ஒரு காலத்தில் கோலோச்சிக்கொண்டு
இருந்த விஷயம்…
ஆனாலும் அதன் பாதிப்பு இப்போது இல்லைவே இல்லை என்று உறுதியாக சொல்ல முடியும்,…. இன்றைக்கு நினைத்த உடன் பேச முடிகின்றது…2000ம் வாக்கில் தமிழகத்தில்
செல்போன் தன் கால்களை பதித்தது…
ஆனால் அதற்கு முன் பர்சனல் செய்திகளை பகிர்ந்து கொள்ள
கடிதங்கள் மட்டுமே பொது
மக்களுக்கு உறுதுணையாக இருந்தன…. காதலில் இருந்து காம்ம் வரை
பகிர்ந்துகொள்ள கடிதங்கள் மட்டுமே,....
முக்கியமாக காதலை வயர்ப்பது என்பது பெரிய பாடு.... கடிதம்
எழுதவேண்டும்... வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும்
படித்த பின்னே சம்பந்த பட்டவரிடம் அந்த கடிதம் போய் சேரும்... ஆனாலும் அதில் சங்கேத மொழியில்
காதலை உணர்த்த வேண்டும்... அதெல்லாம்
பெரிய கொடுமை சாமியோவ்..............
ஒரு கடிதம் எழுதி போஸ்ட் செய்தால் அது தமிழ்நாட்டில் லோக்கலாக
இருந்தால் மூன்று நாட்கள் ஆகும் வெளியூர் ஆக இருந்தால் நான்கு நாட்கள் ஆகும்….முக்கியமாக மாலை ஆறு மணிக்கு லாஸ்ட் கட்டுகளை எடுத்து ரயில் வழியாக தபால் பட்டுவாடா செய்யும் ஆர்எம்எஸ் தபால் அலுவலகத்துக்கு நேரில் போய் கடிதங்கள் விரைவில் கிடைக்க
போட்டு விட்டு வருவோம்....
நிறைய நேரம் ஜோல்னா தபால்
பையில் தபால்காரர் கடிதங்களை எடுத்து போட்டுக்கொண்டு இருக்கும் போது நாங்கள் போய்
கொடுத்து இருக்கின்றோம்... லேட் பீ
எல்லாம் ஒட்டி போட்டு செய்தியை விரைவாக
சேர்க்க நாய் படாதபாடு பட்டு
இருக்கின்றோம்...
அதனால்தான் வைரமுத்து எழுதிய காதலித்துப்பார் கவிதையில்….
தபால்காரன் தெய்மாவான் என்று எழுதி இருப்பார்… ஒரு காலத்தில் தபால்காரர்கள் தெய்வத்துக்கு நிகராகத்தான்
மதிக்கப்பட்டார்கள்…
படிக்காத கிராமத்து மக்களுக்கு கடிதத்தில் வந்த செய்தியை
பொறுமையாக படித்து காட்டி அன்பளிப்பாக மல்லாட்டை , முந்திரி போன்றவற்றை பெற்றுக்கொண்டு செல்வார்கள்…
இன்னும் சிலர் சுருக்குபையில் இருந்து இரண்டு ரூபாய் பணம்
எடுத்துக்கொடுப்பார்கள்.
சின்ன விஷயமாக இருந்தால் தபால் கார்டில் எழுதிப்போடுவார்கள்….
அடுத்த வெள்ளிக்கிழமை ஊருக்கு
வருகின்றேன். பெரிய பெண்ணுக்கு வரன் பற்றி பேசி
முடிவெடுப்போம்…
நீ போன பிறகு நிறைய பிரச்சனைகள் நேரில் வந்தால் பங்காளிகளுடன் பேசி
முடிவு எடுத்து விடலாம் தந்தி போல பாவித்து விரைந்து வா… என்னால் இவன்கள் கொடுக்கும் தொல்லையில்
தூங்கி ஒரு வாரத்துக்கு மேல் ஆகின்றது… என்பதாய் தபால்கார்டில் செய்திகள் இருக்கும்…
என்பதுகளில் நான்
ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது
தபால்கார்டும் தபால்காரர்களும் எங்களுக்கு வருடா வருடம் தெய்வமானார்கள்...புரொமோட்டேட்
டூ தி நெக்ஸ்ட் கிளாஸ் என்ற பாடாவதி ரப்பர் ஸ்டாம்ப் அடித்து எச் எம் கையேழுத்து
போட்டு வரும் தபால் கார்டுகளை பார்த்து வருட முடிவில் ரிசல்ட் பார்த்து குதித்து தொலைப்போம்.... சில நேரங்களில் ஜாக்கி நீ பாஸ் பண்ணிட்டே என்று தபால்காரர் கார்ட்டை
படித்து சொல்லி விட்டு போய் விடுவார். சில
நேரங்களில் சஸ்பென்சை தபால்கார்டுகள்
கெடுத்து தொலைக்கும்...
நான் எல்லாம் தபால்
கார்ட்டில் வரிந்து வரிந்து எழுதி இருக்கின்றேன்… முகவரி
இடத்தை தவிர்த்து மற்ற அனைத்து இடங்களையும் கதற கதற கற்பழித்துதான்
தபால் கார்டு போஸ்ட் செய்வது என் பழக்கம்.
அதே போல நிறைய இன்லேன்ட்
லட்டர்கள் வரி வரியாய் எழுதி தள்ளி இருக்கின்றேன்....... கூட்டு குடும்பத்தில்
வெளியூரில் இருக்கும் கணவன் தன் மனைவிக்கு கடிதங்களை இன்லேன்ட் லட்டரில் வரைந்து
அனுப்புவார்கள்... காமம், முத்தங்கள், எல்லாம் கோட் வேர்டில் இருக்கும்......
சில கடிதங்களை மாமியார்கள் மருமகள்களிடம் பிரிக்காமல் கொடுத்து
விடுவார்கள்.. ரேண்டம்மாக ஏதாவது ஒரு கடிதத்தை பிரித்து தன் மகன் அவன் மனைவிக்கு என்ன எழுதி இருக்கின்றான் என்று கிராஸ் செக் செய்யும்
மாமியார்களையும் நான் பார்த்து இருக்கின்றேன்...
இதுக்கு முன்னாடி உங்க பிள்ளை ஒரு லட்டர் போட்டு இருக்கின்றாராம் என்று
சொன்னால்... அந்த லட்டரை கிழித்து படித்தது தெரிந்தால் மாட்டிக்கொள்ளுவோம் என்று
தபால்காரன் மேல் பழியை தூக்கி போட்டு
விடுவார்கள்..
பொங்கல் வாழ்த்துக்களின் போது நான் அச்சடித்த வாழ்த்து அட்டைகள்
அனுப்புவதிற்கு பதில் 15 பைசா தபால் அட்டைகள் ஒரு 100 வாங்கி அதில் ஸ்கெட்ச் பென்சிலால்
என் கையால் வாழ்த்து எழுதி
அனுப்புவேன்.....
அதே தபால் கார்டு சீட்டு
குலுக்கல் தேதி வரும் 18 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற இருப்பதால் தவனையை சீக்கிரம்
கட்டவும் என்ற கார்டுகளும்.... வட்டி
தேதியை குறிப்பிட்டு சேட்டுகள் பண்டல் பண்டலாய் தபால் கார்டுகளை யூஸ் செய்து
இருக்கின்றார்கள்....
நேற்று எதேச்சையாக பழைய சூட்கேசை
பரணில் இருந்து இறக்கி திறந்து பார்க்க ஏகப்பட்ட கடிதங்கள்.... சென்னையில் இருக்கும் போது நான் எழுதிய
கடிதங்கள்... எனக்கு அம்மா எழுதிய கடிதங்கள்.. முக்கியமாக என் அம்மா எனக்கு எழுதிய முதல் கடிதத்தை படித்த
போது என் கண்களில் என்னை அறியாமல் நீர்....
என் அம்மாவுக்கு நான் எழுதிய கடிதங்கள்... என் தங்கைகள் எனக்கும் ..
நான் அவர்களுக்கு எழுதிய கடிதங்கள் என்று நிறைய கிடக்கின்றன... பேனா நட்புக்கு
நான் எழுதிய கடிதங்கள் என்று கட்டு கட்டாக
பண்டல் பண்டலாக கட்டி வைத்து இருக்கின்றேன்.... அப்படி என்னதான் எழுதி கிழித்து
வைத்து இருக்கின்றோம் என்று 15 வருடங்கள் கழித்து
படிக்கும் போல மலைப்பாக
இருக்கின்றது... நான் தான் அப்படி எழுதி
இருக்கின்றேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை...
இன்று தகவல் தொழில்நுட்பம்
வளர்ந்து விட்டது... தகவல்கள் நொடியில்
சென்று கேருகின்றன...போன வாரம்
அம்ம்மாவிடம் பேசியது என்னவென்று
இப்போது கேட்டால் மண்டையை சொரிந்து
யோசிக்க வேண்டும்...
சில நாட்களுக்கு முன்பு ஒரு காதலி மிக புளோவாக
சொன்ன வார்த்தைகளை யோசித்து யோசித்து தலைவலி வந்ததுதான் மிச்சம்... ஆனால்
அன்று அம்மா என்னிடம் கடிதத்தி பேசிய வாக்கியங்களை இன்றும் படித்து
பார்க்கின்றேன்.... அந்தே வாக்கியத்தை படிக்கும் போதே.... என் அம்மா வாசம் நினைவுக்கு வந்து விடுகின்றது... என் அம்மா
கையெழுத்தை பார்க்கும் போது இன்னும் அவள் என் பக்கத்தில் இருந்து சொல்வது போல ஒரு உணர்வை அந்த பழைய கடிதங்களை வாசிக்கும்
போது அந்த அனுபவத்தை கொடுக்கின்றது...
சில கடிதங்களை வாசிக்கும்
போது அந்த கடிதங்களை நான் எத்தனை
முறை வாசித்து இருக்கின்றேன் என்று எனக்கே தெரியவில்லை... அன்று என் காதலி என்
மீது செலுத்திய வெறித்தனமாகநேசம், பாசம், கோபம், காதல், காமம் எல்லாம் இன்றும் கற்பு கெடாமல் பத்திரமாய் கடிதங்களில்
எழுத்துக்களாக இருக்கின்றன...
நல்லவேளை அப்போது செல்போன் இல்லை...இருந்து இருந்தால் ஒருவாரத்து ஏங்கங்கள்
உணர்ச்சி பூர்வமாக கடிதத்தில் கொட்டி வார்த்தைகளாக்கியது போல இப்போது
வார்த்தைகளாக்க முடியாது என்னதான் இப்போது
ஈமெயில் இருந்தாலும்... நான்கு கை மாறி அது நம் கைக்கு கிடைக்கும் சுகம் போல தற்போது கிடைப்பது இல்லை...
செல்போன், ஈமெயில் இல்லாத
அந்த காலகட்டங்களில் எழுதிய அத்தனை
கடிதங்களும் ஆவன பெட்கங்கள்தான்.... என் காதல் 1998களில் பூத்த போது நல்லவேளை செல்போன்
அறிமுகம் அப்போது இல்லை...அதனால்
பெரும்பாலும் கடிதங்கள்தான்.... அவைகளை வாசிக்கும் போது இன்னும் காதல்
அதிகமாகின்றது...
ஹாய் மை டியர் மோஸ்ட்
என்ற ஆரம்பிக்கும் வரிகளும்....ஸ்வீட்
கிஸ்சஸ் என்று முடியும் வரிகளும் இன்னும் அதிர்வை
கடிதங்கள் மூலம் எற்ப்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றது...
குறிப்பு...
சென்னைக்கு செக்யூரிட்டி வேலைக்கு வந்து ஏமாற்றப்பட்டு பீடாகடையில் சி லநாட்கள் வேலை செய்த போது என் அம்மா எனக்கு எழுதிய முதல் கடிதம் மேலே இந்த பதிவின் முதல் கடிதமாய்... அந்த அஞ்சலட்டையை அப்போது ஒரு 500 முறைக்கு மேல் வாசித்து இருக்கின்றேன்.. யாருமற்ற சென்னையில் அந்த அஞ்சலட்டை எனக்கு அப்போது மிகப்பெரிய சப்போர்ட்,..,....
அம்மா எழுதிய கடிதங்களையும் , காதலி, மனைவி , சகோதரி எழுதிய
கடிதங்களை பத்திரபடுத்தி இருந்தால்
எடுத்து வாசித்து பாருங்கள்... அது சொல்லும் அவர்கள் செலுத்திய உண்மையான
அன்பை..............
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
"அந்த அஞ்சலட்டையை அப்போது ஒரு 500 முறைக்கு மேல் வாசித்து இருக்கின்றேன்.. யாருமற்ற சென்னையில் அந்த அஞ்சலட்டை எனக்கு அப்போது மிகப்பெரிய சப்போர்ட்,..,...."
ReplyDeleteinnum athey mathri kathali i love u nu anupuna message,first salary vantha message ellam vachurukanunga..technology marinalum....manusha manam marathu anna...
கடித காதலர்கள் நாங்கள்.மலரும் நினைவுகளை மீட்டியது...இப்போலாம் உடனே போன் போட்டு பேச முடிகிறது..அப்போது கடிதம் எழுதி குறிப்பிட்ட இடத்தினை சொல்லி கரெக்டாக ஆஜர் ஆனது இன்னும் மலைக்க வைக்கிறது...
ReplyDeleteNenjai Thotta Pathivu..
ReplyDeleteSuperb.
ReplyDeleteரொம்ப சுவாரஸ்யமான பதிவு .
ReplyDeleteஅருமையான நினைவுகள்! உண்மைதான் பழைய கடிதங்கள் நம்மை எங்கோ அழைத்து சென்று தாலாட்டும்! அருமை!
ReplyDeleteஅம்மா எழுதிய கடிதங்களையும் , காதலி, மனைவி , சகோதரி எழுதிய கடிதங்களை பத்திரபடுத்தி இருந்தால் எடுத்து வாசித்து பாருங்கள்... அது சொல்லும் அவர்கள் செலுத்திய உண்மையான அன்பை..............உண்மை...!
ReplyDeleteஅம்மா எழுதிய கடிதங்களையும் , காதலி, மனைவி , சகோதரி எழுதிய கடிதங்களை பத்திரபடுத்தி இருந்தால் எடுத்து வாசித்து பாருங்கள்... அது சொல்லும் அவர்கள் செலுத்திய உண்மையான அன்பை..............உண்மை
ReplyDeleteஅம்மா எழுதிய கடிதங்களையும் , காதலி, மனைவி , சகோதரி எழுதிய கடிதங்களை பத்திரபடுத்தி இருந்தால் எடுத்து வாசித்து பாருங்கள்... அது சொல்லும் அவர்கள் செலுத்திய உண்மையான அன்பை..............உண்மை...!
ReplyDelete