???
பொதுவாக சென்னை பேருந்துகளில் உள்ளே இருக்கும் கச கசப்பு தள்ளு
முள்ளுவுக்கு பயந்தே புட் போர்டு பயணங்கள்
மேற்க்கொண்டு இருக்கின்றேன்..
பட் கூட்டம் குறைவாக இருந்தால் படிக்கட்டில் நின்று பயணம் செய்தது
இல்லை. பேருந்தின் உள்ளே சென்று விடுவேன்...
சென்னையில் புட்போர்டு பயணங்கள் நிறைய செய்து இருக்கின்றேன்.. பீ க்
அவரில் புட் போர்டு அடிக்காமல் சென்றதே இல்லை...12பி பேருந்தில் புட் போர்டு அடிக்கும் போது, எப்படா வண்டி பஸ்ஸ்டாப்புல நிற்கும் இறங்கி
ரிலாக்ஸ் ஆகலாம் என்று யோசிக்கும் அளவுக்கு கை வலி பெண்டு நிமிர்த்தும்.... கால்
வைக்க இடம் இல்லாமல் அகதிகள் வாழ்க்கை போல
என் கால்கள் அலைபாய்ந்து சோர்ந்து
போய் சின்ன பிட்டில் கால் வைத்து பயணம்
செய்து இருக்கின்றேன்... பட் இந்த விபத்து மனதை ரொம்பவே பாதித்து விட்டது... அதுவும்
விபத்தில் இறந்து போன ஒரு பையனின் அப்பா ஒருவாரத்துக்கு முன் தான் சாலை விபத்தில்
அடிபட்டு இறந்து இருக்கின்றார்... தன் கண் எதிரே
தன் அண்ணன் இறந்து கிடப்பதை
பார்த்து ஒரு பள்ளி சிறுமி கதறி இருக்கின்றாள்....ரொம்பவே கொடுமை..
புட்போர்டு பயணங்கள் முக்கியமாக கல்லூரி பெண்கள் கவர அது ஒரு வழி என்று நினைக்கின்றார்கள்... வயசு
அப்படி.. தவறான கற்பிதங்கள் இங்கே என்னையும்
சேர்த்து யாரும் விதிவிலக்கில்லை...
நேற்று கூட படிக்கட்டில்
பயணம் செய்த கல்லூரி மாணவர்களை உள்ளே வரச்சொல்லியும் கேட்காமல்...டிக்கெட்
எடுக்காமல் படிக்கட்டில் பயணம் செய்துக்கொண்ட மாணவர்களை பேருந்தினுள்ளே வரச்சொல்லி டிக்கெட்
எடுக்க சொன்னதுக்கு... கண்டக்டர்
மண்டையை உடைத்து இருக்கின்றார்கள்...
5 நாட்களுக்கு முன் இதே போல பேருந்தில் பயணம் செய்த போது, மாணவர்கள் தகராறு செய்ய
போலிஸ் ஸ்டேஷனுக்கு பேருந்தை டிரைவர்
திருப்ப போலிசில் மாட்டிக்கொள்ளக்கூடாது என்ற பதட்டத்தில் போலிஸ் ஸ்டேஷன் உள்ளே
சென்ற பேருந்தில் இருந்து குதிக்க...
போலிஸ் ஸ்டேஷ்ன் கேட்டுக்கும் பஸ்சுக்கு இடையில் சிக்கி ஒரு மாணவன் உயிர்
இழந்து போனான்...
இளங்கன்று பயமறியாது... சரி உண்மையிலேயே உயிர் போவது கூடவா
அறியாது....???
ஒருவாரமாக எஸ்ரா உலக சினிமா குறித்து பேசும் பேருரைகளை மூன்றை மிஸ்
பண்ணி விட்டேன் கடைசி தினம் என்பதால் அலுவலகத்தில் இருந்து வேளச்சேரி டு தரமணி
சாலையில் விரைந்துக்கொண்டு இருந்தேன்....
அமெரிக்கன் பள்ளி அருகே
பறக்கு ரயில் பாதைக்கு கீழே ஒரு பெருங்கூட்டம்...சென்னை முழுவதும் தற்போது வியாபித்து
இருப்பது வட நாட்டு இளைஞர்களே.... ஒரு வடநாட்டு இளங்கன்று என்ன நினைத்த்தோ திடிர்
என்று சாலையை சம்பந்தம் இல்லாமல்
கடக்க... மிக வேகமாக ஸ்கூட்டியில்
வந்த பெண் திடிர் என்று எதிரில் பையனை பார்த்து சடன் பிரேக் போட்டு தன் வண்டியை கண்ட்ரோல் செய்ய முடியாமல் பக்கத்தில் இருக்கும் மீடியனில் இடித்து நிலை குலைந்து விழுந்து இருக்கின்றார்....
ஏதோ குடும்ப விழாவுக்கு
சென்று வந்து இருக்கின்றார்..
கையில் பெரிய பெரிய பவுன் வளையல்கள் இருக்கின்றன... அந்த வழியா சென்ற
வயதான தம்பதி விழுந்தவரை தூக்கி தண்ணி கொடுத்து இருக்கின்றார்கள்... நான் அவரை
அடையும் போது ரோட்டில் ரத்தம்
வழிந்து காய்ந்து இருந்தது..
நல்ல அடி.... மண்டையில் கல்
குத்தி ரத்தம் வந்து கொண்டு இருந்தது... அவருடைய சுடிதார் ஷாலை தலையில் கட்டி
ரத்தம் வருவதை தடுத்து இருந்தார்கள்... ஹெல்மட் போடவில்லை.....முட்டி கால்களில்
நிறைய சிராய்ப்புகள் தோல் பிய்ந்து
இருந்தது...நான் அங்கே செல்லும் போது ஆம்புலன்சுக்கு வெயிட் செய்துக்கொண்டு இருந்தது பொதுஜனம்...
அதில் ஒரு குருப் பதட்டத்தை பயண்படுத்தி நகைகளை ஆட்டையை போட
முயற்ச்சிதுக்கொண்டு இருக்க....வேறு ஒருவர் அவற்றை பாதுகாத்துக்கொண்டு
இருந்தார்... அந்த பெண்மணிக்கு நாற்ப்பத்தி ஐந்துவயது இருக்கும்... முன் பக்க பற்கள் உடைந்து ரத்தம்
வழிந்துக்கொண்டு இருந்தது..
என்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல வேண்டாம் என்று கதறினார்..
போலிஸ் வந்தது... தேவையற்ற கூட்டத்தை விரட்டியது..முதன் முதலில் அந்த பெண் மணிக்கு
தண்ணி கொடுத்த தம்பதியை விசாரித்து ஏதாவது நகை எடுத்தீர்களா என்று கேட்க...? அந்த தம்பதியினர் வெறுத்து போனார்கள்.. உதவி
செஞ்சதுக்கு இந்த கேள்வி அவசியம்தான் என்று வெறுப்பாய் சொன்னார்கள்... இதில்
உச்சம் என்னவென்றால் ஒரு போலிஸ் அவர்கள் இருவரையும் செல்போனில் படம்
எடுத்துக்கொண்டார்... அவர் செல்போன் மூலம் அவர்கள் குடும்பத்துக்கு தகவல் தெரிவித்தார்கள்... நகை எல்லாம் போட்டு இருந்த காரணத்தால் கூட்டத்தை போலிசார் விரட்டிக்கொண்டு இருந்தார்கள்...
தூரத்தில் ஆம்புலன்ஸ் வந்தது.. அந்த பெண்மணி மிக கனமாக இருந்தார்...
அவர் வைத்து இருக்கும் கைப்பையை இருக்க அனைத்துக்கொண்டார்.... அதனை ஒருவர் பிடிங்கி
போலிசிடம் கொடுக்க முயற்சிக்க .........அவர் அதற்கு அனுமதிக்க வில்லை...அதில் பணடேத அல்லது நகையோ இருந்து
இருக்கலாம்.... தெருவில் சென்ற பெண் ஒருவர்
அந்த பெண்மணியோடு ஆம்புலன்சில் ஏறி உட்கார்ந்து கொண்டார்...
விபத்து நடந்து பத்து நிமிடத்துக்கு மேல் இருக்கும்... ஆனால்
108 அம்புலன்ஸ் வரும் வரை வெயிட்
செய்துக்கொண்டு இருந்தார்கள்... ஆட்டோ பிடிக்கலாம் என்று நானும் வேறு ஒருவரும்
முயற்சித்தோம்...ஆட்டோவை நிறுத்தாமல் சென்றார்கள்.......அதற்குள் 108 வந்து சேர்ந்தது..
திடிர் என்று ரோட்டின் குறுக்கே ஒருவர் கடந்தால் யார்தான் என்ன செய்ய முடியும்... ஹெல்மட் போட்டு இருந்தால் தலையில் காயம் பட்டு இருப்பதை தவிர்த்து இருக்கலாம்...
முன்பெல்லாம் விபத்து நடத்த அடுத்த நிமிடம் ஆட்டோ பிடித்து
மருத்துவமனைக்கு அழைத்து சென்று விடுவார்கள்.. ஆனால் இப்போது 108 ஆம்புலன்ஸ் வரும் வரை வெயிட் செய்து கொண்டு
இருக்கின்றாகள்... ஆட்டோ டிரைவர்கள் பல பேர்
வண்டியை நிறுத்தி மருத்துவமனையில் அடிபட்டவரை சேர்த்த கதைகள் ஏராளம்...ஆனால் அவர்களும்
இப்போது மாறி விட்டார்கள்.... நான் போன இரண்டு நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வந்து அவரை அதில் ஏற்றி விட்டது மன நிம்மதியை கொடுத்தது....
ரொம்ப நேரமாக ஆம்புலன்சுக்கு வெயிட் செய்து அது வந்த உடன் அந்த பெண்மணியை ஏற்றி விட்ட நிம்மதியில் ஒரு வழிப்போக்கன் வண்டியை ஸ்டார்ட் செய்தார்...
சில மணித்துளிகளுக்கு முன் அந்த பெண்மணியின் கூந்தலை அலங்கரித்த ஹேர்கிளிப் சின்ன ரத்த தீற்றலுடன் நெளிந்து கிடந்தது....
ரொம்ப நேரமாக ஆம்புலன்சுக்கு வெயிட் செய்து அது வந்த உடன் அந்த பெண்மணியை ஏற்றி விட்ட நிம்மதியில் ஒரு வழிப்போக்கன் வண்டியை ஸ்டார்ட் செய்தார்...
சில மணித்துளிகளுக்கு முன் அந்த பெண்மணியின் கூந்தலை அலங்கரித்த ஹேர்கிளிப் சின்ன ரத்த தீற்றலுடன் நெளிந்து கிடந்தது....
அவர் சுகமாகி இருப்பார் என்று நம்புகின்றேன்...ஆசான் சுஜாதா எழுதிய கதை ஒன்று நினைவுக்கு வருகின்றது...
தியேட்டர் பாத்ரும்ல ஒன்னுக்கு போகும் போது.... ரெண்டு பேருக்கு செமை சண்டை...ஒருத்தன் வேகமா அடிச்சி மற்றவனின் மண்டையை உடைத்தான், ரத்தமா வந்துச்சி....
அப்புறம்...?
படம் போட்டுட்டாங்க... நான் படம் பார்க்க போயிட்டேன்...ஏறக்குறைய அதே மனநிலைதான்.... என்னுடையதும்...
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
நீங்கள் குறிப்பிட்ட பகுதிகளில் அதிகமான விபத்துக்கள் நடப்பது உண்மை ,கவனக்குறைவு,அதிவேகம்,தலைகவசம் போதாமை போன்ற காரணங்களால் நடைபெறுகிறது
ReplyDeletehttp://kaviyazhi.blogspot.com/2012/12/blog-post_6.html பாருகளேன் நானும் இதைத்தான் குறிப்பிட்டுளேன்
A couple helped them.But the world teased them and hurted their hearts. ipdiyaellam senja in road who will come and help?
ReplyDeleteA couple helped her. but the world how teased them? cha? who will come forward to help persons if others doubt on the helpers? really painfull.
ReplyDeleteபொதுவாய் இந்த விபத்துக்கு தலைகவசம் அணிந்து இருக்க வேண்டும்... ஆனால் பல விபத்துகள் தலைகவசம் அணிந்து இறந்தவர்கள் எண்ணிக்கை ஏராளம்... மற்ற சாலைவிதிகளையும் அரசு கடுமையாக பின் பற்ற வேண்டும்.. ஆ வுண்ணா... ஹெல்மட்டுல வந்து நிற்பது ஏற்புடையது அல்ல....
ReplyDeleteசிவா தேள் கொட்டும் இயல்புடையது... மனிதன் காப்பாற்றும் இயல்புடையவன்....
ReplyDeletemmm yes wat u said is correct
Deleteஇன்றைய காலத்தில் எல்லோருக்கும் அவசரம். 20 கிமீ வேகத்தில் செல்ல வேண்டிய தெருவில் கூட 60களில் தான் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறோம். அத்தோடு யாருக்கும் சாலை விதிகளை மதிக்கவேண்டும் என்கிற ஒரு எண்ணம் இல்லாது போய் விட்டது (என்னையும் சேர்த்து தான்). சாலை விதிகளை மதிப்பவர்கள் இன்றிய தேதியில் பைத்தியக்காரர்கள். சாலை விதிகளை மதிக்காததும் இன்றைய விபத்துக்களுக்கு காரணம். அவசரமா போக வேண்டியவர்கள் முன்கூட்டியே கிளம்புதல் என்பது இன்று வெகு அரிது. அத்துடன் அபராதம் கூட சொற்பமாகவே இருக்கிறது. அபராதம் அதிகமாக (குறைந்தபட்சமாக ஆயிரம் ரூபாய் வைத்து பாருங்கள்; போக போக தப்பு செய்வது குறைய ஆரம்பிக்கும்.) இருந்தால், ஒவ்வொரு முறை தவறு செய்யும் போதும் அந்த அபராதம் இரு மடங்கானால் தப்பு செய்வது கொஞ்சம் குறையும். அந்த அபராத பணத்தை வைத்து காவல்துறையை ஒழுங்காக செயல் பட வைத்தால் விபத்துக்களை குறைக்கலாம்.
ReplyDeleteநாமாக உருவாக்கிக் கொள்ளும் மிகமோசமான விபத்துகள் பஸ் படிக்கட்டிலும், ரெயில் படிக்கட்டிலும் தான். ஆனாலும் நானும் சென்னை பஸ்களில் மிகவும் அபாயகரமாக தொங்கிக்கொண்டு சென்றிருக்கிறேன். அப்ப எல்லாம் ஒரு பயமும் தெரியவில்லை. மும்பை சயான் ரயில் நிலையத்திலிருந்து வண்டி புறப்பட்டவுடன் மிகவும் நெருக்கமான ஒரு பாலம் வரும். ரயிலில் இடமில்லாமல் தொங்கியதால் அதில் ஒருமுறை மிக லேசாக இடித்து என் சட்டை கிழிந்து முதுகு தோலும் உறிந்தது. யாரொ ஒரு பயணி உள்ளே இழுத்ததால் அன்று தப்பித்தேன். அதே போல சென்னையில் 22c யில் கால் வைக்க இடமில்லாமல் மிக பயங்கரமாக தொங்கிக்கொண்டே ஒரு முறை பயணம் செய்திருக்கிறேன். அதே போல நீலகிரியில் ஒரு லாரியில் பின்னால தொங்கிக்கொண்டே சென்ற போது ஒரு திருப்பத்தில் விழும் நிலையில் தப்பித்தேன்.மிகப்பெரிய தவறுகள் தான். அப்ப தெரியலெ. இப்ப நினெச்சாலே பதட்டமாக இருக்கிறது.
ReplyDeleteஎவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் ஹெல்மட்... படிக்கட்டு பஸ்பயணம் என விபத்துக்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.
ReplyDeleteவிபத்துக்கள் கூடி வந்தாலும் இளைஞர்கள் வாகனத்தில் வேகமாக செல்வதையும் பஸ்ஸில் தொங்கி செல்வதையும் தவிர்ப்பதில்லை! நல்லதொரு பகிர்வு! நன்றி!
ReplyDeleteமனிதாபிமானம் மரித்து போய்விட்டது சுயநலமான உலகத்தில் நாம் எதாவது உதவி செய்யலாம் என்று நினைத்தால் கூட உதவிக்கு ஒருத்தர் கூட வரமாட்டார்கள் நாமும் நமது வேலையை பார்த்து விட்டு சென்று விடுகிறோம் அந்த நேரத்தில் என் மனசாட்சி கேட்கும் ஆயிரமாயிரம் கேள்விகளுக்கு பதில் ? எதாவது பிரச்சனை வருமோ என்று ஒதுங்கி கொள்கிறோம் இதுதான் நிதர்சனமான உண்மை
ReplyDeletejacke sir some times we are not heros we r zeros
Instead of ordering the govt. to increase buses and improve its conditions , court passed the order "Students travelling in Footboards can be dismissed by School"
ReplyDelete