அன்னை இல்லம்.


சில இடங்கள்   சிலருக்கு மிக சாதாரணமாக  தோன்றும்
ஆனால் சிலருக்கு  அதே இடங்கள் வாழ்வில் மறக்க முடியாத இடமாக மாறி விடுகின்றது...

சுட்டு போட்டாலும் சில இடங்களை வாழ்வில் மறக்க  முடியாது...கோலிகுண்டு மறைத்து வைத்த அரசமரத்து பொந்து, கலவியை முதல் முதல் திரையில் பார்த்த கடலுர் முத்தைய்யா தியேட்டர், பத்தாம் வகுப்பு பரிட்சை ஹால்,என் சி சி கேம்ப், அபூர்வா சகோதரர்கள் படத்துக்கு சட்டை கிழித்து கொண்டு டிக்கெட் எடுத்த கிருஷ்ணாலயா தியேட்டர்  இரண்டரை ரூபாய் டிக்கெட் கவுண்டர், முதல் பீர் அடித்த  கன்னிக்கோவில் கென்னடி ஒயின்ஸ், மோட்ட்ர் கொட்டகையில் மறைத்து வைத்து படித்த விருந்து புத்தகம், திருப்பதி போகும் வழியில் நேரில் பார்த்த சிறுவனின் விபத்து மரணம்,யாரவது வந்து விடப்போகின்றார்கள்  என்ற பயத்தில்  செஞ்சிக்கோட்டையில் கமல் டைப் முத்தம் கொடுத்துக்கொண்ட கிராமத்து ஜோடி,காதலை டிக்ளேர் செய்த திருவஹீந்தபுரம் ஹயக்கிரிவர் கோவில் பிரகாரம்,பிளாக் டிக்கெட் விற்ற அலங்கார் தியேட்டர், அம்மா கடைசி மூச்சை நிறுத்திய பாண்டிச்சேரி காசநோய் மருத்துவமணை, பீடா விற்ற நிர்மலா தக்ஷன் ஹோட்டல், என்று நிறைய  சொல்லிக்கொண்டு போகலாம்....

சிறு வயதில் அந்த படத்தை பார்த்தேன்.... படம்  முழுக்க ஒரே அழுகை...ஒரு வாரத்துக்கு அந்த படத்தின் தாக்கம் என்னுள் இருந்தது... அந்த படத்தை பற்றிய   நினைவு என்னை பாடாய் படுத்தியது.... அந்த திரைப்படம் முதல் தேதி... அந்த படம் மட்டும் அல்ல சிவாஜி நடித்த நிறைய படங்கள்...  அப்படி ஒரு பாதிப்பை இயல்பு வாழ்க்கையில் ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டு இருக்கும் போது சட்டென்று திரைப்படத்தின் காட்சி  நினைவுக்கு வந்து சட்டென்று மூட் அப் ஆகி  விடும்...   அப்படி ஒரு நடிப்பு ஆளுமையை  படம் பார்க்கும் ரசிகனுக்கு  உண்மையில் நடப்பது போல மனதில் பதித்துவிடுபவர்...

அதன் பிறகு சிவாஜி நடித்த நிறைய படங்கள் ஆல்டைம் பேவரைட்  என்றாலும்.. தெய்வமகனும்,முதல் மரியாதையும் என்றும் என் நெஞ்சை விட்டு அகலாதவை...தெய்வமகன் படத்தினை பற்றி நான் சிலாகித்து எழுதிய பதிவை வாசிக்க இங்கே கிளிக்கவும்.

நேற்று தொழில் நிமித்தம், அந்த   நடிப்புலகமேதை வாழ்ந்த அன்னை இல்லம்  செல்லும் வாய்ப்பு கிடைத்தது.. ஊடகத்துறைக்கு வந்து16 ஆண்டுகால  வாழ்வில் நிறைய மனிதர்கள், சந்திப்புகள்...  என்று  எவ்வளவோ பார்த்தாயிற்று... ஆனால் சென்னை வந்த புதுதில் இருந்து  சிவாஜி வசித்த அன்னை இல்லத்தின் மீது ஒரு பார்வை எப்போதும் இருந்துக்கொண்டே இருக்கும்..
 சென்னை வந்த புதியதில் அன்னை இல்ல கேட் சின்னதாக திறந்த இருந்தால் சிவாஜி  வாக்கிங் போறது தெரியுமா? என்று எட்டிப் பார்த்து இருக்கின்றேன்... ஆனால்  மதியம் இரண்டு மணிக்கு சிவாஜி எப்படி வாங்கிங் போவார்? என்று என்னையே கேள்வி கேட்டு மடக்கி இருக்கின்றேன்... ச்சே  சப்போஸ் மட்டன் பிரியாணி சாப்பிட்டு இருந்தா செரிக்க இரண்டு ரவுண்டு அன்னை  இல்லம் எதிரில் இருக்கும் புல்வெளியில் நடக்கலாம் அல்லவா? என்று எதிர்கேள்வி கேட்டு இருக்கின்றேன்....


அன்னை இல்லத்துக்கு பக்கத்தில் இருக்கும் அப்பார்ட்மென்ட்டில்தான் எம்எஸ் ஆல்பம் என்ற கடை இருந்தது....   போட்டோ பிரின்ட் மற்றும் ஆல்பம் செய்ய அங்கு வாரத்துக்கு  பத்து முறைக்கு மேல் செல்லும் வாய்ப்பு இருந்த காரணத்தால் அடிக்கடி அன்னை இல்லத்தினை ஒரு முறையாவது பார்த்து விட்டுதான் கண் திருப்பும்....


முந்தாநாள் பொதிகையில் ஒரு சினிமாநிகழ்ச்சி பார்த்தேன்....  நடிகர் திலகம் சிவாஜியோடு  தன் அனுபவங்களை  முக்தா சினுவாசன் அவர்கள்  பகிர்ந்து கொண்டார்...மறுநாள் காட்சிக்கான டயலாக் பேப்பரை சிவாஜி முதல்நாளே வாங்கிக்கொண்டு வீட்டுக்கு போய் விடுவாராம் மறுநாள்  காட்சியின் போது, ஒரே டேக்கில் எத்தனை பக்க டயலாக்கையும் பேசி விடுவாராம்...ஜவார் சித்தாரமன்.. சிவாஜி வீட்டுல போய் மனப்பாடம் பண்ணி கடம் அடிச்சி ஒரே டேக்குல பேசிடறார் என்று சொல்ல... முக்தா இல்லை என்று சொல்ல.. இரண்டு பேரும் பந்தயம் வைத்துக்கொண்டார்களாம்.... சரி பார்த்து விடுவோம் என்று காலையில் முதல் நாள்  கொடுத்த டயலாக் பேப்பர் சீனை இன்று எடுக்கவில்லை காரணம் உடன் நடிக்கும் நடிகர் வரவில்லை என்று புதிய சீன் டயலாக் பேப்பரை கொடுக்க.... சிவாஜிஅலட்டிக்கொள்ளாமல் ஒருமுறை அந்த லென்த்தியான டயலாக்கை  முக்தாவை விட்டு படிக்க சொன்னாரம்....பிறகு  மேக்கப்போட்டுக்கொண்டு வந்து திரும்பு ஒரு முறை படிக்க  சொன்னராம்....ஒரே  டேக்....முக்தா ஆச்சர்யம் தாங்காமல்  எப்படி என்று கேட்க... நான் கூத்து மற்றும் நாடக  துறையில் இருந்து வந்தவன்.. அதனால் ஒரு முறை என் எதிரில் வசனத்தை வாசித்தாலே போதுமானது என்றாராம்....

விஸ்தாரணமான புல்வெளி, பெரிய  போட்டிக்கோ, அப்புறம் ஒரு பெரிய காரிடர்   யானை தந்த வேலைபாடுகள்...ஒரு  விஸ்தாரமான ஹால்...உலோகத்தால் ஆன பெரிய வீரசிவாஜி கண்ணாடிபெட்டியில்.... சன்லைட் வருவது போன்ற விசாலமான கூடம்...மாலன் பிராண்டோ போன்ற மாமேதைகளோடு பிளாக் அண்டு ஒயிட் போட்டோ....நடுக்கூடத்தில் புகைபடசட்டத்தில்  மாலைகளுக்கு நடுவே சிறைபட்டு இருக்கும் செவாலியே  மற்றும் அவர் துணைவியார்...
முதலில் விருந்தோம்பல்.....வீட்டுக்கு சென்றதும் முதலில் தண்ணீர்.... பிறகு காப்பி....ஜயா ரெஸ்ட் எடுத்து இரண்டு வாரத்துக்குமேல அவுது...தெலுங்கு படத்துல ரொம்ப   பிசியா  இருக்கார் என்றார்கள்...

பிரபு சாரோடு சின்ன  சந்திப்பு... பிரபு கண்ணக்குழி சிரிப்போடு இன்னும் இளமையாகவே இருக்கின்றார்...காபி சாப்பிட்டிங்களா? கமலா அம்மாவுக்கு இன்னைக்கு தேவஷம்..அதான் கொஞ்சம் லேட்டா ஆயிடுச்சி...அவசரமா பாரின் போறேன் என்றார்... சின்னதாய் ஒரு நேர் முகம்...பிஎம்டபுள்யூவில் ஏறி புறப்பட்டுவிட்டார்.


சிறுவயதில் இருந்து பார்த்து ரசித்தவரை  சிம்மக்குரலை நேரில் ஒரு முறை கூட  சந்திக்க வாய்க்கவில்லை.... புகைபடத்தில் புன்னகைத்துக்கொண்டு இருந்த கலைத்தாயின் தவப்புதல்வனை  பார்த்து வேண்டிக்கொண்டேன்...

ஐயா உங்கள் ஆசி எனக்கு வேண்டும்........ 



பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

12 comments:

  1. நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சிவாஜி அவர்கள்... நல்ல பதிவு...

    ReplyDelete
  2. //அன்னை இல்லத்துக்கு பக்கத்தில் இருக்கும் அப்பார்ட்மென்ட்டில்தான் எம்எஸ் ஆல்பம் என்ற கடை இருந்தது....//

    வாட் எ கோ இன்சிடென்ஸ் தோழர்?

    இந்த எம்.எஸ். ஆல்பத்துக்கு லோகோ நான் தான் டிசைன் செய்தேன் :-)

    ReplyDelete
  3. //அன்னை இல்லத்துக்கு பக்கத்தில் இருக்கும் அப்பார்ட்மென்ட்டில்தான் எம்எஸ் ஆல்பம் என்ற கடை இருந்தது....//

    வாட் எ கோ இன்சிடென்ஸ் தோழர்?

    இந்த எம்.எஸ். ஆல்பத்துக்கு லோகோ நான் தான் டிசைன் செய்தேன் :-)

    ReplyDelete
  4. Very touching post about your visit to the home where the great Sivaji had lived. He was by far the best actor we have seen in our generation. I urge you to watch the movie "Sampoorna Ramayanam" - Sivaji in Bharathan role, it was mind boggling. When he appears on the scene, he makes you watch only his character - amazing portrayal.

    ReplyDelete
  5. நல்ல பகிர்வு. அன்னை இல்லம் பார்க்கக் கிடைத்தது. நன்றி.

    ReplyDelete
  6. Thanks to sharing all your thought what comes in your mind.. keepit up.

    ReplyDelete
  7. சிவாஜி பற்றி மல்லுக்கு நின்று அடி எல்லாம் வாங்கியதுண்டு ஜாக்கி அந்த அளவுக்கு சிவாஜி மீது ஒரு இனம் புரியா பாசமே உண்டு.

    ReplyDelete
  8. ஆகா ஆகா ஆகா. அந்தச் சாலையின் வழியாகச் செல்லும் ஒவ்வொரு முறையும் நான் திருப்பிப் பார்க்கும் ஒரே இல்லம் அன்னை இல்லம்.

    நடிப்புலக மாமேதையின் மூச்சுக்காற்றுகளால் நிரம்பிய அந்த அன்னை இல்லத்துக்குள் ஒருமுறையாவது சென்று பார்க்க வேண்டும் என்று ஆவல். யாரைக் கேட்பது! ஆண்டவனே ஒரு நல்ல வழி செய்து கொடுக்க வேண்டும்.

    பழைய படங்களில் அன்னை இல்லத்தில் ஒரு சில காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கும். எ.கா. அண்ணன் ஒரு கோயில். அப்படிப் பார்த்ததுதான் அந்த இல்லம்.

    இப்போது பெரிய சுற்றுச் சுவருக்கும் மறைந்திருக்கும் அந்த வீட்டைப் பார்க்கும் நாள் என்று வருமோ :(

    ReplyDelete
  9. ஆகா ஆகா ஆகா. அந்தச் சாலையின் வழியாகச் செல்லும் ஒவ்வொரு முறையும் நான் திருப்பிப் பார்க்கும் ஒரே இல்லம் அன்னை இல்லம்.

    நடிப்புலக மாமேதையின் மூச்சுக்காற்றுகளால் நிரம்பிய அந்த அன்னை இல்லத்துக்குள் ஒருமுறையாவது சென்று பார்க்க வேண்டும் என்று ஆவல். யாரைக் கேட்பது! ஆண்டவனே ஒரு நல்ல வழி செய்து கொடுக்க வேண்டும்.

    பழைய படங்களில் அன்னை இல்லத்தில் ஒரு சில காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கும். எ.கா. அண்ணன் ஒரு கோயில். அப்படிப் பார்த்ததுதான் அந்த இல்லம்.

    இப்போது பெரிய சுற்றுச் சுவருக்கும் மறைந்திருக்கும் அந்த வீட்டைப் பார்க்கும் நாள் என்று வருமோ :(

    ReplyDelete
  10. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
    உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
    "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
    இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
    எல்லாம் கைகூடி வந்து
    என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
    தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

    ReplyDelete
  11. SIVAJI- all time great. mention his name, and i get goosepimples :)

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner