SANDWICH & NON VEG-சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (09/12/2012)ஞாயிறு

ஆல்பம்...

வயதுக்கு வந்த பெண் பச்சை மட்டை பின்னே சிறைபட்டு இருப்பது போல சில மாதங்களாக  எல்ஐசியும்  ,எல்ஐசி வாசலில் இருக்கும் எல்ஐசி  பேருந்து நிறுத்தமும், மெட்ரோ ரயில் பணிக்காக மறைத்து வைத்து இருந்தார்கள்....
சென்னை வாசிகள் மட்டும் அல்லாமல் பல்லாயிரக்கணக்காண மக்கள் கால்  பதித்த இடத்தை சுரங்கம்  தோண்ட அந்த இடத்தையே மூடி  வைத்து இருந்தார்கள்...நேற்று அந்த பக்கம் போக நேர்ந்தது... அப்படியே அப்போசிட் பக்கம் ஜாகையை மாற்றி இருக்கின்றார்கள் மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர். அதனால் ரொம்ப நாளைக்கு பிறகு எல்ஐசி பேருந்து நிறுத்ததில் கால் பதிக்க முடிந்தது...

=============================
தன் வாழ்நாளில் இப்படி எல்லாம் தன் எதிரில் எருமை மாடு போல இயந்திரங்கள் வந்து இருங்கும் என்று மவுண்ட் ரோட்டில் இருக்கும் எந்த கட்டிடமும் நினைத்துக்கூட பார்த்து இருக்காது.. ராட்சத இயந்திரங்கள் மவுண்ட்ரோட்டுக்கு அடியில்  கொத்துக்கறி போட்ட களைப்பில் நேற்று இரவு தூங்கிக்கொண்டு இருந்தன..
==========
மிக்சர்...
கலைஞர் பாலங்கள் கட்டிய போது குய்யயோ முறையோ என்று கத்தி தீர்த்தார்கள்.... தேவையில்லாத  பாலம் என்று உதாசினப்படுத்தி பேசினார்கள்..  அப்படி பேசியவர்கள் இன்று அந்த பாலத்தை யூஸ் செய்துக்கொண்டு இருக்கின்றார்கள்.. அடையாறு கேன்சர் ஆஸ்பிட்டல் எதிரில் பாலம் தேவையில்லை என்றார்கள்.. பாலம் கட்டியும் இவ்வளவு  டிராபிக்..... 

முக்கியமாக காலை  ,மாலை ஐடி கம்பெனிகளின் ஷிப்ட் முடிந்து வரும் போது பயங்கர   நெரிசல்... பாலம் கட்டியே, இவ்வளவு டிராபிக் என்றால் ?பாலம் கட்ட வில்லை என்றால்  யோசித்துப்பாருங்கள்.... சார்...கமிஷன்  வாங்கிதான் கட்டி இருப்பாங்க... தேன் எடுத்தவன் எவன் பொறங்கையை நக்காம இருந்து இருக்கான்... சரி அதுக்கு அப்புறம்  நேர்மையானவங்களதானே நாம் ஆட்சியில ஏத்தி  உட்கார வச்சி இருக்கோம்... கமிஷன் லஞ்சலாவன்யம் இல்லாம இன்னும் பாலங்கள் கட்டி இருக்கலாமே.,..?  இன்னும் வருடங்கள் இருக்கின்றது  அல்லவா? பொருத்து இருந்து பார்ப்போம்... போரூர் பாலம் எப்ப முடியும்? வேளச்சேரி தரமணி சாலை பணிகள் இன்னும்  நிறைவடையாமல் இருக்கின்றன... எப்போது முடியும்? என்று  தினம் தினம் சபித்து வேலைக்கு சென்று கொண்டுதான் இருக்கின்றார்கள்... அட கமிஷன்  வாங்கிகிட்டாவது வேலையை முடிங்கய்யா...
============
தமிழகம் வளர்ச்சி பாதையில் பீடு நடை போட்டுக்கொண்டு இருக்கும் இந்த சந்தோஷ வேளையில்... அதை கொண்டாடும் விதமாக எம்ஜிஆர் சமாதியில் இரட்டை அலை சின்னத்தை பொறித்து விட்டார்கள்... நேற்று அந்த பக்கம் கிராஸ் செய்த போது பார்த்தேன்... கடற்காற்று தாக்கா வண்ணம்   இலையில் ஓட்டை போட்டு இருக்கின்றார்கள்.... மக்கள் ரசிக்கும் விதமாக  மக்களுக்கு பயனுள்ள விதமாக இந்த போர்க்கால நடவடிக்கை நடைபெற்றுவருகின்றது...?
==========
 போன முறை ஆட்சிக்கு வந்த போது தலைமை செயலகத்தில் இடம் போதவில்லை என்று சொல்லி ராணி மேரி கல்லூரி மற்றும் அண்ணா யுனிவர்சிட்டி பின்னாடி பக்கம் புதிய தலைமைசெயலம் கட்ட போகின்றார்கள் என்றார்கள்.... அடிக்கல்  நாட்டினார்கள்... அப்புறம் ஒஎம்ஆரில் புதிய தலைமை செயலகம் கட்டப்போகின்றார்கள் என்றார்கள்... எதுவும் நடக்கவில்லை..  

அடுத்து பதவி ஏற்ற திமுக அரசு 1500 கோடி செலவு செய்து பதிய தலைமைசெயலகம்  கட்டினார்கள்...கடல் கடந்து வேலை செய்யும் நண்பர்கள் திடிர் என்று கட்டிட வல்லுனர்கள் ஆக மாறி  எண்ணெய் சட்டி போல இருக்கின்றது என்றார்கள்...ஆட்சி மாற்றம் நடந்து, கலைஞர் கட்டிய ஒரே காரணத்துக்காக உதாசீனப்படுத்த பட்டது.... ஒரு கட்டத்தில்  பாம்புகளில் கூடாரமாக புதியதலைமைசெயலகம் மாறிப்போனது ....ஆட்சி மாற்றம் வேண்டும் என்று அலறிய ஆனந்த விகடன் பாம்புகளின் கூடாரமானது என்று  முகாரி பாடியது...தற்போது தலைமைசெயலகத்தில் உள்ளே இருக்கும் 200 வருட பழமையான மரங்கள்  பட்டு போய் இருக்கின்றனவாம்...நிபுனர்கள்  மரம் பட்டு போக காரணம் யாரோ  அசிட் ஊற்றி இருக்கின்றார்கள் என்று சொல்லுகின்றார்கள்... 

சரி அது வல்ல விஷயம்... வெளிநாட்டு  நண்பர்கள் சர்ட்டிபிகேட் கொடுத்த எண்ணெய்  சட்டியில் நடுப்பகுதியில் நேற்று இரவு   விளக்கு எரிந்துக்கொண்டு இருந்தது.... இதுநாள் வரை புதிய தலைமைசெயலகத்தில் விளக்கு எரிந்து  நான் பார்த்ததே இல்லை...

===============
 தமிழகத்தின் தலைநகரில் சாலைகள் போட துவங்கி இருக்கின்றார்கள்... சாலை போட வேண்டும் என்று  டென்டர் விட்டு அதனை   செயல்படுத்திய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி... முக்கியமாக அம்பாள் நகரில் இருந்து ஜெயாடிவி வழியாக காசி தியேட்டர் வரை  ரோட்டில் செல்லவே ஆசையாக இருக்கின்றது... சாலை ரொம்ப பெரிதாக   மாறி இருக்கின்றது...நெடுஞ்சாலை  துறைக்கும் அம்மாவுக்கும் நன்றிகள்.

===============
சென்னை ஓஎம்ஆரில் இருக்கும்  கானத்தூர் கிட்ட எப்படியும் வருஷத்துல ஒரு 20 பேராவது  விபத்துல சாவாங்க... அதுவா நடக்கறது ஒன்னு.. நாம்மல எற்ப்படுத்தறது  ஒன்று..... நேற்று 5 பேர் உயிரிழப்புக்கு காரணம் போலிசார்...
ஏவனாவது லாரியை என்எச் ரோட்டுல  நடு ரோடுடுல  நிறுத்தி வண்டியை செக் பண்ண சொல்வானுங்களா-? நம்ம ஆளுங்க செய்வாங்க... நேற்று டிப்பர் லாரியை  நடு ரோட்டில் நிறுத்தி வண்டியை செக் செய்து இருக்கின்றார்கள்... நடுரோட்டில் நின்ற  லாரி மீது பின்னால் வந்த கார் மோதி ஸ்பாட்டுலேயே 5 பேர் இறந்து போய் இருக்கின்றார்கள்... எந்த  டிப்பர் லாரி பின்னாலேயும் ரிப்ளக்டர் ஸ்டிக்கர் ஒட்டற பழக்கமே இல்லை....லோடு அடிச்சி அடிச்சி பின்னாடி  பக்கம் எந்த வண்டியோட ரிஜிஸ்டர் நம்பரும் கண்ணுக்கு தெரியறதே இல்லை...

முன்ன எல்லாம் சென்னை குப்பை லாரிங்க நம்பர் குப்பை அழுக்கால மறைஞ்சி போய் இருக்கும்.... இப்ப எல்லாம் டிப்பர் லாரிங்க நம்பர் கூட லோடு அடிச்சி லோடு அடிச்சி மறைஞ்சி போய் இருக்கு.. ஏதாவது விபத்து ஏற்ப்பட்டாலும் எஸ் ஆயிடலாம் இல்லையா?  டிப்பர் லாரியை ஓரம் நிறுத்தி செக் செய்யனும்ன்ற அடிப்படை  அறிவும் எதுவும் இல்லை.... இதற்கு முன்னும் இது போல லாரியை செக் பண்ணறேன்னு வண்டியை போலிஸ் கைகாட்ட  லாரி டிரைவர் சடன் பிரேக் போட ,பின்னாடி வந்த வண்டி திடிர் பிரேக்கை எதிர்பார்க்காம ஒரு குடும்பமே அழிந்து போனது... இது எங்க நடந்துச்சி தெரியுமா? ரெட்டேரிக்கிட்ட...காரணம் போலிஸ் கையை  காட்டினா பயம்... லாரியை கொஞ்சம் தள்ளி ஓரமா நிறுத்தினா.. ஓத்தா அப்படியே போயிடலாம்ன்னு பார்த்தியா.... என்ற வசவுகளை சந்திக்க நேரிடும் என்று பிரேக் போட்ட குத்தம் ஒரு குடும்பம் அழிந்து போனது,....


 பத்திரிக்கை செய்தி நடுரோட்டில் டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்த போது என்று செய்தி வெளியிட்டு இருக்கின்றது.... அப்படி நடக்கவில்லை என்றால் பிரச்சனை இல்லை.... அப்படி நடந்து இருந்தால் நடு ரோட்டில் நிறுத்தி லாரி சோதனை செய்த பிரகஸ்பதி போலிஸ்காரரை சஸ்பெண்ட் செய்வதுதான் நியாயம்...நேற்றைய விபத்தில்  இறந்து போனது ஒரு சப்இண்ஸ்பெக்டரும் அடக்கம்... இது போன்ற குறைகளை எல்லாம் சரி செய்து விட்டு ஹெல்மெட்போடாதவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் அதை விட்டு விட்டு எதுக்கெடுத்தாலும் ஹெல்மெட் என்று பழைய புராணம் பாடிக்கொண்டு..... எல்லா சாலைவிதிகளையும்   சரி செய்து விட்டு யாரைவது  ஹெல்மெட் போடவில்லை என்றால்  கொலைக்குற்றவாளி போல என்கவுண்டர் கூட செய்து கொள்ளுங்கள்...
=================
ராமதாஸ் இந்தமுறை ஆட்சியை பிடித்தே தீருவேன் என்று கங்கனம் கட்டிக்கொண்டு இருப்பது தெரிந்த கதைதான் அவர் நம்பிக்கை  அவருக்கு........கலைஞர் ஆட்சியில் வன்னிய சமுகத்துக்கு இடஒதுக்கீடு பெற்று விட்டு ,வன்னிய சமுகத்துக்கு கலைஞர் துரோகம் செய்தார் என்று சொல்வது ஏற்ப்புடையதல்ல...ஜாதி மேட்டரில் இதுநாள் வரை கட்டிக்காத்த பெயரை கெடுத்துக்கொண்டு விட்டார் என்று பலர் சொல்வதில்  உண்மை இல்லாமல் இல்லை......விஜயகாந்த் தனியாக நின்றார்... ஆனால் ராமதாஸ் கூட்டனி இல்லாமல் தனித்து தன் கட்சியை தேர்தலில்  நிறுத்தியதே இல்லை... ஆனால் திமுககழகம் தனித்து நிற்குமா? என்று கேள்வி எழுப்புகின்றார்.... நகைப்பாய் இருக்கின்றது...
==================




டிரைலரில் அசத்துவது என்பது இப்போது பேஷனாகி விட்டது… நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்து டிரைலருக்கு பிறகு என்னை அசத்திய டைட்டில் மற்றும் டிரைலர் இது… படத்தின் பெயர் யாருடா மகேஷ்…. மணிஜி இந்த படத்து டிரைவரை கூகுள் பிளஸ்சில் பகிர்ந்து ஜாக்கி இதுக்கு டயலாக் நீயா என்றார்…என்னை போல ஏதோ ஒரு கலைஞன் இந்த படத்துக்கு டயலாக் எழுதி இருக்கின்றார்… வாழ்த்துகள்..யாரோ கேமராமேன் ரத்னவேலிடம் வாய்ப்பு கேட்டு வெறுத்துப்போன அசிஸ்டன்ட் கேமராமேன் டயலாக் ரைட்டருக்கு பிரண்டு போல… வருத்து எடுத்து இருக்கின்றார்கள்..
டிரைலரில் என்னை கவர்ந்த டயலாக்…
இவர்தான் ரத்னவேலு…. ஷாட்டா ராண்டின்னு கூப்பிடுவோம்.
அப்ப குழந்தைவேலுன்னா ஷாட்டா…கு…..ன்னு கூப்பிடுவிங்களா?
====
ஏன் மச்சி ஒய் ஓ யூ டி எச் மட்டும் யூத்துன்னு(youth) சொல்லறாங்க,.. எஸ் ஓ யூடி எச் மட்டும் சூத்…..ன்னு சொல்லாம சவுத்துன்னு(south) சொல்லறாங்க..
அசத்திட்டாங்க டிரைலரில்… படம் பார்க்க இப்பவே வெயிட்டிங்க.. டிரைலருக்கா இயக்குனர் மதன் குமாருக்கு வாழ்த்துகள்.dont miss it


============================


நான்வெஜ்...





=============
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

4 comments:

  1. //அடையாறு கேன்சர் ஆஸ்பிட்டல் எதிரில் பாலம் தேவையில்லை என்றார்கள்.. பாலம் கட்டியும் இவ்வளவு டிராபிக்.....
    //
    பாலம் கட்டுவதால் ஒன்று குறுக்கே ரயில் பாதை இருந்தால் அதன் மேலே செல்வதற்காக இருக்க வேண்டும். ஆறு சென்றால் அதன் குறுக்கே செல்வதற்காக இருக்க வேண்டும். இல்லையேல் சந்திப்புகளை நெறிப்படுத்த இருக்க வேண்டும். இல்லையேல் இரண்டு லேன் இருக்கும் இடத்தில் உயர்த்தி கட்டினால் அந்த பாலத்தின் மீது நான்கு லேனோ அல்லது அதற்க்கு மேலோ இருக்க வேண்டும். இது எதுவுமே இல்லாமல் இரண்டு லேன் இருக்கும் இடத்தில் பாலம் கட்டி உயர்த்தி அதே இரண்டு லேன் போடுவதால் என்ன பயன்? இது போன்ற பாலங்கள் எல்லாமே வேஸ்ட் என்பது என் கருத்து!

    ReplyDelete
  2. How can u turn to tambaram route without affecting traffic, if there is no over bridge

    ReplyDelete
  3. தலையை நோக்கி எல்லோரும் நகரணும்னே அதுக்கு தலைநகரம் என்று பேர் வச்சுருப்பான்களோ? தமிழ்நாட்டுல தலைநகர் தவிர்த்து எல்லா ஊரிலேருந்தும் தலைநகருக்கு மக்கள் எல்லோரும் கூட்டம் கூட்டமா (ஒட்டுமொத்தமா ஊரை காலி பண்ணிட்டு) நகர்ந்து வந்தாலாவது மின்சாரம், நல்ல சாலைகள், நல்ல குடிநீர் என்று எல்லா அடிப்படை வசதியும் கிடைக்குமான்னு பாக்கணும்.

    ஆப்பச்சட்டியில் சூடு பரவுச்சுன்னா உள்ளே ஏதோ வேகுதுன்னு அர்த்தம். ஆக அந்த எண்ணெய் சட்டியில் உள்ளே ஏதோ வேலை நடந்துக்கிட்டு இருக்குன்னு அர்த்தம் தானே... ஆஸ்பத்திரி கூடிய சீக்கிரம் திறக்கிறாகளோ?

    NH-ல நடுரோட்டுல கை காமிச்சா நேரா போய் அந்த பண்ணாடையை மோதிட்டு, இப்படி திடீருன்னு கை காமிச்சா உடனே நிறுத்த ப்ரேக் ரொம்ப பவர்புல் கிடையாதுன்னு சொல்லிடணும். அஞ்சு உசுரு போறதுக்கு நடுரோட்டுல நிறுத்துன பண்ணாடையோட உசுரு போறது ஒரு பெரிய விஷயம் இல்லை.

    கூடிய சீக்கிரம் வன்னியர் சங்கம் காணாமல் போகணும்னு நினைச்சிட்டார் போல ராமதாஸ்.

    ReplyDelete
  4. பந்து உங்கள் கருத்து அற்புதமான கருத்து.... தொடர்ந்து கடைபிடியுங்கள்.. நன்றி.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner