எஸ்.ராமகிருஷ்ணனின் ஏழு நாள் உலகசினிமா பேருரைகள்.
டிசம்பர் சீசனில் சங்கீதத்தில் கரைந்து உருகி, மேல்தட்டு வர்கம் ரசித்து ருசித்து பேஷ் என்று கைதட்டினாலும்....
சினிமாக்காரர்களுக்கு டிசம்பரில் உலக திரைப்படவிழா ஒன்று மட்டுமே இருக்கின்றது...


ஆனால் உயிர்மை பதிப்பகம்  ஏற்ப்பாடு செய்து இருந்த எஸ்ராம கிருஷ்ணனின்  ஏழு நாட்கள் உலக சினிமா பேருரைகள் சர்பிடி தியாகராயர் ஹாலில் ஏற்ப்பாடு செய்து இருந்தார்கள்.. ஏழு  நாட்களில் உலகசினிமாவை புரட்டி போட்டஎழு இயக்குனர்கள்..
முதல் நான்கு நாட்கள் அலுவல் வேலை காரணமாக  மிஸ் செய்து விட்டேன்..ஆனால் கடைசி மூன்று  நாட்கள் மட்டும்தான் அவர் பேச்சை கேட்க முடிந்தது..

அளுமையோடு  எழுதுவதும் ,எழுதுவது போல பேசுவதும் ஒரு கலை... அது எல்லோருக்கும் வாய்த்து விடாது...

ஒரு டிவி நிகழ்ச்சிக்காக ஒரு  பேட்டியின் போது  நான் செய்தி வாசிப்பாளர் பாத்திமாபாபு, வாத்தியார் சுஜாதா  மூவரும் பேசிக்கொண்டு இருந்த போது...எவ்வளவு soft ஆ சுஜாதா பேசுகின்றார் என்று வியந்த போனேன்...  இவர்தான் கதை எழுதும் சுஜாதாவா என்று யோசித்து யோசித்து மாய்ந்து போய் இருக்கின்றேன்....பேசுவது என்பது ஒரு கலை.. அதிலும் சுவாரஸ்யமாக பேசுவது பெரிய கலை... சமகாலத்தில் இருக்கும் எல்லா எழுத்தாளர்களுக்கும் இது வாய்த்து விடவில்லை...


பேச்சில்  யோசிப்பு இருக்கும்...தடுமாற்றம் இருக்கும், பேச்சில்  அலட்டல்   வந்து எட்டி பார்க்கும், மைக் கிடைத்து விட்டது என்று பொங்கி விடுவார்கள்..   சொன்ன  நேரத்துக்கு பேசி முடிக்க மாட்டார்கள்... சின்ன சின்ன சலசலப்புக்கு கூட்டத்தை பார்த்து முறைப்பார்கள்... ஒரு சின்ன செல்போன் சவுண்டுக்கு ஆடிட்டோரியத்தை  விட்டு வெளியே போக சொல்லுவார்கள்...தன்னை ஒரு பெரிய ஆளுமையாக காட்டிக்கொள்ளுவார்கள்....


எனக்கு பெரிய இலக்கிய ஆளுமை எல்லாம் இல்லை....துணையெழுத்து படித்து போது ,பென்னிக்குக் கட்டுரை படித்து மனது ஒருமாதிரி ஆகி... இதை எழுதிய ஆளை பார்க்கனும்  என்று கங்கனம் கட்டி இருக்கின்றேன்... காமராஜர் அரங்கில் சாரு புத்தக வெளியீட்டு விழாவில் ,முதன் முறையாக எஸ்ரா பேச்சை  கேட்கின்றேன்.... வலி என்ற தலைப்பில் மடை திறந்த வெள்ளம் போல  பொழிகின்றார்....அதன் பின் உலகசினிமா பெருரைகள்  எழுநாட்கள் பேசுகின்றார் என்று தெரிந்தும் அலுவல் வேலை  காரணமாக அவரது பேச்சை கேட்கமுடியவில்லை.... ஹிட்ச்காக் மற்றும் பெலினி உரைகளை கேட்டேன்.... மிஸ்  பண்ணிய உரைகளை நினைத்து வருத்தம் கொண்டேன்... சான்சே இல்லை... எஸ்ரா சுவாரஸ்யமாக எழுதுவதில் மட்டும் அல்ல பேசுவதிலும் அவர் கிங்குதான்.....

பெலினியை என்னதான் வாசித்தாலும் இப்படி   நிறைய உண்மைகளை  வாசித்து இருக்க முடியுமா? என்பது பெரிய கேள்வி குறிதான்.... பெலினி வாழ்க்கை மற்றும் ஸ்டைலை தமிழில் இயக்குனர்  பாலோ செய்கின்றாரோ என்று  தோன்றியது...

1300 ஷாட்டுகள்   பேட்ஸ் படத்தில் கிராபிக்ஸ் பண்ணியதும்...  சைக்கோ படத்தில் பாத்ருமில் கத்தியால் குத்தும் சீனும் 73 ஷாட்டுகள் எடுத்த செய்திகள் எனக்கு பெரிய ஆச்சர்யத்தை கொடுத்தன...

பெலினி போன்ற இயக்குனரின் அளுமையை ரசிக்க முடிந்தது.... சாப்ளின் வாழ்க்கையை இரண்டு மணி நேரம் வாழ முடிந்தது... காரணம் எஸ்ரா.. அரங்கம் அவ்வளவு அமைதி... அப்படி ஒரு பேச்சு...  எந்த இடத்திலும் யோசிக்கவேயில்லை...இரண்டு  மணிநேரம் அசத்தோ அசத்து என்று அசத்தினார்...

 இயக்குனர் பாலுமகேந்திரா   கடைசி நாள் நிகழ்ச்சியின் போது வந்து இருந்ததை பார்த்தேன்.... அடுத்த வருடமும் தொடரும் என்றார்.. வாரம் ஒரு டாபிக்கில் எஸ்ரா பேசினால் கேட்டுககொண்டே இருக்கலாம் என்று தோன்றுகின்றது.. எந்த  இடத்திலும் போர் அடிக்கவில்லை... வள வள என்று பேசிவில்லை... நறுக்கு தெரித்தது போல சுவாரஸ்யமாக பேசினார்..குறிப்புகளை எப்படி பார்க்கின்றார் எப்போது பார்க்கின்றார் என்றே தெரியவில்லை.... நல்ல அனுபவம் அந்த அனுபவம்  வீடியோவாக வந்தால் அவசியம் வாங்கி பாருங்கள்...

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மனுஷ்யப்புத்திரன் அவர்களுக்கும், எஸ்ராவுக்கும் என் நன்றிகள்.குறிப்பு.....

சென்னையில் இன்றில் இருந்து உலக திரைப்பட விழா தொடங்குகின்றது...  ஒன்பது வருடம் தொடர்ந்து விடாமல் தரிசித்து கொண்டாடிய நிகழ்வு... இந்த முறை அலுவல்  பணி காரணமாக போக முடியாது என்று தெரிகின்றது...நான் ரொம்ப ரொம்ப மிஸ் செய்கின்றென்...

அதே போல ரொம்ப நாள்  கழித்து பெங்களுர் இன்று இரவு  செல்கின்றேன்..நாளை வெள்ளி,சனி,ஞாயிறு பெங்களூர் மடிவாளாவில் வாசம்... வாய்ப்பு இருந்தால்  பிரியாக இருக்கும்  நண்பர்களை சந்திப்போம்....

நன்றி....பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

3 comments:

  1. தீராநதியில் தொடராக வெளிவந்து- சித்திரங்களின் விசித்திரங்கள் .சமீபத்தில் படித்தேன் .எஸ்ரா .அவர்களின் சினிமா வழியாக பார்த்து எழுதிய அந்த புத்தக நடை என்னை பெரிதும் கவரவில்லை .ஆனால்ஓவியங்களை பற்றி எதுவுமே தெரியாத எனக்கு அதுஅறிமுகமாக இருந்தது .அடுத்த அவரின் உலக சினிமா கட்டுரைகள் படிக்க தயங்கி கொண்டு இருந்தேன் .நல்லவளை அந்த தயக்கத்தை உங்கள் பதிவு போக்கிவிட்டது .நன்றி .

    ReplyDelete
  2. சென்ற வருடம் புத்தகத்திருவிழாவிற்கு தில்லி வந்திருந்த எஸ்ரா தமிழ்ச் சங்கத்தில் கதைவழி நடந்தேன் என்ற தலைப்பில் உரையாற்றினார். சங்கத்தில் அன்று ஏதோ ஒரு தமிழ்ப்படம் திரையிட இருந்தார்கள். திரைப்படம் பார்க்க வநதவர்கள் கூட அவர் உரையைக் கேட்டு கட்டுண்டு கிடந்தார்கள். அபார திறமை வாய்ந்தவர் எஸ்ரா. சென்னைவாசிகளான நீங்கள் கொடுத்துவைத்தவர்கள்!

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner