Naduvula Konjam Pakkatha Kaanom-2012/உலகசினிமா/நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்... லோபட்ஜெட் அசத்தல்...சினிமா விமர்சனம்




என்னங்கடா  இது படத்தோட டைட்டில்பக்கத்தை காணோம்?
சில்லரையை  காணோம்மின்கிட்டு என்பதாய் இந்த படத்தின் டைட்டிலை மனதில்   நக்கல்   விட்டுக்கொண்டு இருந்தேன்பத்தோடு பதினோன்றாக இதுவும் ஒரு உப்புமா படம் என்று  நினைத்து இந்தம படத்தின் விளம்பரத்தை பார்த்து விட்டு அடுத்த வேலை பார்க்க  போய் விட்டேன்ஆனால் இந்த படத்தின் புரமோஷன் செய்திகள் அடிக்கடி  மீடியாவில் கசிந்து கொண்டு இருந்தன.. இளைஞர்களிடம் மிக  எளிதில்  செல்லக்கூடிய யூடியூபில் படத்தின் டீசர்களை பர பரக்க வைத்தார்கள்மக்கள்  மத்தியில் இந்த படத்தினை பற்றிய எதிர்ப்பார்ப்பை ஏற்றி விடடார்கள்..

 படம் அந்த அளவுக்கு இருக்குமா? இல்லை   சொதப்புமா? என்று பயத்துடன்  படத்தை  பார்க்க போனேன்.. பெரிய ஸ்டார் படத்துக்கு வரும் கூட்டம் அளவுக்கு பத்திரிக்கையாளர் காட்சிக்கு  பெரிய கூட்டம் கூடி  இருந்தது எனது புருவத்தை உயர செய்தது

படத்தை பார்த்தேன் என் கவலைகள் எல்லாம் தீர்ந்த போனது போல மனம் மிக சந்தோஷமாக இருந்த்து.... எல்லோருமே புதுமுகங்கள்..ஹீரோ ஹீரோயினை தவிர... அவர்களும் அறியப்பட்டவர்கள்தான்...லோ பட்ஜெட்... அற்புதமான திரைக்கதை.... சான்சே இல்லை.... அசந்து போய் விட்டேன்....
============

Naduvula Konjam Pakkatha Kaanom-2012/ படத்தின்  ஒன் லைன்...

தலையில் அடிபட்டு ஒருவனுக்கு இரண்டு வருட நியாபகங்களை சுத்தமாக மறந்து விட்டால்???
=============

Naduvula Konjam Pakkatha Kaanom-2012/ படத்தின் கதை என்ன?

விஜய் சேதுபதி (பிரேம் குமார்)  தான் உயிருக்கு   உயிராக காதலிக்கும் காயத்திரியை ( தனலட்சுமி)இரண்டு நாளில் திருமணம் செய்து கொள்ளப்போகும் புது மாப்பிள்ளை.... நண்பர்கள் அரையில் உட்கார்ந்த அரட்டை அடித்துக்கொண்டு இருக்கும் போது கிரிக்கெட் விளையாடுகின்றார்கள்... அதில் விஜய் சேதுபதிக்கு தலையில் அடிபட்டு விடுகின்றது...  இரண்டு வருடத்துக்கு  முன் நடந்த  சம்பவங்கள்தான் நினைவுக்கு வருகின்றது...மறுநாள் திருமணத்துக்கு  முதல்நாள் ரிசப்ஷென் எல்லாத்தையும் மறந்து தொலைச்சிட்டு சொன்னதையே சொல்லற ஆளான சேதுபதிக்கு கல்யாணம் நடந்த்தா? என்பதை டென்ஷனுடன்   பாடம் பார்த்து  சிரித்து விட்டு இந்த படத்தை பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த தளத்தில் பகிருங்கள்...
==============
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

முதலில் இந்த தைரியாமான, கேச்சியான  தலைப்பு தேர்ந்து எடுத்தமைக்கு முதலில் படக்குழுவுக்கு ஒரு ஹேட்ஸ் அப்.

ரொம்ப நாள் ஆகி விட்டது... மனது விட்டு சிரித்து... நானும் நண்பர் நித்யகுமாரும் பாஸ் என்கின்ற பாஸ்கரன் படத்தை மாயாஜாலில் பார்த்து விட்டு வயிறு வலிக்க  சிரித்ததுதான் கடைசி அதன் இந்த படத்தை பார்க்கும் போதுதான் கண்ணில் நீர் வர சிரித்தேன்..

எடிட்டிங்க படித்து விட்டு, யாரிடமும் உதவியாளராய் இல்லாமல் இரண்டு படத்துக்கு ஸ்கிரிப்ட் ரைட்ராக இருந்து விட்டு அற்புதமான திரைப்படத்தை எடுத்த பாலாஜிதரனிதரனுக்கு என்னுடைய வாழ்த்துகள்..



தமிழ்சினிமா கவனிக்க தவறிய திரைப்படமான வர்ணம் என்ற திரைப்படத்துக்கு ஸ்கிரிப்ட் பாலாஜிதான்..  சினிமா இவருக்கு மிக  எளிதாக சாத்தியமாய் இருக்கின்றது.. வாழ்த்துகள்..

சமீபத்தில் விஜய் சேதுபதியோடு பிட்சா ஸ்பெஷல் என்ற புரோகிராமுக்காக நுங்கம்பாக்கத்தில் இருக்கும் பிட்சா கடையில்  அவரோடு ஷுட்.... நிறைய பேசிக்கொண்டு இருந்தோம்... வாரிசு அரசியல் போல வாரிசு சினிமா  கோலோச்சும்  தமிழ் சினிமாவில் துபாயில் அக்கவுண்டன்டாக வேலை பார்த்துவிட்டு ,வேலையை உதறி சென்னை வந்து வாய்ப்பு தேடி, கூத்து பட்டறையில் சேர்ந்து, திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருக்கும் போது, சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் வெற்றி பெறுவது என்பது சாதாரண விஷயம் அல்ல...வாழ்த்துகள்  சேதுபதி என்றேன்.

ஜாக்கி தென்மேற்கு பருவக்காற்று படம் அவார்டு வாங்கிடுச்சி... அதுக்கு அப்புறம் பீட்சா மற்றும் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் திரைப்படங்களில்  நான் நடித்துக்கொண்டு இருக்கின்றேன் என்று சொன்ன போது... நிறைய பேர்... உப்புமா படங்களில் நான் நடிப்பதாக என்னை  கேலி  செய்தார்கள்....ஆனால் இந்த இரண்டு படங்கள்தான் நான் பட்டி தொட்டி எங்கும் என்னை கொண்டு போய் சேர்த்து இருக்கு என்றார்....

விஜய் சேதுபதி கிராமத்து வெள்ளந்திதனத்தோடு பேசும் அந்த டயலாக்குகள் வெகு இயல்பாய் இருக்கின்றன....
 கூட நடித்து இருக்கும் கண்ணாடிகாரர் மற்றும் ராஜ்குமார், பாலஜி போன்றவர்கள் அசத்தி  இருக்கின்றார்கள் என்றே சொல்ல வேண்டும்..

 இந்த படத்தில் புதுமுகங்கள் நடித்து இருந்தாலும் சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் பேப்பர் ஒர்க்  முடிந்த கம்ப்ளீட்டாக இரண்டு மாதம் ரிகர்சலுக்கு பிறகே படத்துக்கு ஷூட் சென்று இருக்கின்றார்கள்..

காயத்திரிக்கு பெரிய நடிப்புக்கான ஸ்கோப் இல்லாவிட்டாலும் மெயின்  ரோல்  போல் அந்த கிளைமாக்சில் அவர் கொடுக்கும் ரியாக்ஷன் அருமை...

கயிற்றில் மேல்  நடக்கும் கதை.. கரணம் தம்பினால் போர்  அடித்து விடக்கூடிய கதை... அதை  அழகாக செதுக்கு இருக்கின்றார்கள்...

நான்கே நான்கு மெயின் கேரக்டர்கள் வைத்துக்கொண்டு ஜமாய்த்து இருக்கின்றார்...


பசங்க, சுந்தரபாண்டியபுரம் போன்ற படங்களில் கேமராமேனான பிரேம்குமார் வாழ்வில் நடந்த இரண்டு நாள் நிகழ்வை பட்டி டிக்கரிங் பார்த்து திரைக்கதையாக்கி இருக்கின்றார்கள்..

 படத்தின் காட்சிகளை சொன்னால் சஸ்பென்ஸ் போய் விடும் என்பதால் படத்தை பாருங்கள்.. குறிப்பாக மருத்துவமனை காட்சிகளில் லென்தி ஷாட்டுகளில் கேமராமேன்  பிரேம் அசத்தி இருக்கின்றார்...

பாடல்ளும் , பின்னனி இசையும் படத்தின் பெரிய பலம்....

கடைசி வரை அந்த டெம்ப் என்னவாகுமோ? நண்பர்கள் மாட்டிக்கொள்ளுவார்களோ? என்று பதைபதைப்பு படம் முடியும் வரை கொண்டு சென்ற திரைக்கதைத்தான் இந்த படத்தின் பெரும் பலம்...

சலூனில் முடிவெட்டிக்கொள்வதில் ஆரம்பித்து,ரிசப்ஷனுக்கு தயாராவது வரை... பெண்ணை பார்த்து திரும்ப திரும்ப யாப்பா மூஞ்சாடா இது என்று டயலாக் சொல்வதில்சேதுபதி நிற்கின்றார்..

கிளைமாக்ஸ் காட்சி உங்கள் வயிற்றை பதம் பார்ப்பது உறுதி...

சினிமாக்கரர்களிடம் பேசும் அது நொட்டை இது  நொள்ளை என்று சொன்னார்கள்.. காரணம் அவர்களுக்கு  உள்ளே உறங்கி இருக்கும் கிரியேட்டர் எதையாவது சொல்லிக்கொண்டு இருப்பான்... படம் லென்த்தி அதை குறையுங்கள் என்று சொல்லி இருக்கின்றார்கள்.. நான்  படத்தில் ஒரு சீன் கூட கட் பண்ண வேண்டாம் என்று சொன்னேன்..  பட் சேதுபதி ,காயத்ரி  காதல் காட்சிகளை கத்திரி போட்டு இருக்கின்றார்கள் என்பது தெரிகின்றது....
 இந்த படம் திறமையானவர்கள்  ஒன்று கூட இருக்கும் படம்... படத்தை பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்...

வாழ்த்துகள் ....பாலாஜி  மற்றும் படக்குழுவினர்... இந்த படத்தை புரோமோட் பண்ண விதத்துக்கு ஒரு ஷொட்டு.....
=========
படத்தின் டிரைலர்...



=============
படக்குழுவினர் விபரம்.

Directed by Balaji Tharaneetharan
Produced by V. S. Rajkumar
Starring
Vijay Sethupathi
Gayathri
Music by Ved Shankar
(Soundtrack)
Siddarth Vippin
(score)


Cinematography C. Premkumar
Editing by R. Govindaraj
Studio Leo Vision
Distributed by Thirupathi Brothers
Release date(s)
November 30, 2012
Country India
Language Tamil





==========
பைனல்கிக்.

 பத்திரிக்கையாளர் காட்சிகளில் பெரிதாக  கமென்ட் அடிக்காமல் அமைதியாக படத்தை பார்ப்பார்கள்.... ஆனால் இந்த படம் அந்த  இலக்கணத்தை உடைத்து பிரசாத்லேபே   சிரிப்பலையில் ஆழ்த்தியது என்பேன்...
லோ பட்ஜெட்டில் ஒரு உலக  சினிமா ரேஞ்சுக்கு படத்தை வழங்கி இருக்கின்றார்கள்..அந்த கல்யாண மண்டப்ம் சீனுக்கு கொஞ்சம் துணை நடிகர்களை அதிகபடுத்தி இருக்கலாம்... சீரியல் போல பட்ஜெட் காட்சிகள் அமைத்ததுதான் படத்தில் இருக்கும் சின்ன மைனஸ்...  அற்புதமான காமெடி திரில்லர் இந்த  திரைப்படம்....ஆல்த வெரிபெஸ்ட்....நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் டீம்.


 நன்றி 
விடியோவுக்காஇன்டியா கிளிட்ஸ்
போட்டோவுக்காக மூவி கேலரி.

 பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

15 comments:

  1. சுந்தரபாண்டியபுரம் ipadi oru padama??

    ReplyDelete
  2. நீங்க சொல்றிங்கன்னு பார்க்க போறேன்

    ReplyDelete
  3. அன்னனே ஸசொல்லியாச்சு மறுப்பு ஏது?

    ReplyDelete
  4. Eevryone giving positive comments.. nowadays these kind of movies only becoming trendsetters.

    ReplyDelete
  5. பார்த்திடுவோம்...

    ReplyDelete
  6. padam romba lenth but nalla comedy
    neenga sona mathiri avungaluku vaalthukkal

    ReplyDelete
  7. படம் மிக தைரியமான முயற்சி அதே சமயம்
    சுவாரசியமான கதை கொஞ்சம் நீளத்தை தவிர்த்தால்
    நன்று

    ReplyDelete
  8. இரண்டு வாரம் சிரிக்க வேண்டிய சிரிப்ப ரெண்டு மணிநேரத்துல சிர்ச்சி முடிச்சேன்...Must Watch Movie...

    ReplyDelete
  9. படத்தின் நீளத்தை மட்டும் குறைத்து இருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும். உங்கள் விமர்சனம் வந்தவுடனே அதை படிக்காமல்,படத்தை பார்த்து விட்டுதான் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் படிக்கவில்லை. இப்பொழுது கூட, தியேட்டரில் நிறைய பேர் படத்தை சீக்கிரம் முடிங்கப்பா என்பதை கேட்க முடிந்தது. மற்றபடி நானும் எனது நண்பரும் ரசித்து(சிரித்து) பார்த்தோம் என்பதை மறுப்பதற்கில்லை

    ReplyDelete
  10. ஜாக்கி சார் ,நடுவுல கொஞ்சம் பக்கத்த கணோம் படத்துல உண்மையிலேயே படத்துக்கு உயிர் சேர்த்தது சரசு தான் ! சார் நொடிக்கு நொடி படபடக்குற சீன் எல்லாமே மறக்க முடியலைஅதுவும் நான் சொன்ன நீ கேட்பிய மாட்டாயா அந்த ஒரு விசயம் போதும் சார் காலையில ஆபிஸ் வேலை ரொம்ப அதிகம் (அதுவும் திங்கள் கிழமை வேற படிக்கும் போதும் இப்பவும் நமக்கு பிடிக்காத கிழமை திங்கள் தான் அது வேற விசயம்) அதனால தான் அதிகமாக படத்தை பற்றி சொல்ல இயலவில்லை ஆனால் மனதில் படத்தின் ஓட்டம் இன்னும் ஓடி கொண்டிருக்கிறது மற்றபடி படத்தின் அனைவரது பங்களிப்பும் சிறப்புதான்

    ReplyDelete
  11. சுந்தரபாண்டியன் தான் மிஸ்ட்டேக்கா அடிச்சி தொலைச்சிட்டேன்.

    விவேக்...அப்படி எல்லாம் சொல்ல முடியாது.... எனக்கு மட்டும் அல்ல... பலருக்கு இந்த வெர்ஷன் புடிச்சி இருந்துச்சி...

    உண்மைதான் சரன்...


    நன்றி ஆரிப்


    நன்றி சதிஷ்

    நன்றி ரமேஷ்

    நன்றி ராயதுரை.

    ReplyDelete
  12. நேத்து தான் படத்தை பார்த்தேன். வெற்றி-யில் செகன்ட் ஷோ. படம் முடியும் போது 1 மணி. 3 மணிநேரம் படம். ஆனால், படம் முடிகிறது என்று நினைக்கவே கஷ்டமாக் இருந்தது. அடுத்து வீட்டுக்கு போனால் என்னாகும். நாகராஜை பார்த்ததும் என்ன கேள்வி கேட்பான் என்றெல்லாம்.

    3 மணி நேரம் என்பது மற்ற படங்களை பொருத்த அளவில் கொஞ்சம் கொடூரமானது. ஆனால், இந்த படம் 4 மணி நேரமானாலும் பரவாயில்லை ரகம்.

    ReplyDelete
  13. நேத்து தான் படத்தை பார்த்தேன். வெற்றி-யில் செகன்ட் ஷோ. படம் முடியும் போது 1 மணி. 3 மணிநேரம் படம். ஆனால், படம் முடிகிறது என்று நினைக்கவே கஷ்டமாக் இருந்தது. அடுத்து வீட்டுக்கு போனால் என்னாகும். நாகராஜை பார்த்ததும் என்ன கேள்வி கேட்பான் என்றெல்லாம்.

    3 மணி நேரம் என்பது மற்ற படங்களை பொருத்த அளவில் கொஞ்சம் கொடூரமானது. ஆனால், இந்த படம் 4 மணி நேரமானாலும் பரவாயில்லை ரகம்.

    ReplyDelete
  14. மிக அருமையான படம்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner