Thuppakki-2012- துப்பாக்கி.சினிமா விமர்சனம்

  சமீபத்தில் விஜய் படத்தை எல்லோரும் நல்லா இருக்கு என்று சொன்ன முதல் படம் இந்த படம்தான் போல....


நாட் பேட்ன்னு சொல்லி இருக்காங்க.... செமையான மொக்கைன்னு யாரும் இந்த படத்தை சொல்லலை.... அதனால இந்த படத்தை  பார்க்கலாம்னு முடிவு செஞ்சேன்.. விஜய்  நடித்த  படம் வெளியான முதல்  காட்சி பார்த்த ஒரே படம்.. சுறா மட்டுமே..  காரணம் அந்த படத்துல நான் ஒர்க் பண்ணதால.. ஒரு ஆர்வம்.... பட் இந்த படத்தை பத்தி முதல் நாளே சமுக  வலைதளங்களில்  நன்றாக இருக்கின்றது என்று  எல்லோரும் சொல்லி இருந்த காரணத்தால் டிக்கெட் கிடைப்பதில் சிரமம் ஏற்ப்பட்டது....

===============
துப்பாக்கி படத்தின் ஒன்லைன்.
மும்பைக்கு தீவிரவாதிகளால் ஏற்ப்படும் ஆபத்தை ஹீரோ எப்படி முறியடிக்கின்றார் என்பதுதான் படத்தின் ஒன்லைன்..

===================
துப்பாக்கி படத்தின் கதை என்ன?

விஜய்(ஜெகதிஷ் )மில்லிட்ரி உளவு பிரிவில் பணிபுரிபுவர்.... மும்பையில் குடும்பத்துடன் வசிக்கும் அவர் இல்லத்துக்கு விடுமுறைக்கு வருகின்றார்... வந்த இடத்தில் காஜல்  அகர்வாலை பெண் பார்க்க அவர் குடும்பத்தினர் அழைத்து போகின்றார்கள்...இரண்டு பேருக்கும் பிடிக்கின்றது பிடிக்கவில்லை என்று ஒரு சண்டை ஓடிக்கொண்டு இருக்க... பேருந்தில் பாம் வைத்த தீவிரவாதியை பிடித்து அதன் ஆணிவேரை தேடிப்போய் ஆட்டங்கான வைக்கின்றாரா? அல்லது தலைமைசெயலகம் சென்று மனு கொடுக்கின்றாரா? என்று வெண்திரையில்  பாருங்கள்.
=======

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

சூர்யா போல பிரகாசிக்க வேண்டியவர்... பின்னால் நடிக்க வந்து இன்று  டாப் லெவலுக்கு போய் விட்டார்... ஆனால் பஞ்சு டயலாக் பேசி பேசி  பார்த்து அலுத்து போன ரசிகன் 5 படங்களுக்கு மேல் பெயிலியர் படங்களாக மாற்றி விட்டனர்... ஆனால் விஜய்க்கு இருக்கும் மாஸ் ஒப்பனிங்.. அவரை இதுவரை காப்பாற்றி இருக்கின்றது என்று சொல்லலாம்...


சூர்யா பெரிய பெரிய இயக்குனர்களிடம் தன்னை ஒப்படைத்துக்கொண்டதாலேயே இந்த அளவுக்கு அவரால் வளர முடிந்தது....வாரணம் ஆயிரம் ஒரு படம் போது...ஆனால் இயக்குனர்கள் சொல்லும் கதாபாத்திரம் தனக்கு  செட் ஆகாது என்று ஸ்டீரியோ டைப் கதைகளில் நடித்த காரணத்தால் அவர்கள் ரசிகர்கள் படம் வெளியான மூன்று  நாட்களுக்கு மட்டும் விசில் அடித்து பால் அபிஷேகம் செய்து டயர்ட் ஆகி விட அடுத்து பார்க்க வரும் காமன் ரசிகனை இதுக்கு முன் வெளியான எந்த படமும் ஈர்த்ததில்லை....


சிம்புவை யாருக்கும் பிடிக்காது... ஓவர் பேச்சு  என்று இண்டஸ்ட்ரியில் பேச்சு இருக்கின்றது.ஆனால் பஞ்சு டயலாக் குத்து பாட்டு எல்லாத்தையும்  மூட்டை கட்டி வைத்து விட்டு விண்ணை தாண்டிவருவாயா நடித்தார்... அந்த படத்தில் எல்லோருடைய மனதையும் சிம்பு கவர்ந்தார்.. அது போல விஜய்க்கு இந்த துப்பாக்கி படம் என்றால்  அது மிகையில்லை...அனிலாக மாறிய பிறகு விஜய் படம் நன்றாக இருப்பது இந்த படம்தான் போல...

முதலில் விஜய்... இளமையாக கியூட்டாக இருக்கின்றார்... பாடல் காட்சிகளில்  வேகம் இருந்தாலும் சில மூவ் மென்டுகளில் எனக்கு கண்ணாலாம் என்று ஒரு படத்தில் தாலி வைத்துக்கொண்டு சுற்றி வருவாரே அவரை போல சில இடங்களில் அலட்சியமாக ஆடுகின்றார்... சின்ன பிள்ளை தனமான மூவ் மென்டகளை தவிர்த்து ஆடினால் இன்னும் எடுபடும்...


கொஞ்சம் ஒர்க் அவுட் பண்ணி லைட்டா பாடியை ஏத்திட்டா விஜய் இன்னும் மேன்லியா இருப்பார்... சத்தியன் போலிஸ் பிரண்ட்ஸ்ஓட விஜய் வீட்டுக்கு வரும் போது புல்லட்டில் விஜய் ஷாட்சில் வருவார்... செமை சிரிப்பாக காட்சி அளிக்கின்றார் விஜய்....


 காதல் காட்சிகளில் பிரஷ்எபெக்ட் எட்டிப்பார்த்தாலும் பழைய ஸ்டிரியோ டைப்பை விட்டு  வெளியே வருதல் நலம்.. அது கூட  இரண்டு காட்சிகளில்தான் தென்ப்பட்டது...


மாடிக்கு மாடி   தாவி கீழ் இறங்கும் காட்சிகளில் விஜய் பயந்து யோசித்து  யோசித்து தாவி இறங்குவதும்,  கயிறு துனை செய்து இருப்பதையும் காண முடிகின்றது. கயிறு இல்லாமல்  யாராலும் நடிக்க முடியாது....ஆனால் அது தெரியாதது போல நடிக்க வேண்டும்... அல்லது சீஜியாக கூட இருக்கலாம்... அப்படி இருந்தால்  இயக்குனர் அதையெல்லாம் தவிர்க்க   வேண்டும்... சூப்பர் ஹீரோன்னு  பார்ம் ஆயாச்சி... சோ அதுக்கு ஏற்றது போல முறுக்கையும் வேகத்தையும் காட்டி அந்த காட்சியில் நடித்து இருக்க  வேண்டும்..


காஜல் அகர்வால்...நிறைய பேரின் தூக்கத்தை நேற்று வரை கலைத்து இன்னும் கலைக்க காத்து இருக்கும்  செல்லுலாய்ட் தேவதை...லக்கி ஏற்ப்படுத்திய சந்தேகத்தை மனதில் நிறுத்தியே நானும் கூர்ந்து கவனித்தேன்.... வைரமுத்து வரி போல சற்றே  நிமிர்ந்தேன் தலை சுற்றி போனேன்... ஆனால் அவனே வள்ளலாடி... என்பது போல  பிரம்மனின் வள்ளல்தன்மை சமீபத்தில் வேலை செய்து இருந்தாலும் சில காட்சிகயில்  தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பது தெரிகின்றது....


படம் முழுக்க காஜல் வருவது   போல காட்சி அமைத்து இருப்பது நன்று...


ஹாரிஸ் ஜெயராஸ் கூகுள் பாடல்  தவிர எதுவும் மனதில் நிற்க வில்லை. ஏன்  இப்படி படுத்தி எடுக்கின்றார் என்று தெரியவில்லை..


முருகதாஸ் சென்னையில் கமலா தியேட்டர்  ஒன்டக்குடித்தன வீட்டில் இருந்தே அவரை  பார்த்து இருக்கின்றேன்... ஒரு முறை  பேசி இருக்கின்றேன்.  இன்றைக்கு அவரின் வளர்ச்சியை அவராலே நினைத்துக்கூட பார்க்க முடியாத வளர்ச்சி....


ரமணா பார்த்து விட்டு அதே ஒன்டுக்குடித்தன வீட்டின் படிக்கட்டில் யாரிடமோ போன் பேசிக்கொண்டு உட்கார்ந்து இருந்தார் முருகதாஸ்... அப்போது அவரிடம் ரமணா படம் பற்றி பேசினேன்... இதையெல்லாம் செஞ்சவன் இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்கான் என்று ஒரு டயலாக்  வரும் அடுத்த ஷாட் விஜயகாந்த்  தோசை ஊத்திக்கிட்டு இருப்பார்... எனக்கு ரொம்ப பிடிச்ச ஷாட்... அது போல இந்த படத்திலும் அதே போல ஒரு ஷாட்.....


விஜய்க்கு பாதுகாப்பு வெளிய போலிஸ்  இருக்கும்.. விஜய் கைது பண்ண  தீவிரவாதி தப்பிச்சிட்டான் ஜாக்கிரதையா இருன்னு சொல்லி இருப்ப்பாங்க... விஜய் பின்னாடி கேமரா  டிராவல் ஆகும்.. விஜய் ரூமுக்கு உள்ளே போனா  தீவிரவாதி கட்டி  போட்டு இருப்பார்...சூப்பரான ஷாட் அது... விஜய் அளவா நடிக்க வச்சி அற்புதமா அண்டர்பிளே பண்ண வச்சி  இருக்கார்...


இண்டர்வெல் பிளாக் அவ்வளவு ஸ்டிராங்க இருக்க ஒரே காரணம்... டேக்கன் படத்தோட பெஸ்ட் டயலாக் சீனை அப்படியே இதுல கொஞ்சம்  மாத்தி வச்சி இருக்கார்.... அதனால்தான் அந்த வெயிட்டிங் செமை கிளாப்ஸ் அள்ளுது...


ஓரளவுக்கு லாஜிக் படத்துல இருப்பதால்தான் படத்தோடு ஒட்ட முடிகின்றது. ஆனால் தங்கையை காப்பாற்ற வரும் இடத்தில்  என்பதுகளில் நடித்த ரஜினி கமல் மசாலா போல எடுத்து இருப்பதுஏன் என்று தெரியவில்லை...


மாடியில் பிடிபட்ட செக்யூரிட்டி ஆபிசரிடம் பேசும் போது, செல்வராஜ் பட்டுக்கோட்டை பக்கம்... என்று அந்த கதையை நெகிழ்ச்சியாக சொல்லி...16 ஆம்  நாள் அவன் தம்பி இராணுவத்துக்கு வந்துட்டான் என்று சொல்லும் காட்சிதான் எனக்கு இந்த படத்தில் மிகவும் பிடித்த நெகிழ்ச்சியான காட்சி என்பேன்.விஜய் நடிப்பு செமை மற்றும் முருகதாஸ் சீன் கம்போசிஷனும் அற்புதம்... நீட்...


காஜல் தன் நண்பியிடத்தில்  நீதான் அழகி ஆனா எப்படி இந்த ஆளை... மாசம் இரண்டு லட்சரூபாய் சம்பாதிக்கின்றான்... அதை விட வேற என்ன? அழகா இல்லையே? அசிங்கமா இருக்கறவன் சாதிப்பான்...அழகா  இருக்கறவன் சாதிக்க மாட்டான்... என்ற  டயலாக்குக்கு தியேட்டரில் விசில்... அது போல ஒரு பெண்ணையும் நான்  சந்தித்து இருக்கின்றேன்.


==========
படத்தின் டிரைலர்...


===============
படக்குழுவினர் விபரம்.


Directed by A. R. Murugadoss
Produced by Kalaipuli S. Dhanu
Written by A. R. Murugadoss
Starring Vijay
Kajal Aggarwal
Jayaram
Vidyut Jamwal
Sathyan
Music by Harris Jayaraj
Cinematography Santosh Sivan
Editing by A. Sreekar Prasad
Studio Kalaipuli Films International
Distributed by Gemini Film Circuit
SVR Media (Andhra Pradesh)[1]
Release date(s)
13 November 2012
Running time 165 minutes
Country India
Language Tamil



================


தியேட்டர் டிஸ்கி...


நேத்து நைட்டு உள்ளகரம் குமரனில்  இந்த படத்தை பார்த்தேன்...120 ரூபாய் டிக்கெட் ஏசி படம் முடியும் வரை போட்டார்கள்...நல்ல  பெரிய ஸ்கிரீன்... ரொம்ப  நாளைக்கு அப்புறம் செக்ன்ட் ஷோவுக்கு குடும்பத்தோடு வந்து இருந்தார்கள்.... 

எதிர் சீட்டில் உட்க்கார்ந்து இருந்த இளைஞர்கள் படம் பார்த்து கொண்டே இருக்கும் போது தள்ளி குதித்தார்கள்.. என்ன என்று பார்த்தால் யாரோ சின்ன  பிள்ளையின் ஒன்னுக்கு கால்களை ஈரப்படுத்தியதுதான் காரணம் என்று பிறகு தெரிந்த்து... இந்த பசங்களும் விட்ட பாடில்லை..நதிமூலத்தை தேடி போக... அந்த 5 வயது குட்டிப்பெண் அவள் அப்பா மார்பில் மறைந்து கொண்டது.

==========
பைனல்கிக்.

பொதுவா படத்தின் உள் அரசியலை அதிகம் நான் அலசமாட்டேன்... படம் நன்றாக இருக்கின்றதா இல்லையா என்று பார்த்து விட்டு அடுத்த வேலை பார்க்கப்போகும் ரகம்....ஆனால் மதப்பிரச்சனையில்  வெற்றியின் மகிழ்ச்சியை சுவைக்க முடியாமல் இருக்கின்றார்கள் படக்குழுவினர்...

உன்னை போல் ஒருவன் படத்தில் போலிஸ் ஆபிசராக முஸ்லிம் நடித்து இருப்பார்.. தீவிரவாதியில் ஒரு இந்து இருப்பார்... அதனால் அந்த படத்துக்கு எதிர்ப்பு இல்லை...இந்த படத்தில் எல்லோரும் முஸ்லிம்களாக இருக்கின்றார்கள்... தீவிரவாதிகளுக்கு உறுதுனையாக 5 சதவிகிதம் பேர் இருக்கின்றார்கள் என்று வைத்துக்கொள்வோம்...ஆனால் 95 சதவிகித மக்கள் ஒரு பாவமும் அறியாதவர்கள்.. நம் சகோதரர்கள்..


. சொந்த வீடு வைத்து இருப்பவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை...ஆனால் வாடகைக்கு வீடு கிடைக்காமல் அவர்கள் படும் துயரம் சொல்லி மாளாது... அஸ்தினாபுரத்தில் என்  மாமியாருக்கு சொந்தமான சிங்கிள் பெட்ரூம் வீடு இருக்கின்றது...அதன் பக்கத்தில் எழு வருடமாக ஒரு முஸ்லிம் குடும்பம் இருக்கின்றது. அவர்களுக்கு வீடு வேண்டும்.... தயங்கி தயங்கி வீடு  கேட்டது ரொம்ப கொடுமை.. பட் அவர்களுக்குதான் வீடு வாடகைக்கு விடச்சொன்னேன்... 


லெட் மீ கம் டுத பாயிண்ட்...

ஆனானப்பட்ட ஜேம்ஸ்க்குகே ஒரு தாய் கிழவி வழி நடத்தும் ... பட் பெரிய பாம் பஸ்ல வெடிச்சும்....ஒரு தாய் கிழவனோ தாய்கிழவியோ விஜய்க்கு  சீப் ஆபிசார யாருமே இல்லை...  ஒன்மேன் ஆர்மிதான்.... இது பெரிய லாஜிக் ஓட்டை.. 

விஜய்ரசிகர்களில் ஒரு சாரருக்கு இந்த படம் பிடிக்கவில்லை... வழக்கம் போல இந்த படத்தில் விஜய் நடிக்கவில்லை... காரணம் பஞ்சு டயலாக் பேசவில்லை... மூன்று நாள் கைதட்டி விசில் அடிக்கும் ஒரு சாரருக்கு இந்த படம்  பிடிக்கவில்லை... மூன்று  நாள் கழித்து வெற்றியை தீர்மாணிக்க வரும்   ரசிகர்களுக்கு இந்த படம் பிடித்து இருக்கின்றது... இப்படியே போனால் ஒருவேளை விஜய் சூர்யாவை நடிப்பிலும் தோற்க்கடிக்கலாம்... இந்த படம் கண்டிப்பாக பார்க்கலாம்....

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.




நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

 

14 comments:

  1. தீவிரவாதிகளுக்கு உறுதுனையாக 5 சதவிகிதம் பேர் இருக்கின்றார்கள் என்று வைத்துக்கொள்வோம்...ஆனால் 95 சதவிகித மக்கள் ஒரு பாவமும் அறியாதவர்கள்.. நம் சகோதரர்கள்.

    Thanks brother

    ReplyDelete
  2. 16 ஆம் நாள் அவன் தம்பி இராணுவத்துக்கு வந்துட்டான் // correction 14 ஆம் நாள்

    ஆனானப்பட்ட ஜேம்ஸ்க்குகே ஒரு தாய் கிழவி வழி நடத்தும் ... பட் பெரிய பாம் பஸ்ல வெடிச்சும்....ஒரு தாய் கிழவனோ தாய்கிழவியோ விஜய்க்கு சீப் ஆபிசார யாருமே இல்லை... ஒன்மேன் ஆர்மிதான்.... இது பெரிய லாஜிக் ஓட்டை..
    //பில்லா 2 வுக்கு வராத சந்தேகம் , துப்பக்கிக்கு வருது எல்லாருக்கும்

    ReplyDelete
  3. apa neenga antha kullan fan ah.....

    ReplyDelete
  4. apa nee antha kullan fan ah.... heee paawam maatran mannai kavviyathu

    ReplyDelete
  5. //சோ அதுக்கு ஏற்றது போல முறுக்கையும் வேகத்தையும் காட்டி அந்த காட்சியில் நடித்து இருக்க வேண்டும்..//அடப்பாவிகளா!!!! ஸோ-வை சோ--வாக்கி, நடத்துங்க,நடத்துங்க!!!!

    ReplyDelete
  6. மூன்று நாள் கழித்து வெற்றியை தீர்மாணிக்க வரும் ரசிகர்களுக்கு இந்த படம் பிடித்து இருக்கின்றது

    yes

    ReplyDelete
  7. anna nanri ..........innum naan padam paakkalai..........ungal vimarsanaththukkaakadhan wait panninaen................

    ReplyDelete
  8. //தீவிரவாதிகளுக்கு உறுதுனையாக 5 சதவிகிதம் பேர் இருக்கின்றார்கள் என்று வைத்துக்கொள்வோம்...ஆனால் 95 சதவிகித மக்கள் ஒரு பாவமும் அறியாதவர்கள்.. நம் சகோதரர்கள்.//

    ஆமோதிக்கிறேன்.

    ReplyDelete
  9. சமீபத்தில் வாசித்த திரை விமர்சனங்களில் என்னை ரொம்பவும் கவர்ந்த விமர்சனம் இது..அசத்திட்டீங்க..மிக்க நன்றி.

    ReplyDelete
  10. தீவிரவாதிகளுக்கு உறுதுனையாக 5 சதவிகிதம் பேர் இருக்கின்றார்கள் என்று வைத்துக்கொள்வோம்...ஆனால் 95 சதவிகித மக்கள் ஒரு பாவமும் அறியாதவர்கள்.. நம் சகோதரர்கள்..

    உண்மை

    ReplyDelete
  11. அருமை !! விமர்சனம்

    அஸ்தினாபுரம் எந்த ஊர் பக்கம்

    ReplyDelete
  12. vijay anna the mass.love u bro.and i am waiting for your upcoming movies.all the best anna.......

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner