தமிழகம் மட்டும்தான் வாந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று பெயர்
பெற்று விளங்குகின்றது..
மற்ற மாநிலங்களில் தமிழன் வாழ்ந்தாலும்..... தமிழன் என்ற
வேறுபாடு பார்க்கப்பட்டுதான் வருகின்றது என்பதை மறுப்பதற்கில்லை.
காவிரி பிரச்சனை இன்று நேற்றல்ல
பல ஆண்டுகளாக நடந்து வந்த காவிரி பிரச்சனைக்கு உச்ச நீதி மன்றம் கொடுத்த
உத்தரவு தமிழகத்து விவசாயிகள் பலரை சோர்வடைய செய்து இருக்கின்றது என்பதே நிஜம்...
எத்தனை மறியல்கள், எத்தனை
போராட்டங்கள்... எத்தனை உயிர்பலிகள்... பந்தால் பல கோடி நட்டம்... என்று காவிரி
பிரச்சனை ஏற்ப்படுத்திய பாதிப்புகள் மிக
அதிகம்.
15 வருடங்களுக்கு பிறகு இரண்டு மாநில முதல்வர்கள் பேசுகின்றார்கள்...
இதற்கு முன் பேசி ஒத்துவரவில்லை என்ற காரணத்தால்தான் நீதிமன்ற படியை தமிழகம் மிதிக்க
வேண்டி இருந்தது..ஆனால் திரும்பவும் முதலில் இருந்து ஆரம்பித்து வைத்து இருப்பது போல உச்ச நீதிமன்ற தீர்ப்பு அமைந்து இருக்கின்றது..
முல்லைபெரியாறில் 142 அடி உயர்த்தி கொள்ளலாம் என்று சொல்லியும் கேரளா
உச்ச நீதிமன்றம் உத்தரவை மதிக்கவில்லை.
போனமுறை உச்சநீதிமன்றம் காவிரி நடுவர் குழு பரிந்துரை செய்த தண்ணீரை
உடனடியாக தமிழகத்துக்கு திறந்து விடவேண்டும் என்று சொல்லியு உடனே திறந்த விட்டு மைசூரில்
பெரிய போராட்டம் வெடித்தது.... அந்த கலவரைத்தை உச்ச நீதிமன்றம் கண்டித்தது...ஆனாலும்
நீதிமன்ற தீர்ப்பு நல்ல தீர்ப்பாக இருக்கும் என்று நினைத்த மக்களுக்கு இந்த
தீர்ப்பு பெரிய இடியாக இறங்கி
இருக்கின்றது....
ஒரு கல்லூரியில்வகுப்பு ஒன்று நடந்து கொண்டு இருக்கின்றது..மாணவர்கள் எல்லோரும் கீழ் படிந்து செல்கின்றார்கள்
என்றால் பிரச்சனை இல்லை.இரண்டு மாணவர்கள் ஆசிரியரின் சொல் பேச்சை கேட்கவில்லை என்றால் ஆசிரியர் என்ன செய்வார்...? மற்றவர்களிடம் அதிகாரம் காட்டி
விட்டு, மதிக்காத மாணவர்களிடத்தில்
மென்மையாக வலிக்காதது போல நடந்து கொள்ளுவார் அல்லவா? காரணம் மதிக்கும்
பிள்ளைகள் மத்தியில் மதிக்காத மாணவர்கள் தன் ஆணையை எதிர்த்து பேசி விட்டால்? அல்லது சொன்ன
பேச்சை கேட்காவிட்டால்...?.அவமானமான
செயல் அல்லவா? அதன் பின் எந்த முகத்தை வைத்துக்கொண்டு ஆணையிட முடியும்...? தட்டிக்கொடுத்து
வேலை வாங்குவது ஒரு வழி.... அல்லது அந்த மதிக்காத மாணவர்களிடம் அன்பாக
பேசிபாருங்கள் என்று மற்ற மாணவர்களுக்கு அறிவுறுத்துவது ஒரு வழி.... சார் நான் சும்மா இருக்கும் போதே அவன் என்னை கிள்ளிவிட்டான் என்று அடங்காத மாணவர்கள் மீது நாம் புகார் கொடுத்தால்.... அவனை ஒப்புக்கு இரண்டு கேள்வியாக... ஏன்டா அவனை கிள்ளுறே என்று கேட்டு விட்டு...அவன் தோள்ல கை போட்டு பேசி பாருடா... அவன் உன்னை கிள்ளமாட்டான் என்று அந்த ஆசிரியர் சொன்னால் எப்படி இருக்கும்...? ஆசிரியர் மீது வைத்து இருந்த நம்பிக்கை தகர்ந்த போய் விடும் அல்லவா?அப்படித்தான் பேய் முழி முழித்துக்கொண்டு இருக்கின்றார்கள் மாணவர்கள்.
மேலுள்ள சம்பவங்களுக்கு இந்த கதை
பொருந்தும்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
Let us hope that one - one discussion between JJ and Shettar brings some water to us. If its individual court can punish them by putting in jail , where as if a govt. doesnt obey orders court has no other option . சில நேரங்களில் சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுந்தால் நமக்கு நன்மை கிடைக்கலாம்
ReplyDeleteகாவேரி பிரச்சணை கார்ப்பரெஷன் பிரச்சனையா இருந்தவரை பிரச்சனை இல்லை. அதில் அரசியல் புகுந்ததுதான் பிரச்சனை.
ReplyDeleteசில நேரங்களில் சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுந்தால் நமக்கு நன்மை கிடைக்கலாம். நாம் எதற்கு கன்டவன்காலில் விழனும். நாம் கேட்பது காவேரி நீரில் நமக்கு இருக்கும் உரிமையை. நமது உரிமையை கேட்க இங்கு சரியான தலமை இல்லை!
ReplyDeleteநன்றி கைலாஷ் மற்றும் பழனி.
ReplyDelete