குழந்தையை துன்புறுத்திய நார்வே தம்பதிகளுக்கு தண்டனை.? நமக்கு?



நார்வேயில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தம்பதிகள்
தன் பிள்ளையை அளவுக்கு மீறி கண்டித்த காரணத்தால்  தந்தைக்கு  18 மாதமும் தாயுக்கு 15 மாதம் என நிறைதண்டைனை வழங்கி  தீர்ப்பு கொடுத்து இருக்கின்றார்கள்... இந்த செய்தியை படித்த போது எனக்கு சிப்பு சிப்பாக வந்தது.. அப்படியே என்  தாய் தந்தையரை நினைத்து பார்த்தேன். உடனே எனது  பேஸ்புக்கில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டேன்.... அது கிழே....


குழந்தையை துன்புறுத்திய நார்வே தம்பதிக்கு 18 மாத சிறை..... எங்க அத்தா குழம்பு கரண்டியாலே என்னை பின்னி பெடலெடுக்கும்.. எங்க அப்பா சவுக்கு கட்டையை எடுத்தார்ன்னா பிஞ்சி பிஸ் பிஸ் ஆகற வரைக்கு கீழ போடவே மாட்டார்.... அப்படி எல்லாம் உதை வாங்கி சாங்கிப்போன கட்டை இந்த கட்டை... நார்வே சட்டப்படி பார்த்தா எங்க அப்பாவுக்கு மரணதண்டனையும், எங்க ஆத்தாளுக்கு ஆயுள்தண்டனையும்தான் கொடுத்து இருக்கனும்....ஆனா ஒன்னு அந்த பயம்தான் என்னை நிறைய தவறுகளை செய்ய விடாமல் தடுத்தது என்று சொல்லலாம்...


எனக்கு தெரிந்து  எங்கள் ஊரில் பிள்ளைகளை அடிக்காமல் கண்களால் மிரட்டி  பிள்ளைகளை  வளர்த்தவர்  நாதமுனி வாத்தியார் மாமாதான்... எங்க அப்பா எல்லாம் அடி இல்லாம என்னை வளர்த்ததே  இல்லை... எங்க  அக்கா பரமேஸ்வரி ,எதிர் வீட்டு வாத்தியார் மாமா வீட்டில்  சில்லு ஆட்டம் விளையாடிக்கொண்டு இருந்தாள்... அவள்  விளையாட்டை பார்க்க ரோட்டை கடக்கும் போது  வேகமாக வந்த சைக்கிள் என்  பற்களை உடைத்து ரத்தம் ஊற்றுக்கொண்டு இருந்தது...தகவல்  கேள்விப்பட்ட என் அப்பா வந்தார்...


பிள்ளைக்கு என்ன காயம் என்று பார்க்கவில்லை... தலைக்கீழே  தொங்க விட்டு என் பட்டக்சில்  மோண்டாட்ட ஓத்தது எங்காயவது அடக்கம் ஒடுக்கமா உட்கார்ந்து இருக்குதா பாரு என்று  என்னை அடித்தார்... பல் வலிக்கு அழுவதா? அல்லது சூத்தாம் பட்டையில் அடித்த அடிக்கு அழுவதா என்று  நான்கு நாட்கள் முன் இருந்த நாஞ்சில்  சம்பத் மனநிலையில் அழுது தொலைத்தேன்... 


 பைப்பில் தண்ணி  அடித்துக்கொண்டு இருந்தார்... என் அம்மா ஏதோ மொக்கையாக சொல்லி விட்டார் என்று அடித்து கொண்டு இருந்த பைப்பை புடுங்கி என்  அம்மாவை அடிக்க வந்தார்... அந்த அளவுக்கு கோபக்காரர்.


அம்மாவும்  லேசு பட்ட  ஆள் இல்லை... அம்மா எல்லோருக்கும் சாப்பாடு போட்டுக்கொண்டு இருந்தார்.... என்  அப்பாவை பெற்ற தாத்தா முனுசாமியும் எங்களுடன்  உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்... அவர் கை சூம்பி இருக்கும்...யாரோ செய்வினையோ செய்யப்பாட்டு வினையோ அவருக்கு வைத்து விட்டதாக சொல்க்கேள்வி அவ்வளவே..

நாங்கள் எல்லாம் தட்டில்  சாப்பிட்டால் அவர் குன்டானில் சாப்பிடுவார்.. வழித்து சாப்பிட அந்த எவர்சில்வர் குண்டான் ஏதுவாக இருக்கும்... நான் சாப்பிடும் போது மட்டும் அல்ல... எப்போதுமே வளவளவென பேசும் டைப்.. அம்மா   தாத்தாவுக்கு கை ஏன் சூம்பி போச்சி என்று  ஒரு அற்புதமான கேள்வியை கேட்டு தொலைத்தேன்... 


இன்னும் கொஞ்ச நேரத்தில் என்  அம்மா  பத்ரகாளியாக மாறப்போகின்றாள் என்று தெரியாமல் என் தட்டில் சாப்பாடு  போட்டதும் என் அம்மாவிடம் அந்த கேள்வியை கேட்டேன்.... அம்மா ஏன் தாத்தா கை  சூம்பி இருக்கின்றது.. ?

மாமனார் கை  ஏன் சூம்பி இருக்கின்றது என்று  பிள்ளையிடம் அவர் எதிரில்  எப்படி விளக்கி சொல்ல முடியும் ?என்று  சாப்பிடும்  போது பேசக்கூடாதுன்னு  சொல்லி இருக்கேன் இல்லை  பேசாம சாப்பிடு என்றார்.... என் நாக்கில் சனி உச்சத்தில்  கன்கா  டான்ஸ் ஆடிக்கொண்டு இருந்த நேரம்

 இரண்டாம் முறை சாம்பார் வாங்கும் போதும் அதே கேள்வியை கேட்டேன்... சாப்பிடும்  போது பேசாதேன்னு எத்தனை வாட்டி  சொல்லி இருக்கேன்... என்று கோபத்தோடு  சாப்பாடு போட்டார்.... நானும் வேறு வேறு கதைகள்  பேசி விட்டு திரும்ப அதே  கேள்விக்கு வந்து நின்றது அம்மாவுக்கு கேகாபத்தை   கிளறியது.....

திரும்ப  சாதம் போட்டு  ரசம் ஊற்றிய போது திரும்ப அந்த கேள்வியை அம்மாவிடம் கேட்டேன்... ஏன்  தாத்தாவின்  கை சூம்பி இருக்கின்றது என்று...? சாப்பிடும் போது பேசாதேன்னு சொன்னா கேட்கமாட்டியின்னு ரசம் ஊத்தின கரண்டியோட என் தலையில் ஒன்று வைத்தார்கள்.... ரத்தம் மைசூர் பிருந்தாவன் நீர் ஊற்று போல பீரிட்டு கிளம்பியது....  ரத்தம் எனக்கு முகம் எல்லாம் வழிந்தது,  என் பாட்டி  சத்யா காளியாத்தா மாரியாத்தா என் பேரனை என் மக  கொல்லறாளே என்று கத்தி  ஊரைக்கூட்டினாள்.....

 நார்வே  போலிசாக இருந்து இருந்தால் என் அம்மா மேல் கொலை வழக்கு பதித்து ஆயுள் தண்டைனை வழங்கி இருப்பார்கள். என் தலையில் அடித்து ரத்தம் வழிந்த போது எப்ப இவளக்கு  வேதி வந்து தூக்கிட்டு போவாங்க... பேசனதுக்கே இப்படி கொலையா கொல்லறாளே என்று நினைத்தேன்...




அம்மாவுக்கு சினிமா என்றால் கொள்ளை பிரியம்.... எங்களை பக்கத்து வீட்டில் விட்டு விட்டு  என் கடைசி தங்கை சுதாவை மட்டும் அழைத்துக்கொண்டு அம்மா   ஜெகதாம்பிகா டூரீங்  டாக்கிசுக்கு படம் பார்க்க சென்று விட்டார்... பக்கத்து வீட்டில் எல்லோரும் எவ்வளவு நேரம்தான் விளையாடுவது  என் தங்கைகளோடு வெளியே வந்தேன்... ஒரு பெரிய தவளை அப்படி ஒரு பெரிய தவளையை  நாங்கள் பார்த்ததே இல்லை... அந்த  தவளையை கொன்று விட்டோம்... அதன் பிறகு அந்த இறந்த  தவளையை  கயிற்றை  கட்டி  ரோட்டுக்கு  இழுத்து  சென்றோம்....மிக கேவலமான வேலையை   என் தங்கை மற்றும் பக்கத்து வீட்டு பசங்களோடு சேர்ந்து   செய்தோம்... அதன் விவரிப்பு இங்கே தேவையில்லை...   சினிமா முடிந்து வந்த  என் அம்மா இதை பார்த்து விட்டார்....


வீட்டுக்கு அனைவரையும் அழைத்தார்.... நைச்சயமாக பேசி பின் பக்கம் இரண்டு கைகளை பிடித்து சட்டென  ரிப்பனால்...கையை கட்டினார்... திமிரினேன்.. அம்மாவின் கோபம் பலமாக மாறியாது.. என் அம்மா சாந்த சொருபி... ஆனால் கோபம் வந்தால் அவள் முகத்தை பார்க்கவே முடியாது அப்படி  ஒரு உக்கிரம் அவள் முகத்தில் இருக்கும். என்  தங்கைகள்   அம்மாவின் செய்கையை பார்த்து அழ ஆரம்பித்தார்கள்....


அம்மா சுக்கை எடுத்து நன்றாக தண்ணீர் விட்டு இழைத்தாள்...  என் கண்ணில் அப்படியே அப்பினாள்....  என் தங்கைகள் கண்ணிலும் அப்படியே.... எல்லோரும் கதற ஆரம்பித்தோம்... அம்மா மசியவேயில்லை....  சரியாக இரவு பத்து மணிக்கு சக்கு கண்ணுக்கு  போட்டு கதற வைக்கு ஆப்பரேஷன் நடந்தது... எங்கள் கதறல் சத்தம்  கேட்டு அக்கத்து பக்கத்து வீடுகளில் இருக்கும் பெரியவர்கள் எல்லோரும்  வந்து  எங்கள் மீதான தாக்குதடில உடனே நிறுத்த போராடினார்கள்.. என் அத்தா ராஜபக்ஷே போல கல் நெஞ்சத்துடன் கதவை சாத்தி எங்கள் கதறலை வேடிக்கை பார்த்தார்...அரை  மணிநேரம்  அழுது இனி கண்ணில் தண்ணி இல்லை என்று அறிந்து  எங்கள்  கண்களை கழுவி விட்டார்... என் வாழ்நாளில் மறக்க முடியாத நோவு என்று அதை சொல்லலாம். இனி அப்படி செய்வீர்களா ? என்றார் செய்ய மாட்டோம் என்று சொன்னோம்....


ஓனான்  கயிற்றில் சுருக்கு போட்டு பரலோகம் அனுப்புவது.... தும்பி வாலில் துடப்ப குச்சி சொருகி அனுப்புவது எல்லாம்   அடிப்படை மனித மனோபாவம்... வேட்டை அனுபவம்தான் மெல்ல மாறி ஓனான் வேட்டையாக மாறியது என்பேன்... அவன் அவன் ரேஞ்சிக்கு வேட்டை ஆடுகின்றான்... இதுதான் மனித இயல்பு....சுக்கு  இழைத்து  போட்டு 5 பிள்ளைகளையும்  நார்வே  நாட்டில் கதற வைத்து இருந்தால்....  நார்வே சட்டப்படி  என் அம்மாவை நிற்க  வைத்தே சாகாடித்து விடுவார்கள்..


அந்த சுக்கு அப்பரேஷனுக்கு அப்புறம்...  எனக்கு  பாதிப்பு கொடுக்காதவரை எ ந்த உயிருக்கு நான் தீங்கு இழைத்தது இல்லை... ரோட்டில் மழைகாலத்தில் மெல்ல நகர்ந்து செல்லும் நத்தைக்கு மேல் ஏற்றாமல் வளைந்து அதனை செதப்படுத்தாமல் வாகனத்தில் கடக்க முடிகின்றது... தவளை எம்பி குதித்து சாலைக்கடக்கையில் அதற்கு  தீங்கு இல்லாமல் நகர முடிகின்றது...

நார்வே சட்டங்கள்  அவர்கள் நாட்டுக்கு எதுவாக இருக்கலாம்..ஆனால் நம் நாட்டில்  அது போல ஒரு சட்டம் மட்டும் இருக்குமேயானால் எல்லா அப்பா அம்மாவும் ஜெயிலில்தான்  இருக்க நேரிடும்... இது போல அடி உதைக்கு பயந்து திருட்டு ரயில்  ஏறி ஊர் விட்டு ஊர் போய் பாதை மாறிய பிள்ளைகள் கதைகள் ஏராளம்....அப்பா கொடுக்கும் அடிக்கு பயந்து சின்ன தப்புக்கு எல்லாம் தற்கொலை செய்துக்கொண்டு உயிர் மாய்த்து கொண்ட பிள்ளைகள் கதைகள் ஏராளம்.. சரி தப்பு என்று வாதிட முடியவில்லை...ஆனால் முன்பு போல பிள்ளைகளை வெறித்தனமாக அடிக்கு பெற்றோர் இந்த தலைமுறையில் குறைவு என்பேன்...



 என் அம்மா  நடத்திய சுக்கு அப்பரேஷன் எப்போதும் என் மனத்திரையில்.. நாங்க குடியிருந்த  பழைய வீட்டில்  பெரிய பெரிய  பல்லிகள் எங்களோடு வசித்தன...  என் மனைவிக்கு பல்லி என்றால் பயம்... அதனை துரத்துங்கள் என்றாள்.. ஒன்று அதை அடித்து  சாகடித்து வெளியே  போடவேண்டும்..ஏய் பல்லி என் மனைவிக்கு உன்னைக்கண்டால் பயம் வெளியே போ என்று  சொன்னால்  வெளியே போய்விடுமா? என்ன? நான்  ஒரு பிட்டை என் மனைவியிடத்தில் போட்டேன்....வீடு என்பது நாம் வாழும் இடம் மட்டுமல்ல... நம்மோடு  சேர்ந்து சின்ன சின்ன உயிர்கள் வாழும்  இடம்தான் நம் வீடு என்றேன்.. சக்கு ஆப்பரேஷன் எபெக்ட் என்பது அவளுக்கு தெரியநியாமில்லை. 



பிரியங்க்ளுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

22 comments:

  1. அருமையான பதிவு. என் சிறு வயது நினைவுகளை கிளறி விட்டீர்கள். நன்றி.

    ReplyDelete
  2. நல்ல பதிவு, அவர்களுக்கு தண்டனை அவசியம்தான்.

    ReplyDelete
  3. வீடு என்பது நாம் வாழும் இடம் மட்டுமல்ல... நம்மோடு சேர்ந்து சின்ன சின்ன உயிர்கள் வாழும் இடம்தான் நம் வீடு .... Arumai..........

    ReplyDelete
  4. சுக்கு ஆப்பரேஷன் எபெக்ட் என்பது அவளுக்கு தெரியநியாமில்லை. ஆனால் இப்ப தெரிந்திருக்கும் அண்ணிக்கு ஹா ஹா ஹா சூப்பர்

    ReplyDelete
  5. சுக்கு ஆப்பரேஷன் எபெக்ட் என்பது அவளுக்கு தெரியநியாமில்லை. ஆனால் இப்ப தெரிந்திருக்கும் அண்ணிக்கு ஹா ஹா ஹா சூப்பர்

    ReplyDelete
  6. சூப்பர் இடுகை! இந்தச் செய்தியை டிவியில் வாசித்தபோது எனக்கும் சிரிப்பாகவும், கொஞ்சம் எரிச்சலாகவும் இருந்தது. ரூல் தடியிலிருந்து இடுப்பு பெல்ட்டு வரைக்கும் எங்கப்பா உபயோகப்படுத்தின ஆயுதங்களெல்லாம் அப்படியே கண்முன்னாடி வந்து நின்னுச்சு! :-)

    ReplyDelete
  7. Anna super...

    chinna pillaya theruvula velayadivittu vandathu, pattikitta adi vangunathu ellam kannu munnadi varuthunna.

    Unga elzhuthula ithuthan special.

    -Kavitha Saran

    ReplyDelete
  8. அருமையான பதிவு-
    தங்களது குழந்தைகளை பொறுமையாக கையாள தெரியாதவர்கள் தான் அவர்களை அடித்து வளர்ப்பார்கள். குழந்தைகளை அடிப்பது என்பது தற்காலிகமாக ஏதாவது நிவாரணம் கொடுக்கலாம். ஆனால் நிச்சயமாக அது நிரந்தர தீர்வை அளிக்காது.

    ReplyDelete
  9. அருமையான பதிவு-
    தங்களது குழந்தைகளை பொறுமையாக கையாள தெரியாதவர்கள் தான் அவர்களை அடித்து வளர்ப்பார்கள். குழந்தைகளை அடிப்பது என்பது தற்காலிகமாக ஏதாவது நிவாரணம் கொடுக்கலாம். ஆனால் நிச்சயமாக அது நிரந்தர தீர்வை அளிக்காது.

    ReplyDelete
  10. நல்ல பகிர்வு ...........

    ////ரசம் ஊத்தின கரண்டியோட என் தலையில் ஒன்று வைத்தார்கள்.... ரத்தம் மைசூர் பிருந்தாவன் நீர் ஊற்று போல பீரிட்டு கிளம்பியது.... ////

    ஜாக்கிக்கு அப்பவே தலையில் முடி கிடையாதா ........(சும்மா ஒரு டவுட்டு )

    ReplyDelete
  11. அருமையான நினைவு கூறல்.

    ReplyDelete
  12. நானும் என் மகனை அவன் 2-வது படிக்கற வரை உங்க அம்மாவைப் போல அடித்துக்கொண்டிருந்தவள்தான். அடிச்சுட்டு நானும் சேர்ந்து அழுவேன். அவனை அடிக்கணும்னு தோணும்போதெல்லாம் சமையலறையில் நானே வரைஞ்சு வச்சிருந்த X மார்க்கை பார்த்து அடிக்காம இருந்துடுவேன்.(ஏதோ ஒரு புத்தகத்திலே படிச்சது)அதுக்கப்புறம் இதுவரைக்கும் அடிச்சதேயில்லை. நல்லவனா, அன்பானவனா பொறுப்பானவனாத்தான் வளந்திருக்கான். Jose Robinson கூற்று சரியானதே.

    ReplyDelete
    Replies
    1. அதுக்கப்புறம் இதுவரைக்கும் அடிச்சதேயில்லை

      like this...

      Delete
  13. hi,
    it is a nice article to read. but i got some different opinion. i could be wrong or differ from ur opinion.

    no one hits their children in norway. it is an offence. when u r in Norway u have to obey Norwegian law. for an example if u bring some drugs(weed which is legal in many countries) to singapore it is death penalty. u cant ask y. it is their law. obey the rules according to the country. this is 21st century as well. what is the point hitting a child.

    shamimanvar said he never hit his child after his 2nd standard. he changed. now he kno the way to treat him. punishing and hitting are completely different.

    ReplyDelete
  14. Punishing Children, is not parent's or teacher's right.. India is not a country where human rights is respected in any shape of form, if Human rights had any say , we would have not had Caste system continuing till date.. its the same chauvinistic approach we have towards women, children and people in other levels of society. No country can become a super power or developed country by just economics, its wholesome development , which is required.

    ReplyDelete
  15. Punishing Children, is not parent's or teacher's right.. India is not a country where human rights is respected in any shape of form, if Human rights had any say , we would have not had Caste system continuing till date.. its the same chauvinistic approach we have towards women, children and people in other levels of society. No country can become a super power or developed country by just economics, its wholesome development , which is required. atleast nowary incident has created an awareness.

    ReplyDelete
  16. பதிவு நன்றாக வந்திருக்கிறது. கருத்து என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    குழந்தை வளர்ப்பு கலாச்சாரத்தைப்பொறுத்தே அமையும். மேலும், வீட்டுக்கு வீடு மாறும்.
    வாழுமிடத்தைப்பொறுத்தும் மாறும். பொருளாதார வசதியைப்பொறுத்தும் மாறும்.

    ஏழைக்குழந்தைகள்; சேரிக்குழந்தைகள் பெற்றோர்களால் மிகவும் துன்புறுத்தப்படுவார்கள்.
    பெற்றோர்களிடையே அமைதியில்லாத வாழ்க்கையில் துன்புறுத்தப்படுவார்கள். பெற்றோர்களின் கலாச்சாரம் எப்படியோ - அதாவது அனைவரிடமும் அன்பாக இரு எனற் போதனையை நம்புவோரால் வளர்க்கப்படும்
    குழந்தைகள் அன்பாகவே வளர்க்கப்படுவார்கள்.

    நம் நாட்டுப் பொதுக்கலாச்சாரத்தில், உங்கள் பெற்றோர் வளர்த்தது ஒன்றும் வியப்பனறு. கலாச்சாரமே தவறு செய்யும் போது பெற்றொர் ஏன் செய்ய மாட்டார்கள்?

    நார்வேயின் கலாச்சாரம் நம்மை விட உயர்வு. கண்டிப்பாக.

    இப்படிப்பட்ட எதிர்மறைக்கலாச்சாரத்திலும் தங்கள் குழந்தைகளை அடிக்காமல் வளர்ப்பவர்களையும் பார்த்திருக்கிறேன். அதற்குக்காரணம்; அன்பின் அரவணைப்பில் வளரும் குழந்தைகள் கண்டிப்பாக அதே அன்பை தன் குழந்தைகளிடமும் காட்டுவார்கள் என்ற நம்பிக்கையே. நீங்கள் அடிக்கப்பட்டுப் புரிந்ததை - பதிவில் கடைசி வரியில் - அவர்கள் அடிபடாமலேயே புரிந்துவிடுவார்கள் உங்களுக்கு முன்பாகவே.

    ReplyDelete
  17. சுக்கு தண்டனை.... அட இப்படியும் ஒன்னு இருக்கா?!!

    ReplyDelete
  18. அருமை! ஆனால் இந்தத் தலைமுறையில அடித்து வளர்க்கரது கொஞ்சம் குறைஞ்சு இருக்குனு நினைக்கிறேன்!

    ReplyDelete
  19. கொஞ்சம் நாளைக்கு முன் 2002 ல் நார்வே போய் வந்த வைரமுத்து குமுதத்தில் எழுதியது ஞாபகம் வருகிறது. உஙகள் தகப்பனார் போன்ற ஒருவர் அங்கு அப்போது தன் மகனை அடித்ததால் பக்கத்து வீட்டு ஆசாமி போலீஸில் புகார் செய்து, போலிஸ் அந்தத் தகப்பனை அழைத்துக் கொண்டு போய் மனிதாபிமானம் பற்றி பாடம் நடத்தியதாகவும், வெளியே வந்ததும் தகப்பனைப் பார்த்து மகன், “இனிமே அடிச்சே! போலிஸுக்கு போய்டுவேன்” என்று நக்கல் பண்ணியதால் கடுப்பான தகப்பன் டிராவல் ஏஜென்சிக்கு சொல்லி இரண்டு ரிட்டன் டிக்கட் சென்னைக்கு புக் பண்ணி, “மகனே வா! சொந்தங்களை பார்த்துட்டு வருவோம்” என்று கிளம்பி, சென்னை வந்து லாட்ஜில் ரூம் போட்டு கதவை சாத்தி, மகனை சினம் தீர அடித்து நொறுக்கி, “இனிமே நான் அடிச்சா என்னமாவது பன்னினே! தமிழ்னாட்டுக்கு ரிட்டன் டிக்கட் போட்டு, ரூம் போட்டு அடிப்பேன்” என்று அடக்கி வைத்த கதையை சொன்னார். குறிப்பிட்ட வயது வரை அடித்துத்தான் வளர்க்க வேண்டும். இல்லையேல் தீவிரவாதம்தான் வளரும்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner