மனிதம் இன்னும் மரித்துவிடவில்லை...




மக்கள் என்றால் அப்படி இருக்க வேண்டும்...
மொழி பார்க்கவில்லை, இனம் பார்க்கவில்லை... மதம் பார்க்கவில்லை....  உயிரை உயிராய் பார்த்தார்கள்... ஒரு கர்பவதியின்  தவிப்பை தன் தவிப்பாக உணர்ந்தார்கள்... அதனால்தான் வேற்று நாட்டுக்காரர் இறந்த போனதுக்கு 2000க்கும்   மேற்ப்பட்டவர்கள் ஒன்று கூடி அரசுக்கு எதிராய் கோஷம் போட முடிந்தது..


இந்தியாவை சேர்ந்த பல் டாக்டர்  சவீதா தன் கணவருடன் அயர்லாந்தில்  வசித்து வந்தார்... நான்கு மாத கர்பத்தை வயிற்றில் சுமந்த அவரது கரு சரியாக வளர்ச்சி அடையவில்லை.... கருவில் வளர்ச்சி சரியில்லை என்றால் கலைத்து விடுங்கள் என்று சொன்ன போது, கத்தோலிக்க  நாடான அயர்லாந்தில் கரு கலைப்பு  சட்டப்படி குற்றம் என்று கருவை கலைக்க மறுத்து விட்டார்கள்...

வயிற்றில் நான்கு மாத கரு இறந்து போக தொப்புள் கொடி வழியாக விஷம் பரவி சவீதா இறந்து விட்டார்.....கரு நன்றாக இருந்து பெண் குழந்தையாக   இருக்கின்றது என்பதால் அந்த கருவை சவீதா கலைக்க  சொல்லவில்லை.... அந்த கரு சரியாக வளரவில்லை என்பதால் கலைக்க சொல்லி இருக்கின்றார்... அதுவும்  பிளிடிங் அதிகம் பட ஆரம்பித்த பிறகுதான் கலைக்க  சொல்லி இருக்கின்றார்...,. ஆனால் எசுநாதர் பக்கம் கையை காட்டி விட்டு கை கட்டி வேடிக்கை பார்த்து நின்று  இருக்கின்றார்கள் மருத்துவர்கள்..


கண் எதிரில் தன் மனைவி இறக்கின்றதை கை பிசைந்து  வேடிக்கை பார்த்ததை தவிர அவள்  கணவனால் எதுவும் செய்ய முடியவில்லை...


இன்னும்  உருவம் பெறாத சிசுவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அதை சுமக்கும் ரத்தமும் சதையுமான மனிஷிக்கு ஏன் கொடுக்க முடியவில்லை என்பதுதான் உலக நாடுகளில் உள்ள  மக்களின் கேள்வி.....


நம் ஊரில் அதே சவீதா இறந்து போய் இருந்தால் இது பத்தோட பதினொன்றாக இந்த மரணமும் கணக்கில்  எடுத்துக்கொள்ளப்பட்டு இருக்கும் அல்லது இது போல  வேறு பிரச்சனை ஒரு வெளிநாட்டு  பெண்ணுக்கு ஏற்ப்பட்டு  இருந்தால் கூட  நாம் நம் வேலையை பார்த்துக்கொண்டு இருந்து விடுவோம்...


 வேலை வெட்டியை விட்டு விட்டு, 2000க்கு மேற்ப்பட்ட மக்கள் பேர் ஒரு இடத்தில் கூடி மதத்தின் பெயரால்  சட்டமாக வைத்து இருக்கும் முட நம்பிக்கையை விட்டொழியுங்கள் என்று கூச்சல் இட்டு இருக்கின்றார்கள்...


இவ்வளவு பெரிய  எழுச்சி எப்படி சாத்தியம் என்று கேட்க்கலாம்....  இவ்வளவு பெரிய  மக்கள் தொகை கொண்ட இந்த  நாட்டில் இப்படி ஒரு போராட்டம்  ஒரு வெளிநாட்டு பெண்ணுக்காக தமிழ்நாட்டில் நடைபெற்றது இல்லையே?


 அயர்லாந்து மக்கள்  சவிதாவை இந்தியராக  பார்க்கவில்லை.... அவளை கர்நாடகாகாரியாக பார்க்கவில்லை... அவளை அடிப்படையில் ஒரு பெண்ணாக..... கர்பவதியாக பார்த்து இருக்கின்றார்கள்...ரத்தம் ஒழுகி அவள் தவித்த தவிப்கை கற்பனை செய்து... அது தன் மனைவிக்கோ,  தன் மகளுக்கோ, தன்மருமகளுக்கோ, தன் தங்கைக்கோ இந்த  நிலமை வந்து இருந்தால்...? என்று  யோசித்ததன் விளைவே அயர்லாந்து மக்கள் அரசுக்கு எதிராக  எழுச்சி போராட்டம் நடத்தி இருக்கின்றார்கள்...  போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களை நினைக்கும் போது, ரொம்ப  பெருமையாக இருக்கின்றது..... மனிதம் இன்னும் மரித்துவிடவில்லை....



பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்..





நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

9 comments:

  1. மனிதம் இன்னும் மரித்துவிடவில்லை (இது எல்லா இடங்களுக்கும் பொருந்தும், நம்ம ஊருக்கும் கூட)

    ReplyDelete
  2. // மதத்தின் பெயரால் சட்டமாக வைத்து இருக்கும் முட நம்பிக்கையை விட்டொழியுங்கள்//

    திருவாசகம்.

    ReplyDelete
  3. Your article is fantastic and most emotional.

    ReplyDelete
  4. your article is emotional, without my permission tears came out of eyes

    ReplyDelete
  5. நமது ஊரில் மனிதம் இருக்கு. குறுகிய வட்டதுக்குள்.ஒருவருக்கு பிரச்சனை என்றால் அவர் குடும்பம் சார்ந்து அல்லது சாதி.ஒரு ஊர் என மறியல். முற்றுகை போராட்டம் செய்திகளை பார்க்கிறோம்.

    ReplyDelete
  6. நமது ஊரில் மனிதம் இருக்கு. குறுகிய வட்டதுக்குள்.ஒருவருக்கு பிரச்சனை என்றால் அவர் குடும்பம் சார்ந்து அல்லது சாதி.ஒரு ஊர் என மறியல். முற்றுகை போராட்டம் செய்திகளை பார்க்கிறோம்.

    ReplyDelete
  7. நமது ஊரில் மனிதம் இருக்கு. குறுகிய வட்டதுக்குள்.ஒருவருக்கு பிரச்சனை என்றால் அவர் குடும்பம் சார்ந்து அல்லது சாதி.ஒரு ஊர் என மறியல். முற்றுகை போராட்டம் செய்திகளை பார்க்கிறோம்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner